விஜயதசமி நாளில் பகவானின் அழிக்கும் ரூபத்தின் மகத்துவம்!

பகவானுக்கு உள்ள இரு ரூபங்களான காக்கும் ரூபம்,
அழிக்கும் ரூபம் ஆகிய இரு ரூபங்களில் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’
என்ற உபாயத்தினாலேயே முடியும் !

பகவான் ஸ்ரீராமன்

விஜயதசமி நாள் என்பது அதர்மம் அழிந்து தர்மம் வெற்றியடைந்த நாள். ஸ்ரீராமர் ராவணாதி அசுரர்களை வெற்றி கண்ட நாள் இதுவே. ஆதிசக்தி மகிஷாசுரனை வென்ற நாள் இதுவே. இவை அனைத்திலும் உள்ள ஒரு பொது விஷயம் ‘விஜய’ அதாவது வெற்றி என்பதே. ‘விஜய’ என்பது பகவானின் குணம். பகவானுக்கு காக்கும் ரூபம் மற்றும் அழிக்கும் ரூபம் ஆகிய இரு ரூபங்கள் உள்ளன. ‘விஜய’ என்றால் அதில் வீரம், ஸாஹஸம், தைரியம் ஆகிய மாரக உணர்வு அதாவது அழிக்கும் உணர்வு அடங்கும். விஜயதசமி என்பது பகவானின் அழிக்கும் ரூபம் சம்பந்தமானது. படைப்புச் சக்கர சுழற்சியின் ஆரம்பத்திலிருந்து பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் காக்கும் மற்றும் அழிக்கும் ரூபங்களின் பல தெய்வீக லீலைகளை, நம்முடைய ரிஷி முனிவர்கள் எழுதியுள்ள கதைகளிலிருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. அவற்றில் இரு சிறப்பு மிக்க நிகழ்வுகளை நினைவுகூர இருக்கிறோம். அதன் மூலம் ‘இறைவனின் அழிக்கும் ரூபத்தை பக்தன் எவ்வாறு எதிர்கொள்கிறான்? இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்கிறான்?’ என்பவற்றை நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1.    ஸத்யயுகம் : ஸ்ரீவிஷ்ணுவின்
நரசிம்ம அவதாரம் மற்றும் பக்த பிரஹ்லாதன்!

1 அ. பக்த பிரஹ்லாதனுக்காக பகவான், நரசிம்ம அவதாரத்தை எடுத்து
ஹிரண்யகசிபுவை வதம் செய்தல், அப்போது எல்லா தேவர்களும் அவரை
ஸ்துதி செய்தல், ஆனாலும் அவரின் கோபம் சாந்தமடையாமல் இருத்தல்

பக்த பிரஹ்லாதனுக்காக பகவான், நரசிம்ம அவதாரத்தை எடுத்தான். ஹிரண்யகசிபுவை வதம் செய்தான். பிறகு அங்கு எல்லா தேவர்களும் வந்து பகவான் நரசிம்மனைத் தொழுதார்கள். சாக்ஷாத் பிரம்மதேவனும் சிவபெருமானும் கூட ஸ்துதி செய்தனர். ஆனால் நரசிம்மரின் கோபம் தணிந்தபாடில்லை. அப்போது வைகுண்டத்திலிருந்து ஸ்ரீலக்ஷ்மி தேவி அங்கு வந்தாள். ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவியின் வரவால் நரசிம்மரின் கோபம் தணியும் என்று தேவாதி தேவர்கள் நினைத்தனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி பிரம்மதேவனிடம் பிரஹ்லாதனை நரசிம்மர் அருகில் அழைத்துச் செல்லுமாறு கூறினாள். பிரம்மதேவன் பிரஹ்லாதனிடம் ‘குழந்தாய் பிரஹ்லாதா, நீ உன்னுடைய வார்த்தைகளால் பகவானை துதி பாடு. அவ்வாறு செய்தால் பகவானின் கோபம் தணிந்து இந்த படைப்பும் நாசமடையாமல் தப்பும்’ என்றார்.

1 ஆ. ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக பகவான் எடுத்த நரசிம்ம
அவதாரமான அழிக்கும் ரூபம் யாராலும் தாங்கவொண்ணாதது; ஆனால்
பக்த பிரஹ்லாதன் அந்த ரூபத்தைப் பார்த்து பயப்படாமல் எவ்வித தயக்கமுமின்றி
நரசிம்மர் அருகில் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை துதி பாடுதல்

பக்த பிரஹ்லாதன் பிரம்மதேவனிடம் உடனே சரி என்கிறான். ‘மனிதனும் இல்லை, சிங்கமும் இல்லை’ என்பதாக பகவானின் அற்புத, அதிசய ரூபம் இருந்தது! அவரின் வாயிலிருந்து அக்னி ஜ்வாலையும் கண்களிலிருந்து கோடி சூர்ய பிரகாசமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் தன் கழுத்தில் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்திருந்தார். அவரின் செயல்பாடுகளும் கோவமும் லயத்தை, படைப்பின் அழிவைக் குறிப்பதாக இருந்தன.  பகவானின் இந்த மகாரௌத்ர ரூபத்தைப் பார்த்து எல்லா தேவர்களும் தூர விலகியே இருந்தனர். அச்சமயம் பாலகனாக பிரஹ்லாதன் எவ்வித பயமோ தயக்கமோ இன்றி பகவானின் அருகில் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான். பகவான் நரசிம்மர் குழந்தை பிரஹ்லாதன் தலை மீது தன் வலது கையை வைக்கிறார். அக்கணத்தில் பிரஹ்லாதனின் திருமுகத்திலிருந்து மடை திறந்த வெள்ளமென நரசிம்ம ஸ்துதிகள் தோன்றின. இதையே ‘பிரஹ்லாத ஸ்துதி’ என்பர்.

1 இ. பிரஹ்லாத ஸ்துதி

1 இ 1. பகவான் நரசிம்மரின் ரௌத்ர ரூபத்திலும் பக்தவாத்ஸல்யம் நிரம்பிய, கருணை ததும்பும்  ரூபத்தைக் கண்டு ஆழ்ந்த பக்தியுடன் சரணாகதி உணர்வுடன் பிரார்த்தனை செய்யும் குழந்தை பிரஹ்லாதன்! : பிரஹ்லாதன் நரசிம்மரைப் பார்த்து, ‘பகவானே, உன்னுடைய இந்த ரௌத்ர ரூபத்தைப் பார்த்து எனக்கு சிறிதும் பயம் ஏற்படவில்லை. காரணம் உன்னுடைய இந்த அற்புத ரூபத்திலும் காருண்ய ரூபத்தையே நான் காண்கிறேன். அப்பனே, உன்னை நிரந்தரமாக பக்தி செய்யும் வரத்தை எனக்குத் தா. இந்த உலகில் உன்னுடைய திருப்பாதங்களைத் தவிர்த்து மற்றவை எல்லாம் அழியக் கூடியவை. நீயே ஆதியும் அந்தமும் இல்லாதவன். இறுதியில் ஒரு சிறு எறும்பிலிருந்து பிரம்மதேவன் வரை அனைவரும் உன்னுடைய சரணங்களிலேயே லயமாக வேண்டும். நானும் உன்னை சரணடைந்தேன்! இந்த சம்சாரத்திலிருந்து விடுபடும் வழியை நீ எனக்குக் காட்டு. அதற்காக எனக்கு அருள் செய். நான் மட்டும் மோக்ஷத்தை நாடாமல் அனைவருக்கும் மோக்ஷ வழியைக் காண்பித்து உதவி புரியும் புத்தியைத் தா. ‘எப்படி உன்னிடம் பக்தி செய்வது?’ என்பதை சமூகத்தினருக்கு எடுத்துரைக்க சக்தி தா. உண்மையில் உன்னுடைய ஸ்மரணத்தில் தான் எல்லாம் உள்ளது. நான் அசுர குலத்தில் (ஹிரண்யகசிபுவின் மகனாக) பிறந்துள்ளேன். நான் உன்னை எப்படி, எவ்வாறு ஸ்துதி செய்வேன்? உன்னை ஸ்துதி செய்வதற்கு வார்த்தைகளே இல்லையே.’

1 இ 2. பிரஹ்லாதன் செய்த ஸ்துதியால் பகவான் சாந்தமடைதல், மகிழ்வோடு வரம் கேட்குமாறு கூறுதல், பிரஹ்லாதன் பணிவுடன் தன் தந்தைக்கு நற்கதி கிடைக்க வேண்டும் எனக் கோருதல் : பிரஹ்லாதன் ஸ்துதியாக கூறிய வார்த்தைகள் உடனே பகவான் நரசிம்மனை சாந்தப்படுத்தியது. அவர் பிரஹ்லாதனிடம் வரம் கேட்குமாறு கூறுகிறார். அப்போது பிரஹ்லாதன் பகவானிடம் ‘பகவந்தா, என் தந்தையான ஹிரண்யகசிபுவிற்கு நற்கதி வழங்க வேண்டும்’ எனக் கேட்டான். இதைக் கேட்டு பகவானுக்கு அதிக ஆனந்தம் ஏற்பட்டது. பகவான் பிரஹ்லாதனிடம் ‘குழந்தாய் பிரஹ்லாதா, உன்னுடைய தகப்பனாரான ஹிரண்யகசிபுவையும் சேர்த்து முந்தைய 20 வம்சத்தினருக்கு நற்கதி வழங்குகிறேன், அதோடு உனக்குப் பின் வரக்கூடிய சந்ததியினர் யாருக்கும் என் கையால் மரணம் ஏற்படாது என்ற வரத்தையும் தருகிறேன்’ என்றார். அதன்படியே பகவான் ஸ்ரீவிஷ்ணு வாமன அவதாரத்தின்போது பிரஹ்லாதனின் வம்சத்தில் வந்த பலிராஜாவை வதம் செய்யாமல் பாதாளத்திற்கு அனுப்புகிறார்.

2.    துவாபரயுகம் : ஸ்ரீகிருஷ்ணாவதாரம் மற்றும் அபிமன்யுவின் மரணம்

2 அ. மகாபாரத யுத்தத்தின் 13-வது நாள் கௌரவர்கள்
வஞ்சகமாக கிருஷ்ணார்ஜுனர்களை யுத்தபூமியிலிருந்து
வேறு இடத்திற்கு போகச் செய்தல் மற்றும் அந்த சமயத்தில் கபடமாக
அர்ஜுனனின் புத்திரனானஅபிமன்யுவை குரூரமாகக் கொல்லுதல்

மகாபாரத யுத்தத்தின் 13-வது நாள் துரோணாச்சாரியார் ‘ஸமஸப்தக்’ என்ற மகாவீரனை அனுப்பி அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனை குருக்ஷேத்திரத்திலிருந்து வெகு தொலைவு கூட்டிச் செல்லுமாறு திட்டமிடுகிறார். அதன் பிறகு கௌரவர்கள் மிகவும் கீழ்த்தரமான வழியை உபயோகித்து குரூரமாக அர்ஜுனனின் புத்திரனான அபிமன்யுவை சக்கரவ்யூகத்திற்குள் கொன்று விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து வெகு தொலைவு சென்றிருந்த அர்ஜுனனும் கிருஷ்ணனும் யுத்த பூமிக்கு திரும்பியபோது அவர்களுக்கு ‘ஜெயத்ரதன் உட்பட கௌரவர்களில் சில மகாவீரர்கள் ஒருங்கிணைந்து தனித்திருந்த அபிமன்யுவை யுத்த விதிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து குரூரமாக கொன்றனர்’ என்ற விஷயம் தெரிய வந்தது. இது தெரிந்ததும் அர்ஜுனன் மிகவும் நொறுங்கிப் போகிறான். கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் சுபத்திரையைத் தேற்றுகிறான். அர்ஜுனன் எல்லோர் முன்னிலையிலும் மறுநாள் சூர்யாஸ்தமனத்திற்குள் ஜெயத்ரதனைக் கொல்லுவேன் என சபதமேற்கிறான். அர்ஜுனன் இரவு உறங்கும்வரை ஸ்ரீகிருஷ்ணன் அவன் அருகிலேயே காத்திருக்கிறான். அதன் பிறகு தாருகன் என்ற சாரதியுடன் தன்னுடைய கூடாரத்திற்கு செல்கிறான்.

2 ஆ. ஸ்ரீகிருஷ்ணனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டதால்
‘மறுநாள் நான் யுத்தத்தில் எல்லோரையும் அழிக்கப் போகிறேன்’
என்று தாருகனிடம் கூறுதல், அவ்வேளையில் தாருகன் பகவானின்
கோவத்தை தன்னால் எதிர்கொள்ள முடியாமல் இருப்பதை உணர்தல்

ஸ்ரீகிருஷ்ணன் தன் சாரதியான தாருகனிடம் கூறுகிறார், ‘இவ்வுலகில் எனக்கு அர்ஜுனன் மிகவும் பிரியமானவன். நாளை நான் யுத்தபூமிக்கு செல்வேன், சம்பூர்ண கௌரவ சேனை, கர்ணன், துரியோதனன் போன்ற அனைவரையும் அழிப்பேன். நீ நாளை என்னுடைய ரதத்தை தயார் நிலையில் வைத்திரு. அர்ஜுனனை நான் யுத்த பூமிக்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை.’ தாருகனுக்கு தன் ஸ்வாமியான ஸ்ரீகிருஷ்ணன் கோவமாக உள்ளான் என்பதை உணர முடிந்தது. அவன் ‘சரி’ என்கிறான். காரணம் தாருகனுக்கு ‘சாக்ஷாத் பகவானின் கோவத்தை யாராலும் எதிர்கொள்ள முடியாது. பகவானின் முன் சென்று ஏதும் கூறுவதற்கும் இது சரியான தருணம் இல்லை’ என்பது தெரியும். தாருகன் அமைதியாக அங்கிருந்து செல்கிறான்.

2 இ. திடீரென்று இயற்கையில் மாற்றம் ஏற்பட்டு மகாபயங்கர
தாண்டவத்தைப்போன்று கடகடவென்று இடித்து புயல் அடித்தது

அன்றைய தினம் நள்ளிரவில் பெரும் புயல் அடிக்கிறது. எல்லோரின் கூராமும் ஆட்டம் காண்கிறது. ஆகாயத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் மின்னல்கள் மின்னுகின்றன; இயற்கை மகாபயங்கர ரௌத்ர தாண்டவம் ஆடுவதைப் போன்று கடகடவென்று இடி இடிக்கிறது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் யாவரும் அவரவர் கூடாரங்களை விட்டு வெளியே வருகின்றனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ‘புயல் வரக்கூடிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாதபோது இது போன்ற ஒரு மகாபயங்கர புயல் எங்கிருந்து வந்தது?’ என்பது யாருக்கும் தெரியவில்லை.

2 ஈ. கௌரவர்கள் பீஷ்மாச்சாரியாரிடம் இதுபற்றி கேட்டபோது,
‘நீங்கள் அதர்மமான முறையில் அபிமன்யுவை கொன்றதால்
பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் மனதில் கோபம் ஏற்பட்டுள்ளது, அவரை
சாந்தமாக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்கிறார்

கௌரவர்கள் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்ம பிதாமகரிடம் செல்கிறார்கள் மற்றும் அவரிடம் இந்தப் புயலின் காரணம் பற்றிக் கேட்கிறார்கள். பீஷ்மர் அவர்களிடம், ‘இது வெறும் புயல் இல்லை; இது பிரம்மாண்ட நாயகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கோவத்தின் வெளிப்பாடு. யுத்த நியதிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு மகாபராக்கிரமசாலிகளான நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அபிமன்யுவைத் தாக்கி கொன்றதால், ஸ்ரீகிருஷ்ணன் மனதில் இது பற்றிய பெரும் கோவத்தின் அலை எழும்பியுள்ளது. அதன் பலவே இந்தப் புயல். பகவானின் மனதிலுள்ள இந்த கோபம் குறையவில்லை என்றால் நாளைக் காலை யுத்தம் செய்ய யாரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள். அதனால் பகவானின் கோபம் தணிவதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.’

2 உ. பாண்டவர்கள் அனைவரும் விதுரரிடம் சென்று இந்த இயற்கை சீற்றத்தின்
காரணத்தைப் பற்றிக் கேட்டனர், அப்போது ‘அதர்மமான முறையில் அபிமன்யு
கொல்லப்பட்டதால் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் மனதில் கோபம் ஏற்பட்டுள்ளது,
அவரை சாந்தப்படுத்த அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்கிறார்

பாண்டவர்கள் அனைவரும் விதுரரிடம் சென்று கேட்கின்றனர், ‘இந்த மகாபயங்கர புயல் எதனால் ஏற்பட்டுள்ளது?’ விதுரர் கூறுகிறார், ‘வைகுண்டபதி, ஜகத்குரு பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன்னுடைய கூடாரத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்; ஆனால் அவனது மனதில் அபிமன்யுவின் மரணத்தால் ஏற்பட்ட கோவமானது இந்த புயல் ரூபமெடுத்து வீசுகிறது. நீங்கள் அனைவரும் மனதாலேயே அவனை சரணடையுங்கள், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இதுவே ஒரே உபாயம். உங்களில் ஒருவரிடமும் பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ளும் சக்தி இல்லை. விதுரர் கூறியபடி பாண்டவர் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பலவாறாக பிரார்த்தனை செய்கின்றனர். சிறிது நேரத்தில் புயல் அமைதியாகிறது.

மறுநாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் கோபம் குறைகிறது மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனன் எடுத்த சபதத்தின்படி அவன் மூலமாகவே ஜெயத்ரதனின் வதம் நடக்குமாறு செய்கிறான். அவன் பக்தர்களின் இச்சைகளை புறக்கணிப்பதில்லை. அனால் அதே சமயத்தில் துரோணாச்சாரியார், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு பகவானின் அழிக்கும் ரூபத்தின் மகத்துவம் புரிபடலாயிற்று.

3.    ஸ்ரீவிஷ்ணுவனின் அழிக்கும் ரூபத்தின் ரகசியம்!

3 அ. ஸ்ரீவிஷ்ணு பக்தர்களிடம் எந்த அளவிற்கு கருணை நிரம்பியவராக
உள்ளாரோ அந்த அளவிற்கு துஷ்டர்களிடம் கடுமையாக இருக்கிறார்,
அவர்களை வதம் செய்த பிறகே அவர் சாந்தமடைகிறார்

ஸ்ரீவிஷ்ணு என்றால் 100% தெய்வ தத்துவம்! பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளில் ஸ்ரீவிஷ்ணு அதிக கண்டிப்புடையவர். பிரம்மதேவன் மற்றும் சிவனிடமிருந்து வரம் பெறுதல் சுலபம்; ஆனால் ஸ்ரீவிஷ்ணுவிடமிருந்து வரதானம் பெறுவது அந்த அளவிற்கு சுலபம் இல்லை. அவர் எந்த அளவிற்கு பகதர்கள் மீது கருணை மழை பொழிகிறாரோ அந்த அளவிற்கு துஷ்டர்களிடம் கடுமை காட்டுகிறார். பகவானின் அழிக்கும் ரூபம் துஷ்டர்களை அழிக்கவும் சிஷ்டர்களைக் காக்கவும் வெளிப்படுகிறது. சமுத்திரம் எப்போதும் அமைதியாகவே உள்ளது. ஆனால் எப்போது புயல் அடிக்கிறதோ அப்போது சமுத்திரம் கொந்தளிக்கிறது. அப்போது ரௌத்ர ரூபத்தை தரித்துக் கொண்டு படைப்பின் நாசத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் வீசும் தென்றல் காற்று அமைதி மற்றும் லேசான தன்மையைத் தருவதாக உள்ளது. ஆனால் அதுவே புயலாக உருவெடுக்கும்போது தீவிர கதி பெற்று தன் முன் வருவன எல்லாவற்றையும் அடியோடு அழித்து விடுகிறது. பூமி எப்போதும் அமைதியானதாகவும் ஒரு லயத்தில் இயங்கக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் நாசகாலம் வரும்போது ஒரு நடுக்கத்தின் மூலம் கிராமம், வீடுகள், தெருக்கள், நதியின் பிரவாஹங்கள், நகரங்கள், மலைகள் ஆகியவற்றை தரைமட்டமாக்குகிறது. ஒரே கணத்தில் பல மனிதர்களை கொன்று குவிக்கிறது.

3 ஆ. பகவானின் அழிக்கும் ரூபம் பக்தர்களின் நலனுக்காக மட்டுமே
ஏற்படுகிறது, அதனால் பக்தர்கள் உண்மையாக பகவானின் சரணத்தில்
லயமாகி சரணாகதி செய்வது அவசியம் ஆகிறது

அமைதியாக உள்ள ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் ரூபம் துஷ்டர்களை அழிப்பதற்காக மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. எல்லா ஜீவராசிகளிடத்தும் உள்ள ஒரு பொதுவான தன்மை ‘பயம்’.பகவானின் அழிக்கும் ரூபம் உண்மையில் பக்தர்களின் பயங்களைப் போக்க வல்லது. பகவான் தன் அழிக்கும் ரூபத்தின் மூலமாக பக்தர்களுக்கு ‘நான் உங்கள் பக்கத்தில் எப்போதும் இருப்பதால் எந்தவித பயமும் தேவையில்லை’ என்ற ஆசுவாசத்தைத் தருகிறான். பகவான் அழிக்கும் ரூபத்தை தரிக்கும்போது சரணாகதி மற்றும் பிரார்த்தனையின் மகத்துவம் அதிகரிக்கிறது. எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் எனத் தோன்றும்போது உண்மையில் சரணாகதி நடக்கிறது. அதனால் பகவானின் அழிக்கும் ரூபம் பக்தர்களுக்கு நலன் அளிப்பதற்காகவே வெளிப்படுகிறது!

4.    வரக்கூடிய காலத்தில் மூன்றாவது உலகயுத்தம்,
இயற்கைப் பேராபத்துகள் மற்றும் நோய்கள் ரூபத்தில்
பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் ரூபம் பூமியில் வெளிப்பட உள்ளது!

பல மகான்கள், தீர்க்கதரிசிகள், ஜோதிட நிபுணர்கள் மற்றும் நாடிபடிவ வாசிப்பாளர்கள் வருடம் 2020 முதல் வருடம் 2025 வரையுள்ள காலத்தில் நடக்கக்கூடிய மனிதகுல பேரழிவு பற்றி முன்பே கூறியுள்ளனர். 2020 முதல் இத்தகைய காலம் ஆரம்பித்துள்ளது என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். மேலும் வரக்கூடிய காலம் இதைக் காட்டிலும் மிக பயங்கரமானதாக இருக்கும். இந்தக் காலத்தில் மூன்றாம் உலகயுத்தம், இயற்கைப் பேராபத்துகள் மற்றும் நோய்கள் ஆகிய ரூபத்தில் எங்கும் ருத்ரதாண்டவம் நடைபெறும். இவை எல்லாம் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் ரூபத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

5.    பகவானின் அழிக்கும் ரூபத்திற்கு முன்னால்
செல்லுபடியாகும் உபாயம் சரணாகதி மற்றும் பிரார்த்தனை மட்டுமே!

பகவான் நரசிம்மர் மற்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோரின் மேற்கூறிய இரு நிகழ்வுகளின் மூலம் நமக்கெல்லாம், ‘பகவானின் அழிக்கும் ரூபத்திற்கு முன்னால் நிற்கக் கூடிய சக்தி தேவாதி தேவர்களுக்கே இல்லை எனும்போது நம்மைப் போன்ற சாதாரண மக்கள் எம்மாத்திரம்?’ பகவானுக்கும் இது தெரியும் ஆதலால் இதற்கான உபாயத்தை அவரே தந்துள்ளார், அதுதான் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’! பக்தவத்ஸலனான பகவான் தன்னை சரணடைந்தவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அதனால், வரக்கூடிய காலத்தில் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்வதற்கு நமக்கெல்லாம் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’யே மிக உத்தம உபாயமாகும்.’

–    திரு. விநாயக் ஷான்பாக், கும்டா, கர்நாடகா. (6.10.2021)

6.    மகரிஷி நாடிபடிவங்களின் மூலம் ‘பராத்பர குரு
டாக்டர் ஆடவலே அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரம்’
எனக் கூறியுள்ளதால் அவரிடமுள்ள காக்கும்-அழிக்கும்
சக்தியால் ஹிந்து ராஷ்ட்ரத்தின் ஸ்தாபம் நடைபெறப் போதல்

6 அ. ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமான பராத்பர குரு டாக்டர் ஆடவலே!

‘பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் இன்றைய கலியுகத்தில் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமாக இருப்பதால் (ப. பூ. ஸ்ரீகிருஷ்ண கர்வே குருஜி, ப. பூ. (மறைந்த) அச்வமேதயாஜி நானா (நாராயண்) காளே குருஜி (பார்ஷி, சோலாப்பூர்), ப.பூ. (மறைந்த)ஆபா (நரசிம்ஹா)உபாத்யே (புனே) ஆகிய மகான்கள் மற்றும் ஸப்தரிஷி (நாடி வாசிப்பு எண்.80 (30.5.2016) மற்றும் எண். 81 (31.5.2016) அதோடு ப்ருகு ரிஷி (நாடிபடிவ வாசிப்பு எண்.3 (11.9.2018) ஆகிய ஜீவநாடி வாசிப்புகளின் மூலமாக அவ்வப்பொழுது ஸாதகர்களுக்கு இவ்விஷயம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரத்தில், கலியுகத்தில் மனிதகுலம் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு விஷ்ணு தத்துவமே செயல்பாட்டில் உள்ளது. ஸ்ரீவிஷ்ணுவிடம் உள்ள காக்கும் மற்றும் அழிக்கும் ஆகிய இரு தத்துவங்களும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடம் உள்ளன.

6 ஆ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தொடர்பில் உள்ள எல்லா
ஸாதகர்களும் அவரின் காக்கும் தத்துவத்தின் அனுபூதியை அனுபவித்துள்ளனர்;
அவரிடமுள்ள இந்த தத்துவம் சைதன்ய ரூபத்தில் உலகெங்கும் பரவி
மெதுமெதுவாக ஹிந்து ராஷ்ட்ரத்தின் திசை நோக்கி அடியெடுத்து வைக்கும்!

பிரார்த்தனை : ‘ஹே ஸ்ரீமந்நாராயண ஸ்வரூப குருதேவா, ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் தத்துவத்தை எதிர்கொள்ளும் சக்தி எங்களிடம் இல்லை. ஸாதகர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களின் தாளடிகளில் சரணடைந்துள்ளோம். நாங்கள் ஸ்ரீவிஷ்ணுவின் அழிக்கும் தத்துவத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும் மற்றும் அதன் மூலம் எங்களின் ஸாதனை நன்கு நடக்க வேண்டும் என்பதே உங்களின் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’

–    திரு. விநாயக் ஷான்பாக், கும்டா, கர்நாடகா. (6.10.2021)

 

Leave a Comment