அ. கணேசமூர்த்தியை வீட்டிற்கு கொண்டு வர வீட்டின் தலைவர் மற்றவர்களுடன் செல்ல வேண்டும்.
ஆ. மூர்த்தியை கைகளில் எடுத்து வருபவர் ஹிந்து கலாச்சாரப்படி உடை அணிந்திருக்க வேண்டும். அதாவது வேஷ்டி-அங்கவஸ்திரம் அல்லது குர்தா- பைஜாமா அணிந்திருக்க வேண்டும். தலையில் தொப்பியும் அணிந்திருக்க வேண்டும்.
இ. மூர்த்தியைக் கொண்டு வரும்போது அதன் மீது தூய்மையான பட்டு அல்லது பருத்தித் துணியைப் போர்த்த வேண்டும். மூர்த்தியைக் கொண்டு வரும்போது மூர்த்தியின் முகம் கொண்டு வருபவரை நோக்கியும் மூர்த்தியின் பின்புறம் எதிரிலிருப்பவரை நோக்கியும் இருக்க வேண்டும். மூர்த்தியின் முன்புறம் ஸகுண தத்துவத்தையும் பின்புறம் நிர்குண தத்துவத்தையும் வெளியிடுகிறது. மூர்த்தியைக் கைகளில் எடுத்து வருபவர் அதை பூஜிப்பவர் ஆகிறார். அவர் ஸகுண காரியத்தின் சின்னமாக விளங்குகிறார். மூர்த்தியின் முகம் பூஜிப்பவரை நோக்கி இருக்கும்போது அவருக்கு மூர்த்தியின் ஸகுண தத்துவத்தின் பயனும் மற்றவர்களுக்கு நிர்குண தத்துவத்தின் பயனும் கிட்டுகிறது.
ஈ. கணேசரின் ஜயகோஷமிட்டு பக்தியுடன் நாமஜபம் செய்து கொண்டே மூர்த்தியை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.
உ. வீட்டு வாசலுக்கு வெளியே நிற்க வேண்டும். வீட்டின் சுவாஸினிகள் வந்து மூர்த்தியைக் கொண்டு வருபவரின் கால்களில் சிறிது பாலும் பின்பு தண்ணீரும் விட வேண்டும்.
ஊ. வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு மூர்த்தியை முன்புறமாக திருப்ப வேண்டும். பின்பு மூர்த்திக்கு ஆரத்தி எடுத்த பின்னர் வீட்டினுள் நுழைய வேண்டும்.
எ. சாஸ்திரபூர்வ விதி மற்றும் சடங்குகளின் கால அளவு : ஆவணி சுக்ல சதுர்த்தி அன்று களிமண்ணால் மூர்த்தி செய்கிறார்கள். அதை வலது கையால் தொட்டு ஸித்திவிநாயகராக ப்ராண- ப்ரதிஷ்டை செய்து, பூஜை செய்து பின் உடனே விஸர்ஜனம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் மனிதர்கள் உற்சவ ப்ரியர்கள் ஆனதால் இவ்வளவு செய்த பின்பும் மனம் திருப்தி அடைவதில்லை. அதனால் ஒன்றரை, ஐந்து, ஏழு அல்லது பத்து நாட்களுக்கு வைத்துக் கொண்டு உற்சவம் கொண்டாடுகின்றனர். சில பெரியவர்கள் கௌரியுடன் சேர்ந்து கணபதியையும் விஸர்ஜனம் செய்கின்றனர். குலவழக்கப்படி சில வீடுகளில் கணபதியை ஐந்து நாட்கள் வைத்திருப்பது வழக்கம். அவர்கள் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு வைத்திருக்க விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் வேறு விஷயம் தெரிந்தவரை கேட்க வேண்டிய அவசியமில்லை. நியதிப்படி முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது, ஏழாவது அல்லது பத்தாவது நாளில் விஸர்ஜனம் செய்யலாம்.
ஏ. ஆஸனத்தில் மூர்த்தியை ஸ்தாபிப்பது : எந்த ஆஸனத்தில் மூர்த்தியை ஸ்தாபனம் செய்யப் போகிறோமோ அதில் அரிசியை பரப்பி பூஜைக்கு முன்பு அதன் மீது மூர்த்தியை ஸ்தாபனம் செய்ய வேண்டும். அவரவர் சம்ப்ரதாயப்படி சிறிதளவோ அல்லது அதிகமாகவோ அரிசியை பரப்பலாம். இதன் பயன் கீழ் வருமாறு.
மூர்த்தியில் கணபதியை ஆவாஹனம் செய்து பூஜை செய்வதால் மூர்த்தியில் சக்தி நிர்மாணமாகிறது. அந்த சக்தி அரிசியிலும் பரவுகிறது. தம்பூராவின் ஒரு தந்தியை மீட்டும்போது அந்த அதிர்வலைகள் மற்ற தந்திகளிலும் பரவுகிறது. அதேபோல் மூர்த்தியின் கீழுள்ள அரிசியில் சக்தி அதிர்வலைகள் நிர்மாணமாவதுபோல் வீட்டின் அரிசி பானையிலுள்ள அனைத்து அரிசியிலும் சக்தி அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன. இது போன்ற சக்தி நிரம்பிய அரிசியை ப்ரஸாதமாக வருடம் முழுவதும் உண்ணலாம்.