1. நவராத்திரியின் ஐந்தாவது நாளில் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் ரூபமான ‘ஸ்கந்தமாதா’!
ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஸ்ரிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவி ஸ்கந்தமாதா யசஸ்வினீ ||
அர்த்தம் : சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவளும் இரு கரங்களில் தாமரைகளை ஏந்தியவளுமான யசஸ்வினீ தேவியாகிய ஸ்கந்தமாதா என்னைக் காப்பாற்றட்டும்!
ம்
1 அ. குழந்தை முருகனை மடியில் இருத்திய ஆதிசக்தி, ஞானதாயினியாக
விளங்குவதால் ‘ஸ்கந்தமாதா’ ஞானஸ்வரூபமாக விளங்குதல்
தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் ‘ஸ்கந்தன்’ ஆகும். ‘ஸ்கந்த மாதா என்றால் ‘முருகனின் அன்னை’ என்று பொருள். நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் ‘ஸ்கந்தமாதா’ ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். இந்த ரூபத்தில் அம்பாள் ஞானதாயினியாக திகழ்கிறாள். இந்த ரூபத்தில் ஸ்கந்தமாதா குழந்தை முருகனுக்கு தன் ஸ்வரூபத்தின் ஞானத்தை வழங்குவதால் ஞானஸ்வரூபிணி ஆகிறாள்.
1 ஆ. பிரார்த்தனை
‘ஹே ஸ்கந்தமாதா, நாங்கள் ஞானமற்றவர்கள். ஸாதகர்களாகிய எங்களுக்கு ஞானம் வழங்கும் ‘ஞானமாதா’ நீதான். ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமான குருதேவரை மகிழ்ச்சி அடையச் செய்யும் ரகசியத்தை எங்களுக்குக் கற்றுத் தா. அம்மா ஜகதம்பா, குருவருளைப் பெறுவதற்கு நாங்கள் எம்மாதிரியான ஸாதனை செய்ய வேண்டும் என்ற ஞானத்தைத் தா. ஹே ஸ்கந்தமாதா, ஹே ஞானாம்பிகே, நீ எங்களுக்கு எப்போதும் நித்தியமான ஆன்மீக ஞானத்தை வழங்கு, எது சரி எது தவறு என்ற ஞானத்தை வழங்கு, இஷ்டம்-இஷ்டமில்லாதது பற்றிய ஞானத்தைத் தா மற்றும் ஸன்ஸ்க்ருதி, ஸன்ஸ்க்ருதி அல்லாத விக்ருதி பற்றிய ஞானத்தை வழங்கு! ஹே ஞானதாயினியான தாயே, எங்களிடமுள்ள அஞ்ஞானம் என்ற இருளைப் போக்கடிக்கும் உன்னை எல்லா ஸாதகர்களாகிய நாங்கள் சரணடைகிறோம்.’
– திரு. விநாயக் ஷான்பாக், (ஆன்மீக நிலை 66%) ஜெய்பூர், ராஜஸ்தான். (17.9.2021)
2. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியத்தில் தேவி ஸ்கந்தமாதாவின் பங்கு (ஸரஸ்வதி கதை)
2 அ. ஞானசக்தியால் தீயனவற்றை நல்லனவாக மாற்ற முடியும்,
அதேபோல் உலக நலனுக்காக தீயனவற்றை பிறப்பிக்கவும் முடியும்
‘ஆதிசக்தியின் ஸ்கந்தமாதா ரூபம் ஞானதாயினி ரூபமாகும். குருவிடமிருந்து சிஷ்யனுக்கு ஞானம் ப்ரவாஹமாக பாய்கிறது. இந்த ஞான ப்ரவாஹம் மாத்ரு ரூபமாக உள்ளது. இந்த மாத்ரு ஸ்வரூபமான ஞான ப்ரவாஹம் ‘ஸரஸ்வதி’ என கூறப்படுகிறது. ‘இச்சாசக்தி, க்ரியாசக்தி மற்றும் ஞானசக்தி’ ஆகியன ஆதிசக்தியின் ஸ்வரூபம் ஆகும். ஞானசக்தியின் மகத்துவம் அசாதாரணமானது. ஞானசக்தியானது வால்யா என்ற வேடனை வால்மீகி மகரிஷியாக மாற்ற வல்லது, கௌசிக ராஜாவை விச்வாமித்ர மகரிஷியாக மாற்ற வல்லது. எப்படி ஞானசக்தியால் தீயனவற்றை நல்லனவாக உருமாற்ற முடியுமோ அதேபோல் உலக நலனுக்காக தீயனவற்றையும் பிறப்பிக்க முடியும். இந்த மர்மமே ஆதிசக்தியின் ‘வாக்தேவி’ ஸ்வரூபமாகும்! ‘இது எப்படி சாத்தியம்?’, என்று தெரிந்து கொள்ள நாம் ஸ்ரீராமனின் த்ரேதா யுகத்திற்கு செல்ல வேண்டும்.
3. ஸ்ரீராமனின் ராஜ்யாபிஷேக சமயம் ஆதிசக்தியானவள்,
மந்தரையின் மூலம் கைகேயியின் நல்ல இயல்பை மாற்றி
அதன் மூலம் ஸ்ரீராமனின் ராஜ்யாபிஷேகத்தை நடக்க விடாமல்
செய்து வனவாசத்திற்கு அனுப்புதல்
3 அ. அயோத்தியில் ஸ்ரீராமனின் ராஜ்யாபிஷேகத்தை
முன்னிட்டு ஆனந்த சூழல் ஏற்படுதல்
ராஜா தசரதன் அதிக ஆனந்தத்துடன் ஸ்ரீராமனின் ராஜ்யாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். ராஜ்யாபிஷேகத்திற்கு முன்தினம் வரை அயோத்தியில் எங்கும் ஆனந்த சூழல் நிலவியது. ஆனால் ஸ்ரீராமனுக்கோ ‘என்னுடைய ராஜ்யாபிஷேகம் நடக்கப் போவதில்லை. ராவணன் சீதையை அபகரிக்கப் போகிறான். அதனால் ராவணனுடன் யுத்தம் செய்து அவனை வதம் செய்யப் போகிறேன்’, என்பது தெரியும்.
3 ஆ. ஆதிசக்தி, ஸரஸ்வதி ரூபத்தில் மந்தரையிடம் பிரவேசித்தல்
மற்றும் கைகேயியின் நல்ல புத்தியை தீய புத்தியாக மாற்றுதல்
முன்பே தீர்மானிக்கப்பட்டபடி ஆதிசக்தி, ஸரஸ்வதி ரூபத்தில் மந்தரையினுள் பிரவேசிக்கிறாள். அயோத்தியின் ஆனந்த சூழலைப் பார்த்துவிட்டு மந்தரை அதன் காரணத்தை வினவுகிறாள். அப்போது அவளுக்கு மறுநாள் ஸ்ரீராமனின் ராஜ்யாபிஷேகம் நடக்கப் போகிற செய்தி தெரிகிறது. அப்போது மந்தரை கைகேயியிடம் கூறுகிறாள், ‘ராமனுக்கு ராஜ்ஜியம் கிடைத்தால் பரதனால் எப்போதுமே சிம்மாசனத்தில் அமர முடியாது. ‘பரதன் ராஜசிம்மாசனத்தில் அமர என்ன செய்ய வேண்டும்?’ என்ற யுக்தியை மந்தரை கைகேயியிடம் கூறுகிறாள். அதுவரை நல்ல புத்தியுடன் இருந்த கைகேயியிடம் தேவி ஸரஸ்வதி தீய புத்தியை உண்டாக்குகிறாள். இறுதியில் கைகேயியின் அடத்தால் ராஜா தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்புகிறான். வாக்தேவி ஸரஸ்வதியால் அயோத்தியின் ஆனந்த சூழ்நிலை முற்றிலும் மாறி விடுகிறது.
இந்நிகழ்வின் மூலம் பகவானின் தெய்வீக லீலை செயல்பட ஆரம்பித்தது. பகவான் தன் லீலையை ஆதிசக்தியின் உதவியால் நடத்துவிக்கிறார். அதனால் ஆதிசக்தியை ‘மஹாமாயா’ எனவும் கூறுவர்.
(தகவல் : அத்யாத்ம ராமாயணம்)
4. வருடம் 1999-ல் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
‘மூன்றாவது உலக யுத்தம் நடக்கும் மற்றும் அதன் பிறகு
ஹிந்து ராஷ்ட்ரம் ஸ்தாபனம் ஆகும்’, எனக் கூறுதல்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பே ஸாதகர்களிடம் கூறினார், ‘வருங்காலத்தில் மிகப் பயங்கர மூன்றாம் உலக யுத்தம் நடக்கும், அதன் பிறகு ஈச்வர ராஜ்யம் ஸ்தாபனம் ஆகும்’. குருதேவர் எப்போதும் அஸத்யத்தை பேசியதில்லை, அவர் கூறியது எப்போதும் அஸத்யம் ஆனதில்லை. வருடம் 1999 போதே குருதேவர் ஈச்வர ராஜ்யத்தைப் பற்றிய செய்தியைக் கூறியுள்ளார்!
5. இன்றைய நிலையிலும் இயற்கை ஆபத்துக்கள்
மற்றும் யுத்தம் ஆரம்பிக்கும் அறிகுறிகள் உள்ளன
தற்போதைய கலியுகத்தில் பகவானின் தர்மஸன்ஸ்தாபன காரியத்தை ஆதிசக்தியே நடத்துவிக்கிறாள். உலக மாற்றங்கள் ஏற்படும்போது உலகளவில் போராட்டங்களும் அவசியம் நடக்கின்றன. இந்த உலக போராட்டங்கள் கலியுகத்தில் உலக யுத்தமாக இயற்கை பேராபத்துகளாக நடக்கின்றன! தற்போது பல ராஷ்ட்ரங்கள், ‘கொரோனா விஷத்தொற்று என்பதே பயோலாஜிகல் யுத்தம் ‘ என்ற செய்தியைத் தருகின்றன.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால், எந்த பிரம்மாண்டம் ஆதிசக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதோ அந்த பிரம்மாண்டத்திலுள்ளது இந்த சிறு பூவுலகம். இந்த பூவுலகத்தின் மனித குலம் அந்த பராசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவளின் இச்சையில்லாமல் மனிதனால் எதுவும் செய்ய இயலாது. ‘ஹே ஜகன்மோகினி, மஹாமாயாஸ்வரூபிணி,விஸ்வதாரிணி, பவபயஹாரிணி மற்றும் ஞானப்ரதாயினி தேவி, ஸாதகர்களாகிய எங்கள் மீது உந்தன் அருள் எப்போதும் இருக்கட்டும்’, என்பதே உந்தன் சரணங்களில் செய்யும் பிரார்த்தனை.’
6. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்களின்
மூலமாக நடத்துவித்த ஆதிசக்தியின் உபாசனை!
6 அ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் ஸனாதனின்
சில ஸாதகர்களுக்கு சூட்சுமத்தில் உயர் லோகங்களின் ஞானம் கிடைத்தல்
‘குருதேவர், ஞானதாயினி ஆதிசக்தியின் ஞானரூபமான ஆசீர்வாதம் ஸாதகர்களுக்கு கிடைக்கும்படி செய்துள்ளார். அதனால் பிரம்மாண்டத்தின் பல்வேறு லோகங்களிலுள்ள ஞானம் பூமியில் உள்ள சர்வ சாமான்ய ஸாதகர்களுக்கும் கிடைக்கிறது. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் கடந்த பல வருடங்களாக ஸநாதனின் சில ஸாதகர்களுக்கு பிரம்மாண்டத்தின் உயர் லோகங்களின் ஞானம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஞானம் யார் மூலமாக கிடைத்தாலும் ஞானத்தின் முக்கிய ஊற்றுக்கண் ஈச்வரனே ஆகும். பூமியில் உள்ள ஸநாதனின் சர்வ சாதாரண ஸாதகர்களுக்கு அசாதாரணமான ஞானம், ஞானதாயினி ஆதிசக்தியின் அருளால் மட்டுமே கிடைக்கிறது. ஸநாதனின் ஸாதகர்களுக்கு இந்த ஆசீர்வாதம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் கிடைக்கிறது.
6 ஆ. ஸனாதன் ஸன்ஸ்தாவில் ‘கவிதைகள் இயற்றும், ராஷ்ட்ர மற்றும் தர்மம்
சம்பந்தமாக ஆழ்ந்து பயின்று உரையாற்றும் மற்றும் ஸாதனையின் பல்வேறு
அங்கங்கள் பற்றி கட்டுரைகள் எழுதும் பல ஸாதகர்கள் உள்ளனர்;
காரணம் அவர்களுக்குபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்,
ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் அருள் ஆசீர்வாதம் கிடைக்கும்படி செய்துள்ளார்
ஒருபுறம் சூட்சும ஞானத்தைப் பெறும் ஸாதகர்கள், குருதேவரின் ஆணைப்படி நூல்களை தொகுக்கும் ஸாதகர்கள், ராஷ்ட்ர மற்றும் தர்மம் பற்றி நன்கு பயின்று உரையாற்றும் ஸாதகர்கள் என்றால் மறுபுறம் ஸனாதன் ஸன்ஸ்தாவின் சிறு வயது முதல் எல்லா வயது வரம்பில் உள்ள ஸாதகர்கள் ஆகிய அனைவருக்கும் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் உள்ளது. ஸனாதன் ஸன்ஸ்தாவில் ‘கவிதைகள் இயற்றும், அனுபூதிகளைப் பற்றி கட்டுரைகள் எழுதும் மற்றும் ஸாதனையின் பல்வேறு அங்கங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதும்’ ஆயிரக்கணக்கான ஸாதகர்கள் தயாராகி விட்டனர். காளிதாசருக்கு தேவியின் அருள் கிடைத்த பிறகே அவர் மூலமாக தெய்வீக எழுத்துகள் உருவாயிற்று. ஆனால் ஸநாதனின் சர்வ சாமான்ய ஸாதகர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே குருதேவர் அவர்களுக்கு தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும்படி செய்துள்ளார்.
‘இப்பேற்பட்ட மகான் குரு நமக்குக் கிடைத்துள்ளார்’, என்பதற்காக நாம் அனைத்து ஸாதகர்களும் குருதேவரின் சரணங்களில் கோடி முறை நன்றி தெரிவித்துக் கொள்ளலாம்.
யா தேவி ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸமஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||
– ஸ்ரீதுர்காஸப்தசதி, அத்யாயம் 5, ஸ்லோகம் 20
அர்த்தம் : எந்த தேவி எல்லா ஜீவராசிகளிலும் புத்தி ரூபமாக இருக்கிறாளோ அந்த தேவியை நான் மும்முறை வணங்குகிறேன்.’
– திரு. விநாயக் ஷான்பாக், (ஆன்மீக நிலை 66%) ஜெய்பூர், ராஜஸ்தான். (17.9.2021)