‘ஸ்வாதந்திர’ என்ற வார்த்தை நல்லனவற்றின் சின்னம்; ஆனால் யாராவது படைப்பின் நியமத்திற்கு /ஸ்வாதந்திரத்திற்கு விரோதமாக நடந்தால் அது தீமையே. அதனால் ‘யாருக்கு ஸ்வாதந்திரம் வழங்க வேண்டும்? என்பதை தெளிவாக்க வேண்டும். ‘தீய சக்திகளுக்கு ஊக்கமளிப்பது’ என்பது ஸ்வாதந்திரம் அல்ல.
ஸ்வாதந்திர = ஸ்வ + தந்த்ர. ஸ்வ என்பது ஆத்மா. அது சுத்தமானது, நிரந்தரமானது மற்றும் சைதன்யமயமானது. அதன்படி எடுக்கப்படும் நிர்ணயம் சத்யம் மற்றும் ஆனந்தத்தை தருவதாக இருக்கும். அதனால் ஆத்மா மூலமாக கிடைக்கும் வழிகாட்டுதலே ஸ்வாதந்திரம் ஆகும். ஸ்வ என்றால் ஆத்மா, அதாவது பகவான்; ஸ்வாதந்திரம் என்பது பகவானின் இச்சைப்படி நடக்கும் காரியம்! சைதன்யம் என்பது பகவானின் இருப்பு மற்றும் இந்த உடல் என்பது அவன் அளித்த யந்திரம், கருவி. அதன் மூலமாக பகவானை அடைய முடியும். மனித வாழ்வின் லட்சியமான இறைவனை அடைவது என்பதை சஹஜமாக சுலபமாக எட்டுவதற்கு ஸாதனையே வழியாகும். இந்த வழி, எந்த எதிர்ப்பில்லாமல் இருப்பதே உண்மையான தனிமனித ஸ்வாதந்திரம் ஆகும்.
– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே (மகாராஜ்), ஸனாதன் ஆச்ரமம், தேவத், பன்வேல். (3.12.2018)