ஸாதகர்களின் ஆன்மீக கஷ்டங்களைக் களைய ராப்பகலாக தொடர்ந்து பாடுபடும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே!

தியான நிலையில் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள்

ஸனாதன் ஸன்ஸ்தா வழிகாட்டுதலின்படி ஆன்மீக ஸாதனை செய்யும் சில ஸாதகர்களுக்கு தீய சக்திகளால் தீவிர கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இதுவே சூட்சும நிலையில் நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையே நடக்கும் யுத்தத்தின் ஒரு குறியீடு. பகவத்கீதையை அர்ஜுனனுக்கு உபதேசிக்கும்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார் – ‘நான் ஏற்கனவே கௌரவர்களை சூட்சுமத்தில் வதம் செய்து விட்டேன். நீ ஸ்தூலத்தின் ஒரு கருவியே.’

சூட்சும நிலையில் யுத்தத்தை வெல்வதற்கு ஆன்மீக சக்தி அவசியம்; அதாவது தீய சக்திகளை வலுவிழக்க செய்ய வேண்டும். இதுவே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் பணி. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களின் ஆன்மீக கஷ்டங்களைக் களைய எந்த அளவு முயற்சிக்கிறார் என்பதன் சில உதாரணங்களைப் பார்க்கலாம். அவரது புனித திருவடிகளில் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீய சக்திகள் பெரும் கஷ்டத்தை அளித்தாலும் ‘எப்படி இருந்தாலும் ஒரு நாள் நான் இந்த ஸ்தூல உடலை விடத்தானே வேண்டும்’ என்ற எண்ணத்தில் தொடர்ந்து கற்கும் நிலையில் இருக்கும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள்!

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில்

ஒரு வழிகாட்டுதல் வகுப்பின்போது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் என்னிடம் கூறினார், “கஷ்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன; இருந்தாலும் இவற்றின் மூலமும் நாம் ஏதாவது கற்றுக் கொள்ள முடியும். மனிதகுலத்திற்கும் அது உதவியாக இருக்கும். மனிதர்கள் கற்றுக் கொண்டால் நல்லது. நாம் இந்த ஸ்தூல உடலை ஒருநாள் விட்டுவிட்டு போகத் தானே வேண்டும்”. அதற்கு நான் பதில் கூறினேன், “எனக்கும் அதே எண்ணம் வந்தது. ஸாதகர்களுக்காக நாம் இறந்தாலும் பரவாயில்லை. இருந்தாலும் அகில மனிதகுல நலனுக்காக இந்த பரிசோதனைகள் நிற்கக் கூடாது”.

–  ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், ராம்னாதி, கோவா. (1.8.2018)

ஸாதகர்களுக்கு சைதன்யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தான் உபயோகித்த பொருட்களை அவர்களுக்கு அளித்தல்!

பூஜ்ய சந்தீப் ஆளஷி

பல பரிசோதனைகளின் அடிப்படையில் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் உபயோகித்த எல்லா பொருட்களிலும், அதாவது பேனா, பென்சில், எழுதிய காகிதம் மற்றும் சீப்பு, ஆடைகள் ஆகியவற்றில் நேர்மறை சக்தி இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதை ஆன்மீக அனுபவங்கள் பெற்றுள்ள ஸாதகர்களும் அனுபவித்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு இதை உணர்ந்த பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தான் உபயோகித்த பொருட்களை ஸாதகர்களுக்கு சைதன்யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் கொடுக்க ஆரம்பித்தார். இப்பொருட்களை ஸாதகர்கள் தங்கள் அலமாரியில் அல்லது படுக்கைக்கு அடியில் வைத்துக் கொள்ளுமாறு சொன்னார். அதன் மூலம் அவர்களுக்கு நேர்மறை சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்தார். மற்ற மகான்கள் அவர்களின் பக்தர்களுக்கு விபூதி வழங்குவர், பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களோ தன் பொருட்களையே வழங்குகிறார்!

–  ஸனாதனின் மகான், பூஜ்ய சந்தீப் ஆளஷி, ராம்னாதி, கோவா.

ஸாதகர்களின் நடவடிக்கைகளை குறுகிய காலத்திற்குள் கவனித்து அவர்கள் ஸாதனையில் பின்தங்கக்கூடாது என்பதற்காக அன்புடன் உதவும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே!

ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா சிங்பால்

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கூறியுள்ள ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் வழிமுறை என்பது மனிதகுலத்திற்கு அவர் அளித்துள்ள மகத்தான பங்களிப்பு. இன்று ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தால் ஆனந்தத்தைத் தொலைத்து நிற்கின்றனர்.

தொடர்ந்து ஆனந்தம் என்பது நமக்குள்ளே இருப்பது என்று கூறி ஸாதகர்கள் அவர்களின் ஆறு பகைவர்களைக் களைய உதவுவது அவரது ஆன்மீக அன்பைக் காட்டுகிறது. துக்கத்திற்கான காரணங்களை மட்டும் கூறாமல் அதோடு கூட அவர் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைவது எப்படி என்றும் விளக்கியுள்ளார். ஸாதகர்கள் இதற்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதற்காக அவர் மதிப்பாய்வு முறையை ஆரம்பித்தார். ‘ஒருவரின் தனிப்பட்ட ஆன்மீக பயிற்சியின் மதிப்பாய்வுரை’ என்பது ஸனாதனின் தனித்துவ சிறப்பாகும். ஸாதகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த மதிப்பாய்வு முறையால் ஸனாதனின் ஸாதகர்கள் விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அடைகின்றனர். ஸாதகர்களின் ஆன்மீக பயிற்சியில் பின்னடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த மதிப்பாய்வு முறையில் அவர்களிடம் அன்புடன் பொறுமையுடன் சில சமயங்களில் கடுமையாகவும் மதிப்பாய்வு தரப்படுகிறது.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களின் ஆன்மீக பயிற்சியில் எவ்வாறு உதவுகிறார் என்பதற்கான சில உதாரணங்கள்

1.    ஸாதகரின் செயல்பாடுகளை கவனித்துவிட்டு ஒரு ஸாதகரிடம் அதிக அஹம்பாவம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

ஒரு சமயம் சில ஸாதகர்கள் ஒரு கனரக வாகனத்திலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு ஸாதகர் அங்கு சும்மா நின்று கொண்டிருந்தார். அவர் எந்த ஸத்சேவையிலும் ஈடுபடாமல் மற்றவர்களிடம் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். வாகனத்திலிருந்து பல பொருட்களை இறக்க வேண்டி இருந்ததால் அவரும் உதவ வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் இதைக் கவனித்த பின் கூறினார் – “இவ்வளவு பொருட்களை இறக்க வேண்டி இருந்தும் அந்த ஸாதகர் எதுவும் செய்யவில்லை. மற்றவர்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குகிறார். அவரிடம் அதிக அஹம்பாவம் உள்ளது!”

பின்னர் பொறுப்புள்ள ஸாதகரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அந்த குறிப்பிட்ட ஸாதகரிடம் தீவிர அஹம்பாவம் உள்ளது என்பது தெரிய வந்தது. அவர் செய்வதே சரி என்று நினைத்தல், மற்றவர் கூறுவதை ஏற்க மறுத்தல், அவரிஷ்டப்படி செய்தல், மற்றவர்களுக்கு செவிசாய்க்காமல் இருத்தல் போன்ற விதங்களில் அவரின் அஹம்பாவம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவரின் இந்த அஹம்பாவத்தால் அவரின் ஆன்மீக பயிற்சியில் பெரும் தொய்வு ஏற்பட்டிருந்தது. இது தெரிய வந்தபின்னர் அந்த ஸாதகருக்கு அதற்கேற்றார் போல் உதவ முடிந்தது.

2.    ஆன்மீக நூல் துறையில் உள்ள ஸாதகர்கள், காகிதங்களை அளவு மற்றும் வடிவத்திற்கேற்ப வகைப்படுத்தத் தவறியதால் அவர்களை பிராயச்சித்தம் எடுக்கக் கூறுதல்

சில வருடங்களுக்கு முன்பு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே ஆன்மீக நூல் துறை ஸாதகர்களிடம் ஒருபக்க காகிதங்களை அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப வகைப்படுத்தி வைக்குமாறு கூறியிருந்தார் (நோட்ஸ் எழுத சிறு காகிதங்கள், காகித அளவு – சிறியது, மத்யம் மற்றும் பெரியது, ஏ4 அளவு காகிதம் போன்றவை). தேவையானபோது அந்த குறிப்பிட்ட காகிதம் கிடைக்கும் என்பதற்காக இதை செய்ய சொல்லியிருந்தார். அதன் மூலம் ஸாதகர்களின் நேரமும் மிச்சமாகும், காகிதங்களும் வீணாகாது. இது செய்யப்படவில்லை என்று பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு தெரிய வந்தபோது அவர் அந்த துறையில் உள்ள ஸாதகர்களை அவர்களின் தவறுக்காக பிராயச்சித்தம் எடுக்கக் கூறினார்.

3.    பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கணினி பழுது பார்க்கும் துறை ஸாதகர்களிடம் கணினி கேபிள் சரியாக மடிக்கப்படவில்லை என்பதை கடுமையாக நினைவுறுத்தினார்

ஒருமுறை பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், ஆன்மீக நூல்களை எழுதும் ஸத்சேவை புரியும் மேஜைக்கு அருகில் கணினி கேபிள் சரியாக மடிக்கப்படாததைப் பார்த்தார். அவர் உடனே இதை அந்தத் துறை ஸாதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கூறினார், “எந்த ஒரு ஸத்சேவையையும் பரிபூரணமாக செய்ய வேண்டும் என்ற ஆழ்ந்த தாபம் இருக்க வேண்டும். மேலோட்டமாக எதையும் செய்யக் கூடாது”.

பிறகு எங்களிடம் அந்த ஸாதகர்களுக்காக ஆளுமை குறைகளைக் களையும் ஸத்சங்கத்தை எடுக்கக் கூறினார். அதன் மூலம் அவர்கள் தங்களின் தவறுகளை உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த ஸத்சங்கத்தின்போது ஆச்ரமத்தின் மற்ற இடங்களிலும் கணினி கேபிள்கள் இது போன்றே சரியாக மடித்து வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனால் அவற்றை சரியாக மடித்து வைக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் ஸத்சேவையை பரிபூரணமாக செய்யும் ஸன்ஸ்காரத்தை ஸாதகர்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டும் என்று பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் எந்த அளவு ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது.

–  ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா சிங்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (8.2.2014)

மேற்கத்திய தத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஒரே நோக்கம் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்பதே. உண்மை என்னவென்றால் மனிதனின் மகிழ்ச்சிக்கான பேராசையை என்றும் திருப்தி செய்ய முடியாது. அதனால் பல்வேறு கண்டுபிடிப்புகள் இருந்தாலும் மனிதகுலம் மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்கின்றன. மாறாக ஹிந்து தர்மம் இறைவனை அடைய அதாவது மாறாத ஆனந்தம் அடைய கற்றுத் தருகிறது. அதனால் ஹிந்து தர்ம வழிப்படி நடப்பவர் என்றும் துக்கத்தை அனுபவிப்பது இல்லை!
– பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே

 

Leave a Comment