பிரார்த்தனையின் பல வகைகள்

சகாம (பலனை எதிர்பார்த்து) மற்றும்
நிஷ்காம (பலனை எதிர்பாராது) பிரார்த்தனைகள்

1. பலனை எதிர்பார்த்து பிரார்த்திப்பது

அ. அர்த்தம்

ஒரு விருப்பம் பூர்த்தி ஆவதற்கோ அல்லது உலகரீதியான சந்தோஷ வாழ்க்கை அமைவதற்கோ இறைவனைப் பிரார்த்திப்பது.

ஆ. உதாரணங்கள்

1. இறைவா! எனக்கு செல்வத்தைக் கொடு. 2. இறைவா! எனது வயிற்று வலியை குணப்படுத்து.

2. பிரதிபலனை எதிர்பாராது பிரார்த்திப்பது

அ. அர்த்தம்

நிஷ்காம பிரார்த்தனை என்பது உலக ரீதியான வாழ்க்கையில் எந்தப் பலனையும் எதிர்பார்க்காதது. நிஷ்காம பிரார்த்தனையில் கடவுளிடம் சரணாகதி செய்வது ஒன்றே முக்கிய குறிக்கோளாக இருக்கும். எனவே இந்த விதமான பிரார்த்தனை அகம்பாவத்தையும், ஆசைகளையும் விரட்டி, ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

ஆன்மீக முன்னேற்றம் அல்லது குருவின் இயக்க வெற்றிக்காக செய்யப்படும் பிரார்த்தனை நிஷ்காம பிரார்த்தனையாகும்.

ஆ. உதாரணம்

இறைவா ! உன் எதிர்பார்ப்பின்படி தர்மகாரியத்தை என் மூலம் செய்விப்பாயாக. – வைத்யாச்சார்யா டாக்டர் வசந்த் பாலாஜி ஆடவலே, செம்பூர், மும்பை (1980)

யார் சகாம பூஜை பண்ணி, சகாம பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்கள் உலக மாயையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். மாறாக யார் நிஷ்காம பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்கள் உலக மாயையிலிருந்து விடுபட்டு இறைவனை உணரத் துவங்குகிறார்கள். எனவே யார் இறைவனை உணர்வதற்காக ஸாதனை செய்கிறார்களோ அவர்கள் நிஷ்காம பிரார்த்தனையே செய்ய வேண்டும்.

 

வ்யஷ்டி (தனிமனித) மற்றும்
ஸமஷ்டி (சமூக நலனுக்கான) பிரார்த்தனை

1. வ்யஷ்டி பிரார்த்தனை

தனிப்பட்ட முறையில் நன்மைகள் அடைவதற்கும், துன்பங்கள் நீங்குவதற்கும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதற்கும் செய்யும் பிரார்த்தனையே வ்யஷ்டி பிரார்த்தனையாகும்.

2. ஸமஷ்டி பிரார்த்தனை

நமது குடும்பம், சமூகம், சமுதாயம், நகரம், தேசம் ஆகியவற்றின் நன்மைக்காகவும் கஷ்ட நிவர்த்திக்காகவும், ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதே ஸமஷ்டி பிரார்த்தனை.

ஸாதனையின் துவக்கத்தில் இருக்கும் ஸாதகருக்கு கடவுளை உணர்தல் என்பது, நான், எனது ஸாதனை, என்ற ஒரு சிறு எல்லைக்குள் இருக்கும். ஈச்வரனை அடைய ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்கு ஸமஷ்டி பிரார்த்தனை பெரிதும் உதவும். எவ்வாறெனில் ஸமஷ்டி பிரார்த்தனை மூலம் பரந்த மனப்பான்மையும், மற்றவர்களிடம் அன்பும் வளரும்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘பிரார்த்தனை’

Leave a Comment