கோரைப்புல் கிழங்கு பொடி

வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர்

கோரைப்புல் கிழங்கு  பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் பித்தம், கபத்தை இது போக்குகிறது.

1.     குணதர்மம் மற்றும் கிடைக்கும் பயன்கள்

இந்தப் பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் இது பித்தம், கபத்தை போக்குகிறது நோயுற்று இருக்கும்போது இதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; இயல்பு, இடம், பருவம் மற்றும் ஏனைய நோய்களுக்கு ஏற்றபடி சிகிச்சையில் மாற்றம் ஏற்படக் கூடும். அதனால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பயன் மருந்து உட்கொள்ளும் முறை கால அளவு
அ. தாகம் எடுத்தல், லேசான ஜுரம் மற்றும் உடல் வலி ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் கோரைப்புல் கிழங்குப் பொடியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். தாகம் எடுக்கும் சமயம் இந்த தண்ணீரைக் குடிக்கவும். 3−4 தினங்கள்
ஆ. குமட்டல், வாந்தி, பேதி மற்றும் ஆசனவாயில் வழியாக ரத்தப்போக்கு வெட்டிவேர் பொடி, கோரைப்புல் கிழங்கு பொடி, தனியா பொடி மற்றும் சோம்பு பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை தினமும் ஒரு ஸ்பூன்  எடுத்து ஒரு கப் சூடான தண்ணீரில் கலந்து 3−4 முறை குடிக்கவும். 3−4 தினங்கள்
இ. உடல் கனமாக உணர்தல், பசி எடுக்காமல் இருத்தல், சிறுநீர் கலங்கி இருத்தல், ஜுரம் இவற்றுடன் ரத்த சுத்தத்திற்கும் ஒரு ஸ்பூன் கோரைப்புல் கிழங்கு பொடியை ஒரு கப் வெந்நீரில் கலந்து ஒரு நாளில் 3−4  முறை பருகவும். 7 தினங்கள்
ஈ. சிறு குழந்தைகளுக்கு பல் விழும் சமயம் வரக்கூடிய ஜுரம் மற்றும் இந்த சமயத்தில் வரும் வேறு நோய்கள் மற்றும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஜுரம் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கோரைப்புல் கிழங்கு பொடியை சேர்த்து அதை கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் சிறிதளவு தண்ணீரை அவ்வப்பொழுது குழந்தைக்கு குடிக்கக் கொடுக்கவும். 7 தினங்கள்

2. குறிப்புகள்

3 வயதிலிருந்து 7 வயதிற்குள் உள்ளவருக்கு கால் ஸ்பூனும் 8 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ளவருக்கு அரை ஸ்பூனும் உபயோகிக்கலாம்.

3. மருந்தின் நல்ல பரிணாமம் ஏற்பட இதை தவிர்த்து விடுங்கள்!

மைதா மற்றும் கடலைமாவில் செய்த பண்டங்கள்; உப்பு, காரம் மற்றும் எண்ணெய் மிகுந்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், தயிர், பன்னீர், சீஸ், பழையது, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, சரியான அளவில் இல்லாத உணவு, வெயிலில் சுற்றுதல் மற்றும் இரவில் விழித்திருத்தல் ஆகியவை.

4.     மருந்தை உட்கொள்ளும் சமயம்
உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்!

ஹே தெய்வமே, நான் இந்த மருந்தை உங்களின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை உங்களின் பிரசாதமாக உட்கொள்கிறேன். இதன் மூலம் என் நோய் குணமாகட்டும்.

–  வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2021)

தகவல் : ஸனாதனின் ஹிந்தி நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி நடந்து மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள்!’

 

 

Leave a Comment