ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 10

பாதகமான காலங்களில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது குறித்த வழிகாட்டலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
பாதகமான காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

      2. பாதகமான காலங்களில் குடும்பத்தை தயார்நிலைப்படுத்துதல்

                  2 அ. வீடு பற்றிய முடிவுகள்

2 அ 1. முடிந்தவரை, புதிய வீடு அல்லது குடியிருப்பை வாங்க வேண்டாம்; அதற்கு பதிலாக, தற்போதைய வீட்டில் அல்லது வாடகை வீட்டில் தொடர்ந்து இருக்கவும்.

அ.  நிலநடுக்கம் அல்லது நிலச்சரிவு ஏற்பட்டால் வீடு சேதமடையக்கூடும். இதன் விளைவாக, புதிய வீட்டை வாங்குவதற்கு முதலீடு செய்யப்பட்ட பணம் வீணாகலாம். எனவே, முடிந்தவரை, புதிய வீடு அல்லது பிளாட் வாங்குவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, தற்போதைய வீட்டிலோ அல்லது வாடகை வீட்டிலோ அல்லது ஒரு ஃப்ளாட்டில் தொடர்ந்து வாழுங்கள்.

ஆ. சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு புதிய வீடு அல்லது ஒரு ஃப்ளாட் வாங்குவது அவசியம் என்றால், ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

இ. ஃப்ளாட் வாங்குவது முற்றிலும் அவசியமானால், 3 வது மாடிக்கு மேல் பிளாட் வாங்குவதைத் தவிர்க்கவும். காரணம் – பூகம்பம் ஏற்பட்டால், வெளியேற்றம் 3 வது மாடி வரை எளிதாக இருக்கும்.

ஈ. ஒருவரின் ஃப்ளாட் 3 வது மாடிக்கு மேல் இருந்தால், அவர் வேறு எங்காவது பொருத்தமான ஃப்ளாட் வாங்க யோசிக்க வேண்டும்.

2 அ 2. தற்போதைய வீட்டில் பழுது பார்க்க வேண்டி இருந்தால் அல்லது சில பழுதுபார்க்கும் பணிகள் முழுமையடையவில்லை என்றால், அதை இப்போதே செய்து முடிக்கவும்

தற்போதைய வீட்டில் பழுது பார்க்க வேண்டி இருந்தால் அல்லது சில கட்டமைப்பு சேதம் போன்றவை இருந்தால், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளின் போது பாதகமான நேரங்களில் வீடு இடிந்து விழக்கூடும். பாதகமான நேரங்களில், அதை சரிசெய்வது கடினமாக இருக்கலாம். எனவே, இப்போது நேரத்தை செலவழித்து வீட்டை சரி செய்வது புத்திசாலித்தனம்.

2 அ 3. தற்போதைய வீட்டை விரிவாக்குவதையோ அல்லது அழகுப்படுத்துவதையோ தவிர்க்கவும்

பாதகமான காலங்களில் ஒரு வீடு சேதமடையக்கூடும். அதன் விரிவாக்கம் அல்லது அழகுபடுத்தலுக்கு செலவழிக்கப்பட்ட பணம் வீணாகலாம். எனவே, வீட்டை விரிவாக்குவது அல்லது அழகுபடுத்துவது பற்றி பாதகமான காலங்களுக்குப் பிறகு சிந்திக்கலாம்.

2 அ 4. கிராமத்தில் உங்களுக்கு வீடு இருந்தால், அதை வாழக்கூடிய நிலையில் வைத்திருங்கள்

வரவிருக்கும் காலங்களில், 3 ஆம் உலகப் போர், பயங்கரவாதம் போன்ற நிகழ்வுகளின்போது கிராமங்களை விட நகரங்கள் அதிகம் பாதிக்கப்படும், அப்பொழுது, கிராமத்து வீட்டுக்கு மாற வேண்டியிருக்கலாம். எனவே, கிராமத்தில் வீடு வைத்திருப்பவர்கள் அதை வாழக்கூடிய நிலையில் வைத்திருப்பது நல்லது.

2 அ 5. நகரங்களில் வசிப்பவர்கள் மற்றும் கிராமத்தில் சொந்தமாக நிலம் அல்லது வீடு இல்லாதவர்கள், முடிந்தால் எதிர்காலத்தில் தங்குவதைக் கருத்தில் கொண்டு கிராமத்தில் வீடு வாங்க வேண்டும்.

2 அ 6. படிப்பு, வேலை போன்றவற்றிற்காக வெளிநாடு சென்ற குடும்ப உறுப்பினர்களை, முடிந்தால், இந்தியாவுக்குத் திரும்ப அழைக்க வேண்டும்.

இந்தியா ஒரு புனித பூமி. வெளிநாடுகளில் ரஜ-தம அதிகமாக உள்ளது; எனவே, வரவிருக்கும் பாதகமான காலங்களில், அவர்கள் இந்தியாவை விட அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தவிர, உலகப் போர் தொடங்கியவுடன், பாதுகாப்பாக இந்தியாவுக்குத் திரும்புவதும் கடினம்.

2 அ 7. முதியவர்கள் தங்களுக்குப் பிறகு தங்கள் உறவினர்களிடையே சொத்து தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக தங்கள் ‘உயிலை’ தயார் செய்ய வேண்டும்.

3. பாதகமான காலங்களை எதிர்கொள்ள
நிதி அளவில் தயார்நிலையில் இருத்தல்

3 அ. தற்போதைய வருமானம் மற்றும்
சேமிப்புகளின் பொருளாதார பயன்பாட்டின் நோக்கம்

1.      பாதகமான நேரங்களில் பணவீக்கத்தை எதிர்கொள்ள

2.      சமூக அர்ப்பணிப்பாக துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல்

3.      தேசத்திற்கான கடமையாக பாதகமான நேரங்களில் தேசத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்குதல்

இரண்டாம் உலகப் போரின்போது, பலர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் வேண்டுகோளின் பேரில் ‘ஆசாத் ஹிந்த் ஃபெளஜ்’க்கு பணம், தங்க நகைகள் போன்றவற்றை வழங்கினர். பாதகமான காலங்களில் தேசம் கடுமையான நிதி கட்டுப்பாடுகளைச் சுமக்க வேண்டியிருக்கும் (போர் உபகரணங்கள் உற்பத்தி போன்றவை அப்போது மிகவும் அவசியம்). இத்தகைய நிலைமைகளின்போது, தேசத்திற்கான நன்கொடை நமது தேசிய கடமையின் ஒரு அங்கமாக மாறும்.

3 அ 1. பணத்தை முதலீடு செய்யும்போது, பின்வரும் குறிப்புகளை பயிலவும் 

பல வங்கி மோசடிகள் இன்று அம்பலமாகி வருகின்றன. உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க, பின்வரும் மாற்று வழிகளைப் பற்றி சிந்தியுங்கள். பணத்தை முதலீடு செய்யும் போது, பொருளாதாரக் கொள்கை கூறுவது போல் – அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள் (மறைமுக அர்த்தம்: ஒரு வங்கியில் பணத்தை முதலீடு செய்து அனைத்தையும் இழப்பதற்கு பதிலாக, அதன் பாதுகாப்பிற்காக பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்).

3 அ 2. வங்கிகள் தொடர்பான பரிவர்த்தனைகள்

3 அ 2 அ. உங்கள் பணத்தை பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யவும்

1.      தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, வங்கி திவால்நிலைக்கு சென்றாலும், உங்கள் பணத்தை இழக்க வாய்ப்பில்லை; உங்கள் பரிவர்த்தனைகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன, அதாவது, திரும்பப் பெறும் தொகையின் அளவில் கட்டுப்பாடு. மாறாக, தனியார் அல்லது கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் இல்லை; எனவே, அத்தகைய வங்கி திவால்நிலைக்குச் சென்றால், வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.

2.      ஏதேனும் வங்கி திவாலாகும் விளிம்பில் இருந்தால், உங்கள் சேமிப்பு அனைத்தையும் அந்த வங்கியில் இழப்பதைத் தவிர்க்க, உங்கள் பகுதியில் உள்ள பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணத்தை வைத்திருங்கள். ரூ. 5 லட்சம் வரை வைப்புத்தொகைக்கு காப்பீட்டு வசதி உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒரு வைப்புத்தொகையாளர் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.

3 ஆ. மற்ற குறிப்புக்கள்

1. அனைத்து வங்கிக் கணக்குகளிலும் ஒரு நியமனத்தை (nominee) வைத்திருங்கள்.

2. வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் திரும்பப் பெறுவது போன்ற பரிவர்த்தனைகள் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

3 ஆ 1. தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களில் முதலீடு செய்யுங்கள்.

பாதகமான நேரங்களில், வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு வரம்புகள் இருக்கலாம்; ஆனால் உடலில் அணியும் தங்கம், வெள்ளி ஆபரணங்களை சில சமயங்களில் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம்.

யாராவது தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்ய விரும்பினால், ஆபரணங்களாக வாங்க வேண்டாம்; அதற்கு பதிலாக, தூய தங்கக் கம்பிகள் அல்லது நாணயங்களைத் தேர்ந்தெடுங்கள்; இதனால், ஆபரணங்களின் மீது போடப்படும் செய்கூலி கட்டணம் சேமிக்கப்படும்.

3 ஆ 2. வீட்டிற்கு ஒரு கிணறு தோண்டுவதற்கான செலவுகள், சூரிய சக்தி பேனல்கள் வைப்பது போன்றவை முதலீடுகள்

3 ஆ 3. நிலத்தில் முதலீடு செய்யுங்கள்

வசதி படைத்தவர்கள், சாகுபடி நிலத்தை வாங்க வேண்டும். இது தனித்தனியாக சாத்தியமில்லை என்றால், ஒரு குழுவை உருவாக்கி கூட்டாக வாங்கவும். ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் நீங்கள் நிச்சயமாக நிலத்திலிருந்து வருமானம் பெறுவீர்கள்.

3 ஆ 4. பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் இப்போதே சில மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்

இந்த பங்குகளை நீங்கள் விற்கும்போது, நீங்கள் பெறும் தொகை சந்தை மதிப்புக்கு ஏற்ப இருக்கும். அவற்றை வாங்கும் போது நீங்கள் செலுத்திய தொகையை விட இந்த தொகை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். பங்குகளில் முதலீடு செய்வதற்கு காப்பீடும் இல்லை அரசாங்கத்தின் கட்டுப்பாடும் இல்லை. சுருக்கமாக, பங்குகளில் உள்ள பணம் மீட்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, பங்குகளில் முதலீடு செய்தவர்கள் இப்போதே சில மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

3 இ. பிற அறிவுறுத்தல்கள்

பாதகமான காலங்களின் பணவீக்கத்தையும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, சில வருடங்களுக்கு தேவையான அளவு பணத்தை பாதுகாப்பாக வீட்டில் வைத்திருங்கள்.

4. சமூக அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு தயார்நிலை

4 அ. குடியிருப்பில் வசிப்பவர்கள், ஒரு கிராமத்து உள்ளூர்வாசிகள் கூட்டாக
அவசர தயார்நிலை ஏற்படுத்திக்கொண்டால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

மராத்தியில் ஒரு பழமொழி சமூக வாழ்வில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது .. இது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவுகிறது.

கிணறு தோண்டுவது, சோலார் பேனல் நிறுவுதல் அல்லது காற்றாலை அமைத்தல், உயிரி எரிவாயு ஆலை அமைத்தல் போன்றவை தனிப்பட்ட அளவில் மிகவும் விலை உயர்ந்தவை. அவை கூட்டாக மேற்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு தலைக்கும் செலவுகள் குறைவாக இருக்கும். பாதகமான காலங்களுக்குத் தயாராகும் ஒரு பகுதியாக, உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மொத்தமாக வாங்க வேண்டும். உள்ளூரில் உள்ள மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவற்றை மொத்த விற்பனையாளர்களிடம் வாங்குவது மலிவாக இருக்கும். கூட்டு அவசர தயார்நிலை, மனிதவளத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். தவிர, இந்த ஏற்பாடு சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு உதவும்.

4 ஆ. தேவைப்படுபவர்களுக்கு உதவ கூடுதலாக வாங்கவும்

ஒரு சமஸ்க்ருத பழமொழி – ‘வசுதைவகுடும்பகம்’. (முழு பூமியும் ஒரே குடும்பம்).

இதுவே இந்திய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு. பாதகமான நேரங்களில் பொருட்களை வாங்கும் போது, ​​உங்களால் முடிந்தால், தேவைப்படுபவர்களுக்கு உதவ,  கூடுதல் உணவு தானியங்கள், உடைகள் போன்றவற்றை வாங்கவும். இந்திய-பாக் போரின் போது, ​​சில இந்திய பொதுமக்கள் தானாக முன்வந்து பல்வேறு ரயில் நிலையங்களில் இந்திய வீரர்களுக்கு தேநீர்-சிற்றுண்டிகளை வழங்கினர். 2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் பரவியதால், நாடு முழுவதும் திடீர் ஊர் அடங்கு  அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, பல தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், போன்றவர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்தனர். பின்னர், பல இந்தியர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தை செலவழித்து அவர்களுக்கு உணவு கொடுத்தனர். ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி போன்ற அமைப்புகள் பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்கின. பல பரோபகாரிகள், சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் அரசின் நிவாரண நிதிக்கு ரொக்கமாக நன்கொடை அளித்தனர்.

4 இ. ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாவிட்டால்,
உங்கள் தேவைகளுக்கு போதுமான அளவு மட்டும் வாங்கவும்

ஆபத்து காலங்கள் தொடங்குவதற்கு முன், ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள், உடைகள், மருந்துகள் போன்றவற்றை வாங்க வேண்டி இருக்கும். எல்லோரும் தேவைக்கு அதிகமாக மொத்தமாக வாங்கினால், அது பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.  ‘நான் எனக்காக செய்தது போல், எல்லாமே சமூகத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும்’ என்ற சிந்தனை இருக்க வேண்டும். எனவே, உங்கள் தேவைகளுக்கு மட்டும் போதுமான அளவு வாங்கவும்.

4 ஈ. தேவைப்படுபவர்களுக்கு உதவ உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள்

வைத்தியர்கள் (ஆயுர்வேத பயிற்சியாளர்கள்), விவசாயிகள், உணவு தானிய வியாபாரிகள், போன்றவர்கள் தங்கள் துறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவலாம்; உதாரணமாக, மருத்துவ தாவரங்களை வளர்ப்பது பற்றி வைத்தியர்கள்; பழ மரங்கள், காய்கறிகள் போன்றவற்றை வளர்ப்பது பற்றி விவசாயிகள்; உணவு தானியங்களை சிறந்த முறையில் சேமித்து வைப்பது பற்றி வணிகர்கள் வழிகாட்டுதல் வழங்கலாம்.

5. பிற ஏற்பாடுகள் அல்லது முன்னெச்சரிக்கைகள்

5 அ. வீட்டில் தேவையற்ற பொருட்களைக் குறைக்கவும்

பாதகமான காலங்களுக்குத் தயாராவதற்கு நாம் பல விஷயங்களைச் சேமிக்க வேண்டும். ஆதரவற்ற நமது உறவினர்களுக்கு அல்லது சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு நம் வீட்டில் அடைக்கலம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, உங்கள் வீட்டில் அவசியமில்லாத  பொருட்களைக் குறைக்கத் தொடங்குங்கள். இது வீட்டில் இடத்தை உருவாக்கி, அந்த பொருட்கள் மீதான நமது பற்றை குறைக்க உதவும்.

5 ஆ. மொபைல்கள் தொடர்பான தயார்நிலை

1.      இரண்டு சிம் கார்டுகளுக்கான ஸ்லாட்டுகளைக் கொண்ட மொபைல் போன்கள்: இதன் நன்மை குறைந்தபட்சம் ஒன்றிற்காவது சிக்னல்  இருக்கக்கூடும்.

2. முடிந்தால் இரண்டு மொபைல்களை வைத்திருங்கள்: ஒரு மொபைலின் பேட்டரி தீர்ந்துவிட்டால், மற்ற செட்டைப் பயன்படுத்தலாம்.

3. முடிந்தால் உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய பவர் பேங்கை வைத்துக்கொள்ளுங்கள்.

5 இ. உறவினர்கள், குடும்ப மருத்துவர் போன்ற முக்கிய நபர்கள் மற்றும்
காவல் நிலையம், தீயணைப்பு படை முதலியவற்றின் மொபைல் எண்கள் மற்றும்
முகவரிகளைக்உங்கள் மொபைலில் அல்லது ஒரு சிறிய டைரியில் குறித்துக்கொள்ளவும்

மொபைலை சார்ஜ் செய்யாவிட்டால், பாதகமான நேரங்களில் அது பயனற்றதாகிவிடும்; எனவே, மேலே உள்ள எண்களை ஒரு சிறிய டைரியில் குறித்திக் கொள்வது சிறந்தது. இந்த டைரியை தவறாமல் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள். வேறொருவரின் மொபைல் அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தி மற்றவர்களைத் தொடர்பு கொள்ள இது உதவும். சில மிக முக்கியமான எண்களை மனப்பாடம் செய்யுங்கள்.

5 ஈ. முக்கிய ஆவணங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள், பாதகமான நேரங்களில் மன அழுத்தம் நிறைந்த சூழலில் தொலைந்து போகலாம். எனவே, இந்த ஆவணங்களின் நகல்களை வேறு எங்காவது (உதாரணமாக, உறவினர் வீடு) வைக்கவும். மேலும், இந்த ஆவணங்களின் புகைப்படங்களை உங்கள் மொபைலில் வைத்திருங்கள். இந்த ஆவணங்களின் படங்களை உங்கள் இ மெயில் டிரைவ் மற்றும் பென்டிரைவில் சேமிக்கவும்.

5 உ. உங்கள் சொந்த கணினி அல்லது அலுவலக கணினியில் உள்ள
உங்கள் தனிப்பட்ட முக்கியமான தகவல்களை வேறு இடத்தில் உள்ள
கணினியில் காப்புப் பிரதி எடுத்து வைக்கவும்.

பாதகமான நேரங்களில் நம் வீடு அல்லது அலுவலகம் சேதமடைந்தால், மற்ற கணினிகளில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க முடியும். உங்கள் அலுவலகத்தில் பொறுப்புள்ள அதிகாரியிடம் சாத்தியமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிப்பதன் மூலம் தகவல்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன் அனுமதி பெறவும் அல்லது வேறு இடத்தில் தகவல்களை காப்புப் பிரதி எடுக்கும்படி அவருக்கு பரிந்துரைக்கவும்.

5 ஊ. பாதகமான காலங்களில் பயனுள்ளதாக இருக்கும்
சில திறன்களை இப்போது கற்றுக் கொண்டு பயிற்சி செய்யுங்கள்

சமைக்கத் தெரியாதவர்கள் எளிய உணவை சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் (உதாரணமாக, பருப்பு-சாதம், புலாவ், முதலியன). முடி வெட்டுதல், நீச்சல், துணி தைத்தல் போன்ற திறன்களும் நன்மை பயக்கும்.

5 எ. வீட்டுப் பாதுகாப்புக்காக ஒரு நாயை வைத்திருத்தல்

திருடர்கள், கலவரக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து வீட்டைப் பாதுகாக்க ஒரு நாயை வைத்திருங்கள். ‘நாய்-பராமரிப்பு’ மற்றும் நாய் சிகிச்சை பற்றி கற்றுக்கொள்ளுங்கள்.

தகவல் : ஸனாதன் வெளியிடப் போகும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha)

 

Leave a Comment