
அ. க்ரியமாண் கர்மாவிற்கும்
(தன்னால் இயலும் செயலுக்கும்)
கடவுள் துணையை வேண்டிப் பிரார்த்திப்பது
இறைவன் அளித்த வரமான நம் புத்தியையும், சக்தியையும் கொண்டு, செய்து முடிக்கக்கூடிய க்ரியமாண் கர்மாவிற்கு கூட இறைவனின் உதவியை வேண்டி பிரார்த்திப்பது சரியான முறையல்ல. ஏனெனில் அது நம் ஸாதனை பலத்தை வீணாக்குகிறது. உதாரணமாக ஒரு பெண் ஸாதகர் ஸத்ஸங்கம் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கு சென்ற பிறகு தான் அவருக்கு தான் வீட்டைப் பூட்டாமல் மறந்து வந்தது நினைவிற்கு வந்தது. உடனே அவரால் வீட்டிற்குத் திரும்பச் சென்று அதை சரியாகப் பூட்டி விட்டு வர இயலும் என்றாலும், அவர் அதைச் செய்யாமல், ‘இறைவா! என் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’, என்று பிரார்த்தனை செய்தார். இங்கு அவரால் செய்ய இயலும் செயலுக்குக் கூட அவர், தேவையில்லாமல் கடவுளைத் தொந்தரவு செய்கிறார். இது சரியான முறையல்ல என்பது மாத்திரமன்றி ஸாதனா மார்க்கத்திற்கு தீங்கையும் விளைவிக்கும்.
ஆ. ஸாதகர்கள் உலகரீதியான
பிரச்சனைகளை விலக்க பிரார்த்தனை செய்வது
ஸாதகர்களின் இறுதி லட்சியம் கடவுளை உணர்வது. ஆனால் தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்க நேரும் பிரச்சனைகள் எல்லாம் மாயையினால் விளைபவை. ஸாதகர்கள் இது போன்று மாயையினால் ஏற்படும் பிரச்சனைகளுக்காக பிரார்த்தனை செய்வது தவறு. ஏனெனில் அவ்வாறு செய்வதால் அவர்களது ஸாதனை வீணாக்கப்படுவது மட்டுமின்றி ஸாதகர்களும் தங்களது முக்கிய நோக்கமான கடவுளை அடைவது என்பதிலிருந்து விலகிச் செல்கிறார்கள்.
இ. நன்றி செலுத்த மறத்தல்
பெரும்பாலமான மக்கள் தங்கள் விருப்பம் பூர்த்தியாவதற்கும், தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்குமே பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் கடவுளுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறார்கள். – பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே (மாக கிருஷ்ண 3, கலியுக வருஷம் 5110, 12.2.2009)