இதற்காகத்தான் இவ்வளவு அட்டகாசமும்…!
‘11.12.2019 அன்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ‘ஸ்ரீவிஷ்ணு தத்துவ விழிப்புணர்வு விழா’ நடந்தது. ஸாதகர்கள் சேவையை பூரணமாக செய்த பின் நன்றி கூறும் சமயத்தில் பராத்பர குருதேவரின் அருட்பார்வை ஸாதகர்கள் மீது படிந்தது, மனமோகன மென்னகை புரிந்தார். அவரின் இந்த புன்னகையைப் பார்த்து, ‘குருதேவா, இந்த ஒரு புன்சிரிப்புக்காகத் தான் இவ்வளவு அட்டகாசமும்…!’ எனத் தோன்றியது.
– திருமதி. மதுவந்தி சாருதத்த பிங்களே (13.12.2019)
ஸாதகர்களை ஸாதனை செய்ய
உற்சாகமூட்டும் மதுர மென்சிரிப்பு !
‘ப. பூ. டாக்டரிடம் இருந்து நமக்கு தின்பண்டம், புகழ்ச்சி மற்றும் புன்சிரிப்பு மூலமாக ‘பிரசாதம்’ கிடைத்து விடுகிறது. நம்மைப் பார்த்து அவர் சிந்தும் ஒரு புன்னகை மற்றும் அவரின் ஒரு கடைக்கண் பார்வை, ஸாதனை செய்வதற்கு, அதிகபட்ச முயற்சி மேற்கொள்வதற்கு நமக்கு கிடைக்கும் ஒரு உற்சாக டானிக். அவர் பெருமையாக கூறும் புகழ்ச்சி வார்த்தைகளால் மற்றும் அவரின் அதிமதுர புன்சிரிப்பால் எப்போதும் சக்தி மற்றும் சைதன்யம் கிடைப்பதை உணர முடிகிறது.’ – டாக்டர் ரஷ்மி நல்லதரு, ஆசியா பசிபிக் (3.5.2016)
இறைவனை அடையத் தூண்டும் இனிய மென்னகை!
பராத்பர குரு டாக்டர் ஆடவலே பயிற்சி வகுப்பில் தன்னைப் பற்றி எதுவுமே கூறியதில்லை. இருந்தாலும் ‘அவர் ஒரு உன்னத மகான்’ என்று எனக்கு எப்போதும் தோன்றும். அதனால் ‘எப்போதாவது அவரை சந்திக்க வேண்டும் அல்லது அவருக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும்’ என்று எனக்குத் தோன்றும். நான் அவரது சரணங்களில் சிரம் தாழ்த்தி வணங்கி நிமிர்ந்தபோது அவர் என்னைப் பார்த்து இனிமையாக சிரித்தார். இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிர தாபம் அவரின் இனிய புன்னகையால் எனக்குள் நிர்மாணமாயிற்று என்பது என் கவனத்திற்கு வந்தது.’ – திருமதி விஜயலக்ஷ்மி ஆமாதி, கோவா. (6.3.2017)
பராத்பர குரு நகைக்கும்போது சம்பூர்ண
சிருஷ்டியும் ஆனந்தத்தை அடைகிறது!
‘ஸ்ரீராமனுக்கு அருகில் இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாக இருந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் சிரித்தால் அவரின் அனைத்து தோழர்கள், இயற்கை, விலங்கினங்கள், பறவையினங்கள் ஆகிய அனைத்தும் ஆனந்தத்தை அனுபவித்தன. அதேபோல் பராத்பர குருதேவர் சிரித்தால் சம்பூர்ண சிருஷ்டியும் ஆனந்தத்தில் திளைக்கிறது’ என்பதை என்னால் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.’ – திரு. நீலேஷ் கோரே, பார்ஷி (சோலாப்பூர் ஜில்லா)
நிரந்தர ஆனந்தத்தை ஈந்தும் மலர்ச்சியான முகமண்டலம்!
‘பராத்பர குருதேவரைப் பார்க்கும்போது மனதில் பக்தியுணர்வு மலர்கிறது. அவரின் சஹவாசத்தை சிறுவர் முதியவர் ஆகிய அனைவரும் திரும்பத் திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். அவரின் மலர்ந்த சிரித்த முகம் மனதிற்கு நிரந்தர ஆனந்தத்தைத் தருகிறது. அவரின் தரிசனத்தால் அளவிட முடியாத பயன் கிடைப்பதாகத் தோன்றுகிறது. அவரை ஒவ்வொரு முறை தரிசிக்கும்போதும் அதுதான் முதல் தரிசனம் என்பது போன்ற புதுமையை உணர முடிகிறது.’ – டாக்டர் அஜய் கணபதராவ் ஜோஷி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (17.5.2017)
ஜன்ம ஜன்மாந்திர சோர்வு, மன அழுத்தம்
ஆகிவற்றை நஷ்டமாக்கும் இனிய புன்னகை!
‘சில வருடங்களுக்கு முன்பு ராம்நாதி ஆச்ரமத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நாங்கள் அமர்ந்திருந்த அறைக்குள் வந்தார். அப்போது எங்கும் ஒரு அபூர்வ ஒளி பரவியதை உணர முடிந்தது. பராத்பர குரு டாக்டரின் இனிய புன்னகையைப் பார்த்து ஜன்ம ஜன்மாந்திர சோர்வு, மன அழுத்தம் ஆகியவை முழுவதும் நஷ்டமடைந்து அந்தக்கரணத்தில் ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. அவரின் அருட்பார்வைக் கண்டதும் மனம் ஆனந்தத்தால் மலர்ந்தது.’ திருமதி. ரஞ்சனா அஷோக் வாக்மாரே, பாளவனி, சோலாப்பூர் ஜில்லா. (12.11.2019)
பராத்பர குருதேவரின் ஒவ்வொரு விஷயமும்
ஸாதகர்களுக்கு விலைமதிப்பற்றதாகும் !
‘ப. பூ. குருதேவா, உங்களின் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மதேஜ் ஈடு இணையற்றது. நீங்கள் எங்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும்போது எங்களின் மனங்களில் உள்ள கேள்விகள் எல்லாம் கரைந்து போகின்றன. ஞானத்தைப் பெரும் அக்கணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ப.பூ. குருதேவா, உங்களின் காந்தி தேஜ தத்துவத்தின் வெளிப்பாடாகும். உங்களின் மதுர மென்னகையை மீண்டும் மீண்டும் நினைவு கூற வேண்டும் என்ற பித்து எல்லா ஸாதகர்களையும் பீடித்துள்ளது. ஸாதகர்களாகிய எங்களுக்கு உங்களின் மனங்கவர் ஆன்மீக செயல்பாடு எப்போதும் உற்சாகத்தை ஊட்டுவதாகும். உங்களின் முகமண்டல தரிசனமே எங்களின் பிராணவாயுவாகும்!
ப.பூ. குருதேவா, நீங்கள் ஏதாவது ஒரு பொருளைத் தொடுவது அல்லது அதைப் பார்ப்பது என்பது அந்தப் பொருள் செய்த மகாபாக்கியமாகும். பொருட்களில் தனக்கென்று ஏதும் சிறப்புகள் இல்லை. ஆனால் உங்களின் தெய்வீக பார்வை பட்டபின் அப்பொருள் சைதன்யத்தால் நிரம்புகிறது. நீங்கள் ஒவ்வொரு உயிரற்ற பொருள், அத்துடன் ஒவ்வொரு சிறிய பெரிய ஜீவன்கள் ஆகியோரிடம் எவ்வளவு நுணுக்கமாக அக்கறை செலுத்துகிறீர்கள், உங்களின் எல்லையற்ற அன்பில் மூழ்க செய்கிறீர்கள். அத்தகைய பொருளின் இருப்பு மற்றும் ஜீவனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. உங்களின் ப்ரீதி எங்களுக்கு சஞ்ஜீவனி ஆகும்!’ – திருமதி. ஸ்வேதா கிளார்க், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி.