தெய்வீக சைதன்யம் நிரம்பிய, பல கல்யாண குணங்களின் உறைவிடமாகத் திகழும் ஒரு உன்னத புருஷரின் வாழ்க்கைப் படத் தொகுப்பை அளிப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒரு காரியம். ப. பூ. பாபாவின் கருணையால் மட்டுமே நாம் ஒரு சிறு முயற்சியாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு அவரது சரணங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் ஐக்கிய உணர்வு. 18.2.2005 அன்று பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் பராத்பர குரு பாண்டே மகராஜை அவரது அகோலா வீட்டில் சந்தித்தபோது அதை படம் பிடித்த தருணம். அவர்கள் சந்தித்தபோது பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது. அவர் இந்த நாளை ‘அவரின் பிறந்தநாளாக’ கருதுகிறார்.
யோகதக்ஞ தாதாஜி வைசம்பாயன் அவர்களின் 91-வது பிறந்த நாள் (மே 2010) விழாவில் பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்கள் ஆரத்தி எடுக்கிறார்
2004-ல் யோகதக்ஞ தாதாஜி வைசம்பாயன் அவர்கள் ‘ப. பூ. பாண்டே மகராஜ் தேவத் ஆச்ரமத்திற்கு வந்து அங்குள்ள ஸாதகர்களுக்கு ஆன்மீக உபாயங்கள் செய்வார்’ என்று கணித்தார். பின்பு அதன்படியே நடந்தது.
பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ கணேச அத்யாத்ம தர்சன்’ என்ற புனித நூலுக்காக அவருக்கு சுவாமி ஸ்ரீ விஷ்ணுதீர்த்த சிக்ஷா ப்ரதிஷ்டான் 16.10.2005 அன்று விருது அளித்து கௌரவித்த பொன்னான தருணம்
1. ஒரு மகிழ்ச்சியான குடும்பம்
இடமிருந்து வலமாக உட்கார்ந்திருப்பவர் அவரது மனைவி திருமதி ஆஷா பாண்டேஜி மற்றும் பராத்பர குரு பாண்டே மகராஜ்
இடமிருந்து வலமாக நிற்பவர் அவரது மருமகள் திருமதி தேவயானி, பேரன் சௌரப், பேத்தி கெளரி மற்றும் மகன் திரு அமோல் பாண்டே (2007)
பராத்பர குரு பாண்டே மகராஜ் 2012-ல் ஸநாதனின் ஆன்லைன் கடையான ‘ஸனாதன் ஷாப்’-ஐ துவக்கி வைக்கிறார். அவர் மேலும் ஸனாதன் ஸன்ஸ்தா மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் பல வலைத்தளங்களை துவக்கி வைத்துள்ளார்.
பராத்பர குரு பாண்டே மகராஜ் மற்றும் திருமதி ஆஷா பாண்டே அவர்களின் திருமண நாளன்று தேவத் ஆச்ரமத்தில் அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண-அர்ஜுன படத்தைப் பரிசளித்தபோது. (2012)
ப. பூ. பாபா பல்வேறு ரூபமுடைய, தன்மைகள் உடைய கற்களை சேகரித்து வைத்துள்ளார். படத்தில் ப.பூ. பாபா தன் பேத்தி கெளரி மற்றும் மகன் அமோல் அவர்களுக்கு ஒரு கண்காட்சியின்போது அவற்றைப் பற்றி விளக்குகிறார். அவருக்கு அருகில் திருமதி ஆஷா பாண்டேஜி (2015)
ப.பூ. பாபா இயற்கையோடு ஒன்றியவர். ஸாதகர்களிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்தாரோ அதே அளவு இயற்கையிடமும் வைத்திருந்தார். அவர் தன் இன்னுயிரைத் துறந்த பின் இயற்கையில் நடந்த தெய்வீக மாற்றங்களால் இதை உணர முடிந்தது.
ஒவ்வொரு தசராபோதும் அவர் வாழ்த்துக்களை மந்தார இலையில் எழுதி மகான்களுக்கும் ஸாதகர்களுக்கும் அளிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இந்த இலை அவர் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு அனுப்பியது. ஒவ்வொரு வருடமும் ஒரு நூதனமான மந்தார இலையை அனுப்புவார்.
பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்கள் தன் 90-வது பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்தபோது ஸாதகர்கள் அவர் மீது மலர்கள் தூவி வரவேற்ற ஆன்மீக உணர்வு செறிந்த தருணம்.
2. குரு எப்படி ஒருவரை அவரின் இறுதிவரை தன்னுடையவராக்கிக் கொண்டு தொடர்ந்து எதிர்பார்ப்பில்லாத அன்பை பொழிகிறார் என்பதன் உதாரணம் மற்றும் ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்யும் கணம்
பூஜ்ய ரமேஷ் கட்கரி பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தொட்டு அளித்த மலர்மாலையை பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் பூதவுடலுக்கு சமர்ப்பித்தல்
3. தேவத் ஆஸ்ரமத்தின் ஆத்மாவாக விளங்கும்
பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் அறை
பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் அறையிலிருந்து வெளிப்படும் சைதன்யத்தை அனுபவிக்கலாம், அவரது இருப்பாலும் அவரது உடைமைகளாலும் தெய்வீக சைதன்யத்தை அங்கு உணர முடிகிறது.
4. பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் இறுதி சடங்கின்போது வெளிப்பட்ட பல தெய்வீக ரூபங்கள்
அவரின் சிதாக்னியில் இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு
நிற்கும் ஸ்ரீ விட்டலனின் ரூபம் வெளிப்படுதல்
கைகூப்பி நிற்கும் ஒரு தெய்வீக ரூபம்
5. பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் பத்தாம் நாள் சடங்கில் பிண்டம் மற்றும் பாக்ரியில் வெளிப்பட்ட ஓம்
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்