பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையான பரம் பூஜ்ய பாலாஜி ஆடவலே (ப. பூ. தாதா) அவர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் ‘ப. பூ. தாதா அவர்கள், தன் குடும்பத்தினரிடம் என்ன மற்றும் எப்படி ஸம்ஸ்காரங்களை பதிய வைத்தார்?’ என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் குடும்ப மற்றும் ஆன்மீக பின்னணி எவ்வாறு இருந்தது?’ என்பதும் வாசகர்களுக்கு தெரிய வரும்.
இத்தொடரின் 2-வது கட்டுரையில் ப. பூ. பாலாஜி ஆடவலே (ப. பூ. தாதா) அவர்களின் அறிமுகம் மற்றும் அவரின் குண விசேஷங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இன்று மேலும் சில விவரங்களைப் பார்க்கலாம்.
1. ப. பூ. பாலாஜி ஆடவலே ( ப. பூ. தாதா) அவர்களின் வாழ்க்கை
முழுவதும் அவருக்கு உறுதுணையாய் இருந்த அவரின் மனைவி
பூ. நளினி ஆடவலே (பூ. தாயி) அவரின் சிறப்புகள்
1 அ. ‘பூ. தாயி அவர்களின் பிறப்பு மற்றும் தேக தியாகம்
பூ. நளினி பாலாஜி ஆடவலே அவர்கள் என் தாயார் ஆவார். நாங்கள் அவரை ‘தாயி’ என அழைப்போம். அவர் 4.7.1916 அன்று பிறந்தார். 3.12.2003 அன்று 87 வயதில் எங்களின் ‘சிவ’, மும்பை வீட்டில் அவர் தன் இன்னுயிரை நீத்தார். அந்த சமயத்தில் அவரின் ஆன்மீக நிலை 75% இருந்தது.
1 ஆ. ஸாதனை
1 ஆ 1. பூ. தாயி சம்சாரத்தில் இருந்து கொண்டே ஸாதனை செய்தார்: வீட்டு வேலைகள் அனைத்திற்கும் நடுவே பூ. தாயி, கீர்த்தனை-பிரவசனங்கள் ஆகியவற்றைக் கேட்கவும் நேரம் ஒதுக்குவார். அவரின் 60 வயது முதல் அதிகபட்ச அளவு நேரம் அவர் நாமஜபம் செய்வதில் செலவிட்டார். 70 வயதுக்கு பின்னர் அகண்டமாக அவரின் நாமஜபம் நடந்து வந்தது. இறக்கும் சமயத்திலும் அவரின் நாமஜபம் நடந்தது. 2014-ம் வருடம் அவரின் ஆன்மீக நிலை 75% ஆனது.
1 ஆ 2. ‘ப. பூ. தாதா அவர்களின் மறைவுக்கு பின்னர் பூ. தாயி அவர்களின் நாமஜபம் அதிகரிக்க ஆரம்பித்தது : சிறிது சிறிதாக அவரின் வைராக்கிய உணர்வு அதிகரித்தது மற்றும் தேகபுத்தி குறைந்தது.’ – (ஸத்குரு) டாக்டர் வசந்த் ஆடவலே (மூத்த மகன் )
1 இ. ‘ஸனாதன் பிரபாத்’ மூலமாக சமர்ப்பண உணர்வுடைய
குழந்தைகள் உருவாகும்’ என்பதில் பூ. தாயி உறுதியாக இருத்தல்
அக்டோபர் 2000-ல் பூ. தாயி கூறுவார், ‘ஸ்வாதந்த்ரிய ஸாவர்க்கர் ‘தேசத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு பிள்ளையை அர்ப்பணமாக்க வேண்டும்’ என்பார். என்னுடைய ஐந்து மகன்களும் பலவீனமாக இருப்பதால் எப்படி நான் தேசத்திற்காக அர்ப்பணிப்பேன் என்ற கேள்வி என் மனதில் எழும். தினசரி ‘ஸனாதன் பிரபாத்’ படித்த பின்னர் இந்த என் கேள்வி மறைந்தது. இன்று வீட்டிற்கு வீடு சமர்ப்பண உணர்வுடைய குழந்தைகள் நிச்சயம் உருவாகுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.’ அந்த சமயம் பூ. தாயி ‘இரு மகன்களை தேசத்திற்காக எவ்வாறு அர்ப்பணிப்பது?’ என்பது பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார்,
தெய்வ-தேச தர்மத்தை விழிப்படைய செய்கின்றனர் இருவர் (குறிப்பு) |
மனதிற்குள் என்னுடைய இச்சையும் அதுவே ||
குறிப்பு : ‘ஸனாதன் பிரபாத்’-ன் ஸ்தாபகர்-ஆசிரியரான (பராத்பர குரு) டாக்டர் ஜெயந்த் ஆடவலே மற்றும் ஒரு சகோதரர்
1 ஈ. தீய சக்திகள் சந்தர்ப்பமாக பூ. தாயியின்
அநுபூதி மற்றும் அவரின் சிந்தனையோட்டம்
1 ஈ 1. ராஷ்ட்ர மற்றும் தர்மத்திற்காக தீய சக்திகளை நாமஜபம் செய்யக் கூறுதல் : ‘ஒரு நாள் பூ. தாயி உறங்கும்போது பல தீய சக்திகள் அவரின் அறைக்கு வெளியே பால்கனிக்கு வந்தன. அப்போது பூ. தாயி அவற்றிடம் கூறினார், ‘நீங்கள் ராஷ்ட்ரம் மற்றும் தர்மத்திற்காக ஏதாவது செய்யுங்கள். தர்மத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.’ அப்போது எல்லா தீய சக்திகளும் ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம|’ என்ற நாமஜபத்தை செய்ய ஆரம்பித்தன.’ – டாக்டர் விலாஸ் ஆடவலே (கடைசி மகன்)
1 ஈ 2. ஸநாதனுக்கு கஷ்டம் கொடுக்கும் தீய சக்திகளையும் நல்ல கர்மாக்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! : ‘நான் பூ. தாயியை சந்திக்க சென்றபோது பூ. தாயி கூறினார், ‘ஸநாதனுக்கு எந்த பூதங்கள் கஷ்டங்களை அளிக்கின்றனவோ அவற்றைத் தள்ளி வைக்காதீர்கள்; அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை சூட்சுமத்தில் யுத்தம் செய்ய அனுப்புங்கள். அவற்றையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’ – திருமதி போர்கர், மும்பை
(ஸாத்வீகமான இடத்திற்கு ஸாதனை செய்ய விரும்பும் சக்திகள் வருகின்றன. அவற்றை ஜபம் செய்யச் சொன்னால் ஜபம் செய்கின்றன. சில சமயங்களில் மாயாவி தீய சக்திகள் ஜபம் செய்வது போல் நாடகமாடுகின்றன. – தொகுத்தவர்)
1 உ. 87-வது வயதில் சமூகத்தினரைப் பற்றியும்
மற்றவர்களைப் பற்றியும் சிந்தனை செய்யும் பூ. தாயி!
87-வது வயதில் உடல் நிலை சரியில்லாதபோதும் பூ. தாயி இவற்றை செய்தார். அவர் தன் இன்னுயிரைத் துறக்கும்வரை சமூகத்தினரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் சிந்தனை செய்தார்; தன்னிடமுள்ள குணங்களால் சிவ என்ற இடத்திலுள்ள ஸனாதன் சேவாகேந்திரத்தில் வசிக்கும் ஸாதகர்கள் பயனடைய வேண்டும் என முயற்சித்தார்.
1. ‘பூ. தாயி எப்போதும் தினப்பத்திரிக்கைகளைப் படித்து சமூகத்தின் நிலை பற்றித் தெரிந்து கொள்வார். அதேபோல் அவர் சமூகத்தின் அவலநிலையைப் பற்றி ஸாதகர்களிடம் விவாதிப்பார்.’ – டாக்டர் துர்கேஷ் ஸாமந்த், முன்னாள் சமூக ஆசிரியர், ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கைத் தொகுப்பு.
2. ‘எந்த ஒரு பொருளை உபயோகித்தாலும் அதை சிக்கனமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்துவார். சேவாகேந்திரத்தின் அன்றாட காரியங்களில் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை வீணாக்கக் கூடாது என்பதில் கவனம் எடுத்துக் கொள்வார்.’ – ஸத்குரு ஸத்யவான் கதம் (ஸநாதனின் ஐந்தாவது மகான்)
3. ஸநாதனின் ஸாதகர்களுக்கிடையே வீர உணர்ச்சி ஏற்படுவதற்கும் அவர் தொடர்ந்து முயற்சிப்பார்.
4. ‘கடந்த நான்கு வருடங்களாக பூ. தாயிக்கு இருதய நோயால் தீவிர கஷ்டங்கள் உள்ளன; இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது தன்னைப் பற்றி எதுவும் கூறாது அவர் மற்றவர்களைப் பற்றியே விசாரிப்பார். ‘ஒவ்வொருவரும் அவரவர் காரியங்களை செய்ய வேண்டும். எனக்காக நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்று அவர் எப்போதும் கூறுவார். எப்போதுமே தனக்கு இது இல்லை எனக் குறை கூறியது கிடையாது. அவரிடம் மிகுந்த பொறுமை, சகிப்புத் தன்மை இருந்தன. மற்றவர் மனம் புண்படும்படியாக பேசுவது, மற்றவரின் குறைகளை சுட்டிக் காட்டுவது ஆகியவை அவருக்குத் தெரியாத ஒன்று. மாறாக மற்றவரின் நற்குணங்களையே கூறுவார். எல்லோரிடமும் மிகுந்த பிரியத்துடன் பழகுவார்.’ – ஸத்குரு டாக்டர் வசந்த் ஆடவலே
1 ஊ. இறக்கும் தறுவாயிலும் நாமஜபம் நடத்தல்
‘நான் : ஜபம் நடக்கிறதா?
பூ. தாயி : ஆம், நடக்கிறது’
– டாக்டர் விலாஸ் ஆடவலே
3.12.2003 அன்று விடியற்காலை 4.17 மணிக்கு இதயத்துடிப்பு நின்று அவர் தன் இன்னுயிரைத் துறந்தார். இறக்கும் சமயம் அவரின் வயது 87.’
2. ஐந்து மகன்களின் ஆன்மீக முன்னேற்றம் நடைபெற
சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு நல்ல ஸன்ஸ்காரங்களை
ஏற்படுத்திய ப. பூ. தாதா மற்றும் பூ. தாயி!
‘ப. பூ. தாதா (ஆன்மீக நிலை 83% ) மற்றும் பூ. தாயி (ஆன்மீக நிலை 75%) குழந்தைப் பருவத்திலிருந்தே ஐந்து சகோதரர்கள் ஆகிய எங்களுக்கு உலகக் கல்வியுடன் கூட ஸாத்வீகத் தன்மை மற்றும் ஸாதனை பற்றிய ஸன்ஸ்காரங்களை மனதில் பதிய வைத்ததால் நாங்கள் அனைவரும் ஸாதனையில் ஈடுபட்டோம். அவர்களின் பேரன் பேத்திகளிடமும் இதுபோன்ற ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்தியுள்ளனர். ப. பூ. பக்தராஜ் மகராஜ் அவர்கள் அனந்த் அண்ணாவைத் தவிர்த்து குடும்பத்தினர் அனைவருக்கும் குருமந்திரம் அளித்துள்ளார். அனந்த் அப்போது மும்பையில் இல்லாததால் அவருக்கு குருமந்திரம் கிடைக்கவில்லை.
1. முதல் மகன் ஸத்குரு அப்பா (ஸத்குரு டாக்டர் வசந்த் ஆடவலே) : இவர் வருடம் 2012-ல் மகான் நிலையை அடைந்தார் மற்றும் வருடம் 2017-ல் ஸத்குரு நிலையை எட்டினார். அவர் பெற்றோர்களுக்கு உகந்த 10 நூல்கள், ஆயுர்வேதம் சம்பந்தமாக 21 நூல்கள் மற்றும் என்னைப் பற்றி 1 நூல் என மொத்தம் 32 நூல்களை எழுதியுள்ளார்.
2. இரண்டாவது மகன் அனந்த் : இவர் வருடம் 2019-ல் மகான் நிலையை அடைந்தார். இவர் ‘கீதஞானதர்சன்’ என்ற நூலை வருடம் 2014-ல் எழுதினார். வருடம் 2021-ல் அவர் ‘ஆன்மீக சாஸ்திரத்தின் பல்வேறு அங்கங்களின் போதனை’ என்ற நூலை எழுதினார். அதேபோல் அவரின் சரித்திரமும் விரைவில் வெளிவரப் போகின்றது.
3. மூன்றாம் மகன் ஜெயந்த் : நான் ஸனாதன் ஸன்ஸ்தாவை ஸ்தாபனம் செய்தேன் மற்றும் செப்டம்பர் 2021 வரை 269 நூல்களைத் தொகுத்துள்ளேன்; ஸன்ஸ்தா செப்டம்பர் 2021 வரை 347 நூல்களை 17 மொழிகளில் 82,48,000 பிரதிகள் வெளியிட்டுள்ளது.
4. நான்காம் மகன் மறைந்த சுஹாஸ் : இவரின் ஆன்மீக நிலை 64% ஆகும். இவரின் வ்யஷ்டி ஸாதனை நடந்து வருகிறது. சுஹாஸ் ஒரு நல்ல மனிதரின் உருவகம் ஆவார்.
5. ஐந்தாம் மகன் விலாஸ் : இவரின் ஆன்மீக முன்னேற்றமும் நடந்து வருகிறது. இவர் ஹரித்வாரில் உள்ள ப. பூ. தேவாந்த சுவாமி அவரின் காரியங்களில் பங்கேற்று வருகிறார்.
கலியுகத்தில் இது போன்று ஒரு ஸாத்வீக குடும்பம் கிடைப்பது என்பது இறைவன் எங்கள் அனைவரின் மீதும் பொழிந்துள்ள அருள் என்றே சொல்ல வேண்டும். 12.6.1975 அன்று இங்கிலாந்திலிருந்து நான் என் மாமாவிற்கு எழுதிய கடிதத்தில் ‘எனக்கு என் உறவினர்கள் எல்லோருடனும் (முக்கியமாக ப. பூ. தாதா, பூ. தாயி, பூ. அப்பா) மற்றும் தெரிந்தவர்கள் அனைவருடனும் இன்னும் ஒரு பிறவி அல்ல, பல பிறவிகள் கிடைத்தாலும் ஆனந்தமே. அதோடு ஒவ்வொரு பிறவியிலும் செய்த தவறை சரி செய்து கொள்ளும் வாய்ப்பும் மறுபிறவியில் கிடைக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு முக்தியை நோக்கி செல்வதற்கு முயற்சிப்பேன்.’
என்னிடம் என்ன குணங்கள் உள்ளனவோ அவற்றை நான் முயற்சித்து பெற்றவை அல்ல, பல குணங்கள் தாதா மற்றும் தாயி அவர்களிடமிருந்து வம்சாவளியாக வந்தவை மற்றும் அவர்கள் என்னிடம் ஸன்ஸ்காரங்களாக ஏற்படுத்தியவை. ஏனைய பல குணங்கள் என் நான்கு சகோதரர்கள் மற்றும் நான் சந்தித்த உன்னத புருஷர்களிடமிருந்து வந்துள்ளன.’
– டாக்டர் ஜெயந்த் ஆடவலே (12.9.2014)