யுகத்திற்கேற்ற கணபதியின் அவதாரங்கள்

மஹோத்கட் விநாயகர்

கிருதயுகத்தில் கச்யபருக்கும் அதிதிக்கும் பிறந்தவர். இந்த அவதாரத்தில் தேவாந்தகன், நராந்தகன் என்ற அரக்கர்களைக் கொன்று தர்மத்தை நிலைநிறுத்தி, அவதாரத்தை முடித்தார்.

 

குணேஷ் (மற்றொரு பெயர் – கஜானன்)

த்ரேதா யுகத்தில் உமாதேவியின் கர்ப்பத்தில் ஆவணி சுத்த சதுர்த்தி தினத்தில் பிறந்தார். குணேஷ் என பெயர் பெற்றார். இந்த அவதாரத்தில் சிந்து என்ற துர்தேவதையை, நாசம் செய்து பிரம்ம தேவனின் கன்னிகைகளான சித்தி, புத்தியை மணந்தார்.

 

கஜானன்

துவாபரயுகத்தில் கணபதி மறுபடியும் பார்வதியின் கர்ப்பத்தில் பிறந்து, கஜானன் எனப் பெயர் பெற்றார். சிந்துராசுரன் என்ற அசுரனை வதம் செய்து அரசர்களையும், வீரர்களையும் அவனுடைய காவலிலிருந்து விடுவித்தார். இந்த அவதாரத்தில் வரேண்யர் என்ற ராஜாவிற்கு, யோகமார்க்கத்தைத் தெரிவிப்பதும், ஸர்வ ஸித்தியைத் தருவதும், அஞ்ஞானத்தை நசிப்பதும் மற்றும் மனிதப்பிறவியின் லக்ஷியத்தைத் தெளிவிப்பதுமான கணேச கீதையை உபதேசித்து, சாஸ்வதமான தத்தவஞானத்தை விளக்கி அருளினார்.

 

தூம்ரகேது

கணபதி, இந்த கலியுகத்தில் தூம்ரகேது அல்லது தூம்ர வர்ணனாக நான்காவது அவதாரம் எடுப்பார் என்றும், கெட்டவைகளை அழிப்பார் என்றும் பவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment