ஆதர்ச ஆளுமையுடைய ஸ்ரீராமபக்த ஹனுமான்!

சப்த சிரஞ்ஜீவிகளில் வீர ஹனுமானும் ஒருவர்! அத்தகைய மகாபலி, அதி பராக்கிரமசாலி, நைஷ்டிக பிரம்மச்சாரியான, ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் அனன்ய பக்தனான, அஞ்சனை புத்திரனான ஹனுமானின் சரித்திரத்தை நாம் எல்லோரும் படித்திருப்போம்! இருந்தாலும் இந்த வானர ஸ்ரேஷ்டரின் ஆளுமை எத்தகையது என்பது பற்றி ராமாயணம் விரிவான, சிந்திக்கத் தகுந்த அற்புத வர்ணனையை செய்துள்ளது. இன்று இளைஞர்களிடையே மிக பிரபலமான வகுப்பு என்னவென்றால் அது ‘ஆளுமை முன்னேற்ற வகுப்புகள்’தான். இதற்கு ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழிப்பதற்கு பதிலாக ஹனுமானின் சரித்திரத்தைப் பயின்றால் போதும், இந்த வகுப்புகளைக் காட்டிலும் அதிகம் கற்க முடியும். அத்தகைய ஒரு ஆதர்ச ஆளுமை எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஸ்ரீராமசந்திரமூர்த்தி மற்றும் ஹனுமானின் காரியங்களைப் பார்த்தாலே போதுமானது. அதற்கான கட்டுரைதான் இது!

அச்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹனுமான்ச விபீஷண: |
க்ருப: பரசுராமச்ச ஸப்தைதே சிரஞ்ஜீவின: ||

–            புண்யஜனஸ்துதி, ஸ்லோகம் 2

அர்த்தம் : துரோணாச்சாரியரின் புத்ரனான அச்வத்தாமன், கொடைவள்ளலான பலி சக்ரவர்த்தி, வேத வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபாச்சாரியார் மற்றும் பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்ஜீவிகளை நான் நினைவு கூர்கிறேன்.

ஒரு தூதன் எவ்வாறு பேச வேண்டும்
என்பதற்கான சிறந்த உதாரணம் ஹனுமான்!

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் மர்யாதா புருஷோத்தமனான ஸ்ரீராமன், சீதை அபகரிக்கப்பட்ட பின்பு கபந்தனின் ஆலோசனைப்படி சுக்ரீவனைத் தேடி ரிஷ்யமுக பர்வதத்திற்கு வருகிறார். அந்த சமயம் வாலியிடம் உள்ள பயத்தால் ராஜ்யத்திலிருந்து விலகி மறைந்து வாழும் சுக்ரீவனுக்கு ராம-லக்ஷ்மணர்களைப் பார்த்து ஆச்சரியமும் சந்தேகமும் ஒரு சேர எழுகிறது. சுக்ரீவன் தன் மந்திரியான ஹனுமாரை அனுப்பி அந்த ராஜகுமாரர்களின் விவரங்கள் அறிந்து கொண்டு வருமாறு பணிக்கிறான். ஹனுமார் ஒரு பிராம்மண உருவம் எடுத்து ராம-லக்ஷ்மணர்களை சந்திக்க வருகிறார். அங்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்கிறார். ஹனுமார் மற்றும் ராமனிடையே நடக்கும் இந்த உரையாடலைக் கேட்டால் ஹனுமாரின் புத்திசாதுர்யத்தைப் புரிந்து கொள்ளலாம்.அதைக் காட்டிலும் ஒரு தூதன் எவ்வாறு பேச வேண்டும் என்பதன் ஆதர்ச உதாரணம் இங்கு வெளிப்படுகிறது.

பிரபு ஸ்ரீராமசந்திர மூர்த்தி லக்ஷ்மணனிடம்
ஹனுமான் பற்றிய கூறிய குணவிசேஷங்கள்

ஹனுமானின் இனிய வார்த்தைகளைக் கேட்டு ஸ்ரீராமசந்திர மூர்த்தி லக்ஷ்மணனிடம் ஹனுமானைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார்.

பிரபு ஸ்ரீராமன் கூறுகிறார்,

நான்ருக்வேதவிநீதஸ்ய நாயஜுர்வேததாரிணம் |
நாஸாமவேத விதூஷ: ஷக்யமேவம் விபாஷிதும் ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 28

அர்த்தம் : யார் ருக்வேதம் கற்கவில்லையோ, யாரிடம் யஜுர்வேத பயிற்சி இல்லையோ, யார் ஸாமவேத வித்வான் இல்லையோ அவரால் இது போன்ற இனிய மொழிகளைக் கூற இயலாது!

நூனம் வியாகரணம் க்ருத்ஸன்மநேன பஹுதா ச்ருதம் |
பஹு வ்யாஹரதாநேன ந கிஞ்சித்தபசப்திதம் ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 29

அர்த்தம் : நிச்சயமாக இந்த ஹனுமார் வியாகரணத்தை ஆழ்ந்து பயின்றிருக்க வேண்டும்; அதனால்தான் இவ்வளவு நேரம் பேசியும் அவர் வாயிலிருந்து ஒரு அசுத்த சொல்லும் வெளிவரவில்லை!

ந முகே நேத்ரயோச்சாபி லலாடே ச ப்ருவோஸ்ததா |
அன்யேஷ்வபி ச காத்ரேஷு தோஷ: ஸம்விதித: க்வசித் ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 30

அர்த்தம் : இந்த ஹனுமார் மிகத் தெளிவாக தான் கூற வந்ததைக் கூறினார். அவர் கூறுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நடுநடுவே நிறுத்தி நிறுத்தி, வார்த்தைகளைத் தேடி பேசவில்லை. எந்த வாக்கியமும் கடுமையாக இல்லை. அவரின் குரல் இதயத்தில் மத்யமா ரூபத்தில் நிலையாக இருந்து தொண்டையிலிருந்து வைகரி ரூபத்தில் வெளிப்படுகிறது!

ஸன்ஸ்காரக்ரமஸம்பன்னாமத்புதாமவிலம்பிதாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம் ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 32

அர்த்தம் : பேசும்போது குரல் அதிக சப்தத்தோடும் இல்லை, குரலை உயர்த்திப் பேசவும் இல்லை. மத்யம ஒலியில் எல்லாவற்றையும் கூறுகிறார். இதயத்தில் ஆனந்தத்தை உண்டாக்கக் கூடிய மங்களகர குரலில் பேசுகிறார்.

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தானவ்யஞ்ஜநஸ்தயா |
கஸ்ய நாராத்யதே சித்தமுத்யதாசேரரேரபி ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 33

அர்த்தம் : இதயம், தொண்டை மற்றும் வாய் ஆகியவற்றின் மூலமாக தெளிவாக வெளிப்படும் அவரின் அமுத வாக்கால் மகிழ்ச்சி அடையாதவர் யாரும் இருக்க முடியாது. கொல்வதற்கு முயலும் எதிரியின் இதயத்திலும் இந்த வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்!

ஏவம்விதோ யஸ்ய துதோ ந பவேத் பார்த்திவஸ்ய து |
ஸித்தயாந்தி ஹி கதம் தஸ்ய கார்யாணாம் கதயேநக ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 3, ஸ்லோகம் 34

அர்த்தம் : ஹே பாவமற்ற லக்ஷ்மணா, எந்த ராஜ்யத்தில் இது போன்ற தூதுவன் இல்லையோ அங்கு எப்படி காரியங்கள் கைகூடும்?

ஹனுமானின் பிரம்மசர்யத்தைப் பற்றி
ஸமர்த்த ராமதாஸ் சுவாமி அவர்களின் வர்ணனை

ஸமர்த்த ராமதாஸ் சுவாமி

மூல ராமாயணத்தில் ஹனுமான் பற்றிய வர்ணனையைப் படித்தால் மனம் ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்துப் போகும். அவர் ‘புத்திமதாம் வரிஷ்டாம்’தான்; இருந்தாலும் அதைக் காட்டிலும் அவருக்கு இந்த்ரியங்களின் மீதுள்ள கட்டுப்பாடு, அவரின் அகண்ட பிரம்மச்சர்யம் ஆகியவை அதிக அற்புதம் வாய்ந்தவை!பிரம்மச்சர்யத்தின் சக்தி வேறு எங்கும் இந்த அளவு வெளிப்படவில்லை. மகாபாரதத்தில் பீஷ்மாச்சாரியாரின் உதாரணம் இருந்தாலும் கூட ஹனுமானின் உதாரணம் அதிக ஊக்கசக்தி வழங்குவதாக உள்ளது.

ஸமர்த்த ராமதாஸ் சுவாமி கூறுகிறார்,

முகீ ராம த்யா காம பாதூ சகேனா |
குணே  இஷ்ட தாரிஷ்ட த்யாசே சுகேனா ||
ஹரீபக்த தோ ஷக்த காமாஸ் மாரீ |
ஜகீம் தன்ய தோ மாருதி பிரம்மச்சாரி ||

–            மனாசே ஸ்லோக, ஸ்லோகம் 87

அர்த்தம் : யாரின் வாக்கில் இரவு பகலாக பரமேஸ்வரனின் நாமம் உள்ளதோ, அவரால் செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை. அவரிடம் தெய்வீக குணங்கள் சஹஜமாக சர்வ சாதாரணமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. ஹரிபக்தியின் பலத்தில் அவருக்கு அதற்குரிய சாமர்த்தியம், சக்தி ஏற்பட்டு காரியங்களில் வெற்றி கிடைக்கிறது. அத்தகைய பிரம்மச்சாரியான மாருதிக்கு நமஸ்காரம்!

மகரிஷி வால்மீகி ஹனுமானின் கதி பற்றி கூறிய வர்ணனை

மகரிஷி வால்மீகி தெளிவாகக் கூறுகிறார்,

ந பூமௌ நாந்தரிக்ஷே வா நாம்பரே நாமராலயே  |
நாப்ஸு வா கதிசங்கம் தே பஷ்யாமி ஹரிபுங்கவ ||

–            வால்மீகி ராமாயணம், காண்டம் 4, ஸர்க்கம் 44, ஸ்லோகம் 3

அர்த்தம் : ஹே வானரோத்தமனே, பூமி, அந்தரீக்ஷம், ஆகாயம், தேவலோகம் மற்றும் நீரிலும் உன்னுடைய கதிக்கு நிகராக வேறு எவரின் கதியையும் நான் கண்டதில்லை.

சுக்ரீவன் சீதையைத் தேட ஆரம்பிக்கும் சமயத்தில் ஹனுமானை உத்தேசித்து கூறுகிறார், “ஹனுமந்தா, உனக்கு அசுர, கந்தர்வ, நாக, மனித மற்றும் அரச குலம் ஆகிய அனைவரைப் பற்றிய ஞானம் உண்டு. ஆட்சி செய்பவர்களோடு சேர்த்து பதினான்கு லோகங்கள், 21 ச்வர்க்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஞானமும் உண்டு. சமுத்திரம் முதல் பர்வதம் வரை அனைத்தைப் பற்றிய ஞானமும் உண்டு. ஹே மாருதி, உன்னிடம் தடையில்லாத வேகம், தேஜஸ் மற்றும் ஊக்க சக்தி ஆகிய ஸத்குணங்கள் பரிபூரணமாக உள்ளன. இந்த பூமண்டலத்தில் உன்னைப் போன்ற தேஜஸ்வி வேறு எவரும் இல்லை.”

அத்தகைய வானரோத்தமரின் சரணங்களில்
கோடி கோடி நமஸ்காரங்கள்!

மகாபலி, அபரிமித பராக்கிரம, பவனசுத ஆஞ்சநேய ஸ்ரீராமதூத ஹனுமானுக்கு ஜெய் !!!

–            துகாராம் சிஞ்சணீகர் (உபயம் : சமூக வலைதளம்)

ஹிந்து தர்மத்தில் வேதபயிற்சி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை
மட்டுமே சார்ந்தது என்ற குற்றச்சாட்டு பொய்யானது !

பிரபு ஸ்ரீராமசந்திர மூர்த்தி ஹனுமானை சந்தித்த முதல் சந்திப்பில் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை கேட்கும்போதே ஹனுமானின் அதி உன்னத ஆளுமை வெளிப்படுகிறது. அதனால் ஸ்ரீராமர் ஹனுமானின் குணநலன்கள் சம்பந்தமாக புகழ்வது ஆச்சரியத்தை தருவதில்லை. ‘புத்திமந்தா வரிஷ்டம்’ ஆகிய ஹனுமான் எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்தவர் மற்றும் அதன் வழியில் நடப்பவர். அவருக்கு வியாகரணத்திலும் பாண்டித்யம் உண்டு. இதன் மூலம் அந்த சமயத்தில் வானரர்களும் வேதங்களைப் பயின்றனர் என்பது தெரிகின்றது. அவ்வாறிருக்கும்போது பெண்கள், சூத்திரர்கள் மற்றும் பஹுஜன சமூகத்தினருக்கு வேதம் மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஹிந்து தர்மத்தில் வேத பயிற்சி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்ற பொய் பிரசாரத்தை நாம் எவ்வளவு காலம் செய்யப் போகிறோம்? வானரர்களும் அக்காலத்தில் சம்ஸ்க்ருதம் மற்றும் வேத பயிற்சி பெற்றிருந்தனர், ஆனால் இன்றோ மனிதர்களாகிய நாம் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறோம்! இதை விட துர்பாக்கியம் வேறு உண்டா?

பக்தியுணர்வுடன் ஹனுமான் உபாசனை
செய்ய கற்றுத் தரும் ஸநாதனின் நூல்!

ஹனுமான் (கையேடு)

  • ஹனுமானின் காரியங்கள் மற்றும் சிறப்புகள் யாவை?
  • ஹனுமான் சரீரம் முழுவதிலும் ஏன் சிந்தூரத்தை அப்பிக் கொள்கிறார்?
  • ஹனுமானுக்கு எருக்கம் இலைகள், எண்ணெய் ஆகியவற்றை ஏன் அர்ப்பணிக்கின்றனர்? அந்த எண்ணெயை எதற்கு வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்?
  • தீய சக்திகளிடமிருந்து நிவாரணம் பெற ஹனுமான் உபாசனையின் மகத்துவம்
  • ஹனுமான் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?

இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ள இந்த கையேட்டை அவசியம் வாங்கி படியுங்கள்!

ஹனுமான் அருளால் பாதுகாப்பு கவசம் ஏற்பட இந்த ஸ்தோத்திரங்களை தினமும் பாராயணம் செய்யுங்கள்…

ஸ்ரீராமரக்ஷா ஸ்தோத்திரம் மற்றும் மாருதி ஸ்தோத்திரம்

ஸனாதன் நூல்களை ஆன்லைன் மூலம் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் SanatanShop.com

தொடர்பு எண் : 9322315317

 

 

 

Leave a Comment