1. நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட,
பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ‘காத்யாயனி’ ரூபம்!
சந்த்ரஹாஸோஜ்ஜ்வலகரா சார்தூலவரவாஹனா |
காத்யாயனீ சுபம் தத்யாதேவி தானவகாதினி ||
அர்த்தம் : சந்திரனை நோத்த காந்தியை உடையவளும் சிம்மத்தின் மீது அமர்ந்தவளும் அசுரர்களை அழிக்கும் காத்யாயனி தேவியே என்னைக் காப்பாற்று!
1 அ. மகரிஷி காத்யாயனர், ஆதிசக்தி தன் வீட்டில் மகளாக
பிறக்க வேண்டும் என கடும் தவம் புரிதல், அப்போது தேவி,
‘உரிய நேரத்தில் நான் இங்கு பிறப்பெடுப்பேன்’ என ஆசீர்வதித்தல்
மகரிஷி கத அவர்களின் புத்திரர் காத்ய ரிஷி மற்றும் காத்ய ரிஷியின் புத்திரர் மகரிஷி காத்யாயனர்! மகரிஷி காத்யாயனருக்கு தேவியே தன் மகளாக பிறக்க வேண்டும் என்ற இச்சை இருந்தது. அதற்காக அவர் ஆதிசக்தியை தியானித்து கடும் தவம் மேற்கொண்டார். மகரிஷியின் தவத்தால் மகிழ்வுற்ற ஆதிசக்தி ‘உரிய தருணம் வரும்பொழுது நான் உங்களின் வீட்டில் மகளாக பிறப்பேன்’ என ஆசீர்வதித்தாள்.
1 ஆ. மகிஷாசுரனின் தொல்லை அதிகரித்தபின்
பிரம்மா-விஷ்ணு-மகேசனின் ஒருங்கிணைந்த சக்தியாக
காத்யாயன ரிஷியின் ஆச்ரமத்தில் அவரின் மகளாக பிறத்தல்
காலப்போக்கில் மகிஷாசுரனின் தொல்லை அதிகரித்தபோது பிரம்மா, விஷ்ணு, மகேகன் ஆகியோரின் ஒருங்கிணைந்த சக்தியால் எந்த சக்திஸ்வரூபிணி உருவானாளோ அந்த சக்தியே அஸ்வினி கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று காத்யாயனர் வீட்டில் பிறந்தாள். காத்யாயன மகரிஷிக்கு மகளாகப் பிறந்ததால் அவளுக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. துர்கா, பவானி, சாமுண்டா ஆகியோர் காத்யாயனி தேவியின் ரூபங்களே. நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி தேவியின் பூஜை செய்யப்படுகிறது.
1 இ. காத்யாயனி தேவியே பயம் மற்றும் துக்கத்தை தூர ஓட்டுபவள்
1 ஈ. பிரார்த்தனை
‘ஹே தேவி காத்யாயனி, அஹங்காரத்தின் மறுரூபமாக இருந்த மகிஷாசுரனை நீ வதம் செய்தாய். அதேபோல் எங்களின் அஹம் ரூபமாக உள்ள மகிஷாசுரனையும் அழித்து விடு தாயே. அம்மா, நீயே துக்கத்தையும் பயத்தையும் போக்கும் ஆதிசக்தி. ஸாதகர்களாகிய எங்களின் எல்லா துக்கங்களையும் பயங்களையும் போக்கி விடு. ஒருமித்த மனதுடன் குருசேவை செய்வதற்கு அருள் செய். எந்த ஒரு சங்கடத்தையும் எதிர்கொள்ளும் மனோபலத்தையும் தைரியத்தையும் தா. ஹே அம்பிகே, பூமியில் இன்றும் மகிஷாசுர இயல்புடைய மக்கள் உள்ளனர்; வரக் கூடிய காலத்தில் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கி ஹிந்து ராஷ்ட்ரத்தை நீயே ஸ்தாபிக்க வேண்டும்’, இதுவே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’
– திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான். (20.09.2021)
2. மகிஷாசுரனை வதம் செய்த காத்யாயனி தேவி (ஸ்ரீ துர்காதேவி)!
2 அ. காத்யாயனி தேவி மற்றும் மகிஷாசுரனின் யுத்தம் !
2 அ 1. அசுர ராஜனான தனூச் புத்திரபிராப்திக்காக தவம் செய்தல், அவர்களின் தவத்தைக் கலைக்க தேவர்கள் செய்த முயற்சியில் கரம்பன் மரித்தல் : ஸ்ரீமத் தேவிபாகவதத்தின் ஐந்தாவது ஸ்காந்தத்தில் மகிஷாசுரனின் வதம் பற்றிய கதை வருகிறது. அசுர ராஜனான தனூச் என்பவனுக்கு கரம்பன் மற்றும் ரம்பன் என இரு புத்திரர்கள் இருந்தனர். இருவருக்கும் வம்சவிருத்தி ஏற்படவில்லை. வம்சவிருத்திக்காக இருவரும் தவம் செய்தனர். தேவர்கள் அவர்களின் தவத்தை தடுக்க செய்த முயற்சியில் கரம்பன் இறந்தான்.
2 அ 2. கரம்பனின் சகோதரனான ரம்பன் குரோதம் கொண்டு தன்னுடைய தலையை அக்னியில் சமர்ப்பிக்க முயலுதல்; ஆனால் அக்னிதேவதை அவனைத் தடுத்து அவன் இச்சைப்படி புத்திரபிராப்தி வரம் அருளுதல் : அப்போது ரம்பனுக்கு மிகவும் கோபம் உண்டாகிறது. அதீத குரோதத்துடன் தன் தலையை அக்னிதேவனுக்கு சமர்ப்பிக்க முற்படுகிறான். அந்தக் கணம் அக்னிதேவன் பிரசன்னமாகி ரம்பனை தடுத்து நிறுத்துகிறார். ரம்பன் அக்னிதேவனிடம் புத்திரபிராப்தி அருளுமாறு வேண்டுகிறான். அதோடு ‘தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களால் ஜெயிக்க முடியாத, இச்சைப்படி உருவத்தை மாற்றும் சக்தி படைத்த புத்திரர்கள் வேண்டும்’ என்றும் வேண்டுகிறான். அக்னிதேவன் கூறுகிறார், ‘எந்த சுந்தரியிடம் உனக்கு அன்பு உண்டாகிறதோ அவள் மூலமாக உனக்கு இரு புத்திரர்கள் பிறப்பார்கள்’.
2 அ 3. ரம்பன் மூலமாக மகிஷத்தின் சிதாக்னியிலிருந்து ‘மகிஷாசுரன்’ வெளிப்படுதல், கடும் தவத்தால் மகிஷாசுரன் பிரம்மதேவனை மகிழ்ச்சி அடைய வைத்தல் மற்றும் ‘எனக்கு ஒரு பெண் மூலமாக மரணம் ஏற்படட்டும்’ என்று வரம் கோருதல் : பிறகு அசுர ராஜனான ரம்பனுக்கு ஒரு மகிஷத்தைப் பார்த்து காமம் ஏற்படுகிறது. அவனின் வீர்யத்தால் அந்த மகிஷம் கர்ப்பமாகிறது. அந்த மகிஷத்தைப் பார்த்து காமத்துடன் ஒரு ஆண் மகிஷம் நெருங்குகிறது. ரம்பனுக்கும் அந்த ஆண் மகிஷத்துக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ரம்பன் இறக்கிறான். ரம்பனின் சிதையில் அந்த பெண் மகிஷம் சதியாக பாய்கிறது. அப்போது அந்த சிதாக்னியிலிருந்து ‘மகிஷாசுரன்’ வெளிப்படுகிறான். சிறிது நேரத்தில் அந்த சிதாக்னியிலிருந்து ரம்பன் ‘ரக்தபீஜன்’ என்ற அசுரனாக வெளிப்படுகிறான். எல்லா அசுரர்களும் சேர்ந்து மகிஷாசுரனை ராஜாவாக அறிவிக்கின்றனர். பிறகு மகிஷாசுரன் கடும் தவம் புரிந்து பிரம்மதேவனை மகிழ்ச்சி அடைய செய்கிறான். பிரம்மதேவனிடம், ‘தேவர்கள், அசுரர்கள் மற்றும் ஆண்கள் கையால் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. ஒரு பெண்ணால் எனக்கு மரணம் ஏற்படட்டும்’ என்று வரம் கோருகிறான். மகிஷாசுரன் நினைக்கிறான், ‘பெண் பலமற்றவள்;உலகில் என்னோடு யுத்தம் செய்யக்கூடிய பெண் ஒருத்தி கூட இல்லை’.
2 அ 4. பிரம்மதேவன் அளித்த வரதானத்தால் மகிஷாசுரனை யாராலும் வெல்ல முடியவில்லை, அதனால் எல்லா தேவதைகளின் சக்தி ஒருங்கிணைந்து ஒரு பெண்ணாக உருவெடுத்தல் : பிரம்மதேவனிடமிருந்து வரம் வாங்கிய பின்னர் மகிஷாசுரன் மேலும் அஹங்காரம் கொள்கிறான். அவன் எல்லோரையும் இம்சிக்கிறான். தேவர்களையும் யுத்தத்தில் தோற்கடிக்கிறான். சம்பூர்ண தேவலோகம் அவன் கைகளுக்கு வருகிறது. அதனால் அனைத்து தேவர்களும் ஒரு குகையில் ஒளிந்து மறைந்து வாழ்கின்றனர். பிரம்மதேவனின் வரத்தால் மகாவிஷ்ணு மற்றும் சிவனாலும் கூட மகிஷாசுரனுடன் யுத்தம் செய்து அவனை வதம் செய்ய முடியவில்லை. இறுதியில் எல்லா தேவர்களும் பிரம்மதேவன் சிவபெருமானுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்று அங்கு மகாவிஷ்ணுவிடம் ஏதாவது உபாயம் கூறும்படி முறையிடுகின்றனர். அப்போது மகாவிஷ்ணு கூறுகிறார், ‘எல்லா தேவதைகளின் ஒருங்கிணைந்த தேஜ தத்துவத்தால் உருவான ஒரு சக்தியே மகிஷாசுரனை வெல்ல முடியும்’. காத்யாயன மகரிஷி ஆச்ரமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவர்களின் தேஜ தத்துவங்களும் ஒருங்கிணைந்த ஒரு தேவி உருவாகிறாள். எல்லா தேவதைகளும் தங்களின் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களை அந்த தேவிக்கு வழங்குகின்றனர். அஷ்டாதசா, அதாவது பதினெட்டு கரங்களை உடைய இந்த தேவி சிம்மத்தின் மீது ஆரோஹணித்து வருகிறாள்.
2 அ 5. தேவி ‘நான் மகிஷாசுரனை வதம் செய்வேன்’ எனக் கூறி எல்லா தேவர்களையும் ஆசுவாசப்படுத்துகிறாள்; பிறகு தேவியவள் மகிஷாசுரனை யுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறாள் : எல்லா தேவர்களும் அந்த தேவியை ஸ்துதி செய்கிறார்கள். அந்த ஸ்துதியை செவிமடுத்து தேவி, ‘நான் மகிஷாசுரனை வதம் செய்வேன்’ எனக் கூறி எல்லா தேவர்களையும் ஆசுவாசப்படுத்துகிறாள். அதன் பிறகு தேவி பெரிதாக சிரிக்கிறாள். தேவியின் சிரிப்பு சப்தம் எவ்வளவு பெரிதாக இருந்தது என்றால் ‘ஒரு க்ஷணத்தில் சம்பூர்ண உலகமும் கிடுகிடுத்தது. அதனால் சமுத்திரத்தில் பேரலைகள் உருவாகியது, மேரு மலை அசைந்து கொடுத்தது, அசுரர்கள் நடுங்கினர். ‘இது யாருடைய சிரிப்பு’ என தெரிந்து வருவதற்காக மகிஷாசுரன் ஒரு தூதனை அனுப்புகிறான். தூதன் மகிஷாசுரனிடம் திரும்பி சென்று சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள அழகிய சுந்தரியைப் பற்றி வர்ணிக்கிறான். இதைக் கேட்டவுடன் மகிஷாசுரனுக்கு அந்த சுந்தரியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது; ஆனால் தேவியோ அவனை யுத்தத்திற்கு அழைக்கிறாள். மகிஷாசுரன் தேவியை கைது செய்து கொண்டு வருமாறு ஒவ்வொருவராக அசுர வீரர்களை அனுப்புகிறான்; ஆனால் தேவி அவர்கள் அனைவரையும் வதம் செய்து விடுகிறாள். அசுர சைன்னியங்களை தேவியின் வாகனமான சிம்மம் வதம் செய்கிறது. இறுதியில் மகிஷாசுரனே யுத்தபூமிக்கு வரும்படி ஆகிறது.
2 அ 6. இறுதியில் காத்யாயனி தேவி சுதர்சன சக்கரத்தை உபயோகித்து மகிஷாசுரனின் தலையைக் கொய்து அவனை மாய்த்தல் : அசுரர்கள் எந்த அளவு பராக்கிரமசாலிகளோ அந்த அளவு சிறுமதி கொண்டவர்கள். மகிஷாசுரன் தேவியுடன் யுத்தம் செய்ய புறப்படுகிறான்; ஆனால் தேவியைப் பார்த்த பின் ஸ்தம்பித்துப் போகிறான். அவன் அனைத்து அஸ்திர-சஸ்திரங்களைத் தியாகம் செய்து தேவியிடம் சரணடைகிறான். அவன் தேவியிடம் கூறுகிறான், ‘என்னை உன் பதியாக ஏற்றுக் கொள். நான் உனக்கு சேவை செய்கிறேன்’. அப்போது தேவி கூறுகிறாள், ‘பரமேஸ்வரனான பரமபுருஷனைத் தவிர்த்து வேறு எவரும் புருஷர் இல்லை. எந்த பரமேஸ்வரன் இந்த உலகைப் படைத்தாரோ அவரை நான் எப்போதும் தியானிக்கிறேன். எனக்கு எல்லாம் அவரே.’ மகிஷாசுரன் தேவியிடம் ‘ஒரு பெண் பலசாலியான புருஷனை ஏன் மணக்க வேண்டும்’ என்பது பற்றி பல விஷயங்களைக் கூறுகிறான். ஆனால் தேவி மறுக்கிறாள். இறுதியில் மகிஷாசுரன் தேவியுடன் யுத்தம் செய்கிறான்; தேவி தன் சுதர்சன சக்கரத்தால் அவனது தலையைத் துண்டித்து வதம் செய்கிறாள். தேவர்களும் ரிஷிகளும் மிகுந்த ஆனந்தத்துடன் அவளைத் துதிக்கின்றனர்.
3. இன்றைய காலத்திலும் அசுரத் தன்மையுடைய மக்கள் இருத்தல்
இன்றும் பூமியில் மகிஷாசுரனைப் போல் நடந்து கொள்ளும் பலர் உள்ளனர். இத்தகைய தீய இயல்புடையவர்கள் பெண்கள் மீது சொல்லொணாத் தீமையை இழைத்து அவர்களைத் துன்புறுத்துகின்றனர். ‘பெண்களை அவமதிப்பது, அவர்களை துச்சமாக நினைப்பது, அவர்களை வெறும் சுகபோகப் பொருளாக மதிப்பது’ என்பது போன்ற அசுர இயல்பு மகிஷாசுரனுடையது. அதனால் ஆதிசக்தி அவனை வதம் செய்தாள். (தகவல் : ஸ்ரீமத்தேவிபாகவதம், ஸ்காந்தம் 5)
‘ஹே காத்யாயனி தேவி, இன்று உலகில் மகிஷாசுர இயல்புடைய எல்லோரையும் நீயே வதம் செய் மற்றும் அவர்களை நிரந்தரமாக பாதாளத்திற்கு அனுப்பி விடு. ஹே தேவி, உன்னை விட்டால் எங்களுக்கு வேறு புகல் ஏது தாயே? ஹே அம்பா, ஜகதம்பே, உன்னுடைய மணித்வீபத்தை விட்டு விட்டு மீண்டும் இங்கே வெளிப்படு மற்றும் மிலேச்சர்களை (நல்ல ஸம்ஸ்காரங்கள் இல்லாதவர்) அழித்து விடு.’
– திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான். (20.09.2021)