Contents
- ரதசப்தமி அறிமுகம்
- ரதசப்தமியின் முக்கியத்துவம்
- சூரியன்
- அ. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்
- ஆ. பணி
- இ. சூரியனின் குணங்கள்
- ஈ. சூரியனின் ரதம் மற்றும் அதன் வழிபாடு
- உ. சூரியனின் சாரதியின் குணங்கள்
- ஊ. சூரிய லோகம்
- எ. சூரிய பகவானை உபாசனை செய்வதன் முக்கியத்துவம்
- ஏ. சூரிய வம்சத்தில் அவதரித்த ஸ்ரீராமன் ‘ராம-ராஜ்யத்தை’ ஸ்தாபனம் செய்தார்
- ஐ. பரத் என்பது சூரியனின் ஒரு பெயர்
- ரதசப்தமி அன்று ஏன் காய்ச்சிய பால் பிரசாதமாக உபயோகப்படுத்தப்படுகிறது?
- ஒரு வித்வான்
சூரிய பகவான்
ரதசப்தமி அறிமுகம்
தெய்வீகத்தை வழிபடுவது பாரத கலாச்சாரத்தின், ஹிந்து தர்மத்தின் இன்றியமையாத அங்கமாகும். நாம் உயர்நிலை தெய்வங்களை மட்டுமே பூஜிப்பதில்லை, மாறாக தேவதைகளான சந்திரன், அக்னி, வருணன் மற்றும் இந்திரன் ஆகியோரையும் வழிபடுகிறோம். எல்லா மனிதர்களின் வாழ்விலும் இந்த தேவதைகள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். ரதசப்தமி என்ற பண்டிகை சூரிய பகவானை வழிபட்டு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகையாகும். ரதசப்தமி பற்றி ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகரான கு. மதுரா போஸ்லே தொகுத்துள்ள விஷயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
ரதசப்தமியின் முக்கியத்துவம்
எல்லா எண்களிலும் 7 என்ற எண், சிறப்பு இடத்தைப் பெறுகிறது. 7 என்ற இந்த எண்ணில் முக்குணங்களும் (ஸத்வ/ரஜ/தம)சமநிலையில் உள்ளது, அதோடு சூட்சும அதிர்வலைகளை கிரஹிக்கும் தன்மை கொண்டது. சப்தமி அன்று சக்தி மற்றும் சைதன்யத்தின் தெய்வீக பிணைப்பு ஏற்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட தெய்வங்களின் அதிர்வலைகள் மற்றும் சக்தி, ஆனந்தம், சாந்தி ஆகியன 20% அதிக அளவு செயல்பாட்டில் உள்ளன. ரதசப்தமி அன்று சூரிய பகவானின் அதிர்வலைகள் மற்ற நாட்களைக் காட்டிலும் 30% அதிக செயல்பாட்டில் உள்ளது.
சூரியன்
அ. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்
ஹிந்து கிரந்தங்களில் சூரிய வழிபாடு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
1. சூரிய உபாசனையால் சந்திர நாடி (இடப்புறமுள்ள ஆன்மீக சக்தி பாயும் முறை) நின்று சூரிய நாடி (முதுகெலும்பின் அடியிலிருந்து தலை உச்சி வரையுள்ள வலப்பக்க ஆன்மீக சக்தி பாயும் முறை) விரைவில் விழிப்படைகிறது . சந்திர உபாசனையைக் காட்டிலும் சூரிய உபாசனை அதிக மேன்மை வாய்ந்தது.
2. சூரிய உபாசனையால் ஒருவருக்கு ‘ஸாத்வீகத்தன்மை’ மற்றும் ‘சைதன்யம்’ ஆகியவற்றை கிரஹிக்கும் சக்தி முறையே 30% மற்றும் 20% அதிகரிக்கின்றது.
3. அதிகாலையில் ‘அர்க்யம்’ விட்டு சூரிய தரிசனம் செய்து கொள்வதன் மூலமே சூரிய பகவானின் அருளைப் பெற முடிகிறது. சூரிய தரிசனமும் சூரிய உபாசனையின் ஒரு அங்கமாகும்.
4. உதிக்கும் சூரியன் மீது ‘த்ராடக்’ (யோக பயிற்சியாக ஒரு பொருளை உற்றுப் பார்த்தல்) செய்வதால் கண்களின் திறன் அதிகரித்து கண்பார்வை கூர்மையாகிறது.
5. சூரிய உபாசனை (தேஜ தத்துவம்) , ‘பஞ்ச தத்துவ’ உபாசனையின் ஒரு முக்கிய படியாகும்.
6. சூரிய நமஸ்காரம் : யோகாசனத்தின் பல வகைகளில் ‘சூரிய நமஸ்காரம்’ ஒரு முக்கிய பயிற்சியாகும். இதில் முழு உடலும் வளைந்து சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்துகிறது. தினமும் குறைந்தபட்சம் 20 சூரிய நமஸ்காரம் செய்பவருக்கு சூரிய பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.
ஆ. பணி
இது சூரிய பகவானின் சூட்சும செயல்களைக் குறிக்கிறது, கண்களால் காணப்படும் சூரியனைக் குறிப்பது அல்ல. சூரியன் காக்கும் செயலை செய்தாலும் ஸாதனையில் பூரணத்துவம் பெறுவதற்கு அவர் படைத்தல் மற்றும் அழித்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறார்.
ஆ 1. படைத்தல் சம்பந்தமான தகவல்கள்
ஸ்தூலம்
ஆண் தெய்வங்களான ‘யமன் மற்றும் சனி’ மற்றும் பெண் தெய்வங்களான ‘தபி மற்றும் யமி’ ஆகியோர் சூரிய பகவானின் புத்தர, புத்திரிகளாக அவரால் உருவாக்கப்பட்டவர்கள். யமியிலிருந்து யமுனா நதியும் தபியிலிருந்து தபி நதியும் உருவாயின.
சூட்சுமம்
1. க்ரஹங்கள் மற்றும் நக்ஷத்திர லோகம், சனி லோகம், க்ரஹ லோகம் ஆகிய உப லோகங்கள் சூரியனால் உருவாக்கப்பட்டவை.
2. தேஜ (அக்னி), தேஜ தத்துவம் நிறைந்த சைதன்யம் மற்றும் சைதன்யத்தின் முதல் 30% பகுதி ஆகியவை சூரியனால் உருவாக்கப்பட்டவை.
3. சுதர்சன சக்கரம், சூர்யாஸ்த்ரம், தேஜ-தத்துவம் சம்பந்தமான அம்பு மற்றும் ஆயுதங்கள் ஆகியவை ஸ்தூல சூரியனிலிருந்து உருவானவை.
4. சூரியன் தன் தேஜசை பல ஆயுதங்களுக்கும் தெய்வங்களுக்கும் தந்துள்ளார்; அதனால் இந்த ஆயுதங்கள் தெய்வீகப் பொலிவுடன் மிளிர்கின்றன.
ஆ 2. காத்தல் பற்றிய தகவல்கள்
ஸ்தூலம்
ஸ்தூல சூரிய ரூபத்தில் சூரிய பகவான் வெவ்வேறு க்ரஹங்களுக்கும் மனித குலத்திற்கும் சக்தி மற்றும் ஒளியை வழங்குகிறார்; இதன் மூலம் அனைவரையும் ஒரு வகையில் அவர் போஷிக்கிறார்.
சூட்சுமம்
ஸ்தூல ஒளி மற்றும் சக்தியோடு சூரிய பகவான் ஆன்மீகத்தைப் பயிலும் பல ஜீவன்களுக்கு ஏராளமான சைதன்யத்தையும் வழங்குகிறார்; அவர்களின் மனம் மற்றும் புத்தியை சுற்றியுள்ள ஆவரணம் குறைந்து அவர்களின் புத்தி பரிபக்குவ நிலையை அடைகிறது.
ஆ 3. அழித்தல் பற்றிய தகவல்கள்
ஸ்தூலம்
ஏரிகள், ஆறுகளில் உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது, அதனால் பலமுறை ஆறுகளும் ஏரிகளும் வற்றிப் போகின்றன. தீவிர வெப்பத்தால் பல தாவரங்கள் எரிந்து போகின்றன. பல ஜீவன்களையும் பாதிப்பதால் அவர்களில் சிலர் இறந்து போகின்றனர்.
சூட்சுமம்
சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்தால் சூட்சும தேஜஸ் வெளிப்படுகிறது. இந்த சூட்சும தேஜஸ் ரஜ-தம நிறைந்த சூட்சும ஆத்மாக்களின் சூட்சும அணுக்களை அழிப்பதால் சூழலில் ரஜ-தம அளவு குறைகிறது. ஸாத்வீகத் தன்மை அதிகரிக்கிறது. அதன் மூலம் முக்குணங்களில் சமநிலை ஏற்படுகிறது.
சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் தினசரி நடக்கும் நிகழ்வுகள். அதனால் சூரியனின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
இ. சூரியனின் குணங்கள்
இ 1. தொடர்ந்த உபாசனை
சூரியன் ஒரு ரிஷியைப் போன்றவர்; அவர் தொடர்ந்து நாராயண உபாசனையில் ஆழ்ந்து இருக்கிறார்.
இ 2. ஒழுக்கம்
சூரியன் நேரம் தவறாதவர்.
இ 3. தியாகம்
சூரியன் தனது தேஜஸ், சக்தி மற்றும் சைதன்யத்தை தனது லோகம் மட்டுமன்றி எல்லா லோகங்களிலுள்ள ஜீவன்களுக்கும் வழங்குகிறார். (இது சூரியனின் ஸமஷ்டி உணர்வைக் காண்பிக்கிறது). மற்ற தேவதைகளுடன் ஒப்பிடும்போது சூரியன் அதிகபட்ச அளவு சைதன்யத்தை க்ரஹித்து வெளிப்படுத்துகிறார்.
இ 4. வியாபகத்தன்மை
சூரியன் தன்னலமின்றி தனது தேஜஸ், சக்தி மற்றும் சைதன்யத்தை பிரம்மாண்டத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வழங்குகிறார்.
இ 5. ‘ஸமஷ்டி உணர்வு’
அவரின் அதிக ‘ஸமஷ்டி உணர்வால்’ (அதாவது மற்றவர் நலனைப் பற்றி எண்ணுதல்) உயர்நிலை தெய்வங்களின் 20% குணங்கள் அவரிடம் உள்ளன.
இ 6. சூட்சுமத்தில் ஞானம் மற்றும் வழிகாட்டுதலை வழங்குதல்
ஞானம் என்பது ஒளி. ஒளியே ஞானத்தின் உருவகம். சூரியன் ஞானம் சம்பந்தமான காரியங்களையும் செய்கிறார். அதனால் அவரிடமிருந்து ஞான அதிர்வலைகளும் ஞான ஒளியும் வெளிப்படுகின்றன. அவர் இந்த ஞான அதிர்வலைகள் மூலம் 30% வரை ஞானம் வழங்குகிறார். கர்ணன் தினமும் சூரிய தரிசனம் பெற்று சூரியனிடமிருந்து வழிகாட்டுதலும் பெற்றான்.
இ 7. மிக நல்ல குரு
சூரியன் சாஸ்திரம் மற்றும் சஸ்திர-கலை ஆகிய இரண்டிலும் வல்லவர். ருத்ராவதாரமான மாருதி சூரிய லோகத்திற்கு சென்று இவ்விரு கலைகளையும் சூரியனிடமிருந்து கற்றார். குரு ரூபத்தில் சூரியனும் மாருதிக்கு வழிகாட்டினார். ஒருவரின் ஸ்தூல மற்றும் சூட்சும அஹம் என்கிற இருளைப் போக்கும் ஞான ஒளியை அவர் வழங்குகிறார்.
இ 8. மிக நல்ல தந்தை
சூரியன் ஒரு மிக நல்ல தந்தையாக தன் மகன்கள் மற்றும் மகள்களின் கடமைகளை எப்பொழுதும் ஆற்றி வந்தார். எல்லா ஜீவராசிகளையும் தன் குழந்தைகளாகக் கருதி அவர்களுக்கும் உதவுகிறார்.
இ 9. க்ஷாத்ர உணர்வு
எல்லா தாழ்நிலை தேவதைகளுக்கும் இந்திரனே தலைவன். சூரியன், இந்திரனுக்கு கட்டுப்பட்டவராக இருந்தாலும் இந்திரனின் முடிவு தவறாக இருக்கும்போது அதை பின்பற்ற மாட்டார். இந்த தேவதைகளின் மத்தியில் சூரியனிடமே அதிகபட்ச அளவு ‘ஸாத்வீகத் தன்மை’, வியாபகத் தன்மை, தியாகம், ஸமஷ்டி உணர்வு மற்றும் க்ஷாத்ரா உணர்வு உள்ளன.
இ 10. சம உணர்வு (அனைவரையும் சமமாக நடத்துதல்)
சூரியன் எல்லா ஜீவன்களையும் சமமாக நடத்துகிறார். அவர் மற்றவரிடமுள்ள குணங்களை மெச்சுகிறார்; யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. இதற்கான ஒரு உதாரணமே ஹனுமார். சிஷ்யனுக்குரிய தகுதிகளைப் பெற்றிருந்த ஹனுமாரை தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு ஞானம் மற்றும் பல்வேறு கலைகளை கற்பித்தார்.
– இறைவன் (குறிப்பு) – கு. மதுரா போஸ்லே மூலமாக
ஈ. சூரியனின் ரதம் மற்றும் அதன் வழிபாடு
சூரிய தேவனின் வாகனமாக அவரின் ரதம் உள்ளது. ஒரு கோவிலுக்கு அதன் மூல விக்ரஹம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சூரியனின் ரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் ரதசப்தமி அன்று சூரிய வழிபாடு செய்வதுடன் சூரிய ரதமும் வழிபடப்படுகிறது.
சூரியனின் ரதம் சப்த லோகங்களையும் கடக்க வல்லது – சூரிய லோகம், நக்ஷத்திர லோகம், க்ரஹ லோகம், புவர் லோகம், நாக லோகம், ஸ்வர்க்க லோகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் சிவ லோகம் . தேவைக்கேற்ப சூரிய ரதத்தின் கதி மாறுகிறது. சூரியனின் இச்சைக்கேற்ப சூரிய ரதம் பறக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட சக்கரங்களில் சூரிய பகவானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தேஜஸ் மற்றும் தேஜ தத்துவம் 30% வரை சூழலில் பரவுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அருளாலும் தேஜ தத்துவம் வெளிப்படுவதாலும் ரதத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகியுள்ளது. அதனால் சூரிய செயல்பாடுகளில் எந்த தீய சக்திகளாலும் இடையூறுகள் ஏற்படுத்த முடிவதில்லை.
உ. சூரியனின் சாரதியின் குணங்கள்
அருணனே சூரியனின் தேரோட்டி, அவரிடம் 40% குணங்கள் உள்ளன. அவரால் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். ஒரே தத்துவத்தை நோக்கி செல்லுதல் மற்றும் எந்நிலையிலும் கடமை தவறாதிருத்தல் ஆகிய குணங்களை அவரிடமிருந்து நாம் கற்கலாம்.
ஊ. சூரிய லோகம்
ஸ்வர்க்க லோகத்தை அடுத்து சூட்சும சூரிய லோகம் உள்ளது. சூட்சும சூரிய லோகத்தில் பஞ்ச தத்துவங்களில் ஒன்றான தேஜ தத்துவம் 50% -ற்கும் மேற்பட்டு உள்ளது. தெய்வீக ஒளி, அக்னி, வெப்பத்துடன் கூடிய அக்னி ஜ்வாலை ஆகியன ‘தேஜ’ தத்துவத்தின் ஸ்தூல ரூபம். இவற்றை சூரிய லோகத்தில் அனுபவிக்க முடியும். பல ஜீவன்களின் ஆன்மீக நிலை 50%-க்கும் குறைவாக உள்ளது. அதனால் அவர்களால் சூரிய லோகத்திற்கு செல்ல முடிவதில்லை; தேஜ தத்துவத்தை வழிபட முடிவதில்லை. அதன் பலனாக அவர்களால் தேஜ தத்துவத்தின் ஸ்தூல ரூபமான – தெய்வீக ஒளி, அக்னி, வெப்பம் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சூரிய லோகத்தில் இடம் பெற சூரிய தேவனின் குணங்களில் 50% மட்டுமாவது நம்மிடம் இருக்க வேண்டும் மற்றும் ஒருவரின் ஆன்மீக நிலை 50%-க்கு மேல் இருக்க வேண்டும்.
எ. சூரிய பகவானை உபாசனை செய்வதன் முக்கியத்துவம்
சூரிய உபாசனை செய்வதால் ஒருவருக்கு தன் சூட்சும தேஜ தத்துவத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தேஜ தத்துவத்தின் ‘ஓம்’ என்ற ஜபத்தை செய்து அதை வழிபடுவது நல்லது. காயத்ரி மந்திரம் மற்றும் பல்வேறு சூரிய மந்திரங்களை ஜபிப்பதும் நலன் பயப்பதாகும். சூரிய உபாசனையால் மனதின் ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. கண்கள் தேஜ தத்துவத்துடன் சம்பந்தப்பட்டது; சூரிய உபாசனை செய்வதால் ஒரு ஜீவனுக்கு திவ்விய திருஷ்டி (தெய்வீகப் பார்வை) கிடைக்கிறது.
குறிப்பு : இறைவன் (கு. மதுரா போஸ்லே மூலமாக, 11.2.2005; இரவு 7.07 முதல் 7.40 வரை)
ஏ. சூரிய வம்சத்தில் அவதரித்த ஸ்ரீராமன் ‘ராம-ராஜ்யத்தை’ ஸ்தாபனம் செய்தார்
சூரியனின் குணங்களால் சூரிய லோகத்தில் பித்ரு வம்சாவளியாக ஆட்சி நடக்கிறது. வழிபடுபவருக்கும் அந்தக் குணங்கள் இருந்தால் அவருக்கு சூட்சும சூரிய லோகத்தில் இடம் கிடைக்கிறது. சூரிய வழிபாடு செய்பவர்களும் சூரியனின் குணங்களைக் கொண்டவர்களும் ‘சூரிய வம்சத்தினர்’ என கருதப்படுகின்றனர். பிரபு ஸ்ரீராமர் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்; அதனால் அவரால் ஒரு ஆதர்ச தந்தையாக ஆதர்ச மகனாக இருந்து ‘ராம-ராஜ்யத்தை’ ஸ்தாபிக்க முடிந்தது.
ஐ. பரத் என்பது சூரியனின் ஒரு பெயர்
சூரிய பகவான், மற்ற தேவதைகளாலும், ரிஷி-முனிவர்களாலும் மனிதர்களாலும் வழிபடப்படுகிறார். ஹிந்து தர்மத்தில் சூரியனுக்கு ஒரு தனித்துவ இடம் உண்டு. பாரதீய பஞ்சாங்கத்திலும் சந்திரனைக் காட்டிலும் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சூரியனின் இன்னொரு பெயர் ‘பரத்’ என்பது. ‘ஸ:’ என்பது சூரியனின் பீஜ மந்திரம் ஆகும்.
– இறைவன் (கு. மதுரா போஸ்லே மூலமாக)
இறைவன் மூலமாக ஸத்குரு திருமதி அஞ்ஜலி காட்கில் அவர்களுக்கு கிடைத்த தகவல்கள்
ரதசப்தமி அன்று ஏன் காய்ச்சிய பால் பிரசாதமாக உபயோகப்படுத்தப்படுகிறது?
ரதசப்தமி அன்று சூரியனிலிருந்து வெளிப்படும் தேஜ தத்துவ அதிர்வலைகள் பாலை சுட வைக்கும் மண்பாண்டத்தை சுற்றியுள்ள ஆவரணத்தால் ஈர்க்கப்படுகிறது. அதன் மூலம் பால் பிரசாதமாக மாறுகிறது.
தொகுத்தவர்
ரதசப்தமி அன்று முற்றத்தில் பசுஞ்சாணம் எரிக்கப்பட்டு அதில் மண்பாண்டத்தில் பால் கொதித்து பொங்குகிறது. பின்னர் அது பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது.
சில இடங்களில் அரிசியும் அந்தப் பாலில் கொதிக்க வைக்கப்படுகிறது. இதன் சாஸ்திரம் என்ன?
ஒரு வித்வான்
1. ரதசப்தமியின் முக்கியத்துவம்
தேஜ தத்துவத்தை வழிபடும் நாளே ரதசப்தமி ஆகும். அன்றைய தினம் சூரிய ஒளி மூலமாக தேஜ தத்துவ அதிர்வலைகள் பூமியை வந்தடைகிறது. இந்த அதிர்வலைகள் பூமியின் வட்டத்திற்குள் நுழையும்போது அவை நீர் துகள்களுடன் இணைகின்றன; அதனால் அவற்றிலுள்ள தேஜ தத்துவத்தின் தீவிரம் குறைகிறது. பூரண நீர் தத்துவத்தின் உதவியுடன் இந்த தேஜ தத்துவ அதிர்வலைகள் பூமிக்குள் நுழைகின்றன.
2. பால் பிரசாதமாக மாறும் செயல்முறை
வளிமண்டலத்தில் நுழையும் தேஜ தத்துவ அதிர்வலைகளை கிரஹிக்க ஒரு மண்பாண்டம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் பானையில் பால் கொதிக்கும்போது பசுஞ்சாணத்தை எரிப்பதால் ஏற்படும் தேஜ தத்துவத்தின் ஸாத்வீக அக்னியால் கொதிக்கும் பாலிலிருந்து வெளிப்படும் தேஜ மற்றும் நீர் தத்துவங்கள் அந்த பானையை சுற்றி ஒரு ஒளி ஊடுருவும் ஆவரணத்தை ஏற்படுத்துகிறது. தேஜ தத்துவம் நிரம்பிய சூரிய கிரணங்கள் இந்த ஆவரணத்தை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன. இவ்வாறு காய்ச்சப்பட்ட பால் பிரசாதமாகி ஒரு ஜீவனின் பிராண சக்தியை தூய்மைப்படுத்துகிறது; பஞ்ச பிராணனை விழிப்படைய செய்கிறது. இவ்வாறாக அந்த ஜீவனின் தேஜ தத்துவம் அதிகரித்து ஆன்ம சக்தி விழிப்படைகிறது. மண் பானை பூமியைக் குறிக்கிறது. ரதசப்தமி அன்று அதை சுற்றி ஏற்படும் ஆவரணம் பூமியை சுற்றியுள்ள தேஜ மற்றும் ஆப தத்துவ அதிர்வலைகளைக் குறிக்கிறது. அரிசியை அதில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக அதிக நீர் தத்துவம் உள்ள பாலை மட்டுமே கொதிக்க வைப்பது அதிக பயனளிக்கக் கூடியது. ஆனால் பாலை பொங்கி வழிய வைக்க வேண்டிய அவசியமில்லை.
(ஸத்குரு திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக)