சுவாமி விவேகானந்தருக்கு தன் குருவிடம் இருந்த தீவிர பக்தி

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்  பாரதத்தின் பிரதிநிதியாக தர்மத்தைப் பரப்ப சிகாகோவில் நடந்த ‘அனைத்து சமய கூட்டத்தில்’ பங்கேற்க சென்றார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் மனங்களை தன் பேச்சால் கவர்ந்தார். அமெரிக்கர்களை ஆற்றல் மிகுந்த தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவரின் அசாதாரண விளக்கத் திறனால் , அவர்கள் ஸநாதன ஹிந்து தர்மத்தின் உன்னதத்தை அறிந்து கொண்டனர். சொற்பொழிவு நடத்துமாறு பல ஸ்தாபனங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. அவர் இந்த சொற்பொழிவுகள் மூலமாக ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் மற்றும் ராஜயோகம் பற்றி திறம்பட விளக்கினார். அவரின் பேச்சைக் கேட்டு பார்வையாளர்கள் மெய்மறந்தனர். அடுத்த முறை என்ன தலைப்பில் உரையாற்றப் போகிறார் என்று தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் மிகுந்தவர்களாக இருந்தனர். ஒருமுறை நிகழ்ச்சி முடிந்த பின்னர் பலர் அவரை சூழ்ந்து கொண்டு, ‘சுவாமிஜி, தாங்கள் எந்த பாடசாலையிலிருந்து இத்தகைய ஈடு இணையற்ற ஞானத்தைப் பெற்றீர்கள்? தயைகூர்ந்து அதன் விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?’ என்று கேட்டனர். சுவாமிஜி அதற்கு தான் தன் குருவிடமிருந்து எல்லா ஞானத்தையும் பெற்றதாகக் கூறினார். அவர்கள் ‘உங்களின் குரு யார்?’ என்று கேட்டனர். அவர்கள் தன் குருவைப் பற்றித் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தால் தான் தன்னுடைய குருவைப் பற்றிக் கூற தயாராக இருப்பதாகக் கூறினார். சுவாமிஜியின் ஒரு சிறப்பு சொற்பொழிவு அன்றே ஏற்பாடு செய்யப்பட்டது. ‘என் குருதேவர்’ என்ற தலைப்பில் சுவாமிஜி பேசுவதாக இருந்தது. பத்திரிக்கைகளில் இது பற்றி நிறைய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதனால் ஆர்வமிகுதியால் பெருந்திரளான மக்கள் அவரின் சொற்பொழிவைக் கேட்க அங்கு கூடினர். சுவாமிஜி பேசுவதற்காக தன் இருக்கையிலிருந்து எழுந்தபோது அங்கு பூரண நிசப்தம் உண்டானது. அந்த பெருந்திரனான மக்கள் சமூகத்தைப் பார்த்த பின் சுவாமிஜிக்கு தன் குருவிடம் நன்றியுணர்வு பீறிட்டு எழுந்தது. அவரின் முதல் வார்த்தைகள் ‘என் குருதேவர்’ என்பதாக வெளிப்பட்டது. அவரின் மனக்கண் முன் குருதேவரின் திருவுருவ தரிசனம் ஏற்பட்டதால் நன்றியுணர்வு மிகுந்து அவருக்கு தொண்டை அடைத்தது. கண்களில் இருந்து தண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. அவரால் பத்து நிமிடங்களுக்கு எதுவுமே பேச இயலவில்லை. அந்தக் கூட்டத்தினருக்கு இது ஒரு அசாதாரண நிகழ்வு. அவர்கள் இது போன்று யாரும் கண்ணீர் விட்டு பார்த்ததில்லை. உடல் காயம், நெருங்கியவரின் மரணம் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே அவர்கள் கண்ணீரைப் பார்த்துள்ளனர். சுவாமிஜியைக் கண்ணீருடன் பார்த்தபோது அவர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

‘குருமௌனம் து வியாக்யானம் சிஷ்யஸ்து சின்னஸம்சய:’

– அதாவது குரு மௌனமாக உபதேசிக்கிறார், சிஷ்யர்களின் சந்தேகங்கள் விலகுகின்றன.

இதிலிருந்து சுவாமிஜி அவரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் எவ்வளவு பக்தி கொண்டிருந்தார் என்பதை உணர முடிகிறது.

–  ராஜ்ஹன்ஸ், பன்வேல்

 

சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்த ஹிந்து தர்மத்தின் முக்கியத்துவம்

ஹிந்து தர்மம் அழிந்தால், உண்மை, நியாயம், மனிதத்தன்மை மற்றும் அமைதி ஆகியன எல்லாம் அழிந்து விடும்! – சுவாமி விவேகானந்தர்

 

ஹிந்து கோவில்களின் உடைப்பு
பற்றி சுவாமி விவேகானந்தரின் பார்வை!

ஒருமுறை சுவாமிஜி தன் சிஷ்யர்களுடன் காஷ்மீருக்கு சென்றிருந்தார். அங்கு க்ஷீர் என்ற இடத்திலே ஸ்ரீ பவானி தேவி கோவிலின் சிதிலங்களைப் பார்த்தார். அப்போது ‘இந்தக் கோவில் இவ்வாறு அவமதிக்கப்பட்டு அழிக்கப்படும்போது இங்கிருந்த மக்கள் ஏன் அதை எதிர்க்கவில்லை? நான் அந்த சமயம் இங்கு இருந்திருந்தால் இந்த கோவில் அழியும்படி விட்டிருக்க மாட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது கோவிலைக் காப்பாற்றி இருப்பேன்’ என்று கூறினார். இதிலிருந்து சுவாமிஜிக்கு பவானி தேவியிடம் இருந்த பக்தி வெளிப்படுகிறது.

கோவில்கள் நமக்கு சைதன்யத்தை வழங்கும் ஸ்தானங்கள். அவற்றைப் போற்றி பாதுகாக்க வேண்டும். அழிவதற்கு விடக் கூடாது.

 

தர்மத்தைப் பற்றிய ஆழ்ந்த கர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

1896-ம் வருடம் சுவாமி விவேகானந்தர் நேபாளிலிருந்து கொழும்புவிற்கு கப்பலில் பயணித்தார். சக பயணிகளில் இரு கத்தோலிக்க பாதிரிமார்களும் இருந்தனர். அவர்கள் தேவையில்லாமல் ஹிந்து தர்மத்திற்கும் கிறுஸ்தவ மதத்திற்கும் உள்ள வேற்றுமையைப் பற்றி வாதம் செய்ய ஆரம்பித்தனர். சுவாமிஜி ஒவ்வொரு விஷயத்திற்கான சரியான விளக்கத்தை அளித்தார்; ஆனால் அந்த பாதிரிகளோ தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மேலும் ஹிந்து தர்மத்தைப் பற்றி இழிவாகப் பேசினர். ஹிந்து தர்மத்திற்கு நேரிடும் இழிவைத் தாங்க இயலாமல் சுவாமிஜி அவர்கள், பாதிரி ஒருவரின் காலரைப் பிடித்துத் தூக்கி ‘இனி ஒரு வார்த்தை பேசினால் வெளியே வீசி விடுவேன்’ என கர்ஜித்தார்!

அதன் பிறகு சுவாமிஜியிடம் ஒரு வார்த்தை பேசவும் அவர்கள் துணியவில்லை. அதற்கு மாறாக சுவாமிஜியை திருப்திப்படுத்த பல வழிகளில் முயன்றனர்!

தகவல் : ஸநாதனின் நூல் ‘நீதிபோதனைக் கதைகள்’

Leave a Comment