பூஜ்ய அனந்த் ஆடவலே
பராத்பர குரு டாக்டர் ஆடவலே ஸாதகர்களாகிய உங்களுக்கு மிகவும் உன்னதமான ஒரு விஷயத்தைக் கற்றுத் தந்துள்ளார். நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் இறைவனுக்கு நமஸ்காரம் செய்து ஆரம்பித்து காரியம் முடிந்தவுடன் மீண்டும் நமஸ்காரம் செய்து நன்றி தெரிவிக்கிறீர்கள். கணினியில் சேவை செய்யும்போதும் அதை நமஸ்கரித்து பின்பு மூடி வைக்கிறீர்கள்.
பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறியுள்ளார்,
யத்கரோஷி யதச்நாஸி யுஜ்ஜுஹோஷி ததாஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம் ||
– ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 9, ஸ்லோகம் 27
அர்த்தம் : ஹே கௌந்தேய (குந்தி புத்ரா), நீ என்ன கர்மாக்கள் செய்கிறாயோ, என்ன உண்கிறாயோ, என்ன ஹோமம் செய்கிறாயோ, என்ன தானம் செய்கிறாயோ மற்றும் என்ன தவம் செய்கிறாயோ அவை அனைத்தையும் எனக்கு அர்ப்பணமாக்கு.
கீதையில் வரும் பகவானின் ஆணை இது. ‘இவ்வாறு செய்வதால் என்ன கிடைக்கும்?’ என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
சுபாசுபஃபலைரேவம் மோக்ஷ்யசே கர்மபந்தனை: |
ஸன்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ் யஸி ||
– ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 9, ஸ்லோகம் 28
அர்த்தம் : இது போன்று யார் மூலமாக எல்லா கர்மாக்களும் எனக்கு அர்ப்பணமாகிறதோ அத்தகைய ஸன்யாஸயோகம் நிரம்பிய சித்தம் கொண்டவன் சுபாசுப பலனான கர்மபந்தத்திலிருந்து விடுபட்டு என்னை வந்து அடைகிறான்.
ஒவ்வொரு கர்மாவிற்கும் சுபம், அசுபம் ஆகிய இருவகை பலன்கள் உள்ளன. சுபாசுப பலன் என்பது புண்ய, பாவத்தைக் குறிக்கிறது. இந்த புண்ய-பாவ கர்மாக்களால் நாம் பிறப்பு-இறப்பு பந்தத்தில் சிக்கிக் கொள்கிறோம். இதிலிருந்து விடுபட நீங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மாவையும் பகவானிடம் அர்ப்பணிப்பதால் அந்த கர்மத்தின் தியாகம் நடக்கிறது. அதனால் உங்களின் இந்த நடவடிக்கை ஸன்யாஸ-கர்மயோகப்படி உள்ளது. இதன் காரணம் சந்யாசத்தில் தியாகம் உள்ளது. அதனால் பாவ-புண்ய மற்றும் கர்மபந்தத்திற்கு அப்பால் சென்று கர்மபந்தத்திலிருந்து விடுபடுவீர்கள், என்னையே வந்து அடைவீர்கள்’, என்று பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதை பராத்பர குரு டாக்டர் அவர்கள் ஸாதகர்கள் மூலமாக ப்ரத்யக்ஷமாக நடத்துவிக்கிறார். இவ்வாறு செய்வதால் பகவான் உங்களுக்கு முக்தி அளிக்கிறான்.
ஸாதகர்கள் தோஷங்களிலிருந்து விடுபட
கற்றுத்தரும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே!
அ. ஸ்ரீமத் சங்கராச்சாரியார் ராம்நாதி ஆச்ரமத்திற்கு
வந்தவுடன் ‘நிர்தோஷம் ஹி சமம் பிரம்ம’ எனக் கூறுதல்
சில வருடங்களுக்கு முன்பு ராம்நாதி ஆச்ரமத்திற்கு பூர்வோம்னாய ஸ்ரீகோவர்த்தனமட புரி பீடாதீஷ்வர் ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ நிஷ்சலானந்தசரஸ்வதி மகாராஜ் வந்திருந்தார். அந்த சமயம் நான் அங்கு இல்லை. மும்பையில் இருந்தேன். இந்த செய்தியை நான் ‘தினசரி ஸனாதன் பிரபாத்’தில் படித்தேன். அப்போது அவர் கூறியது, ‘நிர்தோஷம் ஹி சமம் பிரம்ம’ (ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 5 , ஸ்லோகம் 19). அதாவது ‘சச்சிதாநந்தமய பரமாத்மா தோஷங்கள் அற்றவர் மற்றும் சமமானவர்’.
இதன் அர்த்தம் ‘பிரம்மம் களங்கம் இல்லாதது. அதில் எந்த தோஷமும் விக்ருதியும் இல்லை. காம, குரோத, மோஹ, லோப, மத மற்றும் மாத்சர்யம் ஆகியவை ஆறு பகைவர்கள் ஆகும். இவை பிரம்மத்திடம் இல்லை, இரண்டாவது குணம் பிரம்மம் சமமானது என கூறப்பட்டுள்ளது. கோபம்-வெறுப்பு , குளுமை-வெப்பம் ஆகிய அனைத்திலும் பிரம்மம் சமமாக உள்ளது. அதற்கு எதன் மீதும் விசேஷ விருப்பு இல்லை. அதேபோல் எதன் மீதும் வெறுப்பும் இல்லை. சங்கராச்சாரியாருக்கு ராம்நாதி ஆச்ரமத்தில் ‘நிர்தோஷம் ஹி சமம் பிரம்ம’ என ஏன் கூறத் தோன்றியது? ராம்நாதி ஆச்ரமத்தில் அவர் ‘தோஷமில்லாது, சம புத்தியுடைய, யாருடனும் அதிக நெருக்கமும் இல்லாது யாரையும் வெறுக்காத’ அத்தகைய ஸாதகர்களை பார்த்திருக்க வேண்டும். அதனால் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆ. தோஷமில்லாத சம உணர்வுள்ள
ஸாதகர்கள் பிரம்மத்தில் ஸ்திரமாக இருத்தல்
‘இவ்வாறு இருப்பதால் என்ன ஆகும்?’ என்பது இந்த ஸ்லோகத்தின் அடுத்த பத்தியில் கூறப்பட்டுள்ளது.
‘தஸ்மாத் பிரம்மாணி தே ஸ்திதா: |
– ஸ்ரீ மத்பகவத்கீதை, அத்யாயம் 5, ஸ்லோகம் 19
அர்த்தம் : யாருடைய மனம் சம உணர்வில் நிலைத்துள்ளதோ அவர் சச்சிதானந்த பரமாத்மாவில் நிலைத்துள்ளார்.
சம உணர்வால் அந்த ஸாதகர் பிரம்மத்தில் ஸ்திரமாக உள்ளார். யார் தோஷமில்லாமல் உள்ளாரோ, யாரிடம் எந்தவித ஆளுமை குறைகளும் இல்லையோ அவரிடம் சம உணர்வு தானே ஏற்படுகின்றது. தோஷமின்மை மற்றும் சம உணர்வு ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். யாரிடம் சம உணர்வு பூரணமாக உள்ளதோ அவரிடம் தோஷங்கள் இருப்பதில்லை. அதேபோல் ஒருவர் தோஷமில்லாமல் ஆகும்போது அவரிடம் சம உணர்வு தானே ஏற்படுகிறது. எந்த ஸாதகர் தோஷமில்லாமல் சம உணர்வுடன் உள்ளாரோ அவர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிறார். சங்காராச்சாரியார் இந்த ஆச்ரமத்தில் உள்ள ஸாதகர்களைப் பார்த்து இவ்வாறு கூறியுள்ளார். அவர் தோஷமின்மையின் மகத்துவத்தை கூறியுள்ளார்; ஏனென்றால் இதுவே ஸாதனையின் மூலம் ஆகும். நீங்கள் பக்தி புரியும்போது, பூஜை செய்யும்போது, ஜபம் செய்யும்போது என்ன நடக்கிறது? நீங்கள் 10 முறை, ஓராயிரம் முறை அல்லது ஒரு லக்ஷம் முறை நாமஜபம் செய்ய சங்கல்பம் எடுத்துக் கொள்வதால் இறைவன் மகிழ்வதில்லை; மாறாக எப்போது நீங்கள் முழு கவனத்துடன் நாமஜபம் செய்கிறீர்களோ, உங்களின் கவனம் உலக விஷயங்களில் இல்லாமல் இறைவனிடம் உள்ளதோ அப்போதுதான் சித்தத்தில் விக்ருதி இருப்பதில்லை. இது சிறிது சிறிதாக அதிகரித்து ஒருவரின் இயல்பாகவே ஆகிறது பிறகு அவர் விக்ருதியே இல்லாமல் ஆகிறார்.
இ. எந்த வழிப்படி ஸாதனை செய்தாலும் ‘மனிதனை
தோஷமில்லாமல் ஆக்குவது’ என்பதே ஸாதனையின் நோக்கம் ஆகும்
ஒவ்வொரு ஸாதனையிலும் இதுவே நோக்கமாகும். பக்தியோகமாகட்டும் அல்லது பதஞ்சலியோகமாகட்டும் அதில் ‘யோகஷ்சித்தவ்ருத்திநிரோத: (பாதஞ்சலியோகதர்சன், சமாதிபாத், சூத்ரம் 2 ) அதாவது ‘யோகம் சித்தத்தின் இயல்பை தடுத்து நிறுத்துகிறது’ என்று கூறப்படுகிறது. சித்தத்தின் இயல்பு என்ன? யோகம், மனதில் உண்டாகும் நல்ல- தீய ஆகிய அனைத்து எண்ணங்களையும் தடுத்து நிறுத்துகிறது. எல்லா சிந்தனைகளும் நின்று போனால் அங்கே தோஷம் எவ்வாறு இருக்கும்? ஒவ்வொரு ஸாதனை வழியின் நோக்கமும் மனிதனை தோஷமில்லாமல் ஆக்குவது ஆகும். அதுவே அந்தந்த ஸாதனையின் முக்கிய விஷயமாகிறது. வெறும் கர்மாக்களை செய்வதால் பந்தப்படுகிறோம். அதுவே நிஷ்காம கர்மாவாக செய்யும்போது உங்களின் மனதில் விக்ருதி ஏற்படுவதில்லை. இதுவே மூல விஷயம் ஆகும். இவ்விஷயத்தை பராத்பர குரு டாக்டர் அவர்கள் உங்களின் மூலம் ப்ரத்யக்ஷமாக நடத்தி வருகிறார்.
இப்பேற்ப்பட்ட அதி உன்னத குரு உங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளார். அவருக்கு என்னுடைய நமஸ்காரங்கள்!’
– அனந்த் ஆடவலே (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் மூத்த சகோதரர்), கோவா.
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்