பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே
ஒருமுறை ஒரு பெண் ஸாதகர் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களிடம் தன் கனவைக் கூறினார். அந்தக் கனவில் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன்னை விட்டுப் போவதாகக் கண்டாள். அவள் தன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் “நான் எப்போதும் என் ஸாதகர்களை விட்டு விலகுவதில்லை” என்றார். அந்த உரையாடல் முடியும்வரை மீண்டும் மீண்டும் 2-3 முறை இதையே திருப்பிக் கூறினார்.
- ஒருமுறை அவரை சந்திக்க வந்த மகானை வழியனுப்பி வைத்து விட்டு தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள். அப்போது சில ஸாதகர்கள் அவரைப் பார்த்து கையசைத்தனர். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அவர்களிடம், “ஏன் எனக்கு கையசைத்து விடை கொடுக்கிறீர்கள்? ஸாதகர்கள் எங்கு உள்ளனரோ அங்கு தான் நானும் இருக்கிறேன்’ என்றார். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு ஸாதகர்கள் தான் எல்லாமே. அவர் ஒருமுறை கூறியுள்ளார் – ‘எல்லா மலர்களிலும் எனக்கு ‘ஸாதக மலர் தான் மிகவும் பிடித்தமானது’.
- ‘ஸாதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பொறுப்பு என்னுடையது’.
– பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே (ஸாவந்த்வாடி, மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கோவிலில் நடந்த ஸாதகர்களுக்கான வழிகாட்டுதல்)
1. எல்லா வயது மற்றும் ஆன்மீக நிலையில் உள்ள ஸாதகர்கள் அவரின் அருள் குடையின் கீழ்
பணக்காரர் மற்றும் ஏழை, படித்தவர் மற்றும் படிக்காதவர், இளையவர் மற்றும் முதியவர் ஆகிய அனைத்து ஸாதகர்களும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அருட்குடையின் கீழ் உள்ளனர். நானே இதை அனுபவித்துள்ளேன். அவரவர் தேவைக்கேற்ப எல்லோருக்கும் உதவி புரிந்துள்ளார். ஆன்மீக கஷ்டங்களைப் போக்க நாமஜபம் போன்ற ஆன்மீக உபாயங்களை ஸாதகர்களுக்கு அவர் கற்றுத் தந்துள்ளார். அவரின் அருட்குடையின் கீழ் உள்ள ஸாதகர்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.
– திரு பிரகாஷ் மராட்டே, ராம்னாதி, கோவா.
2. ஸாதகர்களின் சந்தோஷமான தருணங்களைக் கொண்டாடுதல்
2 அ. ஆச்ரமத்தில் ஒரு பெண் ஸாதகரின் முதல் பிறந்த நாளுக்கு அவளுக்கு பிடித்தமான புடவையை பரிசாக அளித்தல் : ஆச்ரமத்தில் உள்ள குமாரி கனகமஹாலக்ஷ்மிக்கு புடவை கட்டுவது பிடிக்கும்; ஆனால் அவளிடம் புடவை ஏதும் இல்லை. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு இது தெரிந்தவுடன் அவர் உடனே ஸாதகர்களிடம் அவளுக்கு ஒரு புடவையை பரிசாக அளிக்கும்படி கூறினார். சிறிது நாட்களில் ஆச்ரமத்தில் அவளது முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்தது.
அப்போது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கூறினார், “இன்று கு. கனகமஹாலக்ஷ்மியின் பிறந்த நாள்! நாம் அவளுக்கு ஒரு புடவையை பரிசாக அளிப்போம். அவளிடம் புடவை ஏதும் இல்லை. அவளுக்கு பிடித்தமான நிறத்தில் ஒரு புடவையை அவளே தேர்வு செய்யட்டும். ஆச்ரமத்தில் அவளின் முதல் பிறந்த நாளுக்கு அவளுக்கு ஒரு புடவை கிடைக்கட்டும்!”
– கு. வைபவி சுனில் போவர் (வயது 16) (23.6.2013)
இது போன்று ஆச்ரமத்தில் உள்ள ஸாதகர்கள் அனைவரின் பிறந்தநாளும் கொண்டாடப்படும். ஸாதகரின் பிறந்தநாள் அன்று அவரின் பெயர் உணவு கூடத்தில் உள்ள பலகையில் எழுதப்படும். வாழ்த்து செய்தியும் எழுதப்படும். அதன் மூலம் எல்லா ஸாதகர்களுக்கும் அந்த குறிப்பிட்ட ஸாதகரின் பிறந்தநாள் என்பது தெரிய வரும். அந்த ஸாதகருடன் இணைந்து சேவை செய்யும் மற்ற ஸாதகர்கள் அவருக்கு அழகான வாழ்த்து அட்டையைத் தருவர். இது போன்று ஸாதகர்களின் பிறந்தநாட்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்.
2 ஆ. திருமணம், பூணூல் போன்ற மங்கள நிகழ்வுகளுக்குப் பிறகு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் புதுமண தம்பதிகளை, அவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆசி வழங்குவார். வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் சமயம் அனுபவிக்கும் இது போன்ற விலைமதிப்பற்ற நிகழ்வுகளை ஸாதகர்கள் தங்களின் மனக்கோவிலில் போற்றி பாதுகாப்பர்.
3. ஸாதகர்களின் மூலம் அனைவருக்கும் பிரசாதம் அனுப்புதல்
3 அ. அவரவர் விருப்பத்திற்கேற்ப பிரசாதம் வழங்குதல் : ஒரு ஸாதகர் வீட்டிற்கு கிளம்பும்போது அவர் மூலமாக மற்ற ஸாதகர்களுக்கும் பிரசாதம் அனுப்பி வைக்குமாறு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கூறுவார். அவரவர் வயதுக்கேற்ப, விருப்பதிற்கேற்ப பிரசாதம் அனுப்புவார். ஸாதகருக்கு இனிப்பு பிடிக்குமா அல்லது காரம் பிடிக்குமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆன்மீக கஷ்டங்கள் உடைய ஸாதகர்களைப் பற்றி விசாரித்து அவர்களுக்கும் பிரசாதம் அனுப்பி வைப்பார். வீட்டிற்கு கிளம்பும் ஸாதகர் மூலமாக அவரின் குடும்பத்தாருக்கு, அங்குள்ள மகான்களுக்கு மற்றும் தர்மாபிமானிகளுக்கும் பிரசாதம் அனுப்பி வைப்பார். அது மட்டுமல்ல, அந்த ஸாதகரின் கிராமத்தில் உள்ள மற்ற ஸாதகர்களுக்கும் தவறாமல் பிரசாதம் அனுப்பி வைப்பார்.
– திரு பிரகாஷ் மராட்டே, ராம்னாதி, கோவா.
சில சமயங்களில் ஆச்ரமத்திற்கு வெளியே உள்ள ஸாதகர்கள் அல்லது பிரசார சேவையில் ஈடுபட்டுள்ள ஸாதகர்கள் ஆச்ரமத்திற்கு வருகை தரும்போது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அந்த ஸாதகர்களுக்கு பிடித்தமான பல்வேறு உணவைத் தயாரிக்கும்படி எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளார். பல மாநிலங்களுக்கு சென்று அங்கு தர்மசேவை புரியும் ஸாதகர்கள் மீது அவருக்கு அலாதியான ஒரு பிரியம் உண்டு.
நெருங்கிய குடும்பத்தினர் கூட தர இயலாத அன்பை அவரால் மட்டுமே தர இயலும்! அவரது ப்ரீதியை வெளிக்காண்பிக்கும் நிகழ்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஹே குருதேவா, எப்படி நன்றி தெரிவிப்போம்? தங்களது அன்பால் எங்களைக் கட்டிப் போட்டு தங்களது திருவடிகளில் எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள் என்பதே எங்களின் பிரார்த்தனை!
பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ஈடு இணையற்ற உபதேசங்கள்!
பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உபதேசத்தால் ஸனாதன் ஆச்ரமங்களில் உள்ள நோயுற்ற, வயதான ஸாதகர்களை மற்ற எல்லா ஸாதகர்களும் அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி மற்றும் பத்திய உணவு வழங்க அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு நோயுற்ற ஸாதகர் படுத்த படுக்கையாக இருக்கும்போது அவரை சென்று பார்த்து ஆன்மீக பயிற்சி பற்றிய விஷயங்களைக் கூறி ஆன்மீக நூல்களும் வழங்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள், ஸனாதன் ஸன்ஸ்தா கூடிய விரைவில் முதிய ஸாதகர்களுக்கான வானப்ரஸ்தாச்ரமம் (வாழ்வின் நான்கு நிலைகளில் மூன்றாவது நிலை) அமைக்கும் என்று கூறினார். வாழ்வு முழுவதும் இறைவனை அடைய முயற்சிக்கும் ஸாதகர்கள் முதுமையில் உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ள மாட்டார்கள். இத்தகைய ஸாதகர்களுக்கு தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்வதற்குரிய நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதே இதன் நோக்கம். உண்மையில் இத்தகைய அன்பு ஈடு இணையற்றது!
பூமியில் பாதகமான சூழல் உருவாவதற்கு முன்பே பல மகான்கள் உயிர் துறப்பார்கள். நான் உங்களுடன் இறுதி வரை இருப்பேன்; அதாவது சாதாரண நிலை ஏற்படும்வரை (‘ஹிந்து ராஷ்ட்ரம்’ ஸ்தாபனம் ஆகும்வரை)!
– பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே