ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 4

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது
குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 3 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 3

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே

வெள்ளம், பூகம்பம், மூன்றாவது மகாயுத்தம், கொரோனா விஷத்தொற்று போன்ற ஆபத்துக்கால கஷ்டங்களை கடந்து செல்ல செய்ய வேண்டிய முன்தயாரிப்பு பற்றிய இந்த கட்டுரைத் தொகுப்பின் முதல் கட்டுரையில், மண் அடுப்பு, கோபர்-காஸ் போன்றவற்றைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். இரண்டாவது கட்டுரையில் காய்கறி, கனிவகைகளின் தோட்டம் போடுவதைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

மூன்றாவது கட்டுரையில் நீண்ட காலம் இருக்கக் கூடிய பதார்த்தங்கள் சம்பந்தமான  விவரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.

இக்கட்டுரையில் தண்ணீர் மற்றும் மின்சாரம் சம்பந்தமாக தண்ணீர் வசதியை எப்படி ஏற்படுத்துவது, தண்ணீர் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு, மின்சாரத்திற்கான மாற்று ஏற்பாடுகள் ஆகியன பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1.   ஆபத்துக் காலத்தை சந்திக்க
பல்வேறு ஸ்தூல அளவிலான ஏற்பாடுகள்

1 அ. தண்ணீர் தட்டுப்பாடைத் தவிர்க்க இதை செய்யுங்கள்

1 அ 1. ஆபத்துக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பெரிய அல்லது சிறிய கிணறை உடனே தோண்டவும். இது முடியாத பட்சத்தில் ஆழ்துளைக் கிணறைத் தோண்டவும்

கிணறு

அணை அல்லது ஏரித் தண்ணீர், பஞ்சாயத்து, முனிசிபாலிடி மூலமாக கிராமங்கள், டவுன்கள் மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு குழாய்கள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. ஆபத்துக் காலத்தில் பம்பிங் ஸ்டேஷனுக்கு மின்சாரம் கிடைக்காததாலும், கனத்த மழையால் அணையில் உடைப்பு ஏற்படுவதாலும், குளங்கள் இருக்கும் இடங்களில் போதிய மழை இல்லாததாலும் குழாய்த் தண்ணீரில் தட்டுப்பாடு ஏற்படலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசு தண்ணீர் லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்க முயற்சிக்கும்; ஆனால் ஆபத்துக் காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடால் தண்ணீர் லாரிகள் வருவதும் நின்று போகலாம். வறட்சியின் போது கிராம நதிகள் வறண்டு போகலாம். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உங்கள் வீட்டிற்கருகில் நல்ல நிலத்தடி நீர் உள்ள இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டவும். ஆபத்துக்காலத்தில் ஆழ்துளைக் கிணறைக் காட்டிலும் கிணறு சிறந்தது, ஏனென்றால் அந்த சமயத்தில் சரி செய்வதற்கு மெக்கானிக் அல்லது உதிரி பாகங்கள் கிடைப்பது கடினமாக இருக்கும். கிணறு, ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்பு அது சம்பந்தமான நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அந்த இடத்தில் கட்டாயம் தண்ணீர் கிடைக்கும் என்றால் மட்டுமே முதலீடு செய்யலாம். கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறில் நிறைய தண்ணீர் இருந்தால் அதை விவசாயம், தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

1 அ 2. நிலத்தடி நீரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுங்கள்

குறைந்த மழை, அதிக நீர் உபயோகம் ஆகியவற்றால் நிலத்தடி நீர் குறைகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை மேற்கொள்வதால் நிலத்தடி நீர் அதிகமாகி அருகிலுள்ள கிணறு, ஆழ்துளைக்கிணறுகளிலும் தண்ணீர் அளவு அதிகமாகிறது. அதோடு கிராமத்தில் கூட்டு முயற்சியாக அனைவரும் சேர்ந்து சிற்றாறுகளின் மீது அணை கட்டுவது, நதி படுகையை உழுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற காரியங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறலாம்.

அ. அரசாங்க திட்டங்களின் பயனைப் பெறுங்கள்

தனியாகவோ அல்லது கூட்டாகவோ கிராமத்து மக்கள் அனைவரும் அரசாங்க திட்டங்களின் பயனைப் பெற முயற்சிக்க வேண்டும். உதாரணம், மகாராஷ்ட்ரா அரசின் ‘தண்ணீரை சேமித்து பாதுகாப்போம்’ என்ற திட்டம்.

ஆ. சிற்றோடைகளில் சிறு அணைகளைக் கட்டுங்கள்

சிறு அணை

இ. கிராமத்திற்கு அருகில் ஓடும் நதியின் படுகையை உழுதல்

ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தின்போது நதியின் களிமண் துகள்கள் நதியின் படுகையின் மேல் படிகிறது. இது மணலின் ஊடுருவும் தன்மையை மூடி தண்ணீர் நிலத்தடி நீராக மாறுவதைத் தடுக்கிறது. அதன் பலனாக சுற்றுப்புற சூழலில் உள்ள நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு உபாயமாக சில கிராமத்தினர் நதி நீர்ப் படுகையை உழுது முயற்சித்தனர். அது வெற்றியைத் தந்தது. மேலும் தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

ஈ. கோமை நதிக்கரையில் வாழும் கிராமத்தவர்கள் வெற்றிகரமாக நதிப் படுகையை உழுது அதன் தண்ணீர் உறிஞ்சும் ஆற்றலை அதிகப்படுத்தி அதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தியுள்ளனர்

தம்பர்கேடா கிராமத்தில் ஷஹாதா தாலுகா, நந்துர்பார் மாவட்டம், மகாராஷ்ட்ராவில் மேலே விவரித்துள்ள நிலை இருந்தது. தம்பர்கேடா கிராமம் கோமை நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதியில் வருடத்தில் 4 – 6 வரை தண்ணீர் இருக்கும். இருந்தாலும் அங்குள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறுகளில் 500 – 700 அடி ஆழத்தில்தான்  தண்ணீர் கிடைத்தது. இதற்கான உபாயமாக அந்த கிராமத்தவர்கள் காய்ந்த நதிப் படுகையின் நதி ஓட்டப் பாதையிலும் நதி ஓட்டத்திற்கு குறுக்கான பாதையிலும் கோடையில் உழுதார்கள். இதற்கு டிராக்டர்கள், மரக்கலப்பை, இரும்பு கலப்பை ஆகியவற்றை உபயோகித்தனர். இதன் பலனாக மழைக்காலத்தில் நதிப் படுகையில் அதிக அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டது. மழை பெய்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே கிணற்றில் 500 – 700 அடி ஆழத்தில் இருந்த தண்ணீர்  90 அடியிலேயே கிடைக்க ஆரம்பித்தது.

பிறகு கோமை நதிக்கரையில் இருந்த மற்ற பல கிராமங்களும் இந்த செயல்முறையை கடைபிடித்து நதிப் படுகையை உழ ஆரம்பித்தனர். அதன் மூலம் மழைத் தண்ணீர் வீணாகாமல் நதிப் படுகையால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரித்தது. (தகவல் : வாட்ஸ்அப் கட்டுரை)

1 அ 3. சில அறிவுறுத்தல்கள்

1.    பணத் தட்டுப்பாடு இருந்தால் சில குடும்பங்கள் ஒருங்கிணைந்து கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டலாம்.

2.    கிணற்றில் ராட்டினம் மாட்டுவது நல்லது. ராட்டினத்தில் கயிறு போட்டு தண்ணீர் இழுக்க கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு கயிறும் கூட இருப்பது நல்லது. இந்தக் கயிறு நைந்து போனால் மாற்றுவது சுலபமாயிருக்கும். முடிந்தால் சோலார்  பம்ப்பை பொருத்தலாம். சோலார் பம்ப் பொருத்தினாலும் ராட்டினத்தையும் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் மேகமூட்டம் இருக்கும் சமயத்தில் சோலார் பம்ப்பை உபயோகப்படுத்த முடியாது.

3.    மழைக்காலம் வரும் வரை கிணற்றில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் நிபுணர்களை கலந்தாலோசித்து கிணற்றை ஆழப்படுத்தலாம். அதன் மூலம் உங்களுக்கு மழைக்காலம் வரை போதிய தண்ணீர் கிடைக்கும்.

4.    ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின்சார பம்ப்புடன் கூட ஒரு சோலார் பம்ப் மற்றும் கையடி பம்ப் ஆகியவற்றையும் கூட பொருத்துவது நல்லது. இந்த வசதிகளை புதுக் கிணறுக்கும் கூட பொருத்துவது நல்லது.

5.    மனித தவறுகளால் கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணற்றின் நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது.

1 அ 4. ஆபத்துக்காலத்தில் ஒரு குடும்பத்திற்கு 10-15 நாட்களுக்குத் தேவையான தண்ணீரை சேமிக்கும் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஆபத்துக்காலத்தில் அரசாங்கத்தின் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படலாம், கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படலாம், அதனால் ஒரு குடும்பத்திற்கு 10-15 நாட்களுக்குத் தேவையான தண்ணீரை சேமிக்கும் அளவு பெரிய தண்ணீர் தொட்டிகளை நிர்மாணிக்க ஏற்பாடு செய்யலாம்.

1 அ 5. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கான மாற்று வசதியை பற்றி யோசித்து வைப்பது நல்லது. மின்சாரத் தடை சமயத்தில் உதவியாக இருக்கும்

அ. அதற்கு மாற்றாக காண்டல் பில்டரை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

ஆ. தண்ணீரை சுத்தப்படுத்த படிக்காரத்தை உபயோகிக்கலாம்.

படிக்காரம்

ஒரு பெரிய தொட்டியில் உள்ள கலங்கிய தண்ணீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் படிக்காரத்தை இவ்வாறு பயன்படுத்தலாம்.

எலுமிச்சை அளவுள்ள படிக்காரத் துண்டை சுத்தமான கையில் வைத்து தொட்டியின் மேற்பரப்பில் கடிகாரச் சுற்றில் 2-3 முறை சுற்ற வேண்டும். பிறகு எதிர்திசையில் இதேபோல் 2-3 முறை சுற்ற வேண்டும். இதன் பலனாக தண்ணீரில் உள்ள மண் துகள்கள் 3-4 மணி நேரத்தில் கீழே தங்கி விடும். முழு தண்ணீரும் சுத்தமாக ஒரு நாள் ஆகும்.

முழுவதும் சுத்தமாகும்வரை தண்ணீரை கலக்கக் கூடாது. இல்லேயேல் கீழே தங்கிய மண் மேலே கிளம்பி விடும்.

மேலே உள்ள சுத்த தண்ணீரை அப்படியே வேறு பாத்திரத்தில் மாற்றவும். கீழே தங்கியுள்ள மண் கலந்த தண்ணீரை தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.

இ. தண்ணீரை வடிகட்டி கொதிக்க வைக்க வேண்டும்

குடிக்கும் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றும் முன்பு அதன் மேல் நல்ல கெட்டியான பருத்தித் துணியைப் போட்டு மூடி வடிகட்டவும்.

இந்த வடிகட்டிய தண்ணீரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். வடிகட்டும் துணியை தோய்த்து காய வைக்க வேண்டும். இந்தத் துணியை தண்ணீர் வடிகட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த வடிகட்டிய தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த பின்னரே குடிக்கவும்.

ஈ. தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி கொண்ட தண்ணீர் பாட்டில்

இது போன்ற பாட்டிலில் அசுத்த நீரை நிரப்பினால் சிறிது நேரத்தில் நீர் சுத்தமாகி குடிப்பதற்கு ஏற்றதாகி விடும். இது போன்ற பாட்டில் பிரயாணத்தின்போது மற்றும் ஆபத்துக்காலத்தில் தெரியாத இடத்தில் வசிக்க நேரிடும்போது உபயோகமாக இருக்கும். எப்போதும் அங்கு நல்ல குடிதண்ணீர் கிடைக்கும் என்று கூற முடியாது. இது போன்ற பாட்டில்கள் ஆன்லைனில் சுமார் 500 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.

1 அ 6. வாட்டர் கூலர்ஸ் மின்சாரம் இல்லாதபோது வேலை செய்யாது, அதற்கு வேறு சுலபமான மாற்று வழியை சிந்திக்க வேண்டும்

அ. பெரிய மண்பானையை உபயோகிக்கலாம்

மண்பானை

கிராமங்களில் மக்கள் தண்ணீரை குளிர வைக்க பெரிய மண்பானைகளை உபயோகிக்கின்றனர். இந்த மண்பானை தரையில் சிறிய குழி செய்து சாய்வாக புதைக்கப்படுகிறது. இந்த பானை தரைக்கு மேலே சுமார் 1 அடி உயரம் இருக்க வேண்டும். பானையை இவ்வாறு புதைப்பதால் தண்ணீர் கசிவு மற்றும் சுத்தம் செய்தல் சுலபமாகிறது.

ஆ. தண்ணீர் பாட்டில், செப்பு பாத்திரத்தை ஈரத் துணியால் இறுக்கமாக சுற்றவும்

ஒரு தண்ணீர் பாட்டில் அல்லது செப்பு பாத்திரத்தில் குடிதண்ணீர் நிரப்பி பின் ஈரத் துணியால் இறுக்கமாக சுற்றவும். அந்தத் தண்ணீர் 3-4 மணி நேரத்தில் குளிர்ந்து விடும். துணி காய்ந்த பின்னர் மீண்டும் ஈரமாக்கி சுற்ற வேண்டும். உங்களுக்கு குளிர்ந்த தண்ணீர் வேண்டுமென்றால் துணியை அடிக்கடி ஈரமாக்க வேண்டும்.

–  பூஜ்ய வைத்திய வினய் பாவே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (10.12.2019)

1 அ 7. தண்ணீர் உபயோகம் பற்றிய சில குறிப்புகள்

அ. தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கவும்

1. வீட்டிலுள்ள பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் பல்துலக்குவதற்கு, குளிப்பதற்கு, தரை மெழுகுவதற்கு, துணிகளைத் துவைப்பதற்கு, காரைத் துடைப்பதற்கு போன்ற காரியங்களுக்கு தண்ணீரை சிக்கனமாக உபயோக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. சொட்டு நீர் பாசனம் (ட்ரிப்) அல்லது தெளிப்பான் அமைப்பு (ஸ்ப்ரிங்க்ளர்) பாசன முறையை உபயோகித்து தோட்டத்திற்கு அல்லது வயலுக்கு நீர் ஊற்றலாம்.

3. கோடையின்போது செடிகளின் அடிமண்ணில் காய்ந்த இலைகள் மற்றும் புல்லைப் பரப்ப வேண்டும். இதன் மூலம் தண்ணீர் விரைவாக ஆவியாவது தடுக்கப்படும். அதனால் தண்ணீரும் சேமிக்கப்படும்.

ஆ. மழைத் தண்ணீரை ட்ரம்களில் சேமிக்கவும்

மழைக்காலத்தின்போது கூரையிலிருந்து விழும் தண்ணீரை ட்ரம்களில் சேமிக்கலாம். இதை வீட்டிற்காக பலவிதங்களில் உபயோகிக்கலாம்.

1 ஆ. மின்வெட்டு ஏற்படும்போது இது போன்ற
மாற்று வசதிகளைப் பற்றி சிந்திக்கவும்

ஆபத்துக்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்புண்டு. புயலின்போது நீண்ட மின்வெட்டு ஏற்படலாம். அந்த சமயத்தில் வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களான விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை உபயோகிக்க முடியாமல் கஷ்டங்கள் ஏற்படலாம், வேலையில் தடங்கல் ஏற்படலாம். அதற்கான மாற்று வசதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பற்றி தீர ஆலோசித்து நீண்ட காலத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடிய வசதியைத் தேர்வு செய்து கொள்ளவும். ஆபத்துக்காலம் முடிந்த பிறகும் இந்த ஸாதனங்கள் உபயோகமாக இருக்கும்.

1 ஆ 1. மேற்கூரை சூரிய தகடு (சோலார் பானல்) மூலம் மின்சார உற்பத்தி

சூரிய தகடு

உள்ளூர்  வியாபாரிகள் மின்சார உற்பத்திக்கு இந்த சூரிய தகடுகளைப் பொருத்துவார்கள். இதற்கு கூரையில் குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவை. அதோடு சூரிய ஒளி அங்கு தங்கு தடையில்லாமல் விழ வேண்டும். இது போன்ற இடத்தில் சூரிய தகடைப் பொருத்தினால் நாள் முழுவதற்கும் இடைவிடாத மின்சாரம் கிடைக்கும், பாட்டரிகளும் சார்ஜ் ஆகும். ஏதோ காரணத்தால் மின்சாரத்துறை மின்சாரத்தை தடை செய்தால் வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களான விளக்கு, மின்விசிறி போன்றவற்றை சூரிய ஒளி சக்திக்கு மாற்றிக் கொள்ளலாம். சூரிய தகடு அந்த அளவிற்கு ஆற்றல் மிகுந்ததாக இருந்தால் LED பல்புகள், டார்ச்சுகள், பாட்டரியால் ஓடும் சைக்கிள், ஸ்கூட்டர், கார் ஆகியவற்றையும் சார்ஜ் செய்யலாம். கூரை அல்லது மேல்தளம் கொண்ட வீடுகளில் இதைப் பொருத்த முடியும். அடுக்ககங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து மேல்தளத்தில் சூரிய தகடைப் பொருத்தலாம்.

சூரிய தகடு மூலம் கிடைக்கும் உபரியான சக்தியை மின்சார வாரியம் வாங்கிக் கொள்கிறது. சூரிய ஒளி சக்தியை உற்பத்தி செய்யும் உபகரணத்திற்கு அரசாங்கம் சலுகை அளிக்கிறது.

வீடுகள், கடைகள் ஆகியவற்றிற்கே சூரிய ஒளி சக்திக்கான சலுகை, மானியம் வழங்கப்படுகிறது. இது பற்றி மேலும் விவரங்களை உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

1 ஆ 2. ஜெனரேட்டர் செட்டை உபயோகப்படுத்துவது

1 ஆ 3. கைகளால் இயக்கப்படும் ஜெனரேட்டர் செட்

ஜெனரேட்டர்

இது, மொபைல் போனின் பாட்டரியை சார்ஜ் செய்யும் ஆற்றல் கொண்டது.

1 ஆ 4. இஞ்சின் இயக்கும் ஜெனரேட்டர் செட்

இவை பெட்ரோல், டீசல் அல்லது காஸ் மூலம் இயங்குகின்றன. இவை சில கிலோவாட்டுகள் (1 கிலோவாட் = 1000 வாட்ஸ்) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மிக்கவை.

1 ஆ 5. தொடர் மின்சாரத்திற்கு யுபிஎஸ் (Uninterrupted power supply) பொருத்துதல்

யுபிஎஸ்

மின்சாரவெட்டு ஏற்படும்போது யுபிஎஸ் மூலமாக தொடர்ந்து மின்சாரம் கிடைக்கிறது. வெளி மின்சாரம் மீண்டும் வந்த பிறகு இந்த அமைப்பு தானாகவே சார்ஜ் மோடில் சென்று பாட்டர்களை சார்ஜ் செய்ய ஆரம்பிக்கும். சில மணி நேரத்திற்கு மின்தடை ஏற்படும்போது இது உபயோகமாக இருக்கும்.

1 ஆ 6. காற்றாலை (windmill) மூலமாக மின்சார உற்பத்தி

காற்றாலை

கடந்த நூற்றாண்டில் சில நாடுகளில் உயர கட்டிடங்களை வடிவமைக்கும்போதே அவற்றில் காற்றாலைகளை பொருத்துவது பற்றி சிந்தனை செய்யப்பட்டது. இருந்தாலும் வருடம் முழுவதும் காற்று வீசும் விகிதம், டர்பைனின் சப்தம், அது ஓடுவதால் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவை இந்த அமைப்பை நஷ்டம் தருவதாகவும் பிரபலமில்லாததாகவும் செய்து விட்டன. பெரிய அளவு மின்சார உற்பத்திக்கு இந்த காற்றாலைகளை மலை மீதோ மேட்டின் மீதோ பொருத்த வேண்டும்.

சூரிய சக்தியுடன் ஒப்பிடும்போது காற்றாலைகள் மூலம் உற்பத்தி ஆகும் மின்சாரத்திற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதோடு காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி ஒரு சிக்கலான விஷயம் என்பதால் அதை ஒரு நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய இயலும்.

1 ஆ 7. மின்சக்தி மூலம் சார்ஜ் ஆகும் LED பல்புகள், பாட்டரிகள் ஆகியவற்றின் உபயோகம்

முழுவதும் சார்ஸ்-ல் உள்ள LED பல்புகள், பாட்டரிகள், ட்யூப் லைட்டுகள் ஆகியவை சில மணி நேரத்திற்கு ஒளி தரும்.

1 ஆ 8. மற்ற பாரம்பரிய மாற்று வழிகள்

மேற்கூறிய மாற்று வழிகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன; உதாரணத்திற்கு மேகமூட்டம் நிறைந்திருக்கும்போது சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியாது; ஆபத்துக்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்போது இஞ்சின் மூலமாக இயங்கும் ஜெனரேட்டர்கள் வேலை செய்யாது. இது போன்ற சமயங்களில் ஏனைய பாரம்பரிய மாற்று வழிகளை அதாவது சிம்னிக்கள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டி இருக்கும். இவற்றின் மூலமாக இரவில் சிறிது வெளிச்சம் ஏற்படும்.

பாகம் 5-ஐ படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 5

தகவல் : ஸநாதனின் வெளிவரவிருக்கும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha)

 

Leave a Comment