வைத்திய மேகராஜ் பராட்கர்
நெல்லிக்காய்ப் பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் இது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்கிறது.
1. குணதர்மம் மற்றும் கிடைக்கும் பயன்கள்
இம்மருந்தின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் இது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்கிறது. நோயுற்று இருக்கும்போது இதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; இயல்பு, இடம், பருவம் மற்றும் ஏனைய நோய்களுக்கு ஏற்றபடி சிகிச்சையில் மாற்றம் ஏற்படக் கூடும். அதனால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன் | மருந்து உட்கொள்ளும் முறை | கால அளவு |
---|---|---|
அ. முடி உதிர்தல், இளநரை | நெல்லிக்காய், அம்ருதவல்லி மற்றும் நெருஞ்சி ஆகியவற்றை சமமாகக் கலந்து ஒரு ஸ்பூன் அதிகாலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் அருந்தவும். பிறகு அரை மணி நேரத்திற்கு எதுவும் உண்ணக்கூடாது, அருந்தக்கூடாது. | 3 மாதங்கள் |
ஆ. முடி கருப்பாவதற்கு | அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து குடிக்கவும். அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. இதோடு கூட வாரத்திற்கு இருமுறை இரும்பு கடாயில் 2 முதல் 4 டீஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை சிறிது தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அதிகாலை கருமையான இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து அரைமணி நேரம் ஊறி பிறகு தலைக்கு குளிக்கவும். | எப்போதும் |
இ. தலைவலி | அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் கல்கண்டு கலந்து உண்ணவும். | 3 – 5 தினங்கள் |
ஈ. தலை சூடாகுதல் | எப்போது கஷ்டம் ஏற்படுகிறதோ அப்போது வேண்டிய அளவு நெல்லிக்காய்ப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் பற்று போடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு நெற்றியை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். | கஷ்டம் ஏற்படும் சமயம் |
உ. கண் நோய் | இரவு உறங்கும்போது ஒரு ஸ்பூன் பொடியுடன் அரை ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளவும். | 3 மாதங்கள் |
ஊ. மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் | அதிகாலை மற்றும் மாலை அரை ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி அரை கப் தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ளவும். அதோடு வேண்டிய அளவு நெல்லிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்து அதில் மோர் கலந்து நெற்றியில் தடித்த பற்று போடவும். இதை ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவிக் கொள்ளவும். | 3 – 5 தினங்கள் |
எ. வறண்ட தொண்டை | 10 உலர்ந்த திராட்சை மற்றும் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை சேர்த்து அரைத்து சட்னி செய்து கொள்ளவும். இதை சிறு உருண்டைகளாக்கிக் கொண்டு நாள் ஒன்றுக்கு 3−4 முறை சப்பி சாப்பிடவும். | 7 தினங்கள் |
ஏ. பித்தத்தால் வாந்தி எடுத்தல் | ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி, அரை ஸ்பூன் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை கல்லில் அரைத்த விழுது மற்றும் அரை ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக குழைத்து நக்கி சாப்பிடவும். | கஷ்டம் ஏற்படும் சமயம் |
ஐ. மலச்சிக்கல் | இருவேளை உணவு முன்பும் ஒரு ஸ்பூன் பொடியை அரை கப் வெதுவெதுப்பான நீருடன் கலந்து அருந்தவும். | 15 தினங்கள் |
ஒ. டயாபடீஸ் | அதிகாலை மற்றும் மாலை ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் பச்சை மஞ்சளை காய வைத்து இடித்த பொடி ஆகியவற்றை ஒரு கப் தண்ணீருடன் கலந்து அருந்தவும். அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு எதுவும் உண்ணவோ அருந்தவோ கூடாது. | 3 மாதங்கள் |
ஓ. சிறுநீர் முழுவதும் வெளிவராமல் இருத்தல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், சிறிதளவே வெளியேறுதல் மற்றும் வெள்ளைப்போக்கு | ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதில் அரை ஸ்பூன் சீரகப் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் கல்கண்டுசேர்த்து கலந்து உட்கொள்ளவும். இது போன்று காலை நெல்லிக்காய்ப் பொடியை ஊற வைத்து மாலையில் எடுத்துக் கொள்ளலாம் . | 5−7 தினங்கள் |
ஔ. கை-கால் எரிச்சல், மயக்கம் வருதல், கண்கள் இருண்டு போதல் மற்றும் மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் | ஒரு நாளில் 2−3 முறை ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் கல்கண்டு ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலந்து குடிக்கவும். | 7 தினங்கள் |
ஃ. உடல் அரிப்பு | ஒரு நாளில் 2−3 முறை தேவையான அளவு நெல்லிக்காய்ப் பொடியை தண்ணீரில் கலந்து அரிப்பு உள்ள இடத்தில் மெலிதான பற்று போடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். | 5−7 தினங்கள் |
க. கிழட்டுத் தன்மை வராமலிருக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் | அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து அருந்தவும். இதன் பிறகு அரை மணி நேரத்திற்கு எதுவும் உண்ணக்கூடாது அருந்தக் கூடாது. | 3 மாதங்கள் |
2. குறிப்புகள்
3 வயதிலிருந்து 7 வயதிற்குள் உள்ளவருக்கு கால் ஸ்பூனும் 8 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ளவருக்கு அரை ஸ்பூனும் உபயோகிக்கலாம்.
3. மருந்தின் நல்ல பரிணாமம் ஏற்பட இதை தவிர்த்து விடுங்கள்!
மைதா மற்றும் கடலைமாவில் செய்த பண்டங்கள்; உப்பு, காரம் மற்றும் எண்ணெய் மிகுந்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், தயிர், பன்னீர், சீஸ், பழையது, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, சரியான அளவில் இல்லாத உணவு, வெயிலில் சுற்றுதல் மற்றும் இரவில் விழித்திருத்தல் ஆகியவை.
4. மருந்தை உட்கொள்ளும் சமயம்
உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்!
ஹே தெய்வமே, நான் இந்த மருந்தை உங்களின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை உங்களின் பிரசாதமாக உட்கொள்கிறேன். இதன் மூலம் என் நோய் குணமாகட்டும்.
– வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2021)
தகவல் : ஸனாதனின் ஹிந்தி நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி நடந்து மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள்!’