கணேச சதுர்த்தியன்று
எதற்காக புது உருவத்திற்கு பூஜை செய்கிறோம்?
கணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வலைகளை பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹனம் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது. இப்படி அதிகமான சக்தி உடைய மூர்த்திக்கு உற்சாகத்தோடு விஸ்தாரமான, பெரிய அளவில் பூஜை அர்ச்சனையை ஆண்டு முழுவதும் செய்வது கடினமாகி விடும். அதற்காக கர்ம- காண்டத்தில் கூறியுள்ள கடுமையான நியமங்களை அனுஸரிக்க வேண்டி இருக்கிறது. அதனால் கணேச அதிர்வலைகளை ஆவாஹனம் செய்ய புதிதாய் கொண்டு வந்த உருவத்தை உபயோகித்து (அதாவது பூஜை, அர்ச்சனை செய்து) அதற்கு பிறகு அதை விஸர்ஜனம் செய்து விடுகிறோம். அதாவது நீரில் கரைத்து விடுகிறோம்.
கணபதியின் அதிர்வலைகளில் ஸத்வ, ரஜ, தம குணங்களின் அளவு 5:5:5 என்ற விகிதாசாரத்தில் உள்ளன. சாதாரண மனிதர்களின் ஸத்வ, ரஜ, தம குணங்களின் அளவு 1:3:5 ஆகும். அதனால் சாமானிய மனிதனுக்கு கணேசனின் அதிர்வலைகளை அதிக நேரம் வரை தாங்குவது இயலாத காரியம்.
(கணேசமூர்த்தியை ஆன்மீக சாஸ்திரப்படி செய்தால்தான் அதில் கணேச தத்துவம் அதிக அளவு ஆகர்ஷிக்கப்படும். கணேச சதுர்த்தியன்று பூஜிக்கப்படும் கணேசமூர்த்தி, ஆன்மீக கண்ணோட்டப்படி எவ்வாறிருக்க வேண்டும் என்ற விவரங்கள், ஸனாதனின் வெளியீடான கணபதி (ஆங்கிலம்) நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.)
கணேச சதுர்த்தியன்று
பூஜிக்கப்படும் மூர்த்தி எவ்வாறு இருக்க வேண்டும்?
இன்று தர்மசாஸ்திரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவரவர் விருப்பு மற்றும் கற்பனைக்கு ஏற்றபடி பல்வேறு வடிவங்களில், பல்வேறு ரூபங்களில் கணேசமூர்த்திகள் (உதா. கருடன் மீது அமர்ந்த கணேசர், கிருஷ்ண வேஷத்தில் கணேசர் மற்றும் நாட்டியமாடும் கணேசர்) பூஜிக்கப்படுகின்றன. கணேச சதுர்த்தியன்று ஒவ்வொரு வீடுகளிலும், பல சமூக இடங்களிலும் கணேசமூர்த்தி பூஜை நடைபெறுகின்றன. இச்சமயத்தில் மூர்த்தி சம்பந்தமான பல தவறுகள் எவ்வாறு நடக்கின்றன என்பது தெரிய வருகிறது. கணேசமூர்த்தி, சாஸ்திரப்படி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
களிமண்ணால் மூர்த்தி
செய்யப்பட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது
பார்வதியினால் உருவாக்கப்பட்ட கணேசர், மஹாகணபதியின் அவதாரமாகும். அவள் மூர்த்தியை உருவாக்கி அதில் கணேசரை ஆவாஹனம் செய்தாள். (புராணங்களில் இம்மூர்த்தி பார்வதியிலிருந்து வழித்து எடுக்கப்பட்ட மஞ்சளால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.) ஆவணி மாதம் சுத்த சதுர்த்தியன்று களிமண்ணால் மூர்த்தி செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
களிமண்ணாலேயே கணேசமூர்த்தி செய்யப்பட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இன்று மிக லேசாக இருக்க வேண்டும், பார்ப்பதற்கு மிக அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸால் கணேசமூர்த்தி செய்யப்படுகிறது. ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸால் கணேசமூர்த்தி செய்வது தவறான செயலாகும்.
களிமண்ணைத் தவிர மற்றப்
பொருட்களால் கணேசமூர்த்தி
செய்வது சாஸ்திர விரோத செயலாகும்!
இன்று தேங்காய், வாழைப்பழம், பாக்கு, சிரின்ஜ், காகிதக் கூழ் போன்ற பொருட்களால் கணேசமூர்த்தி செய்யப்படுகிறது. இம்மாதிரி பொருட்களை உபயோகித்து மூர்த்திகளை செய்வது தர்மசாஸ்திரத்திற்கு விரோதமாகும். இம்மாதிரி மூர்த்திகளில் கணேச தத்துவ அதிர்வலைகள் ஆகர்ஷிக்கப்படுவதில்லை.
மூர்த்தியின் அளவு (ஒரு அடி முதல் ஒன்றரை வரை) சிறியதாக இருக்க வேண்டும். கணேசமூர்த்தி பீடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். முடிந்தவரை மூர்த்தியின் தும்பிக்கை இடப்பக்கம் வளைந்திருக்க வேண்டும். மூர்த்தி இயற்கை வண்ணத்தோடு இருக்க வேண்டும்.
(கணேசமூர்த்தியை ஆன்மீக சாஸ்திரப்படி செய்தால் மட்டுமே, அதில் கணேச தத்துவம் அதிக அளவு ஆகர்ஷிக்கப்படும். ஸனாதன் உருவாக்கிய ஸாத்வீக கணேசமூர்த்தி இத்தகையது. மேலும் விவரங்களுக்கு ஸனாதனின் வலைத்தளத்தைப் பார்க்கவும்.)