நவதுர்கா 3, 4 – சந்த்ரகண்டா தேவி, குஷ்மாண்டா!

1.    நவராத்திரியின் மூன்றாவது நாளில் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் ரூபமான சந்த்ரகண்டா !

     பிண்டஜப்ரவராரூடா சண்டகொபாஸ்த்ரகைர்யுதா |
     ப்ரஸாந்தம் தனுதே மஹ்யம் சந்த்ரகண்டேதி விஸ்ருதா ||

அர்த்தம் : சிம்ம வாகனத்தில் அமர்ந்து பயங்கர ஆயுதங்களை ஏந்திய சந்த்ரகண்டா என்ற பிரசித்த தேவியானவள் எனக்கு அருள் புரியட்டும்!

 

சந்த்ரகண்டா தேவி : தேவி சந்த்ரகண்டா, பார்வதியின் திருமணமான ரூபம். பார்வதி தேவி சிவனை மணந்த பின்பு தன் நெற்றியில் சந்திரனை சூடிக் கொண்டாள். பார்வதியின் இந்த சந்த்ரகண்டா ரூபம் எப்போதும் அஸ்திர-சஸ்திரங்களுடன் உள்ளது. பத்து திருக்கரங்கள் உடையவள். அவளின் காந்தி சுவர்ணமயமானது. சந்த்ரகண்டா தேவியிடம் உள்ள கண்டாமணியிலிருந்து எழும் சண்ட த்வனி அசுரர்களை நடுநடுங்கச் செய்கிறது. சந்த்ரகண்டா தேவி பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் துக்கங்களைக் களைவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறாள். பூத, பிரேத, பிசாசுகளால் பக்தர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை தேவி தூர ஒட்டுகிறாள்.

பிரார்த்தனை : ஹே சந்த்ரகண்டா தேவி, எப்படி நீ பக்தர்களின் வாழ்வில் பூத, பிரேத, பிசாசுகளால் ஏற்படும் தொல்லைகளை உடனே தூர ஓட்டுகிறாயோ அப்படியே ஸாதகர்களாகிய எங்களுக்கு தீய சக்திகளால் ஏற்படும் தொல்லைகளையும் தூர ஒட்டி எங்களை ரக்ஷிப்பாய். ஹே பவபயஹாரிணி தேவி, நாங்கள் எப்போதும் குருசேவை செய்யும்படியாக அருள் செய். எப்போது எங்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் தலை தூக்குகிறதோ அப்போது உடனடியாக நாங்கள் அதை உணரும்படி செய், சைதன்ய பலத்துடன் அதை வெற்றி கொள்ளும் சக்தியைத் தா’, இதுவே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.

2.    நவராத்திரியின் நான்காவது நாளில் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் ரூபமான குஷ்மாண்டா !

     ஸுராசம்பூர்ண கலசம் ருதிராப்லுதமேவ ச |
     ததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே ||

அர்த்தம் : சுராபானம் மற்றும் ரத்தம் நிரம்பிய கலசத்தை இரு கைகளிலும் ஏந்திய ஹே பகவதி, கூஷ்மாண்டா தேவியே, எனக்கு நல்லதை செய்வாயாக!

குஷ்மாண்டா : ‘கூஷ்ம’ என்றால் புன்முறுவல்! ‘குஷ்மாண்டா’ (குறிப்பு 1) என்றால் தன்னுடைய வெறும் புன்முறுவலால் பிரம்மாண்டத்தை உற்பத்தி செய்தவள்! எப்போது படைப்புகளே இல்லையோ, எங்கும் அந்தகார இருள் கவ்விக் கிடந்ததோ அந்த வேளையில் ‘குஷ்மாண்டா’ தேவி தன்னுடைய புன்முறுவலால் மட்டுமே இந்த பிரம்மாண்டத்தைப் படைத்தாள். ‘குஷ்மாண்டா’ ஆதிசக்தியின் ஆதி ரூபமாகும். சூர்யமண்டலத்தில் உள்ள சக்தி ‘குஷ்மாண்டாவே’!

(ஆதாரம் : நவதுர்கா, கீதாப்ரேஸ், கோரக்பூர்)

‘குஷ்மாண்டா தேவி எட்டு திருக்கரங்களை உடையவள். ஸம்ஸ்க்ருத மொழியில் வெள்ளை பூசணியை குஷ்மாண்டா என்பார்கள். குஷ்மாண்டா தேவிக்கு வெள்ளைப் பூசணியின் அர்ப்பணம் மிகவும் பிரியமான ஒன்று. குஷ்மாண்டா தேவி பக்தர்களின் நோய்கள், துக்கம் ஆகியவற்றை நீக்கி ஆயுளை அதிகரிக்க செய்கிறாள்.’

குறிப்பு 1 – தேவியின் இந்த நாமத்தில் பல பாடபேதங்கள் உள்ளன.

பிரார்த்தனை : ‘ஹே குஷ்மாண்டா தேவி, நீ உன் புன்முறுவலால் மட்டுமே  ஒரு க்ஷணத்தில் பிரம்மாண்டத்தை உற்பத்தி செய்தது போல, ஹிந்து ராஷ்ட்ரத்தையும் ஸ்தாபனம் செய். ஹே தேவி, நாங்கள் உந்தன் பாதங்களை சரணடைந்துள்ளோம். ஸாதகர்களாகிய நாங்கள் குருசேவை செய்வதற்கும் ஆன்மீக பிரசாரம் செய்வதற்கும் நோயில்லாத சரீரம் தேவை. ஹே தேவி, நீ நோய், துக்கம் ஆகியவற்றை நீக்குகிறாய். நீ எங்களின் நோய்களைப் போக்கி ஒருமித்த மனத்துடன் குருசேவை செய்ய வைப்பாய். இதுவே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’

3.  பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ஸாதகர்களின் மூலமாக நடத்துவித்த ஆதிசக்தியின் உபாசனை!

3 அ. முன்பெல்லாம் ரிஷி முனிவர்களுக்கு சூட்சுமத்தை உணரும் அரிய சக்தி
இருந்ததால் அதை உபயோகித்து தெய்வங்களின் உருவ வர்ணனை செய்தல்!

‘ஆதிசக்தியின் ஸகுண ரூபமே துர்கா தேவி ஆகும்! லக்ஷம் வருடங்களுக்கு முன்பு, இன்றுள்ள நவீன உபகரணங்கள் எதுவுமே ரிஷி முனிவர்களிடம் இல்லை. ஆனாலும் அவர்களிடம் சூட்சுமத்தை உணரும் அரிய சக்தி இருந்தது. அவர்களால் தெய்வங்களின் இருப்பையும் ஈச்வர சக்தியின் செய்தியையும் உணர முடிந்தது. ரிஷி முனிவர்களுக்கு தெய்வங்களின் ஸகுண ரூபம் முதலில் ஹோமாக்னியில் தெரிந்தது. அதனால் ரிஷி முனிவர்கள் தங்களின் எழுத்துகளில் தெய்வங்களின் துல்லிய வர்ணனையை செய்துள்ளனர்.

3 ஆ. சூட்சுமத்தை அறியும் திறன் கொண்ட ஸத்குரு (குமாரி) அனுராதா வாடேகர்
முன்பாக துர்காதேவி நிற்றல் மற்றும் அவர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே
அவர்களின் வழிகாட்டுதலால் துர்க்காதேவியின் சித்திரத்தை வரைதல்!

கலியுகத்தில் விஞ்ஞானவாதம் ஆரம்பித்தது மற்றும் பல்வேறு ஸாதனங்களும் வந்தன. தெய்வங்களின் ரூபத்தை சித்திரமாக வடிக்கும் வழக்கமும் ஆரம்பமானது. அந்த வேளையில் பரம் பூஜ்ய குருதேவரின் அருளால் ஸனாதன் ஸன்ஸ்தாவிற்கு ஸத்குரு (குமாரி) அனுராதா வாடேகர் கிடைத்தார்.  அவர் சித்திரக்கலை பயின்றுள்ளார். குருவருளால் பிறகு அவருக்கு சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் திறனும் உண்டாயிற்று. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளாலும் ஸத்குரு (குமாரி) அனுராதா வாதேகரிடம் உள்ள ஆன்மீக உணர்வாலும் சாக்ஷாத் துர்காதேவி அவர் முன் நின்றார். ஸத்குரு (குமாரி) அனுராதா வாடேகர்  மூலமாக தன்னுடைய சித்திரத்தை வரையச் செய்தார். பின்பு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த சித்திரத்தை அவர் பூர்த்தி செய்தார்.

இன்றைய கலியுகத்தில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளாலும் ஸத்குரு (குமாரி) அனுராதா வாடேகர் அவர்களின் முயற்சியாலும் ஆதிசக்தியின் அதாவது துர்க்காதேவியின் ஸகுண ரூபம் சித்திரமாக மனித குலத்திற்கு கிடைத்துள்ளது. இதற்காக சம்பூர்ண மனிதகுலமும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடமும் ஸத்குரு (குமாரி) அனுராதா வாடேகர் அவர்களிடமும் எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கிறது.

யா தேவி ஸர்வபூதேஷு சாயாரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||
– ஸ்ரீதுர்காஸப்தசதி

அர்த்தம் : எந்த தேவி எல்லா ஜீவராசிகளிலும் சாயா ரூபமாக வீற்றிருக்கிறாளோ அந்த தேவியை மும்முறை நமஸ்கரிக்கிறேன்.’

–  திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான் (17.9.2021)

4.    ‘இந்த்ராக்ஷி’ ஸ்தோத்திரத்தின் மகத்துவம் மற்றும்
இன்றைய ஆபத்துக் காலத்தில் அதன் முக்கியத்துவம்!

4 அ. தக்ஷ பிரஜாபதியின் சம்மதம் இல்லாவிட்டாலும் மகாவிஷ்ணுவின்
சம்மதத்துடன் சிவன் மற்றும் சதியின் திருமணம் நடைபெறுதல்

‘ஆதிசக்தி தக்ஷனின் புதல்வியாக ‘தேவி சதி’யாக அவதரிக்கிறாள். தக்ஷனுக்கு தன் மகளின் சிவபக்தி பிடிக்கவில்லை. ஆனால் சதி சிவனையே தன் கணவனாக வரிக்கிறாள். இறுதியில் தக்ஷன் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தக்ஷனின் ஆராதனை தெய்வமான மகாவிஷ்ணுவின் சம்மதத்துடன் சிவன்-சதியின் திருமணம் நடைபெறுகிறது.

4 ஆ. தக்ஷன் நடத்தும் யாகத்தில் தேவி சதி அவமதிக்கப்படுவதால்
அவள் அந்த யாகத்தில் தன்னை ஆஹுதி ஆக்குதல்

ஒருமுறை தக்ஷன் மிகப் பெரிய யாகத்தை ஏற்பாடு செய்தான். அதை ‘தக்ஷ யக்ஞம்’ எனக் கூறுவர். தக்ஷன் யக்ஞத்திற்காக எல்லா தேவாதி தேவர்களுக்கும் அழைப்பு விடுத்தான். ஆனால் சிவன் மற்றும் சதிக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. சிவனின் விருப்பத்திற்கு மாறாக சதி அந்த யக்ஞத்திற்கு செல்கிறாள். அந்த யக்ஞத்தில் தக்ஷன் எல்லோர் முன்னிலையிலும் சிவனையும் சதியையும் அவமதிக்கிறான். அந்தக் கணத்தில் சதி தன் ஆதிசக்தி ரூபத்தை வெளிப்படுத்துகிறாள். தக்ஷனும் மற்ற தேவர்களும் தேவியின் இந்த விச்வரூபத்தைப் பார்த்து பயப்படுகின்றனர். தேவி சதி, தக்ஷனின் அந்த யாக அக்னியில் தன்னை ஆஹுதியாக அர்ப்பணிக்கிறாள்.

4 இ. சதி தன்னை ஆஹுதியாக அர்ப்பணித்தாள் என்று கேள்விப்பட்டதும்
தக்ஷன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் ஏற்பட்டது

சிவனின் இந்த கோவத்தால் முதன்முதலில் உலகில் ஜுரத்தின் உற்பத்தி ஏற்பட்டது என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.

4 ஈ. நாரத முனிவர் ஜுரத்திற்கான நிவாரணம் பற்றிக்
கேட்டபோது ஸ்ரீவிஷ்ணு, ஆதிசக்தியின் ‘இந்த்ராக்ஷி’ ரூபத்தின்
ஸ்துதிசெய்வதே அதற்கான உபாயம் எனக் கூறுதல்

ஒருமுறை நாரத முனிவர் பூமியில் சஞ்சாரம் செய்யும்போது மக்கள் நோய்களால் அவதிப்படுவதைப் பார்த்தார். வைகுண்டத்திற்கு திரும்பிய பின் நாரத முனிவர் பகவான் ஸ்ரீவிஷ்ணுவிடம் கேட்டார், ‘பகவானே, மனிதர்கள் நோய்களிலிருந்து விடுபடுவதற்கு ஏதாகிலும் உபாயம் உள்ளதா?’ அதற்கு பகவான் ஸ்ரீவிஷ்ணு விடையளித்தார், ‘இதற்கு ஒரு வழி உள்ளது. ஜுரத்தின் உற்பத்தி சிவனின் கோவத்தால் உண்டானது. ஜுரத்தைத் தணிப்பதற்கும் நோய் நிவாரணத்திற்கும் தேவையான சக்தி ஆதிசக்தியிடமே உள்ளது. மனிதர்கள் பக்தியுணர்வுடன்ஆதிசக்தியின் ‘இந்த்ராக்ஷி’ ரூபத்தின் ஸ்துதியை செய்தால் எல்லாவித ஜுரங்களும் நோய்களும் விலகும்.

4 உ. ஸ்ரீவிஷ்ணு கூறிய ஜுர நாசனத்திற்கான உபாயம்
ஸசிபுரந்தர ரிஷி மூலமாக மனிதர்களுக்கு கிடைத்தல்

ஸ்ரீவிஷ்ணு நாரதருக்கு ‘இந்த்ராக்ஷி ஸ்துதி’யைக் கூறினார். நாரதர் சூரியனுக்கும் சூரியன் இந்திரனுக்கும் அதை உபதேசித்தனர். இந்திரன் இந்த ஸ்துதியை ஸசிபுரந்தர ரிஷிக்கு உபதேசித்தான். இது போன்று ஸசிபுரந்தர ரிஷியிடமிருந்து மனிதர்களுக்கு இந்த ஸ்தோத்திரம் கிடைத்தது. இந்த்ராக்ஷியின் இந்த ஸ்துதி இன்று ‘இந்த்ராக்ஷி ஸ்தோத்திரம்’ என பிரபலமாக உள்ளது. எந்த ஒரு நோய்க்கும் அறிகுறியாக உடலில் முதலில் தெரிவது தான் ஜுரம்! இந்த்ராக்ஷி ஸ்தோத்திரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா வகை ஜுரங்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

4 ஊ. கொரோனா விஷத்தொற்றின் முக்கிய அறிகுறி ஜுரம் ஆகும்,
ஆதிசக்தியானவள் தன் பக்தர்களுக்கு ‘இந்த்ராக்ஷி ஸ்தோத்திர’ ரூபத்தில்
தெய்வீக தடுப்பூசி கிடைக்குமாறு செய்தல்

ஜனவரி 2020 முதல் சம்பூர்ண உலகத்தில் ‘கொரானா’ பெயருள்ள விஷத்தொற்று ஆரம்பமானது. அதிலிருந்து கிட்டத்தட்ட 20 மாதங்களில் உலகெங்கும் 50 லக்ஷம் மக்கள் இறந்து விட்டனர் மற்றும் உலகில் 22 கோடிக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறி ஜுரமாகும். இந்த ஜுரத்தை தூர விரட்டும் சக்தி ஆதிசக்தியிடம் மட்டுமே உள்ளது. ஆதிசக்தியானவள் பக்தர்களுக்கு ‘இந்த்ராக்ஷி ஸ்தோத்திர’ ரூபத்தில் தெய்வீக தடுப்பூசி கிடைக்குமாறு செய்துள்ளாள். இதற்கு ஸநாதனின் ஸாதகர்களாகிய நாம் அனைவரும் பகவான் ஸ்ரீவிஷ்ணு மற்றும் ஆதிசக்தியின் சரணங்களில் கோடி கோடி நன்றி கலந்த நமஸ்காரம் செய்கிறோம்.’

–   திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான். (17.9.2021)

 

 

 

Leave a Comment