ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 5

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது
குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 4 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க  வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 4

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே

1.    ஆபத்துக்காலத்தை எதிர்கொள்ள
ஸ்தூல நிலையிலான பல்வேறு ஏற்பாடுகள்

1 அ. பெட்ரோல் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும்போது
பயணம் செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள்

1 அ 1. பயணம் செய்வதற்கு மற்றும் கப்பலில் அனுப்புவதற்கு தேவையான போக்குவரத்து சாதனத்தை வாங்குதல்

ஆபத்துக்காலத்தில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்படலாம். ஆபத்துக்காலம் மேலும் தீவிரமாகும்போது இவை முழுவதும் கிடைக்காமலும் போகலாம். அப்போது எரிபொருள் மூலம் இயங்கும் ஸ்கூட்டர் அல்லது கார் ஆகியவை பயனில்லாமல் போகும். அத்தகைய ஆபத்துக்காலத்தில் பயணம் செய்ய, நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சேர்க்க, தானியங்கள் மற்றும் கனமான பொருட்களை கப்பலில் அனுப்ப தேவையான வாகன வசதி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ. சைக்கிள்

பல்வேறு சைக்கிள்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களின் தேவைக்கேற்பவும் நிதி நிலைக்கு தகுந்தவாறும் அதோடு சைக்கினின் பயனுக்கு ஏற்பவும் தேர்வு செய்யலாம்.

சாதாரண சைக்கிள்

சைக்கிள்

இருவகை சைக்கிள்கள் உள்ளன. ஒன்று டையர் மற்றும் ட்யூப் கொண்டது, மற்றது ட்யூப் இல்லாதது.

ஆ. பாட்டரியில் இயங்கும் சைக்கிள் (இ-பைக் அல்லது எலெக்ட்ரிக் சைக்கிள்)

இ. சைக்கிள்-ரிக் ஷா

ஆபத்துக்காலத்தில் நோயாளியை டாக்டரிடம் கூட்டிச் செல்லவும் பெட்டிகளை எடுத்துச் செல்லவும் சைக்கிள்-ரிக் ஷா உதவும்.

ஈ. பாட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும்போது இவை உபயோகமாக இருந்தாலும் கூட பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் இவற்றில் அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை விற்பவர்களிடமிருந்து வாசகர்கள் மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

உ. தள்ளுவண்டி அல்லது கைவண்டி 

ஆபத்துக்காலத்தில் பொருட்களை எடுத்துச் செல்ல காய்கறி, பழ வியாபாரிகள் உபயோகிக்கும் தள்ளுவண்டி உதவியாக இருக்கும்.

ஊ. மாட்டுவண்டி அல்லது குதிரை வண்டி

மாட்டுவண்டிக்குத் தேவையான எருதுகளை பராமரியுங்கள். பசுக்கள் மற்றும் எருதுகளை சேர்த்து பராமரிப்பதால் பசும்பால் கிடைப்பதோடு கூட பசுவம்ச விருத்தியும் ஏற்படும். 3 வயதான பிறகு எருதுகளை வண்டி இழுக்க பயன்படுத்தலாம். மாட்டுவண்டி போல் குதிரைவண்டியும் வாங்கிக் கொள்ளலாம். குதிரையை மட்டும் வாங்கினால் அது பயணப்ப்பட மட்டுமே உதவும்.

பசுக்கள், எருதுகள், குதிரைகள் ஆகியவற்றை பராமரித்தல், அவை வசிப்பதற்கு இடம் ஏற்பாடு செய்தல், அவற்றைப் பார்த்துக் கொள்ளுதல், அவற்றின் நோய்களுக்கு தீர்வு காணுதல் ஆகிய விஷயங்களைப் பற்றி அதற்குரிய நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு குதிரையேற்றம் செய்வது, குதிரைவண்டி, மாட்டுவண்டியை எவ்வாறு ஓட்டுவது என்பது பற்றிக் கற்றுக் கொள்ளலாம்.

1 அ 2. மின்வெட்டால் தெரு விளக்குகள் எரியாதபோது இரவுப் பிரயாணத்திற்கு உதவும் விளக்குகள்

அ. மின்சாரம் அல்லது சூரிய சக்தியால் இயங்கும் ப்ளாஷ்லைட்

ஆபத்துக்கால தேவைக்காக ஒன்றிரண்டு ப்ளாஷ்லைட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவற்றை அவ்வப்பொழுது உபயோகித்து வர வேண்டும்.

ஆ. லாந்தர் விளக்கு

லாந்தர் விளக்கு

லாந்தர் விளக்கிற்கு கெரோசின் உபயோகப்படுத்தப்படுகிறது. கெரோசின் கிடைக்காவிட்டால் மற்ற எண்ணெய்களை (சமையல் எண்ணெய், காய்கறி எண்ணெய்) உபயோகிக்கலாம். லாந்தர் விளக்குகளைத் தவிர்த்து மார்க்கெட்டில் வேறு பல கெரோசின் விளக்குகளும் விற்பனைக்கு உள்ளன.

இ. தீப்பந்தம்

தீப்பந்தம்

தீப்பந்தங்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால் அவற்றை ஒரு தச்சன் அல்லது ஃபாப்ரிகேடர் மூலம் செய்து கொள்ளலாம். தீப்பந்தத்தின் மேல்பகுதியில் ஒரு அகல இரும்பு அல்லது வெண்கல கிண்ணம் உள்ளது. இந்தக் கிண்ணம் அரை மீட்டர் உயர மரக்கம்புடன் இணைக்கப்பட்டிருக்கும். எப்படி விளக்கில் திரி உள்ளதோ அதேபோல் இதில் துணிச்சுருள் திரியாக உபயோகப்படுத்தப்படுகிறது.

எப்படி தீப்பந்தத்தை ஏற்றுவது? : தீப்பந்தத்தை நேராக பிடித்து அதன் மேல்பகுதியில் உள்ள கிண்ணத்தில் இறுக்கமாக சுருட்டிய துணிச்சுருளை வைக்க வேண்டும். அதன் ஒரு முனை ஏற்றுவதற்கு வசதியாக சிறிது வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்த துணிச்சுருள் முழுவதும் நனையும் வரை அதில் எண்ணெய் நிரப்பவும்.

வெளியே தெரியும் நுனியை ஏற்றும்போது தீப்பந்தம் முழுவதும் ஏற்றப்படுகிறது. எண்ணெய் தீரும்வரை எரிகிறது. எண்ணெய் தீர்வதற்கு முன்பே எண்ணெய் சேர்க்க வேண்டும். தீப்பந்தத்தை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி ஒரு நிபுணரை கலந்தாலோசியுங்கள்.

–  திரு அவினாஷ் ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

ஈ. தீவட்டி

தீவட்டி

இது தென்னை ஓலைகளால் செய்யப்பட்டது. இதற்கு தேவையான அளவு தென்னை ஓலைகளை கைப்பிடியில் கொள்ளும் அளவு எடுத்து ஒரு கயிறால் இறுக்கக் கட்டவும். தீவட்டி மெதுவாக எரிவதற்கு, அதை ஏற்றுவதற்கு முன்பு லேசாக அதன் மீது தண்ணீர் தெளிக்கவும். தென்னை ஓலைகளில் இயற்கையாகவே எண்ணெய்ப் பசை இருப்பதால் அது எரிவதற்கு தனியாக வேறு எரிபொருள் தேவையில்லை. எப்படி தீக்குச்சியை ஏற்றும்போது சாய்த்து பிடிப்போமா அப்படியே இதையும் சாய்த்துப் பிடித்து ஏற்ற வேண்டும். ஒரு மூன்றடி தீவட்டி சுமார் 20 நிமிடங்களுக்கு எரியும்.

–  திரு விவேக் பிரபாகர் நாஃப்டே, ஸனாதன் ஆச்ரமம், தேவத், பன்வேல், மகாராஷ்ட்ரா.

1 அ 3. அறிமுகமில்லாத பிரதேசத்தில் பிரயாணம் செய்யும்போது திசைகளை அறிந்து கொள்ள காம்பாஸ்-ஐ  (திசைகாட்டி) உபயோகிக்கவும்

காம்பாஸ்

ஆபத்துக்காலத்தில் ஒருவர் ஒரு இடத்திலிருந்து வேறு அறிமுகமில்லாத இடத்திற்கு செல்ல நேரிடலாம். இது போன்ற சமயங்களில் வழிகாட்டி பலகைகளோ, வழிகாட்டும் நபர்களோ இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. வழிகாட்டி பலகைகள் இருந்தாலும் இருட்டில் தெரியாமல் போகலாம். இத்தகைய சூழலில் திசை தெரியாமல் சுற்றுவதற்கு பதிலாக காம்பாஸ்-ஐ உபயோகிக்கலாம். அதற்கு காம்பாஸ் ஆப்பை உங்களின் மொபைலில் பதிவிறக்கலாம். காம்பாஸ்-ஐ பார்த்து பிரயாணிக்க வேண்டிய திசையைத் தெரிந்து கொள்ளலாம்.

மொபைலில் காம்பாஸ்-ஐ பதிவிறக்கினாலும் அதன் பாட்டரி தீர்ந்து போகலாம். அதனால் ஒரு காம்பாஸ் கருவியை வைத்துக் கொள்வது சிறந்தது. காம்பாஸ்-க்கு பாட்டரியோ மின்சாரமோ தேவையில்லை. அதன் முள் எப்போதும் வடக்கு-தெற்கு திசையையே காட்டும். அதிலிருந்து மற்ற திசைகளை அறிந்து கொள்ள முடியும்.

–  திரு. விஜய் பாடில், ஜல்காவ், மகாராஷ்ட்ரா.

6-ம் பகுதியைப் படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 6

தகவல் : ஸநாதனின் வெளிவரவிருக்கும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha)

 

Leave a Comment