1. நவராத்திரியின் எட்டாவது நாள்
வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘மகாகெளரி’ ரூபம்!
ஸ்வேதே வ்ருஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதரா சுசி: |
மகாகெளரி சுபம் தத்யான்மகாதேவப்ரமோததா ||
அர்த்தம் : மங்கலமான ரிஷபத்தின் மீது அமர்ந்தவளும் பவித்ர வெள்ளை நிற வஸ்திரத்தை அணிந்தவளும் பகவான் சங்கரனுக்கு ஆனந்தத்தை அளிப்பைவளுமான தேவி மகாகெளரி தாயே எனக்கு நலத்தை அருள்வாயாக!
1 அ. சிவனே பதியாக அமைய வேண்டும் என்பதற்காக தேவி மேற்கொண்ட
கடும் தவத்தால் அவளது உடல் கருத்துப் போதல், சிவன் பிரசன்னமாகி அவள் மீது
பவித்ரமான கங்காஜலத்தை தெளித்து ஸ்நானம் செய்வித்தல், அப்போது தேவியின்
கௌர ரூபம் வெளிப்பட்டு அவளின் நாமம் ‘மகாகெளரி’ என வழங்கப்படுதல்
நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். இந்த ரூபத்தில் அவள் எட்டு வயது சிறுமியாக கருதப்படுகிறாள். அவள் உடுத்தியுள்ள வஸ்திரம் வெண்மை நிறம் கொண்டது. தேவிக்கு நான்கு கரங்கள் உள்ளன, வ்ருஷபமே வாகனமாக உள்ளது. தேவி சிறு வயதிலிருந்தே சிவனை தன் பதியாக வரித்திருந்தாள். ‘சிவனே பதியாக அமைய வேண்டும்’ என்பதற்காக பார்வதியாக அவள் கடும் தவம் புரிந்தாள். அதனால் அவள் சரீரம் கருத்தது. தேவியின் தவத்தால் சிவன் மகிழ்ச்சி அடைந்தார். அவர் கங்கையின் பவித்ர ஜலத்தால் அவளுக்கு அபிஷேகம் செய்தார். அதன் மூலம் தேவியின் சரீரம் சுத்த வெண்மை நிறம் ஆனது. ஸம்ஸ்க்ருத மொழியில் சுத்த வெண்மை நிறம் ‘கௌர வர்ணம்’ என கூறப்படுகிறது. அதனால் தேவிக்கு ‘மகாகெளரி’ என்ற நாமம் ஏற்பட்டது.
1 ஆ. பிரார்த்தனை
‘ஹே மகாகெளரி, எப்படி நீ பக்தர்களின் தாபம், பாவம் மற்றும் ஸஞ்சிதத்தை அழிக்கின்றாயோ அதேபோல் ஸாதகர்களாகிய எங்களின் தாபம், பாவம் மற்றும் ஸஞ்சிதத்தையும் கூட அழித்து விடு. ஹே தேவி, பராத்பர குரு டாக்டர் ஆடவலே எங்களுக்கு கற்றுத் தந்தபடி எங்கள் மூலமாக ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை நடைபெறட்டும்; எங்களின் உள்ளும் புறமும் தூய்மையாகி எங்கள் மூலமாக ஸாதனை நடக்கட்டும்’, என்பதே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை. ‘ஹே தேவி, எங்களை எப்போதும் ஸத் விஷயங்களில் இருக்கும்படி செய், நாங்கள் நிர்மலமான மனதுடன் குருசேவை செய்யும்படி செய்’, இதுவே உந்தன் சரணங்களில் எங்களின் பிரார்த்தனை.’
– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (25.9.2021)
2. ஆதிசக்தியின் யோகமாயா ஸ்வரூபம் மற்றும் அவள் செய்த அசுர வதம்!
2 அ. அஷ்டமியில் வெளிப்பட்ட யோகமாயையை
புரிந்து கொள்வது கடினம், அதற்கும் மாயையே காரணம்!
‘அஷ்டமி திதி என்றாலே நமக்கு ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ணாஷ்டமி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் துர்காஷ்டமியே நினைவுக்கு வரும். இதில் சிறப்பு என்னவென்றால் அஷ்டமி திதி ஆதிசக்திக்கு மிகவும் நெருக்கமான திதி. கிருஷ்ணாஷ்டமி அன்று ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்புக்கு முன்பு ஆதிசக்தி தானே ‘யோகமாயா’வாக பிறக்கிறாள். யோகமாயா என்றால் ஜகஜ்ஜனனி ஆகும்! அவளின் மாயை முடிவில்லாதது, வர்ணிக்க இயலாதது. இந்த யோகமாயாவே ஸ்ரீவிஷ்ணுவின் ராமாவதாரத்தின் போது சீதையாக வந்து ராவணனின் கைதியாக இருந்தாள். சாக்ஷாத் ஆதிசக்தியானவள் ஒரு அசுரனின் கைதியாக இருப்பதற்கு என்ன காரணம்? அவளின் இந்த மாயையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
2 ஆ. ஆதிசக்தி யோகமாயையின் உதவியால்
ஸ்ரீவிஷ்ணு மது, கைடப அசுரர்களை வதம் செய்தல்!
2 ஆ 1. ஸ்ரீவிஷ்ணுவின் காதிலுள்ள அழுக்கிலிருந்து மது, கைடபன் ஆகிய ராக்ஷசர்கள் உருவாகுதல், அவர்கள் தேவி மந்திரத்தை உச்சரித்து கடும் தவம் செய்தல், தேவி அவர்கள் முன் தோன்றியபோது தங்கள் இச்சைப்படி மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைப் பெறுதல் : பூமி உருவாவதற்கு முன்பு பாற்கடலில் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் மீது ஸ்ரீவிஷ்ணு சயனித்திருந்தார். அவரின் காதுகளிலிருந்து அழுக்காக இரு ராக்ஷசர்களான மது, கைடபர்கள் வெளிப்படுகிறார்கள். அப்போது ஸ்ரீவிஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தார். மதுவும் கைடபனும் பாற்கடலில் இருந்து கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதிசக்தியின் வாக்மந்திரம் கேட்கலாயிற்று. அவர்கள் அந்த மந்திரத்தை உச்சாரணம் செய்ய ஆரம்பித்தனர். பல வருடங்கள் அவர்கள் கடும் தவம் புரிந்தனர். தேவி மகிழ்ச்சி அடைந்து அவர்கள் இச்சைப்படி மரணம் ஏற்படும் என்ற வரத்தை அருளினாள்.
2 ஆ 2. மதுவும் கைடபனும் பிரம்மாவை விழுங்க முயற்சித்தல், பிரம்மதேவன் ஸ்ரீவிஷ்ணுவை பிரார்த்தனை செய்தபோது அவர் இந்த அசுரர்களுடன் ஐந்தாயிரம் வருடங்கள் யுத்தம் செய்தார். ஆனால் தேவியிடமிருந்து அவர்கள் இச்சாமரணம் என்ற வரத்தைப் பெற்றிருந்ததால் விஷ்ணுவால் அவர்களைக் கொல்ல இயலாமல் போதல் : தேவியிடமிருந்து இச்சைப்படி மரணம் என்ற வரதானத்தைப் பெற்றதால் அவ்விரு அசுரர்களும் பிரம்மலோகத்திற்கு சென்று பிரம்மதேவனை விழுங்க முற்பட்டனர். பிரம்மதேவன் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று பிரார்த்தித்தார். விஷ்ணு மது, கைடப அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த யுத்தம் ஐந்தாயிரம் வருடங்கள் நடந்தன. ஸ்ரீமகாவிஷ்ணு சோர்வடைந்தார், ஆனால் அந்த அசுரர்களோ சிறிதும் சோர்வடையவில்லை. அதனால் ஸ்ரீவிஷ்ணு யுத்தத்திற்கிடையே ஒய்வு என அறிவித்தார். ‘இவ்விரு அசுரர்களை ஏன் வதம் செய்ய முடியவில்லை’ என்று விஷ்ணு சிந்தித்தார். அப்போது ஸ்ரீவிஷ்ணுவிற்கு ‘தேவி இவ்விரு அசுரர்களுக்கு அவர்கள் இச்சைப்படி மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் தந்துள்ளாள்’ என்பது கவனத்திற்கு வந்தது. அதனால் ஸ்ரீவிஷ்ணு ஆதிசக்தியை ஸ்மரித்தார்.
2 ஆ 3. மது, கைடபர்களை வதம் செய்வதற்குரிய உபாயம் என்ன என்று ஸ்ரீவிஷ்ணு ஆதிசக்தியிடம் வினவுதல் : ஆதிசக்தி அந்த அசுரர்களுக்கு வரதானம் தந்ததால் அசுரர்களை மாய்ப்பதற்குரிய உபாயத்தையும் ஆதிசக்தியிடமே கேட்க வேண்டும். பகவான் விஷ்ணு தீன உணர்வுடன் அழகிய வார்த்தைகளாக் தேவியை ஸ்துதி செய்கிறார். தேவி மிகவும் மகிழ்ந்து கூறுகிறாள், ‘ஹே ஸ்ரீஹரி, யுத்த சமயத்தில் நான் ‘யோகமாயா’ ரூபத்தில் அவ்விரு அசுரர்களையும் என்னை மோகிக்குமாறு செய்கிறேன். அந்த சமயத்தில் நீங்கள் உரிய உபாயத்தை மேற்கொள்ளுங்கள்’.
2 ஆ 4. ஆதிசக்தி இரு அசுரர்களை மோகிக்க வைத்ததைப் பார்த்துவிட்டு ஸ்ரீவிஷ்ணு யுத்தத்தை நிறுத்திவிட்டு அவ்விரு அசுரர்களையும் ஏதாவது வரத்தை தன்னிடம் கேட்குமாறு கூறுதல் : ஸ்ரீவிஷ்ணு மற்றும் இவ்விரு அசுரர்கள் இடையே மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தின்போது ஒருக்கணம் ஸ்ரீமஹாவிஷ்ணு அதீத காருண்யத்துடன் ஆதிசக்தியை நோக்கினார். அப்போது தேவி சிரித்தாள். அவள் யுத்தபூமிக்கு வந்து அவ்விரு அசுரர்களையும் மோகிக்க வைத்தாள். அவளின் சுந்தர ரூபத்தைப் பார்த்து இரு அசுரர்களும் ஸ்தம்பித்துப் போயினர். ‘இருவரும் மோகத்தில் ஆழ்ந்துள்ளனர்’ என்பது தெரிந்தவுடன் ஸ்ரீவிஷ்ணு யுத்தத்தை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்துக் கூறினார், ‘இன்றுவரை உங்களைப் போன்ற சூராதி வீரர்களை நான் பார்க்கவில்லை. உங்களைக் கண்டு நான் மகிழ்கிறேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்’.
2 ஆ 5. மது, கைடப அசுரர்கள் அஹங்காரத்துடன் ஸ்ரீவிஷ்ணுவிடம் வரம் கேட்குமாறு கூறியவுடன் ஸ்ரீவிஷ்ணு ‘உங்களின் மரணம் என் கையால் ஏற்பட வேண்டும்’ என்ற வரத்தைப் பெறுதல் : ஆச்சர்யம் என்னவென்றால் யோகமாயையால் மோகத்திற்குள்ளான இரு அசுரர்களும் ஸ்ரீவிஷ்ணுவிடம் கூறினார்கள், ‘விஷ்ணு, உன்னால் எங்களுக்கு என்ன தர முடியும்? நாங்கள் யாசகர்கள் இல்லை, யாசகம் தருபவர்கள். நாங்கள் உனக்கு வரம் தருகிறோம். நீ எங்களுடன் இவ்வளவு வருடங்கள் யுத்தம் புரிந்தாய் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. உனக்கு என்ன வேண்டுமோ கேள்’. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீவிஷ்ணு, ‘நீங்கள் வரம் தர வேண்டுமென்றால் ‘உங்களின் மரணம் என் கையால் ஏற்பட வேண்டும்’ என்ற வரத்தைத் தாருங்கள்’ என்றார்.
2 ஆ 6. யோகமாயையின் அருளால் ஸ்ரீவிஷ்ணு அதி பலசாலிகளான மது, கைடப அசுரர்களை வதம் செய்தல் : மது, கைடபர்களுக்கு தாங்கள் மாட்டிக் கொண்டு விட்டோம் என்பது புரிந்தது. அவர்களுக்கு துக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கும் பாற்கடலே சூழ்ந்திருந்தது. பூமி எங்குமே தென்படவில்லை. மது மற்றும் கைடபர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் கூறினர், ‘ஹே ஜனார்த்தனா, இதற்கு முன் நீ எங்களுக்கு வரம் தருவதாகக் கூறினாய். அதன்படி எங்கு நீர் இல்லையோ அத்தகைய இடத்தில் உன் கையால் மரணம் ஏற்பட வேண்டும்’ என்று கூறினர். உடனே ஸ்ரீவிஷ்ணு விராட ஸ்வரூபத்தை எடுத்தார். ஸ்ரீவிஷ்ணுவின் ரூபம் பாற்கடலைக் காட்டிலும் விசாலமாக மாறியது. மது கைடப அசுரர்களின் தலைகளை தன் மடியில் இருத்தி சுதர்சன சக்கரத்தால் அவர்களை வதம் செய்தார். இது போன்று யோகமாயையின் அருளால் ஸ்ரீவிஷ்ணு அதி பலசாலிகளான மது கைடப அசுரர்களை வீழ்த்தினார்.
‘யோகமாயாவான ஆதிசக்தி எவ்வாறு காரியங்களை செய்கிறாள் மற்றும் சம்பூர்ண சிருஷ்டி சக்கரம் அவளின் அருளால் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்த்தோம். ஜகஜ்ஜனனி, மஹாமாயா, தைத்யஸம்ஹாரிணி, த்ரிபுவனநாயிகா ஸ்ரீதுர்கா தேவி போற்றி, போற்றி!’
– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (25.9.2021)
3. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ஸாதகர்களின் மூலமாக நடத்துவித்த ஆதிசக்தியின் உபாசனை!
3 அ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸனாதனின் ஆச்ரமத்தில்
மகான்கள் மற்றும் ஸத்குரு ஆகியோர் மூலம் ‘ஸமஷ்டி நலன் மற்றும்
ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன’த்திற்காக தேவி சம்பந்தமான பல யக்ஞங்களை
நடத்துவித்து ஸாதகர்கள் மனங்களில் தேவி மீது பக்தி ஏற்பட செய்தல்
‘ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபனம் ஆனதிலிருந்து பராத்பர குருதேவர் டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்கள் மூலமாக குருக்ருபாயோகப்படி ஸாதனை நடக்கும்படி செய்தார். குருதேவர் கூறியபடி ஸாதனை செய்து இன்றுவரை 1,328 ஸாதகர்கள் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டுள்ளனர் மற்றும் 114 ஸாதகர்கள் மகான் நிலையை அடைந்துள்ளனர். கடந்த 5-6 ஆண்டுகளில் குருதேவர் மகான் மற்றும் ஸத்குரு ஆகியோர் மூலமாக ஸமஷ்டி நலன் மற்றும் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திர்காக பல யாக-யக்ஞாதிகளை நடத்துவித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் ராம்நாதி, கோவாவில் உள்ள ஸனாதனின் ஆச்ரமத்தில் தேவி சம்பந்தமான பல யாகங்கள் இன்றுவரை நடந்து வருகின்றன. அதில் சண்டிகா, ராஜமாதங்கி ஹோமம், பகளாமுகி ஹோமம், சாமுண்டா ஹோமம், ப்ரத்யங்கிரா ஹோமம் ஆகியவை மிக முக்கியமானவை. குருதேவர் ஆச்ரமத்தில் இந்த எல்லா யாகங்களையும் நடத்துவிப்பதால் ஸாதகர்களின் மனங்களில் தேவி மீது அத்யந்த ஆன்மீக உணர்வு நிர்மாணமாயுள்ளது. தேவியின் மீது அன்பு அதிகரித்துள்ளது. சுருக்கமாக, குருதேவர் இவற்றின் மூலமாக ஸாதகர்களின் தேவி உபாசனை நடக்கும்படி செய்துள்ளார்.
3 ஆ. 2019-ல் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால்
கர்நாடகத்தின் ஸ்ரீ வித்யாசௌடேஸ்வரி தேவி ராம்நாதி ஆச்ரமத்திற்கு
எழுந்தருளுதல் மற்றும் ஸாதகர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குதல்
ஸ்ரீ வித்யாசௌடேஸ்வரி தேவி
இன்றுவரை ஆச்ரமத்தில் வசிக்கும் மற்றும் பிரசார காரியங்களில் ஈடுபடும் ஸாதகர்கள் அனைவருக்கும் தேவி சம்பந்தமான அனுபூதிகள் ஏற்பட்டுள்ளன மற்றும் ஹோமாக்னியில் தேவியின் தரிசனமும் கிடைத்துள்ளது. 2019-ல் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் கர்நாடகத்தின் ஸ்ரீ வித்யாசௌடேஸ்வரி தேவி ராம்நாதி ஆச்ரமத்திற்கு எழுந்தருளினார் மற்றும் ஸாதகர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். ஸாதகர்களாகிய நம் மூலமாக பல வகைகளில் தேவி உபாசனை நடக்கும்படி செய்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களில் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அது குறைவே.
யா தேவி ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||
– ஸ்ரீதுர்காஸப்தசதி, அத்யாயம் 5, ஸ்லோகம் 65
அர்த்தம் : எந்த தேவி எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை ரூபமாக வீற்றிருக்கிறாளோ அந்த தேவியை நான் மும்முறை நமஸ்கரிக்கிறேன்.’
– திரு. விநாயக் ஷான்பாக், பெங்களூரு. (25.9.2021)