ப்ரதமம் சைலபுத்ரீதி த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ |
த்ருதீயம் சந்த்ரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்தகம் ||
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயநீதி ச |
ஸப்தமம் காலராத்ரிஷ்ச மகாகெளரிதி சாஷ்டமம் ||
நவமம் ஸித்திதாத்ரீ ச நவதுர்கா: ப்ரகீர்த்திதா: |
உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா ||
அர்த்தம் : முதலாவது சைலபுத்ரீ, இரண்டாவது ப்ரஹ்மசாரிணீ, மூன்றாவது சந்த்ரகண்டா, நான்காவது கூஷ்மாண்டா, ஐந்தாவது ஸ்கந்தமாதா, ஆறாவது காத்யாயனீ, ஏழாவது காலராத்ரீ, எட்டாவது மகாகௌரீ மற்றும் ஒன்பதாவது ஸித்திதாத்ரீ ஆகிய இந்த நவதுர்காக்களின் நாமாக்களை சாக்ஷாத் பிரம்மதேவன் கூறியுள்ளார்.
நவராத்திரி 9 நாட்கள் தேவியின் இந்த 9 ரூபங்கள் பூஜை செய்யப்படுகின்றன.
1. நவராத்திரி முதல் நாளில் ஆதிசக்தி
தேவியிடமிருந்து வெளிப்படும் சைலபுத்ரீ ரூபம்!
வந்தே வாஞ்சிதலாபாய சந்த்ரார்த க்ருதசேகராம் |
வ்ருஷபாரூடாம் சூலதராம் சைலபுத்ரீம் யசஸ்விநீம் ||
அர்த்தம் : ‘நெற்றியில் பிறைசந்திரனை அணிந்தவளும், வ்ருஷபத்தின் மீது அமர்ந்தவளும், திரிசூலத்தை ஏந்தியவளும், வைபவசாலியுமான அத்தகைய சைலபுத்ரீ தேவி என் இச்சைகளை பூர்த்தி செய்யட்டும்’, என்று அவளை வணங்குகிறேன்.
1 அ. ஹிமவானின் மகளாகப் பிறந்ததால் ‘சைலபுத்ரீ’
என அழைக்கப்படுதல், எல்லா தேவர்களின் அஹம்பாவத்தை
அழித்ததால் ‘ஹைமவதி’ எனவும் கூறப்படுதல்
பக்தர்களின் மனங்களில் உள்ள ஆசைகளை பூர்த்தி செய்பவளும், சந்திரகலையை தலையில் சூடியவளும், காளையின் மீது அமர்ந்தவளும், திரிசூலத்தை ஏந்தியவளும் மற்றும் புகழைப் பெற்றுத் தருபவளுமான இந்த சைலபுத்ரீ தேவியின் சரணங்களில் கோடி கோடி நமஸ்காரங்கள்! ‘சைலம்’ என்றால் மலை. தக்ஷன் யாகம் செய்த வேளையில் தேவி சதியானவள் தன் ‘ஆதிசக்தி’ ஸ்வரூபத்தை வெளிப்படுத்தி தன் அவதாரத்தை நிறைவு செய்கிறாள். அதன் பிறகு ஆதிசக்தி மலையரசனின் மகளாக தோன்றுகிறாள். அவளின் இந்த ரூபமே ‘சைலபுத்ரீ’யாக பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் தேவி வ்ருஷபத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள். அவளின் ஒரு கையில் திரிசூலமும் மற்றொரு கையில் தாமரையும் உள்ளன. சைலபுத்ரீ பார்வதியை ‘ஹைமவதி’ என்றும் அழைப்பார்கள். ஒருமுறை தேவர்கள் அஹங்காரம் மிகுந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் சைலபுத்ரீ தேவியானவள் அவர்களின் கர்வபங்கத்தை ஏற்படுத்தி அஹங்காரம் குறையுமாறு செய்தாள்.
1 ஆ. பிரார்த்தனை
‘ஹே தேவி சைலபுத்ரீ, எவ்வாறு நீ ஹிமவானின் மகளாக அவதரித்து ஒருமித்த மனதுடன் தாய்-தந்தையருக்கு சேவை செய்தாயோ , சங்கரனிடம் எவ்வாறு அனந்யபக்தி பூண்டாயோ அவ்வாறே ஸாதகர்களாகிய நாங்கள் குருசேவை (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சேவை) செய்வதற்கு மற்றும் குருதேவரிடம் அனந்யபக்தி புரிவதற்கும் ஆசீர்வாதம் நல்குவாய். ஹே தேவி ஹைமவதீ, எப்படி நீ தேவர்களின் அஹங்காரம் ஒன்றுமில்லாமல் போக செய்தாயோ அப்படியே எங்களின் அஹங்காரத்தையும் அழித்து விடு. எங்களின் மூலமாக ‘அஹமில்லாத’ குருசேவை நடப்பதற்கு நீயே எங்களின் மூலமாக அஹம் நிர்மூல ஸாதனை நடக்கும்படி செய்’, என்பதே உன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’
– திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான். (16.9.2021)
2. பகவான் சிவனின் சக்தியே ‘ஆதிசக்தி’ ஆகும்!
‘ஆதிசக்தி என்பவள் யார்?’ என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுவாமி போலேபாபாஜி (வடக்கு பாரதத்தின் ஒரு மகான்) அவர்கள் கூறியுள்ள ஒரு கதையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதிசக்தி சம்பந்தமாக பல நூல்களைப் படித்தாலும் நம் கவனத்திற்கு வராத விஷயம் இந்த ஒரு நிகழ்வின் மூலமாக நம் கவனத்தை ஈர்க்கிறது.
2 அ. சாக்தமதத்தை கண்டனம் செய்ய முற்பட்ட ஆதிசங்கரரிடம்
தேவி, கண்டனம் செய்ய முடியாது என்பதை உணர்த்துதல்
2 அ 1. சாக்தமதத்தை கண்டனம் செய்ய காஷ்மீர் சென்ற ஆதிசங்கரருக்கு
மிகுந்த சோர்வால் பேசக் கூட சக்தி இல்லாமல் போதல்
சுவாமி போலேபாபாஜி கூறுகிறார், ‘ஒருமுறை பகவத்பாத சங்கரர் சாக்தமதத்தை கண்டனம் செய்வதற்காக காஷ்மீரத்திற்கு செல்கிறார். ‘சாக்தமதத்தைக் காட்டிலும் அத்வைத சித்தாந்தம் எவ்வளவு மேன்மையானது?’ என்பது பற்றி அங்கு விளக்க இருந்தார். ஆனால் காஷ்மீரத்தை அடையும்போதே மிகவும் சோர்ந்து போனார். எழவோ, உட்காரவோ அல்லது பேசவோ கூட அவரிடம் சக்தியில்லை.
2 அ 2. ஒரு பெண் குழந்தை வடிவில் வந்த தேவி, சங்கரரிடம் ‘உன்னால் சாக்தமத
கண்டனமும் அத்வைத சித்தாந்த மண்டனமும் செய்ய முடியுமா?’ என்று கேட்பது
சிறிது நேரத்தில் தெய்வீக அழகு நிரம்பிய ஒரு 12 வயது சிறுமி அவரின் அருகில் வந்து காதருகில் கேட்டாள், ‘ஹே சங்கரா, உன்னால் சாக்தமத கண்டனமும் அத்வைத சித்தாந்த மண்டனமும் செய்ய முடியுமா?’ சன்னமான குரலில் ஆதிசங்கரர் அவளிடம், ‘அம்மா, இதற்காகத்தான் நான் காஷ்மீரத்திற்கு வந்தேன்; ஆனால் இப்போது எனக்கு பேசக் கூட சக்தியில்லை. எப்போது என் உடலில் சக்தி ஏற்படுகிறதோ அப்போதே நான் இது விஷயமாக பேச முடியும். சக்தியில்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.’
2 அ 3. தேவி, ‘சக்தியில்லாமல் உன்னால் சாக்தமத கண்டனமும் அத்வைத
சித்தாந்த மண்டனமும் செய்ய முடியுமா?’ என்று கேட்டவுடன் ஆதிசங்கரர்
ஆனந்தத்துடன் தேவியை சரணடைந்து அங்கிருந்து கிளம்புதல்
அப்போது அக்குழந்தை மெல்லிய முறுவலுடன் அவரைக் கேட்டாள், ‘ஹே வித்வோத்தமா, உன்னிடம் சக்தி இல்லை என்றால், உன்னால் சாக்தமத கண்டனமும் அத்வைத சித்தாந்த மண்டனமும் எவ்வாறு செய்ய முடியும்? நான் சிவனின் சக்தியான ‘சிவா’. சிவன் அசைவற்றவர்; சக்தியில்லாமல் சிவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. சிவனை உணர்வதற்கும் ‘சிவன் என்பவர் யார்?’ என்பது அனைவருக்கும் தெரிவதற்கும் சிவன் சக்தியை உருவாக்கினார். ஹே சங்கரா, என்னுடைய உற்பத்தி சிவனிடமிருந்து ஏற்பட்டதால் உன்னால் என்னை எவ்வாறு கண்டனம் செய்ய முடியும்? ‘கண்டனம் ஆகட்டும், மண்டனம் ஆகட்டும்’ எதுவாக இருந்தாலும் அதை நானே செய்ய முடியும். எந்த சக்தியில்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியவில்லையோ அதை கண்டனமும் உன்னால் செய்ய முடியாது.’ தேவியின் இந்த சொற்களைக் கேட்க ஆதிசங்கரருக்கு அளவிட முடியாத ஆனந்தம் ஏற்பட்டது. அந்த க்ஷணமே அவர் தேவியின் திருவடிகளை பற்றினார். பின்பு காஷ்மீரத்திலிருந்து புறப்பட்டார்.
2 ஆ. ‘ஆதிசக்தி’யே சச்சிதானந்த பரப்ரம்மஸ்வரூபினி ஆனதால்
அவளை சரணடைந்து பக்தியுணர்வுடன் அவளின் நித்ய உபாசனை
செய்வது’ என்பதையே நாம் செய்ய முடியும்
சுவாமி போலே பாபா கூறுகிறார், ‘சக்தி என்பவள் யார்? எங்கிருந்து வந்தாள்? யார் அவளை உருவாக்கியது? எதற்காக உருவாக்கினார்கள்? யாருக்காக உருவாக்கினார்கள்? எங்கு செய்தார்கள்? எப்படி செய்தார்கள்?’ ஆகிய எல்லா கேள்விகளுக்கும் விடை காண நினைப்பது வீணான செயல். ‘சக்தி அநாதி காலத்திலிருந்தே இருக்கிறாள், அனந்த காலம் வரை இருப்பாள்’, என்பதே ஒரே ஸத்யம். உலக உற்பத்தியிலிருந்து என்னென்ன காரியங்கள் நடக்கிறனவோ அவை எல்லாம் அவளால் நடக்கின்றன. அப்பேற்பட்ட இந்த ஆதிசக்தி சச்சிதானந்த பரப்ரம்மஸ்வரூபிணி ஆவாள். அவளை சரணடைந்து அவளின் நித்ய உபாசனை செய்வதே நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.’
2 இ. சக்தியில்லாமல் சிவனால் இயங்க முடியாது என்பதுபோல்
குருவருள் இல்லாமல் ஒரு ஸாதகனால் எதையும் செய்ய இயலாது,
ஸ்ரீகுருவருளால் மட்டுமே சைதன்ய சக்தி மூலமாக காரியங்கள் நடத்தல்
ஸநாதனின் ஸாதகர்களுக்கு ஸாதனையும் இதைப் போன்றதே. ஸநாதனின் மூன்று குருமார்களின் அதாவது ‘சச்சிதானந்த பரப்ரம்மஸ்வரூப பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே, ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா நீலேஷ் ஸிங்க்பால் மற்றும் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் ஆகியோரின் அருள் கிடைப்பது’ என்பதே ஸனாதன் ஸாதகர்களுக்கு சக்தி ஆகும். குருவருள் இல்லாமல் ஸாதகர்களால் எதையும் செய்ய இயலாது. குருவருள் என்ற சக்தியே ஸாதகர்கள் மூலமாக அனைத்தையும் நடத்துவிக்கின்றன. ‘குருவருள் என்பது என்ன?’ என்பதை யாராலும் வர்ணிக்க முடியாது. அந்த குருவருள் ரூபமான சக்தி எல்லா ஸாதகர்கள் மூலமாக காரியங்களை நடத்துவிக்கிறது’ என்பதே உண்மை! குருவருளாகிய சக்தி கிடைப்பதற்கு முன்பு நம்முடைய நிலை என்ன என்பதையும் ஸாதகர்கள் ஓரளவு உணர்ந்துள்ளனர்.
ஸனாதன் ஸாதகர்களுக்கிடையே ‘சைதன்யசக்தி’ ரூபத்தில் அகண்டமாக வியாபித்துள்ள ஸநாதனின் மூன்று குருமார்களுக்கும் மும்முறை வந்தனம்!’
3. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ஸாதகர்களின் ஸாதனையின் ஆரம்பத்தில் குலதேவியின்
உபாசனையை செய்வித்து அவர்கள் மூலமாக
ஆதிசக்தியின் உபாசனை நடக்குமாறு செய்தல்
‘ஸனாதன் ஸன்ஸ்தா மூலமாக ஸாதகர்கள் ஸாதனை செய்ய ஆரம்பித்த பின்னர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் முதலில் ஸாதகர்களிடம் அவரவர் குலதேவியின் உபாசனையை செய்யுமாறு கூறினார். அதோடு எல்லோர் மூலமாகவும் குலதேவியின் நாமஜபம் நடக்குமாறு செய்தார். குலதேவியின் உபாசனை என்பது சாக்ஷாத் ஆதிசக்தியின் உபாசனை ஆகும்! ஸாதனையின் ஆரம்ப நிலையில் குருதேவர் ஸாதகர்களாகிய நம் மூலமாக ‘குலதேவி உபாசனை, நாமஸ்மரணம் மற்றும் குலாசாரம்’ ஆகிய அனைத்தையும் நடத்துவித்தார். தேவி ஆதிசக்தியும் ஸாதகர்களுக்கு அளப்பரிய கருணையை வாரி வழங்கியுள்ளாள். ஸாதகர்களுக்கு ஸாதனையின் ஆரம்ப நிலையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தேவி தூர விலக்கியுள்ளாள். ஸாதகர்களாகிய நம் மூலமாக ஆதிசக்தியின் உபாசனையை நடத்துவித்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களில் எவ்வளவு நன்றி சமர்ப்பணம் செய்தாலும் அது குறைவே.
யா தேவி ஸர்வ பூதேஷு விஷ்ணுமாயேதி ஸன்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||
– தந்த்ரோக்த தேவிசூக்தம், ஸ்லோகம் 6
அர்த்தம் : ‘எல்லா ஜீவன்களிலும் யார் ‘விஷ்ணுமாயா’ ரூபத்தில் தெரியப்படுகிறாளோ அந்த தேவிக்கு மும்முறை நமஸ்காரம் செய்கிறேன்.’
– திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான். (16.9.2021)