Contents
- 1. அஷ்டாங்க ஸாதனையின் நிலைகளின் வரிசைகிரமம் ஸாதகர்களின் குணங்களைப் பொருத்து அமைகிறது
- 2. வ்யஷ்டி ஸாதனை
- 3. ஸமஷ்டி ஸாதனை (சம்பூர்ண சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட பாடுபடுதல்)
- 4. அஷ்டாங்க ஸாதனையின் வரிசைகிரமம் மாற்றப்பட்டதன் காரணம் – எல்லாக் காரியங்களும் மனதால் நடக்கின்றன
- 5. கலியுகத்தில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைதல் மிகவும் மகத்துவம் நிறைந்தது
வாழ்வில் துக்கத்தை தைரியமாக எதிர்கொள்ளக் கூடிய பலம் மற்றும் எப்பொழுதும் நிலைத்து நீடித்திருக்கும் ஆனந்தம் ஸாதனையால் மட்டுமே கிடைக்கும். ஸாதனை என்பது இறைனை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சி. ‘ஸாதனானாம் அநேகதா’ அதாவது பல்வேறு ஸாதனை வழிகள் இருப்பதால் எந்த ஸாதனையை செய்வது என்ற குழப்பம் பலருக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரிவினரும் சம்ப்ரதாயத்தினரும் அவரவரின் ஸாதனை வழி தான் சிறந்தது எனக் கூறுகின்றனர். அதனால் மேலும் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் சாதாரணமாக எந்த வழி ஸாதனையை பின்பற்றுவது?
கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்ற எந்த விதமான ஸாதனையை செய்தாலும் இறுதியில் குருவருள் இல்லாமல் இறைவனை அடைய முடியாது. அதனால்தான் ‘குருக்ருபா ஹி கேவலம் சிஷ்ய பரம மங்களம்’ என கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிஷ்யனுக்கு பரம மங்களத்தைத் தரக்கூடிய மோக்ஷமானது குருவருளால் மட்டுமே கிட்டும். குருவருளால் இறைவனை நோக்கி செல்வதையே ‘குருக்ருபாயோகம்’ எனக் கூறுவர். குருக்ருபாயோகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா யோகங்களும் ஒருங்கிணைந்த, இறைவனை அடையக் கூடிய சுலபமான வழி இது என்பதுதான்.
இந்த கட்டுரையின் மூலம் குருக்ருபாயோகப்படியான ஸாதனையில் வ்யஷ்டி ஸாதனை மற்றும் ஸமஷ்டி ஸாதனை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.
1. அஷ்டாங்க ஸாதனையின் நிலைகளின் வரிசைகிரமம் ஸாதகர்களின் குணங்களைப் பொருத்து அமைகிறது
அ. 1-ம் வரிசைகிரமம் – ஸாதகர்களிடம் அதிக
ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் இருத்தல்
இது போன்ற ஸாதகர்கள் கீழ்க்கண்ட வரிசைகிரமப்படி முயற்சிக்க வேண்டும்.
1. ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் குணங்களை வளர்த்தல்,
2. அஹம்பாவத்தைக் களைதல்,
3. நாமஜபம்,
4. ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்யப்படும் முயற்சிகள்,
5. ஸத்சங்கம்.
6. ஸத்சேவை,
7. ஸத்யத்திற்காக தியாகம் மற்றும்
8. ப்ரீதி (மற்றவரிடம் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு) மற்றும் ஸாக்ஷிஉணர்வு
ஆ. 2-ம் வரிசைகிரமம் – ஸாதகர்களிடம் பக்தியுணர்வு இருத்தல்
பக்தியுணர்வு அதிகமுள்ள ஸாதகர்கள் அஷ்டாங்க ஸாதனையை கீழ்க்கண்டவாறு முயற்சிக்க வேண்டும்.
1. நாமஜபம்,
2. அடுத்த நிலையில் பக்தியுணர்வு அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள்,
3. ஸத்சங்கம்,
4. ஸத்சேவை,
5. ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் குணங்களை வளர்த்தல்,
6. அஹம்பாவம் களைதல்,
7. ஸத்யத்திற்காக தியாகம் மற்றும்
8. மற்றவர்களிடம் ப்ரீதி (எதிர்பார்ப்பில்லாத அன்பு) மற்றும் ஸாக்ஷிஉணர்வு.
2. வ்யஷ்டி ஸாதனை
வ்யஷ்டி ஸாதனையின் அங்கங்கள் கீழ்வருமாறு.
அ. குல ஆசாரம், பண்டிகை-விரதங்கள்,
பல்வேறு தார்மீக காரியங்களை செய்தல்
மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் தார்மீக காரியங்களே. நித்யப்படி செய்ய வேண்டிய குலாசாரங்களை கடைபிடித்தல், குல தெய்வத்தின் பூஜை, அர்ச்சனை, அதன் ஸ்தோத்திர பாராயணம், அதன் தரிசனத்திற்காக அதிக வேளை செல்லுதல் போன்றவற்றை செய்தல். நமஸ்காரம், ஆரத்தி, பிறந்தநாள், உபநயனம் போன்ற தார்மீக காரியங்களை செய்தல், சித்திரை வருடப்பிறப்பு, கணேச சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்களை சாஸ்திரப்படி கொண்டாடுதல். இந்த தார்மீக காரியங்களால் இறைவனிடம் பக்தியுணர்வு நிர்மாணமாக உதவி கிடைக்கிறது.
ஆ. ஆளுமை குறைகளைக் களைய முயற்சித்தல்
மற்றும் குணங்களை வளர்த்தல்
ஒவ்வொருவரிடமும் கோவம், எரிச்சல், சோம்பல், மறதி போன்ற ஆளுமை குறைகள் குறைந்த-அதிக அளவு உள்ளன. ஆளுமைக் குறைகளால் நமக்கு மற்றும் பிறருக்கு எத்தகைய தீங்கு ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒருவரின் இயல்பே முன்கோவம் வரக்கூடிய இயல்பு என்பதால் அவர் சிறு சிறு விஷயங்களுக்கும் மற்றவர் மீது கோவப்படுவார். அதனால் அவரின் மனோநிலை கெடுவதால் எந்தக் காரியத்தையும் அவரால் மன ஒருமைப்பாட்டுடன் செய்ய முடிவதில்லை மற்றும் பல தவறுகள் ஏற்படுகின்றன, காரியத்திறனும் குறைகின்றது. இவ்வாறு கோவப்பட்டுக் கொண்டே இருப்பதால் அவருக்கு ஸாதனையின் மூலம் கிடைக்கக் கூடிய ஆத்மதிருப்தி கிடைப்பதில்லை. அவர் மற்றவரிடம் கோவப்பட்டு பேசுவதால் அவர்களின் மனம் துக்கப்படுகின்றன. அதனால் மற்றவர்களின் மனமும் புண்படுகின்றன. அவர்களுக்கு அவருடன் பேசும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது, சஹஜமாக அவர்களால் உரையாட முடிவதில்லை. இதன் பரிணாமம் அவரின் காரியத்திறன் மீது ஏற்படுகிறது.
ஆளுமை குறைகள் இருப்பவர்களின் ஆளுமை குறைகளை பயன்படுத்திக் கொண்டு தீய சக்திகள் அவர்களுக்கு மேலும் கஷ்டங்களைக் கொடுக்கின்றன. அதனால் ஒவ்வொருவரும் அவரவரின் ஆளுமை குறைகளைக் களைய முழு முனைப்புடன் முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஸாதனை செய்யும்போது அடுத்த அடுத்த நிலைகளுக்கு செல்ல ஒருவரின் ஆளுமை குறைகளைப் பூரணமாகக் களைவதற்கு முயல வேண்டும்.
ஸாதகர்களுக்கு அவர்களின் ஸாதனையில் இந்த ஆளுமை குறைகள் பெரும் தடையாக உள்ளன. அதேபோல் அவர்களிடமுள்ள குணங்கள் ஸாதனைக்கு உதவியாக உள்ளன. அதனால் ஸாதனையில் ஆளுமை குறைகளைக் களைய எவ்வளவு மகத்துவம் உள்ளதோ அவ்வளவு மகத்துவம் குணங்களை வளர்ப்பதிலும் உள்ளது. சுருக்கமாக ஸாதனைக்கு இந்த இரு முயற்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்களாகும். அதனால் குருக்ருபாயோக சாதனையின் எட்டு நிலைகளின் முதல் நிலையாக வெறும் ஆளுமை குறைகளைக் களைதல் மட்டுமன்றி குணங்களை வளர்த்தல் என்பதையும் சேர்த்தே செய்ய வேண்டும்.
ஸாதகர்களும் ஆளுமை குறைகளைக் களைவதோடு கூட குணங்களை வளர்த்தல் என்னும் செயல்முறையையும் சேர்த்தே செய்ய வேண்டும்; காரணம் குணம் இல்லாமல் ஸாதனை செய்ய இயலாது. குணங்களின் மூலம் மனோபலம் அதிகரிக்கிறது. குணங்கள் அதிகமானால் ‘ஸாதனை செய்தும் ஏன் முன்னேற்றம் ஏற்படவில்லை’ என்பது போன்ற எண்ணங்கள் மற்றும் அவநம்பிக்கை மனதில் ஏற்படாது. சாதாரணமாக ஒவ்வொருவருமே மன அழுத்தம் ஏற்படுதல், கவலைப்படுதல், நம்பிக்கை இழத்தல், மனோராஜ்யத்தில் உழலுதல் போன்ற ஆளுமைக் குறைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதனால் இதுபோன்ற ஆளுமை குறைகள் அதிகமாயுள்ளவர்கள் முக்கியமாக ஆளுமைக் குறைகளைக் களைய முயற்சிக்க வேண்டும் மற்றும் ஆளுமை குறைகள் குறைவாக உள்ளவர்கள் ஆளுமை குறைகளைக் களைதல் செயல்முறையை கடைபிடித்து அதோடு குணங்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இ. நாமஜபம்
பூஜை, ஆரத்தி, பஜனை, பாராயணம் போன்ற உபாசனைகளால் தெய்வத்தின் அருள் கிடைக்கிறது மற்றும் தெய்வ தத்துவத்தின் பயனும் கிடைக்கிறது. ஆனால் இந்த எல்லா உபாசனை வழிகளையும் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதால் பலனும் அதற்குட்பட்டே கிடைக்கிறது. தெய்வ தத்துவத்தின் பயன் தொடர்ந்து கிடைப்பதற்கு தெய்வ உபாசனையும் தொடர்ந்து நடைபெற வேண்டும் மற்றும் அவ்வாறு தொடர்ந்து நடைபெறக் கூடிய ஒரே உபாசனை ‘தெய்வத்தின் நாமஜபம்’ ஆகும். நாமஜபம் என்பது இறைவனின் நாமத்தைத் தொடர்ந்து நினைப்பது. கலியுகத்தில் நாமஜபமே மிக சுலபமான அதி உத்தமமான வழியாகும். நாமஜபமே குருக்ருபாயோகப்படியான ஸாதனையின் அடித்தளம் ஆகும். குருபிராப்தி ஆன பின்பு குரு அருளிய குருமந்திரத்தை ஜபிக்க வேண்டும், இல்லையேல் இறைவனின் பலப்பல நாமங்களில் ஒருவரின் குல தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும். குல தெய்வ நாமஜபத்துடன் கூட தத்த நாமஜபமும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
ஈ. ஆன்மீக உணர்வு விழிப்படைய முயற்சிப்பது
‘நாதா துஜ்யா பாயி ஜைஸா ஜ்யாசா பாவ | தைஸா தாஸி டாவ் சரணி துஜா || ‘, என்று ப.பூ. பக்தராஜ் மகாராஜ் கூறியுள்ளார். இதன் அர்த்தம், ‘ஹே இறைவா, யாருக்கு உன் சரணங்களில் எவ்வித ஆன்மீக உணர்வு உள்ளதோ அதற்கேற்ற ஸ்தானம் அவர்களுக்கு உங்களின் சரணங்களில் கிடைக்கிறது’. இதன் மூலம் ஸாதகர்களின் கண்ணோட்டத்தில் ஆன்மீக உணர்வின் மகத்துவம் எவ்வளவு அசாதாரணமானது என்பது கவனத்திற்கு வரும். உங்களின் அந்தக்கரணத்தில் பகவான் சம்பந்தமான அன்பூற்று பெருக்கெடுப்பதையே ‘பகவானிடம் உள்ள ஆன்மீக உணர்வு’ எனக் கூறுவர். எவ்வளவு விரைவில் உங்களின் மனதில் ஆன்மீக உணர்வு ஏற்படுகிறதோ மற்றும் எவ்வளவு அதிகம் விழிப்படைந்த நிலையில் உள்ளதோ அவ்வளவு விரைவில் நீங்கள் இறைவனுக்கு அருகில் செல்ல முடியும். ஆன்மீக உணர்வை அதிகரிக்க மனம் மற்றும் புத்தியின் நிலையில் எப்போதும் செயல்களில் ஈடுபட்டால் ஆன்மீக உணர்வு நிச்சயமாக அதிகரிக்கும்.
உ. ஸத்சங்கம்
ஸத்சங்கம் என்றால் ஸத்யத்தின் சங்கம், ஸாத்வீக சூழல். ஸாதகர்களின் மகான்களின் சங்கமே ஸத்சங்கம்.
மகத்துவம் : ஒருமுறை வசிஷ்ட ரிஷிக்கும் விச்வாமித்ர ரிஷிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது, ஸத்சங்கம் சிறந்ததா அல்லது தவம் சிறந்ததா? வசிஷ்ட ரிஷி ‘ஸத்சங்கம்’ என்றும் விச்வாமித்ர ரிஷி ‘தவம்’ என்றும் கூறினார். வாதத்தின் முடிவைத் தீர்மானிக்க அவர்கள் தெய்வங்களிடம் சென்றனர். அவர், ‘சேஷ நாகமே உங்களின் கேள்விக்கு விடை அளிக்க முடியும்; என்றார். இருவரும் சேஷனிடம் சென்றனர். இருவரும் கேட்ட பிறகு ஆதிசேஷன் கூறினார், ‘என்னுடைய தலையில் உள்ள பாரத்தை சிறிது விலக்கி வையுங்கள். அப்போதே என்னால் உங்களின் கேள்விக்கு விடை கூற முடியும்’. விச்வாமித்ரர் உடனே சங்கல்பம் செய்தார், ‘என்னுடைய ஆயிரம் வருட தவப்பலனை நான் தத்தம் செய்கிறேன். ஆதிசேஷனின் தலையிலிருந்து பூமி சிறிது விலகட்டும்.’ ஆனால் பூமி சிறிதும் நகரவில்லை. அப்போது வசிஷ்டர் சங்கல்பம் செய்தார், ’12 நிமிட நேர ஸத்சங்க பலனை நான் அர்ப்பணம் செய்கிறேன். பூமி சிறிது விலகட்டும்.’ பூமி உடனே மேலெழும்பியது. இதிலிருந்து ஸத்சங்கத்தின் மகத்துவம் தெரிகிறது.
பயன் : ஸத்சங்கத்தில் பங்கேற்கும் அனைத்து ஸாதகர்களின் ஒட்டுமொத்த ஸாத்வீகத் தன்மையால் அதில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பயன் கிட்டுகிறது. அதாவது ஒவ்வொருவரின் ரஜ-தம ஆவரணம் சிறிது சிறிதாக குறைகிறது. நாமஜபத்தின் மூலம் கிடைக்கும் ஆனந்தம் ஸத்சங்கத்தில் பங்கேற்கும்போது நாமஜபம் செய்யாமலேயே கிடைக்கிறது. இத்தகைய அநுபூதி 50% ஆன்மீக நிலை உள்ளவருக்கு கிடைக்கிறது.
ஊ. ஸத்சேவை
கோவிலை துப்புரப்படுத்துதல், ஸந்த் சேவை போன்றவை ஸத்சேவை ஆகும். ஸத்சேவை சம்பந்தமாக கீழேயுள்ள குறிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 60% ஆன்மீக நிலை அடையும்வரை சேவை முழுமனதுடன் செய்யப்படுவதில்லை. அதுவரை அது புத்தியளவில் தான் செய்யப்படுகிறது. ஸத்சேவையில் இன்னொருவரின் மனம் திருப்தி அடைய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் சுய தேவைகள் சிறிது சிறிதாக குறைந்து ஸாதகர் நிவ்ருத்தி மார்க்கத்தில் செல்ல ஆரம்பிக்கிறார். அஸத்திற்கு செய்யப்படும் சேவை என்பது மாயையை ஸத்யம் என்று நம்பி செய்யப்படும் சேவையாகும். உதா. நோயாளிகளுக்கு சேவை செய்வது. அஸத்திற்கு செய்யப்படும் சேவையால் கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஏற்படுகிறது. அதோடு ‘நான் சேவை செய்கிறேன்’ என்ற அஹம்பாவம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அது ஸாதனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு மாறாக ஸத்சேவை மூலமாக அஹம்பாவம் குறைவதற்கு உதவி கிடைக்கிறது. குருசேவை என்பது அஹம்பாவத்தை மறப்பதற்காக செய்யப்படும் ஒன்று. ஸத்சேவை செய்து ஸாதகரின் ஆன்மீக நிலை 55% என உயர்ந்தால் யாராவது ஒரு உன்னத புருஷர் அவரை சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார்.
எ. அஹம்பாவத்தைக் களைய முயற்சித்தல்
சாதாரண மனிதர்களிடம் மட்டுமல்ல, ஸாதகர்களிடமும் கூட ஏதோ ஒரு விதத்தில் அஹம்பாவம் உள்ளது. ஈச்வரன் என்றால் சூன்ய அஹம். நம்மிடம் ஒரு துளி அஹம்பாவம் இருந்தாலும் கூட நம்மால் இறைவனுடன் முழுமையாக கலக்க முடியாது. அதனால் ஸாதனை செய்யும்போது அஹம்பாவத்தைக் களைவதற்கு உணர்வுபூர்வமாக முயற்சிப்பது அ அவசியமாகிறது.
ஏ. ஸத்யத்திற்காக செய்யப்படும் தியாகம்
ஆன்மீக முன்னேற்றத்திற்கு உடல், மனம் மற்றும் செல்வம் ஆகியவற்றைத் தியாகம் செய்ய வேண்டும். ஒருவர் முதலில் உடலால் சேவை மற்றும் மனதால் நாமஜபம் ஆகியவற்றை செய்ய ஆரம்பிக்கலாம். பின்னர் தொடர்ந்து ஸாதனை செய்து வரும்போது சிறிதளவு செல்வத்தையும் தியாகம் செய்ய ஆரம்பிக்கலாம். சர்க்கஸ்-ல் மேலே ஊஞ்சலில் ஆடும் பெண் இருகைகளையும் விட்டால் ஒழிய இன்னொரு ஊஞ்சலில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நபரால் அவளைப் பிடிக்க இயலாது. அதேபோல் ஸாதகர் எல்லாவற்றையும் தியாகம் செய்தால் ஒழிய இறைவன் அவருக்கு ஆதாரமாக இருக்க மாட்டார்.
தியாகம் என்பது பொருட்களை தியாகம் செய்வது அல்ல, அந்தப் பொருட்கள் சம்பந்தமாக மனதில் உள்ள பற்றைத் துறத்தலே ஆகும். ஆரம்பத்தில் குரு சிஷ்யனை அவனிடமுள்ள பொருட்களைத் துறக்க செய்கிறார். இறுதியில் சிஷ்யனின் பற்றுதல் நீங்கிய பின்பு நிரம்ப நிரம்ப தருகிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களுக்கு பற்றுதல் இல்லை; அதனால் சமர்த்த ராமதாஸ் சுவாமி, சிவாஜி தனக்களித்த ராஜ்யத்தை திரும்ப சிவாஜிக்கே அளித்து விட்டார்.
தானத்தை ஏன் மகான்களுக்கும் ஸத்காரியங்களுக்கும் தர வேண்டும்?
தானம் என்பது ‘ஸத்பாத்ர தானமாக’ இருக்க வேண்டும். இவ்வுலகில் மகான்களைக் காட்டிலும் ஸத்பாத்திரமானவர் வேறு எவரும் இல்லை. அதனால் எந்த தானமாக இருந்தாலும் அதை மகான்களுக்குத் தர வேண்டும். இது உபாசனை காண்டப்படி நாமஜப ஸாதனை செய்பவர்களால் முடியும். கர்மயோகத்தில் ஈடுபடுபவர்கள் பிச்சைகாரர்களுக்கு அன்னமிடுதல், பள்ளிகள் ஆஸ்பத்திரிகளுக்கு நன்கொடை அளித்தால் என்று உணர்வுபூர்வமாக செயல்படுவர். அவர்களுக்கு வெறும் புண்ய பலனே கிடைக்கும். மோக்ஷத்தில் நாட்டமுடையவர்களுக்கு பாவ-புண்ய பலன் இரண்டும் வேண்டாம். காரணம் புண்யத்தால் ஸ்வர்க்கமே கிடைக்கும்; மோக்ஷம் கிடைக்காது. இருந்தாலும் ஸாதனையின் ஆரம்பத்தில் கர்மயோகப்படி இது போன்று நிச்சயம் தானமளிக்க வேண்டும்.
ஒ. ஸாக்ஷி உணர்வு
80% ஆன்மீக நிலையில் எல்லாவற்றையும் மற்றும் தன் முன்னேற்றத்தையும் கூட ‘எல்லாம் குரு இச்சைப்படியே நடக்கிறது’ என்ற உணர்வுடன் பார்க்க முடிகிறது.
3. ஸமஷ்டி ஸாதனை (சம்பூர்ண சமூகத்தின்
ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட பாடுபடுதல்)
ஸாதனைக்கான ஆபத்துக்காலம் என்பது ஸாதனையில் தடங்கல்கள் நிறைந்த பாதகமான காலம். தற்போது அதிகரித்து வரும் ரஜ-தம மாசு மற்றும் தர்மத்திற்கு இழைக்கப்படும் தீங்கு, ராஷ்ட்ரம் அராஜகத்தை நோக்கி செல்வது போன்றவற்றால் இக்காலம் ஆபத்துக்காலமாகி விட்டது. ஆபத்துக்காலத்தில் வெறும் வ்யஷ்டி ஸாதனை செய்து இறைவனை அடைவது கடினம். அதற்கு வ்யஷ்டி ஸாதனையுடன் கூட ஸமஷ்டி ஸாதனையையும் சேர்த்து செய்வது அத்தியாவசியமாகிறது. ஸமஷ்டி ஸாதனையின் அங்கங்கள் கீழ்வருமாறு.
அ. ஆன்மீக பிரசாரம் : அதி உன்னத ஸத்சேவை
1. மகத்துவம்
ஒருமுறை ஒரு குரு தன் இரு சிஷ்யர்களிடம் கைப்பிடி கோதுமை தானியங்களைக் கொடுத்து கூறினார், ‘நான் திரும்பி வரும்வரை இதை பத்திரமாக வைத்திருங்கள்’. ஒரு வருடம் கழிந்த பின்னர் குரு திரும்பி வந்து முதல் சிஷ்யனிடம் சென்று விசாரித்தார், ‘கோதுமையை பத்திரமாக வைத்திருக்கிறாயா?’ அந்த சிஷ்யர் ‘ஆமாம்’ என பதில் கூறி கோதுமை வைத்திருந்த பாத்திரத்தை கொண்டு வந்து காண்பித்தான். குரு இரண்டாவது சிஷ்யநிடமும் கேட்டார். அப்போது அவன் அருகில் இருந்த வயலுக்கு கூட்டி சென்று அங்கு கதிர் முற்றி விளைந்துள்ள பயிரைக் காண்பித்தான். அதைப் பார்த்ததும் குருவுக்கு ஆனந்தம் ஏற்பட்டது. அதேபோல் குரு நமக்கு அளித்த நாமத்தையும் ஞானத்தையும் மற்றவருக்கு வழங்கி அதை பெருக செய்ய வேண்டும்.
மகத்துவத்தின் ஒப்பீடு : கீழ்க்கண்ட அட்டவணையில் சிஷ்யனுக்கு எந்தக் காரியத்தால் எந்த அளவு குருவருள் கிடைக்கிறது என்பது கூறப்பட்டுள்ளது.
சிஷ்யனின் செயல் | குருக்ருபை (%) |
---|---|
1. வெறும் தரிசனம் செய்தல் | 2 |
2. ஆன்மிகம் சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்பது | 10 |
3. ஆஸ்ரம வேலைகளை செய்தல் | 40 |
4. பகுதிநேர ஆன்மீக பிரசாரத்தை பலனளிக்கும் வகையில் செய்தல் | 70 |
5. முழுநேர ஆன்மீக பிரசாரத்தை பலனளிக்கும் வகையில் செய்தல் | 100 |
2. ஆன்மீக பிரசாரத்தை எவ்வாறு செய்வது? : ‘தர்மம் மற்றும் ஸாதனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது, நான் எப்படி ஆன்மீக பிரசாரம் செய்வேன்?’ என்று சிலருக்கு தோன்ற வாய்ப்புண்டு. ஆனால் அது தவறான சிந்தனை. கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தன் சுண்டு விரலால் தூக்கியபோது கோப,கோபியர்களும் சிறு குச்சிகளால் அதைத் தாங்கிப் பிடித்து கிருஷ்ண காரியத்தில் பங்கேற்றனர். குரு அதாவது ஈஸ்வரன் தர்மத்திற்கு ஏற்பட்ட தீங்கைப் போக்குவார்; ஆனால் நாமும் அதில் சிறு பங்கேற்க வேண்டும். யாருக்கு ஆன்மீகத்தைப் பயின்று மற்றவருக்கு எடுத்துரைக்க முடியுமோ அவர்கள் அதை செய்யலாம், யாருக்கு செல்வத்தை அர்ப்பணம் செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்யலாம்.
ஆ. ராஷ்ட்ர ரக்ஷணம் மற்றும் தர்ம விழிப்புணர்வு
தற்போது பிரிவினைவாதிகளும் நக்சல்வாதிகளும் தேசத்தை கூறுபோட்டு பிளக்கின்றனர். வறுமை, ஜாதீயவாதம், சமூக சீர்கேடு, ஊழல், ஒதுக்கீடு போன்ற பல சங்கடங்கள் தேசத்தை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. சுருக்கமாக தேசம் ரஸாதளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கிறது. தர்மமே ராஷ்ட்ரத்தின் பிராணன் ஆகும். தர்மத்திற்கு அழிவு ஏற்பட்டால் அதோடு கூட நாம் அனைவரும் அழிந்து போவோம். அதற்கு ராஷ்ட்ர ரக்ஷணம் மற்றும் தர்ம விழிப்புணர்வு சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மகத்துவம் நிறைந்தது.
இ. ஹிந்துக்களை ஒருங்கிணைத்தல்
ஹிந்து தர்மத்தை எதிர்க்க வேண்டும் என்றால் எதிரிகள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். அதோடு ஒப்பிடும்போது ஹிந்து தர்மம் மற்றும் ராஷ்ட்ரத்திற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைவது மிகக் குறைவாகவே உள்ளது. ஹிந்துக்கள் ஒருங்கிணைந்தால்தான் ஹிந்து தர்ம ரக்ஷணம் மற்றும் ராஷ்ட்ர ரக்ஷணம் ஏற்படும். அதற்கு ஹிந்துக்களை ஒருங்கிணைக்க பாடுபடுவதும் மிகப் பெரிய ஸமஷ்டி ஸாதனை ஆகிறது.
ஈ. மற்றவர்களிடம் ப்ரீதி
ஸாதனையை தொடர்ந்து செய்து 70% ஆன்மீக நிலையை அடையும்போது மற்றவர் மீது ப்ரீதி, அதாவது எதிர்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பு ஏற்படத் துவங்குகிறது. உலக விஷயங்களில் காட்டப்படும் அன்பில் எதிர்பார்ப்பு உள்ளது. ஸாதனை செய்து ஸாத்வீகத் தன்மை அதிகரித்து உண்டாகும் ஸாந்நித்யத்தால் அண்ட சராசரங்களில் உள்ள படைப்புகளின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளும் இயல்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் பரமேச்வரனே தெரிய ஆரம்பிக்கிறார். ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது உலகில் உள்ள அனைவரும் நம் குடும்பத்தினர் என்ற உணர்வு ஏற்படுகிறது. இது போன்று அன்பில் ஒரு விசாலமான தன்மை ஏற்பட்டு அது ப்ரீதியாக பரிணமிக்கிறது. இது விரைவில் சாத்தியமாவதற்கு முதலில் முயற்சியுடன் அன்பு செய்ய வேண்டும். இதற்கு ஸத்சங்கத்தில் இருப்பது மிகவும் உறுதுணையாக உள்ளது. முதலில் ஸத்சங்கத்திற்கு வருபவர்களிடம் ப்ரீதி ஏற்படுகிறது. பிறகு மற்ற சம்ப்ரதாயத்தை சேர்ந்தவர், பிறகு ஸாதனை செய்யாதிருப்பவர் மற்றும் இறுதியில் எல்லா பிராணிகளிடத்தும் ப்ரீதி நிர்மாணமாகிறது.
உ. காலத்திற்கேற்ற அவசியமான ஸ்ரீகிருஷ்ணனின் நாமஜபத்தை செய்தல்
இன்றைய காலகட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் தத்துவம் அதிகபட்ச செயல்பாட்டில் உள்ளது. அதற்கு ஸமஷ்டி ஸாதனையை குறைந்தபட்சம் 2 வருடங்கள் செய்து வரும் ஸாதகர்கள் காலத்திற்கேற்ற அவசியமான நாமஜபமான ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற நாமஜபத்தை தினமும் 2 மணி நேரமாவது செய்ய வேண்டும்.
4. அஷ்டாங்க ஸாதனையின் வரிசைகிரமம்
மாற்றப்பட்டதன் காரணம் –
எல்லாக் காரியங்களும் மனதால் நடக்கின்றன
அ. மனிதர்கள் மூலமாக என்ன காரியங்கள் நடக்கின்றனவோ அவை அவர்களின் மனங்களால் நடக்கின்றன. உடல் மூலமாக நடக்கும் ஒவ்வொரு காரியமும் மனதால் நடக்கிறது. மனம் நல்லதாக இருந்தால், அதாவது அதில் எந்த ஆளுமைக் குறையும் அஹம்பாவமும் இல்லாதிருந்தால் உடல் மூலமாகவும் யோக்யமான காரியங்கள் நடக்கின்றன , ஆளுமை குறைகள், அஹம்பாவம் இருந்தால் உடல் மூலமாக அயோக்ய காரியங்கள் நடக்கின்றன.
ஆ. எந்தவித யோக வழியின் மூலம் ஸாதனை செய்தாலும் ஆளுமை குறைகளைக் களையாமல் அஹம்பாவத்தைக் குறைக்காமல் முன்னேற்றம் ஏற்படாது. உதா. தியானயோகம் மூலமாக ஸாதனை செய்பவருக்கு தியானம் லபிக்க எவ்வளவு முயன்றாலும் அவரிடமுள்ள குறைகளால் தியானத்தில் லயிக்க முடிவதில்லை. ஓரளவாவது ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைந்தால்தான் ஸாதனையில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது.
இ. அஷ்டாங்க ஸாதனையில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் ஆகியவை துர்குணங்கள் ஆகும். மற்ற ஆறும் குணங்கள் ஆகும். துர்குணங்களைக் களைந்தால் ஒழிய குணங்கள் வளர்வதில்லை.
ஈ. குணங்களை அதிகப்படுத்தி அதன் மூலம் குறைகளைக் களைவதற்கு பல வருடங்கள் ஆகின்றது. அதற்கு மாறாக குறைகளை முதலில் களைந்தால் குணங்கள் விரைவில் வளர்கின்றன.
5. கலியுகத்தில் ஆளுமை குறைகள் மற்றும்
அஹம்பாவத்தைக் களைதல் மிகவும் மகத்துவம் நிறைந்தது
முந்தைய யுகங்களில் இவற்றின் பிரமாணம் குறைவாக இருந்தன. அதனால் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைதற்கான அவசியம் ஏற்படவில்லை. அப்போது பல்வேறு யோக வழிகளின் மூலம் ஸாதனை செய்ய முடிந்தது. கலியுகத்தில் ஆளுமைக் குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் பிரமாணம் மிக அதிகமாக இருப்பதால் இவற்றை முதலில் களைவது அவசியமாகிறது. இல்லையேல் ஸாதனை சரியாக நடப்பதில்லை.
தகவல் : ஸநாதனின் நூல் ‘குருக்ருபாயோகப்படியான ஸாதனை’