பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன் தனித்துவமான ப்ரீதியால் அனைவரையும் இறைவனை அடையும் நோக்கம் என்ற ஆன்மீக இழையால் கோர்த்துள்ளார்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் திடீரென்ற
தரிசனத்தால் அனைத்து ஸாதகர்களும் உணரும் ஆனந்தம்!

ஸனாதன் ஸன்ஸ்தாவின் வழிகாட்டுதலின்படி ஆன்மீக ஸாதனை செய்யும் பல ஸாதகர்கள் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களை இதுவரை சந்தித்ததில்லை. இருந்தாலும் ஆழ்ந்த பக்தியுடன் அவர்கள் அவர் கூறியபடி ஆன்மீக பயிற்சி செய்து வருகின்றனர். வெளியுலகில் மாயையின் கவர்ச்சி வலை விரிந்திருக்க, ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர்கள் அனைத்து கவர்ச்சிகளையும் புறந்தள்ளி பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் மீதுள்ள ஆழ்ந்த பற்றால் ஆன்மீக பயிற்சி செய்து வருகின்றனர். சமூகத்தில் கம்யுனிசம், செக்யுலரிசம், நாஸ்திகம் ஆகியவை பெருமையாக கருதப்படும்போது ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர்கள் தாங்களும் தர்மவழி நடந்து சமூகத்தினரையும் தர்மவழி நடக்க செய்கிறார்கள். இதற்காக அவர்கள் நாஸ்திகவாதிகள் மற்றும் முன்னேற்றவாதிகள் ஆகியோரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளனர்.

ஸனாதன் ஸன்ஸ்தாவுடன் இணைவதற்கு முன்னால் மாயையில் இருந்த இவர்களுக்கு இப்போது நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும் சக்தியைத் தந்தது யார்? சமூகத்தினரின் விமர்சனங்கள், தெரிந்தவர்களின் கேலிப்பேச்சு, குடும்பத்தினரின் எதிர்ப்பு ஆகியவை இருந்தாலும் ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர்கள் தொடர்ந்து ஆன்மீக பயிற்சியை செய்து வருகின்றனர். ஆன்மீக பயிற்சி செய்வதாலேயே சிலர் தீய சக்திகளின் பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர். இவ்வாறு பல கஷ்டங்கள் வந்தாலும் ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியை கைவிடுவதில்லை. மாறாக கஷ்ட காலங்களிலும் மென்மேலும் ஊக்கத்துடன் ஆன்மீக பயிற்சி செய்து வருகின்றனர். இது எப்படி சாத்தியம்? எந்த சக்தி ஸாதகர்களையும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களையும் இணைத்துள்ளது?

ஸாதகர்களை ஆன்மீக பயிற்சியில் தக்க வைத்து கஷ்ட காலங்களில் அவர்களுக்கு மனோபலத்தைத் தரும் அத்தகைய சக்தி எதுவென்றால் அது பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்கள் மீது வைத்துள்ள ப்ரீதி அதாவது எதிர்பார்ப்பில்லாத  அன்பு!

சமூகத்தின் மீது வைத்துள்ள அளவு கடந்த ப்ரீதியே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் தனித்துவ குணம். பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே போன்ற அவதார சமஷ்டி மகான் விஷயத்தில் அவரின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் எண்ணமும் சமூக நலனில் அவருக்குள்ள ஆழ்ந்த தாபத்தைக் காட்டுகிறது.  சமூகத்தின் மீதுள்ள அவரின் இந்த ப்ரீதியால் அனைவராலும் அவரின் அன்பு கலந்த அருளாசியை அனுபவிக்க முடிகிறது.

இன்று முழு ஸனாதன குடும்பமும் இந்த சைதன்யம் செறிந்த ப்ரீதி என்ற கயிற்றால் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் 79-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் சமூகத்தினரிடம் அவருக்குள்ள ப்ரீதி பற்றிய சிறு அறிமுகத்தைத் தர இருக்கிறோம். ஸ்ரீ குருவின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் புத்தியை பக்தியை அருளுமாறு இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!

ஐரோப்பாவை சேர்ந்த திரு தேயான் க்லேசிக் அவரின் முயற்சிகளை
கேட்டு மகிழும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே (தற்பொழுது பூஜ்ய தேயான் க்லேசிக்,
ஸ்பிரிச்சுவல் சைன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன், ஆஸ்திரேலியா)

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அகண்ட ப்ரீதி!

ஸ்தாபன, மாநில, மத கட்டுப்பாடுகள் இல்லை : பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அகண்ட ப்ரீதிக்கு எந்த விதமான ஸ்தாபன, மாநில, மத கட்டுப்பாடுகளும் இல்லை. ஸனாதனின் ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும் என்று எந்த அளவு அவர் முயற்சிக்கிறாரோ அதே அளவு மற்ற ஸ்தாபனங்களை சேர்ந்த ஹிந்துத்வவாதிகளும் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவ்வப்பொழுது ஸாதகர்களிடம் கஷ்டத்தில் உள்ள ஆழ்ந்த ஹிந்து பற்றுள்ளவர்களுக்கு உதவி செய்யும்படி கூறுவார். ஹிந்து தர்மம் கற்க வேண்டும் என்பதற்காக மேலை நாட்டிலிருந்து வந்த மற்ற மதங்களை சேர்ந்த ஆன்மீக ஆர்வலர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக பல மணி நேரங்கள் செலவழித்து அவற்றைத் தீர்த்து வைப்பார்.

எதிராளியிடமும் குரோதம் பாராட்டாமல் இருத்தல் : ஸனாதன் ஸன்ஸ்தாவை பலர் பல விதங்களில் விரோதிக்கின்றனர். இருந்தாலும் இவர்கள் மீது அவருக்கு எந்த குரோதமும் ஏற்பட்டதில்லை. இறைவனை அடைய முயற்சிக்கும் ஸாதகர்களை துன்புறுத்துவது என்பது பெரும் பாவச் செயலாகும். இத்தகைய பாவத்தை எதிராளிகள் செய்யக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான பதிலடிகள் ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. தவறுகளை உணர வைத்து, பண்பாட்டு சீரழிவை தடுத்து எதிராளிகளுக்கும் தீமை ஏற்படக் கூடாது என்ற பரந்த அன்பு மனப்பான்மை கொண்டவர் அவர்.

ஏதோ கருத்து வேற்றுமையால் ஆன்மீக பயிற்சியைக் கைவிட்டு பிரிந்து சென்ற ஸாதகர்கள் மீதும் அன்பு கொண்டவர் : ஆன்மீக பயிற்சியை பாதியில் விட்டு சென்ற ஸாதகர்களிடமும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கு எந்த விரோத உணர்வும் இல்லை. அவர்கள் சிறிது காலம் கழித்து மீண்டும் திரும்பி வரும்போது அவர்கள் மீதும் அன்பைப் பொழிகிறார்.

1.    பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதியின் தனித்துவ தன்மை

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே தெய்வீக குழந்தைகளையும் ஆகர்ஷிக்கிறார்.
மும்பையை சேர்ந்த குழந்தை ந்யோம் சாவந்த் (வயது 10 மாதங்கள்), தானே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலேவை நோக்கி தாவியபோது அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.

1 அ. க்ஷண நேரம் அவரது ஸத்சங்கத்தில் இருந்தாலும் அனைவரிடமும் நெருக்க உணர்வை ஏற்படுத்துகிறார் : பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களை சந்தித்த உடனேயே நெருக்க உணர்வு ஏற்படுவதை ஸாதகர்கள் மட்டுமல்ல, மாறாக சமூகத்திலுள்ள ஹிந்துக்கள் மற்றும் மற்ற சம்ப்ரதாயங்களை சேர்ந்த மகான்கள் ஆகியோரும் அனுபவித்துள்ளனர். இத்தகைய ஆர்வலர்கள், ஸாதகர்கள் மற்றும் ஆழ்ந்த ஹிந்து பற்றுடையவர்கள் மீது அவர் அபரிமித அன்பைப் பொழிவதால் அவருடன் ஐக்கிய உணர்வு எப்போது ஏற்பட்டது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. சில மகான்களும் ஹிந்து பற்றுள்ளவர்களும் ராம்னாதி ஆஸ்ரமத்திற்கு வரும்போது தங்களின் தாய்வீட்டுக்கு வந்துள்ளதாக அவர்கள் உணர்கின்றனர். ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பு என்ற விதையை ஆச்ரமம் எங்கும் அவர் விதைத்திருகிறார். அதோடு ஆச்ரமம் எங்கும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அதிர்வலைகளை உணர முடிவதால் மகான்களும் ஏனைய ஹிந்து பற்றுள்ளவர்களும் அவரிடம் உடனடி நெருக்கத்தை உணர்கின்றனர்.

1 ஆ. அவரிடமுள்ள குணமான ப்ரீதியை மற்றவர்களிடமும் ஆழப் பதிய வைத்தல் : பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் தனித்துவ சிறப்பு என்னவென்றால் அவர் தன்னைப் போலவே ஸனாதனின் ஸாதகர்களின் மனங்களிலும் ப்ரீதி என்ற குணத்தை ஆழப் பதித்துள்ளார். இன்று, வீட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீ. தள்ளி சேவை புரியும் ஸனாதனின் ஸாதகர்கள் அனைவரும் ஒரு தனித்துவ குடும்ப உணர்வால் ஒன்றுபட்டுள்ளனர். இன்றைய கால கட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் தங்களுக்குள் ஒத்துப் போவதே கடினம். அவ்வாறிருக்க ஸனாதனின் ஆச்ரமங்களில் நூற்றுக்கணக்கான ஸாதகர்கள் அமைதியாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணம் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன்னிடமுள்ள ப்ரீதி என்ற குணத்தின் ஒரு பகுதியை அவர்களின் மனங்களிலும் பதிய வைத்துள்ளார்.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களால் சில வருடங்களாக தன் அறையை விட்டுக் கூட வெளியே வர முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அவ்வப்பொழுது அளித்து வந்துள்ள வழிகாட்டுதல்களை ஆதாரமாகக் கொண்டு ஸனாதனின் வழிகாட்டும் ஸாதகர்களும் மகான்களும் உலகெங்கும் உள்ள ஸாதகர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகின்றனர். இது போன்று எல்லா வழிகளிலும் ஸாதகர்கள் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதியை அனுபவித்து வருகின்றனர். அவரது ப்ரீதி இடம் மற்றும் காலத்திற்கு கட்டுப்பட்டதல்ல.

எப்படி பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் மகான்கள், ஸாதகர்கள், ஹிந்து பற்றுள்ளவர்கள் மற்றும் சமூகம் ஆகிய எல்லோரிடமும் ப்ரீதி கொண்டிருக்கிறாரோ அவ்வாறே ஸாதகர்களும் பிரசார சேவையில் ஈடுபடும்போது அனைவரிடமும் அன்புணர்வு கொண்டிருக்கின்றனர்.

1 இ. தன்னிடம் பற்றுக் கொள்வதைக் காட்டிலும் தெய்வீக தத்துவத்துடன் ஒன்றிணையக் கற்றுக் தருதல் : சமூக நலனுக்கான பணி ஆரம்பமானதால் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தீய சக்திகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவரது தேஹமே தேவர்களும் அசுரர்களும் போரிடும் களமாகிவிட்டது. அப்படி இருக்கும்போதும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களை ஸ்தூல அளவிலும் சூட்சும அளவிலும் பாதுகாத்து வருகிறார்.

அவர், ஸாதகர்கள் தன்னிடம் பற்றுக் கொள்வதைக் காட்டிலும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பற்று வைப்பதை ஊக்குவிக்கிறார். ஸாதகர்களிடம் அவருக்கு அபரிமித ப்ரீதி இருந்தாலும் இறைத் தத்துவத்துடன் ஒன்றுவதற்கும் எங்கும் நிறைந்த பரப்ரம்மத்தை ஆராதிக்கவும் அதிக முக்கியத்துவம் அளித்து கற்றுத் தருகிறார்.

2. ப்ரீதியுடன் அழகாக இயைந்துள்ள மற்ற தன்மைகள்

2 அ. தத்துவத்தில் நிலையாக நின்று ஸாதகர்களின் ஆன்மீக பயிற்சியில் ஏற்படும் தடைகளை நீக்குதல் : ஒரு ஸாதகர் தன் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தால் ஆன்மீக பயிற்சியில் தவறுகள் இழைத்து இறைவனிடமிருந்து தூர விலகும்போது அவரிடம் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கடுமையாக நடந்து கொண்டு அந்த ஸாதகர் தன் ஆளுமை குறைகளைக் களைவதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார்.

அவர்கள் அந்தத் தவறுகளை தொடர்ந்து செய்யும்போது அவற்றை உணவுக் கூடத்திலுள்ள பலகையில் எழுதச் சொல்கிறார். பிராயசித்தமும் எடுத்துக் கொள்ள சொல்கிறார்.

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் அளித்துள்ள இந்தப் பலகையும் பிராயச்சித்தமும் அந்த குறிப்பிட்ட குறையைக் களைவதற்கான வரமாக விளங்குகிறது. ஒரு தவறை ஆழ்ந்து பயின்று புரிந்து கொள்ளும்போதே அது தொடர்ந்து ஏற்படுவதில்லை.

குருவின் இந்தக் கடுமையான வார்த்தைகளும் அவர் ஸாதகர்களின் மீது வைத்துள்ள அளவில்லா ப்ரீதியைக் காட்டுகிறது. பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் கூறியுள்ளபடி இன்று பல ஸாதகர்கள் ஆளுமைக் குறைகளை மற்றும் அஹம்பாவத்தைக் களையும் வழிமுறையைக் கையாள்வதால்  வாழ்க்கையில் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சி நிரம்பிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றனர்.

2 ஆ. மனிதகுலத்தின் அடிப்படை நலனில் உள்ள ஆழ்ந்த அக்கறை : மனித வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. தேசமும் தர்மமும் கூட இன்று கஷ்டங்களை எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு சங்கடத்திற்கான தீர்வைத் தேடி ஓடுவதற்கு பதில் ஆன்மீக பயிற்சி செய்து நம் அடிப்படை ஸாத்வீகத் தன்மையை அதிகரிப்பது அதிக மகத்துவம் வாய்ந்தது என்ற விஷயத்தை தொடர்ந்து ஸாதகர்களின் மனங்களில் பதிய வைத்துள்ளார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மனித குலத்திற்கு வழிகாட்டுதல் வழங்கக்கூடிய கிரந்தங்களை பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

மிகக் குறைந்த அளவே பிராணசக்தி இருந்தும் கூட கிரந்தங்கள் எழுதும் பணியை நிறைவு செய்வதற்காக தொடர்ந்து எழுதுகிறார். ஆனால் இத்தகைய உயர் நிலை ஆன்மீக அதிகாரம் கொண்ட அவருக்கு இவ்வளவு கஷ்டத்திற்கிடையே கிரந்தங்கள் எழுத வேண்டிய தேவைதான் என்ன? இல்லைதான்! இருந்தாலும் அகில மனித குல நலனுக்காக அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவரின் ப்ரீதிக்கு ஈடு இணை என்பதே இல்லை!

இது போன்று மேலும் பல தெய்வீக குணங்களின் இருப்பிடம் அவர். அனைத்து தெய்வீக குணங்களையும் உள்ளடக்கிய ப்ரீதி அவருடையது. அதனால் மற்றவர்களை தன்னுடையவர்களாகவே அவர் எண்ணுகிறார். அதேபோல் மற்றவர்களும் அவரைத் தங்களுடையவர் என்றே எண்ணுகின்றனர். இத்தகைய தனித்துவமான தூய அன்பு பரிமாற்றம் குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் இடையே உள்ளது.

சில வருடங்களாகவே எல்லா ஸாதகர்களும் குருவின் இந்த ப்ரீதி என்ற சமுத்திரத்தில் மூழ்கி திளைத்து வருகின்றனர். அவற்றில் சில முத்துக்களையே இங்கு பகிர்ந்து கொண்டோம். தொடர்ந்து அருள் மழையைப் பொழிந்து வரும் குருவின் மகத்துவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இத்தகைய ப்ரீதி மழையில் நனைய பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் பாதுகாப்பு குடையின் கீழ் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதே அவரின் அருட்திறனை நம்மால் புரிந்து கொண்டு அனுபவிக்க முடியும்.

(தொகுத்தவர் : குமாரி சைலி டின்க்ரே, ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (4.5.2020))

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment