இந்தக் கட்டுரையில் ராமநவமி உற்சவத்தை கொண்டாடும் இதிகாசம், மகத்துவம், உற்சவத்தைக் கொண்டாடும் வழிமுறை, த்ரேதா யுகம் மற்றும் கலியுகத்தில் ராமநவமியில் உள்ள வித்தியாசம் இவற்றுடன் ராமநவமியின் அர்த்தம் மற்றும் ஏனைய சிறப்பு விஷயங்கள் அடங்கியுள்ளன.
1. திதி
ராமநவமி உற்சவம் சித்திரை மாத சுத்த நவமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
2. இதிகாசம்
ஸ்ரீவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் ஜன்ம தினத்தை ராமநவமியாக கொண்டாடுகிறோம். இன்றைய தினம் புனர்பூச நக்ஷத்திரத்தில் மதிய வேளையில் கர்க லக்னத்தில் சூர்யன் முதலான ஐந்து நக்ஷத்திரங்கள் உள்ள நேரத்தில் அயோத்தியில் ராமசந்திரனின் பிறப்பு ஏற்பட்டது.
3. மகத்துவம்
தெய்வங்கள் மற்றும் அவதாரங்களின் ஜன்மதிதியில் அவர்களின் தத்துவங்கள் பூமியில் அதிகபட்ச அளவு செயல்பாட்டில் இருக்கின்றன. ராமநவமி அன்று ஸ்ரீராமனின் தத்துவம் மற்ற நாட்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக அளவு செயல்பாட்டில் உள்ளது. ராமநவமி அன்று ‘ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற நாமஜபத்தை மற்றும் ராமரின் மற்ற உபாசனைகளை ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்வதால் ஸ்ரீராம தத்துவத்தின் அதிகபட்ச பயன் கிடைக்கிறது.
4. ராமநவமி உற்சவம் ஆன்மீகஉணர்வு
பூர்வமாக இருக்க இவ்வாறு செய்யுங்கள்!
அ. பெண்கள் ஒன்பது கஜ புடவையையும் ஆண்கள் பஞ்சகச்சம்-அங்கவஸ்திரம் அல்லது பைஜாமா-ஜிப்பா போன்ற ஸாத்வீக உடைகளை அணிந்து கொண்டு ராமநவமி உற்சவத்தில் பங்கேற்பது சிறந்தது.
ஆ. மாணவர்களுக்காக ‘ஸ்ரீராமரக்ஷா ஸ்லோக’ பாராயண போட்டி, அகண்ட ராமநாம ஜபம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.
இ. உற்சவ இடத்தில் கர்ணகடூரமான இசையை அலற விடுதல், கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்குகளை வைத்தல் ஆகியவற்றை செய்யக் கூடாது.
ஈ. ராமநவமி உற்சவ ஊர்வலத்தில் தாளம், மிருதங்கம், ஹார்மோனியம் போன்ற ஸாத்வீக வாத்தியங்களையே உபயோகிக்க வேண்டும்.
5. உற்சவத்தைக் கொண்டாடும் வழிமுறை
பல ராமர் கோவில்களில் சித்திரை சுத்த பிரதமை முதல் ஒன்பது நாட்களுக்கு இந்த உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. இராமாயண பாராயணம், கதாகாலட்சேபம் மற்றும் ராமர் மூர்த்திக்கு பல்வேறு அலங்காரங்கள் என்பது போன்று இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நவமி அன்று காலை ராமனின் பிறப்பு பற்றிய கீர்த்தனங்கள் பாடப்படுகின்றன. மதியம் பட்டுத் துணியில் சுற்றப்பட்ட தேங்காய், தொட்டிலில் வைத்து ஆட்டப்படுகிறது மற்றும் பக்தர்குழாம் அதன் மீது குலாலையும் மலர்களையும் தூவுகின்றனர். சில இடங்களில் தேங்காய்க்கு பதிலாக ராம விக்ரகம் தொட்டிலில் வைத்து ஆட்டப்படுகிறது. அதன் பிறகு ஸ்ரீராமனின் விக்ரஹத்திற்கு பூஜை செய்யப்படுகிறது மற்றும் பிரசாதமாக பானகமும் நீர் மோரும் வழங்கப்படுகின்றன.
6. திரேதாயுகத்தில் மற்றும் கலியுகத்தில் ஸ்ரீராமநவமி
திரேதாயுகத்தில் ஸ்ரீராமநவமி | கலியுகத்தில் ஸ்ரீராமநவமி | |
1. ஸாத்வீகத் தன்மையின் அளவு | 70 | 30 |
2. செயல்பாட்டில் உள்ள ராமதத்துவம் | ||
அ. பிரமாணம் (%) | 7 | 3 |
ஆ. நிலை | நிர்குண-ஸகுணம் | ஸகுண-நிர்குணம் |
இ. ஸ்வரூபம் | ஸகுண ரூபம் | சூட்சும ரூபம் |
3. அக்கால ஜீவன்கள் | ||
அ. பிரதான குணம் | ஸத்வ | ரஜ-ஸத்வ |
ஆ. ச்ரத்தையின் அளவு (%) | 70 | 10 |
இ. ஆன்மீக உணர்வு அளவு (%) | 70 | 10 |
4. தீய சக்திகளின் தாக்குதலின் அளவு (%) | 30 | 70 |
5. ராமரின் பிறப்பின் பரிணாமம் | உள்ளே-வெளியே ராமராஜ்யம் ஸ்தாபனம் ஆதல் | தீய சக்திகளின் அழிவு ஏற்படுதல் |
– ஈச்வர் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 28.3.2007, மாலை 6.25)
7. தெய்வங்கள் தொடர்புடைய
திதி சம்பந்தமான விவரங்கள்
அ. ராமநவமி : மகத்துவம்
த்ரேதா யுகத்தில் ராமரின் பிறப்பு நடந்தபோது, அப்போது செயல்பாட்டில் இருந்த ஸ்ரீவிஷ்ணுவின் ஸங்கல்பம், த்ரேதா யுக அயோத்யாவாசிகளின் பக்தி உணர்வு மற்றும் பூமியில் இருந்த ஸாத்வீக சூழ்நிலை ஆகியவற்றால் பிரபு ஸ்ரீராமஜன்ம நிகழ்வின் பரிணாமம் 100% ஆக இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் வரும் சித்திரை சுத்த நவமி அன்று பிரம்மாண்டத்திலுள்ள சூழல் ராம தத்துவத்தை வெளியிட்டு அந்த சூழலை ஸாத்வீகமானதாகவும் சைதன்யம் நிரம்பியதாகவும் ஆக்குவதற்கு விஷ்ணு லோகத்திலிருந்து ஸ்ரீராமதத்துவம் நிரம்பிய விஷ்ணு தத்துவம் பூலோக திசையில் வெளிப்படுகிறது. இந்த ராம தத்துவம் நிரம்பிய ஸாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யத்தை ஒவ்வொரு உயிருள்ள, உயிரற்ற பொருளும் க்ரஹித்துக் கொள்கிறது. அதன் மூலம் அவரவர் காரியங்களை நல்ல முறையில் செய்ய முடிகிறது.
ஆ. ராமநவமி, ஹனுமான் ஜெயந்தி, ஜன்மாஷ்டமி,
தத்த ஜெயந்தி ஆகியவற்றின் மகத்துவம்
காத்தல் தொழில் சுலபமாக நடைபெற ராமநவமி, ஹனுமான் ஜெயந்தி, ஜன்மாஷ்டமி மற்றும் தத்த ஜெயந்தி ஆகிய திதிகளில் ஸ்ரீவிஷ்ணுவின் தத்துவம் விஷ்ணு லோகத்திலிருந்து வெளிப்பட்டு பிரம்மாண்டத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது.
– ஈச்வர் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 28.3.2007, மாலை 6.30)
8. ராமநவமி சம்பந்தமாக
ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து கிடைத்த தகவல்
ராமநவமி என்பது சம்பூர்ண உலகில் தன்னுள்ளும் மற்றும் எல்லா ஸாதகர்களிடத்தும் ராமராஜ்யத்தை ஸ்தாபனம் செய்தல்
‘சித்திரை சுத்த சஷ்டி, கலியுக வருடம் 5114 (29.3.2012) அன்று ‘ராமநவமி என்பது என்னைப் பொருத்த வரையில் என்னது?’ என்று ஸ்ரீகிருஷ்ணனை கேட்டபோது அவர் கூறியது, ‘ராமநவமி என்பது சம்பூர்ண பூமியில் தன்னுள்ளும் அதேபோல் எல்லா ஸாதகர்களிடத்தும் ராமராஜ்யத்தை ஸ்தாபனம் செய்தல்.’ – திருமதி ஷோபனா சேட், மெல்போர்ன், ஆஸ்திரேலியா, சித்திரை சுத்த சஷ்டி, கலியுக வருடம் 5114 (29.3.2012)