ஊர்வலம், கொடிகளுடன் பக்தர்களின் குதூஹலம்; ஸ்ரீமன்நாராயணனின் மகிமையோ விளக்கவொண்ணா கோலாஹலம்

பக்தி செய்வோம், அர்ச்சன, பூஜன, ந்ருத்ய மற்றும் கான |
அன்புடன் அர்ப்பணிப்போம், பிரசன்ன ஸ்ரீமன் நாராயண ||

கைத்தாளமிட்டு ஸ்ரீஹரியைத்  துதியுங்கள் |
தாள கோஷத்துடன் ஸ்ரீமன்நாராயணனை அழையுங்கள் ||

ஸ்ரீமன்நாராயணனிடம் பக்தி செய்ய கற்றுத் தரும், சித்தத்தை விழிப்படைய செய்யும் திவ்ய ரதோத்ஸவம்!

ஸ்ரீமன்நாராயண ஸ்வரூப பராத்பர குரு டாக்டர் அவர்களின் திவ்ய ரதோத்ஸவத்தில் பல்வேறு கொடிகளை ஏந்திய ஆண் மற்றும் பெண் ஸாதகர்கள், ஸ்ரீவிஷ்ணுவின் குண சங்கீர்த்தனத்தை செய்து ஸ்ரீவிஷ்ணு தத்துவத்தை ஆவாஹனம் செய்தனர். இந்த தன்னிகரற்ற ரதோத்ஸவத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி மற்றும் சைதன்யத்தின் பிரவாஹத்தை ஸாதகர்களால் உணர முடிந்தது.

இதில் சிறப்பு என்னவென்றால் பல ஸாதகர்களுக்கு அவர்களின் முன் உள்ள ரதத்தில், பராத்பர குரு டாக்டரின் புகைப்படத்திற்கு பதில் அவரே பிரத்யக்ஷமாக அமர்ந்துள்ளார் என்பது கூடத் தெரியவில்லை. அப்படியிருந்தும் அவர்களின் ஆன்மீக உணர்வு விழிப்புற்றது. சம்பூர்ண சூழல் நாராயணமயமாகி இருந்தது. ‘நாராயண நாராயண குருவர நாராயண’ என்ற இனிய கோஷ்டி கானத்துடன் ஊர்வலம் வந்த ரதோத்ஸவத்தைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கும் ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது. ஒருவிதத்தில் இந்த ரதோத்ஸவம் சித்தவ்ருத்தியை விழிப்படைய செய்யும், மனதை உள்முகமாக்கும் விழாவாக இருந்தது.

ரதோத்ஸவத்தில், சைதன்ய சக்தியை விழிப்படைய
செய்யும் கொடி ஏந்துவோரின் ஊர்வலம்

 

ஸ்ரீமன்நாராயணன் முன்பு ந்ருத்ய ஆராதனை செய்வோம் |
அனைவரின் ஆழ்மனங்களிலும் பாவ-பக்தியை  விழிப்படைய செய்வோம் ! ||

வெறும் ரதோத்ஸவம் அன்று, இது பகவத்பக்தி பாராயணா |
ஆனந்தமாக உரத்த குரலெழுப்புங்கள் நாராயண நாராயணா ||

ரதோத்ஸவத்தில் பூஜ்ய பிருத்விராஜ் ஹசாரே மற்றும் ஸாதகர்கள்

ரத யாத்திரையைப் பார்த்து ஆன்மீக உணர்வு மிகுந்தெழுந்த ஸாதகர்கள் மற்றும்
1. பூஜ்ய (திருமதி) சுமன் நாயிக், 2. குழந்தை மகான் பூஜ்ய வாமன் ராஜந்தேகர்

ரத யாத்திரையைப் பார்த்து ஆன்மீக உணர்வு மிகுந்தெழுந்த ஸாதகர்கள்

இதுவரை மகரிஷியின் ஆணைப்படி பராத்பர குருதேவரின் திவ்யத்வத்தை வெளிப்படுத்தும் பல்வேறு விழாக்களை ஸாதகர்கள் அனுபவித்துள்ளனர். இந்த எல்லா விழாக்களிலும் இந்த ரதோத்ஸவ விழா தன்னிகரற்று விளங்குகிறது. ஸநாதனின் 3 குருமார்களின் சைதன்யமய இருப்பு, பல்வேறு பக்தி கொடிகள், ஸாதகர்களின் ஆன்மீக உணர்வு மிகுந்த நடனம், தாளத்துடன் கோஷ்டி கானம் ஆகியவற்றால் எல்லா சிருஷ்டி மீதும் சைதன்யமழை பொழிந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்திருந்ததால் இயற்கை அன்னை தன் பச்சைப் பசேலென்ற மரம், செடி, கொடிகளின் மூலம்  பகவானின் தரிசனத்தை ஆர்வத்துடன் பெற்றாள் என்பதைக் காண முடிந்தது.

வருடம் முழுவதும் கோவிலுக்குள் இருக்கும் பகவானின் மூர்த்தி வருடாந்திர உற்சவத்தின்போது தன் பக்தர்களை சந்திக்க வெளியே வருகிறார். அப்போது பகவான் மற்றும் பக்தர்கள் ஆகிய இருவருக்குமே அபரிமித ஆனந்தம் ஏற்படுகிறது. அதேபோல் பராத்பர குரு டாக்டர் ஆடவலே மற்றும் ஸாதகர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அபார ஆனந்தத்தை அடைந்தார்கள்!

Leave a Comment