என்னுடைய குரு பரம் பூஜ்ய பக்தராஜ் மகாராஜ் (ப.பூ. பாபா) ஒவ்வொரு வருடமும் அனந்தசதுர்த்தசி அன்று பண்டாரா (அன்னதானம்) ஏற்பாடு செய்வார். இந்தோரில் (மத்யப்ரதேஷ்) உள்ள பக்தவாத்ஸல்ய ஆச்ரமத்தில் ப. பூ. ஸ்ரீ ஆனந்தானந்த் சாயீஷ் (ப. பூ. பாபாவின் குரு) ஆரம்பித்து வைத்த இந்த பண்டாரா என்பது ப.பூ. பாபாவின் சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் ஆனந்தம் தரக்கூடிய ஒரு விழாவாகும். அப்பேற்ப்பட்ட ஒரு ஆனந்தமய விழா என் வாழ்வில் வந்தது; அதாவது ப. பூ. பாபா வருடம் 1987-ல் என்னுடைய தந்தையை மகானாக அறிவித்தார். அவ்வாறு மகான் நிலைக்கு உயர்ந்த என் தந்தை பூ. தாதா (பூ. பாலாஜி வாஸுதேவ் ஆடவலே) அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இக்கட்டுரைத் தொகுப்பை ஆரம்பித்துள்ளேன்.
தொகுத்தவர் : (பராத்பர குரு) டாக்டர் ஜெயந்த் ஆடவலே |
முன்னுரை
பூஜ்ய. தாதாவின் (என் தந்தை) எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு நான் தொகுத்துள்ளதும் வருடம் 2014-ல் வெளியிடப்பட்டதுமான ‘சுகம் அத்யாத்மசாஸ்திரம்’ தொகுப்பின் 5 நூல்களை (4 மராட்டி மற்றும் 1 ஆங்கிலம்) மீண்டும் படிக்கும்போது எனக்கு அவற்றின் பல சிறப்பம்சங்கள் கவனத்திற்கு வந்தன.
என்னுடைய குரு ப. பூ. பக்தராஜ் மகாராஜ் என் தந்தை சம்பந்தமாக ‘அவர் ஒரு மகான்!’ எனக் கூறுவார்,என் தந்தையை தன் பக்கத்தில் ஊஞ்சலில் அமரச் செய்வார். என் தந்தையாரால் என் தாயும் (அவரை ‘தாயி’ என அழைப்போம்) மகான் நிலையை அடைந்தார்.
1. மகான்களான பூ. தாதா மற்றும் பூ. தாயி அவர்களால் அவர்களின் ஐந்து
மகன்களுக்கும் ஸாதனையில் ஏற்பட்ட கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றம்!
பூ. தாதா மற்றும் பூ. தாயி அவர்களால் எங்களின் வீட்டு சூழலே ஆன்மீக சூழலாக அமைந்தது. அவர்களின் அன்றாட பேச்சு வழக்கும் நடைமுறைகளுமே எங்களுக்குள் ஸாதனை என்ற சம்ஸ்காரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தந்த சம்ஸ்காரத்தால் என்னுடைய தமையனார்களின் ஸாதனையிலும் அற்புத முன்னேற்றம் ஏற்பட்டது.
1 அ. என்னுடைய நான்கு சகோதரர்களில் இருவர் மகான் நிலைக்கு உயர்ந்துள்ளனர், இருவர் 60% -க்கும் அதிக ஆன்மீக நிலை அடைந்துள்ளனர்
ஸாதகர்கள் 60 முதல் 69% ஆன்மீக நிலை வரை பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுகின்றனர். 70 முதல் 79% ஆன்மீக நிலை வரை மகான் நிலையை அடைகின்றனர் மற்றும் 80 முதல் 89% ஆன்மீக நிலை வரை ஸத்குரு நிலையை அடைகின்றனர்.
1. என்னுடைய முதல் அண்ணன் (மறைந்த) டாக்டர். வசந்த் : அவர் வருடம் 2012-ல் மகான் நிலையை அடைந்தார் மற்றும் வரும் 2017-ல் ஸத்குரு நிலையை அடைந்தார்.
2. என்னுடைய இரண்டாவது அண்ணன் திரு. அனந்த் : அவர் வருடம் 2019-ல் மகான் நிலையை அடைந்தார்.
3. என்னுடைய முதல் தம்பி (மறைந்த) டாக்டர் சுஹாஸ் : இவர் வருடம் 2021-ல் 64% ஆன்மீக நிலையை அடைந்தார்.
4. என்னுடைய கடைசி தம்பி திரு. விலாஸ் : இவரின் ஆன்மீக முன்னேற்றமும் நடந்து வருகிறது.
நாம் பல மகான்களின் சரித்திரங்களைப் படித்துள்ளோம். எந்த ஒரு மகானின் சரித்திரத்திலும் அவரின் எல்லா குழந்தைகளும் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர் என கேள்விப்படுவது துர்லபம். இதிலிருந்து என் பெற்றோரின் ஒப்புயர்வற்ற தன்மை கவனத்திற்கு வருகிறது.
2. பூஜ்ய தாதாவின் சஹவாசத்தால் ஸாதகர்களுக்கும் ஏற்பட்ட பயன்!
மும்பையில் உள்ள என் ‘சிவ’ வீட்டில் பூ. தாதா மற்றும் பூ. தாயி வசித்து வரும்போது சில காலம் அங்கே வசித்து வந்த ஸாதகர்களுக்கு அவர்களின் சேவையை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஸாதகர்களுக்கு அவர்களின் ஸத்சங்கத்தால் பயன் ஏற்பட்டு அவர்களின் ஆன்மீக முன்னேற்றமும் நடைபெற்றது. உதாரணத்திற்கு திரு சத்யவான் கதம் மற்றும் குமாரி அனுராதா வாடேகர் ஆகிய இருவரும் ஸத்குரு நிலைக்கு உயர்ந்துள்ளனர் மற்றும் திருமதி பக்தி காண்டேபார்கர் மற்றும் திரு தினேஷ் ஷிண்டே ஆகியோர் 60%-க்கும் அதிக ஆன்மீக நிலை அடைந்துள்ளனர்.
3. பூஜ்ய தாதா அவர்களுடைய எழுத்துக்களின் ஈடுஇணையற்ற தன்மை!
என்னுடைய தந்தை எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், புனைந்துள்ள கவிதைகள் ஆகியன அற்புதமானவை. அதனால் அவற்றைத் தொகுத்து 5 நூல்களாக ( 4 மராட்டி மற்றும் 1 ஆங்கிலம்) வருடம் 2014-ல் வெளியிட்டுள்ளேன்.
நூல் 1 : ஸுகம் ஸாத்விக் ஜீவன் (குழந்தைகளுக்கு நல்ல ஸம்ஸ்காரங்களை ஏற்படுத்தும் ஒரு தந்தையின் வழிகாட்டுதல்!)
நூல் 2 : ஸுகம் பக்தியோக் (நாமசங்கீர்த்தனயோகத்தின் சுலபமான விளக்கம்!)
நூல் 3 : ஸுகம் அத்யாத்ம (தினசரி வாழ்வில் ஆன்மீகத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்!)
நூல் 4 : பெயர்களின் மூலம் புனையப்பட்ட கவிதைகள் (உலக மற்றும் ஆன்மீக போதனைகளைத் தரும் கவிதைகள்)
நூல் 5 : Poetry created around Names (Poetry that teaches how to spiritualize worldly life) (ஆங்கில நூல்)
3 அ. வாசகர்களுக்கு இந்த நூல்களின் மூலமாக கிடைக்கக் கூடிய நன்மைகள்!
பல ஸாதகர்களுக்கு ‘என் குழந்தைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும்; அவர்களும் ஸாதனையில் ஈடுபட வேண்டும்’ எனத் தோன்றுகிறது. ஆனால் அவர்களுக்கு ‘குழந்தைகளுடன் எவ்வாறு உரையாட வேண்டும், எப்படி நடந்து கொண்டால் அவர்கள் நல்லவர்களாகி ஸாதனையில் ஈடுபடுவார்கள்’ என்பது தெரிவதில்லை. எங்களின் தந்தையார், 5 சகோதரர்களாகிய எங்களிடம் எவ்வாறு நல்ல ஸம்ஸ்காரங்களை ஏற்படுத்தினார், அவர் எங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தார், ஆகிய விஷயங்கள் இந்த 5 நூல்களின் வாயிலாக கவனத்திற்கு வருகின்றன. இவற்றை ஸாதகர்கள் பயின்று அதுபோல் நடந்து கொண்டால் அவர்களின் குழந்தைகளின் ஸாதனையிலும் நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும்!
வருடம் 2014-ல் வெளிவந்துள்ள இந்த நூல்கள் பற்றி பெரும்பான்மை ஸாதகர்களுக்குத் தெரியாது மற்றும் புதிய ஸாதகர்களுக்கு அவற்றின் மகத்துவம் தெரிவதில்லை. எல்லா ஸாதகர்களுக்கும் இந்த நூல்களின் மூலம் பயன் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரைத் தொடர் வெளிவருகின்றன. ஸாதகர்கள் இவற்றின் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!
நூல் 4 மற்றும் 5 : ‘பெயர்களின் மூலம் புனையப்பட்ட கவிதைகள்’ என்ற மராட்டி நூலில் ‘அ முதல் ஞ’ வரையும் ஆங்கிலத்தில் ‘A to Z’ வரையுள்ள அக்ஷரங்களைக் கொண்ட பெயர்களின், ஆன்மீக நிலையில் புனையப்பட்ட கவிதைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை உபயோகித்து வாசகர்களும் தங்களின் மகள், மகனுக்கு அவர்களின் பெயர்களைக் கொண்ட கவிதைகளைப் புனைந்து பரிசாக அளிக்கலாம்!
4. ஸனாதன் ஸன்ஸ்தாவில் ஸாதனை புரியும் சில குடும்பங்களின் உதாரணங்கள்!
ஸனாதன் ஸன்ஸ்தாவின் வழிகாட்டுதலின்படி ஸாதனை செய்யும் பல குடும்பங்கள் உள்ளன. அவர்களில், பெற்றோரும் மற்றும் தற்போது அவர்களின் குழந்தைகள் ஆகிய அனைவரும் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்துள்ளனர், உதாரணத்திற்கு –
அ. பூ. அஷோக் பாத்ரிகர் அவர்களின் முழு குடும்பமும் ஸாதனை செய்து வருகின்றனர். அவரின் இரு மகள்கள் 60%-க்கு மேம்பட்ட ஆன்மீக நிலை அடைந்துள்ளனர், அவரின் மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் முழு நேர ஸாதனை செய்து வருகின்றனர்.
ஆ. பூஜ்ய (திருமதி) ராதா பிரபு அவர்களின் முழு குடும்பமும் ஸாதனை செய்து வருகின்றனர். அவரின் மகன், இரு மருமகள்கள் 60%-க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை அடைந்தவர்கள், அதோடு கொள்ளுப் பேரன் பூஜ்ய பார்கவ்ராம், ஸநாதனின் முதல் குழந்தை மகான் ஆகும். அவரின் பேரன் மற்றும் பேரனின் மனைவியும் ஸாதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ. பூ. (திருமதி) நிர்மலா தாதே அவர்களின் முழு குடும்பமும் ஸாதனை செய்து வருகின்றனர். அவரின் பெரிய மகன், பெரிய மருமகள் ஆகியோருடன் மகள் ஆகியோர் 60%-க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை உடையவர்கள், அதோடு அவரின் இளைய மகன், இளைய மருமகள் ஆகியோர் முழுநேர ஆன்மீக ஸாதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈ. பூ. (திருமதி) சுசீலா மோதி அவர்களின் முழு குடும்பமும் ஸாதனை செய்து வருகின்றனர். அவரின் பெரிய மகன், இளைய மருமகள் மற்றும் இரு பேத்திகள் 60% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை உடையவர்கள்.
உ. பூ. ராமானந்த் கௌடா அவர்களின் முழு குடும்பமும் ஸாதனை செய்து வருகின்றனர். அவரின் மாமா, மாமி, இரு ஒன்றுவிட்ட சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள், மாமியார், மாமனார், மனைவி மற்றும் மைத்துனி ஆகியோர் அனைவரும் 60% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை உடையவர்கள்.அவரின் இரு மகன்கள் உச்ச ஸ்வர்க்கலோகத்திலிருந்து பூமியில் பிறப்பெடுத்துள்ள தெய்வீக குழந்தைகள்.
ஸநாதனின் இது போன்று முழு நேர ஸாதனையில் ஈடுபட்டுள்ள, உயர் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ள பல குடும்பங்கள் உள்ளன.
இக்கட்டுரைத் தொடரை படிக்கும் சில வாசகர்களுக்கு ஸாதனையில் ஈடுபடுவதற்கும் அவர்களின் குடும்பத்தினரையும் ஸாதனையில் ஈடுபட வைப்பதற்கும் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் இக்கட்டுரையின் முழு பலன் கிடைத்துள்ளது எனலாம்!’ – (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே (14.9.2021)