வாசகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் தர்மாபிமானிகளுக்கு
ஒரு வேண்டுகோள் மற்றும் ஸாதகர்களுக்கு வழிமுறைகள்
புயல், நிலச்சரிவு, பூகம்பம், வெள்ளம், மூன்றாம் உலகப் போர் போன்ற பேரழிவு எந்த நேரத்திலும் எழலாம். அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது? இதைப் பற்றி எந்த ஞானமும் இல்லாததால், சாதாரண மனிதர்கள் குழப்பமடைந்து மனதின் சமநிலையை இழக்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தவறான செயல்களைச் செய்யலாம் அல்லது தவறான முடிவுகளை எடுக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளை தைரியமாக எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்மீக நடைமுறையின் ஒரு பகுதியாக நாமஜபம் மேற்கொள்வது அவசியம், இதனால் ஆன்மீக வலிமையை நம்முள்ளே உருவாக்கி, சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
பாதகமான காலங்களில் கூட ஆன்மீக பயிற்சியில் எவ்வாறு முயற்சிகள் எடுப்பது என்பதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பிரார்த்தனை
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிராம தேவதை, வாஸ்து தேவதை மற்றும் ஸ்தான தேவதை ஆகியவற்றை ஒவ்வொரு 15 நிமிடங்களிலிருந்து அரை மணி நேரத்திற்கு ‘கடவுளே (தெய்வத்தின் பெயர்) நான் உங்களிடம் சரணடைகிறேன் என்று முழு மனதுடன் ஜபிக்கவும். இந்த பேரழிவிலிருந்து நீங்கள் மட்டுமே எங்களை மீட்க முடியும். உங்கள் நாமத்தை நான் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். என்னை, என் குடும்பத்தை மற்றும் எனது வீட்டைச் சுற்றி உங்கள் நாமத்தின் கவசம் உருவாக்கப்படட்டும்.’
2. நாமஜபத்தை அதிகரித்தல்
நாள்முழுவதும் முடிந்தவரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். கலியுகத்தில் இறைவனின் நாமம் மட்டுமே நமக்குத் துணை, மனதில் ஜபம் செய்து கொண்டே இருங்கள். கைப்பேசி அல்லது ஒலி பெட்டியில் ஜபத்தை ஒலிக்க விடும்போது அதை கேட்பதன் மூலம் ஜபம் செய்ய வேண்டும் என்று ஞாபகம் ஏற்படும்.
3. பிறருக்கு உதவி செய்யும்போது எத்தகைய
ஆன்மீக உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும் ?
இந்த பாதகமான காலகட்டத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் மற்றும் மன தைரியத்தை அளிப்பதன் மூலம் கடவுள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். சமூக சகோதரத்துவத்தைப் பேணுவது ஒவ்வொருவரின் மதக் கடமையாக இருந்தாலும், இன்னொருவருக்கு உதவும்போது ‘நான் உதவி செய்யவில்லை, கடவுளே இதை என் மூலம் செய்து வருகிறார்’ என்ற உணர்வு இருக்க வேண்டும். இது, ‘நான் செய்கிறேன்’ என்ற எண்ணத்தைத் தடுக்கும், மேலும் அந்த நபருடன் கொடுக்கல்-வாங்கல் கணக்கும் உருவாகாது.
4. ஆளுமை குறைகளின் தீவிரத்தை மற்றும் அகம்பாவத்தின்
வெளிப்பாட்டைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்வது
இத்தகைய சூழ்நிலைகளில் மனதில் கலக்கம், பதட்டம், அச்சம் மற்றும் அதனால் அமைதியின்மை போன்ற ஆளுமை குறைபாடுகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இத்தகைய சூழ்நிலையில் இருந்து வெளியேறலாம்.
4அ. பின்வரும் சுய ஆலோசனையை எடுப்பதன்
மூலம் பதட்டத்தை வெற்றி கொள்ளவும் (அ2 உத்தி)
சம்பவம் : அதிக மழை பெய்ததால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
சுய ஆலோசனை : நகரத்தின் நிலைமையைக் கவனிக்கும்போது, ‘எனக்கும் எனது குடும்பத்திற்கும் என்ன நேரிடும்’ என்ற ஒரு எண்ணம் என் மனதில் ஏற்படும்போது, நான் நிகழ்காலத்தில் வாழ்ந்தால்தான் நிலைமையை எதிர்கொள்ள முடியும், கடவுளும் அதைதான் விரும்புவார் என்பதை நான் உணர்வேன். நான் வீட்டிலுள்ள பொருட்களை தண்ணீரில் மூழ்காமல் பாதுகாப்பாக வைப்பேன், அச்சமயத்தில் எனது குடும்பத்திற்கு உதவுவதுதான் எனது கடமை / ஆன்மீக பயிற்சி என்பதை உணர்வேன். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நான் கற்றுக்கொண்ட விஷயங்களை நினைவுகூர்ந்து பொருத்தமான செயல்களை நாமஜபத்துடன் செய்வேன்.
4 ஆ. பயம் ஏற்பட்டால் சம்பவத்தை ஒத்திகை பாருங்கள் (அ3 உத்தி)
ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயம் உங்களுக்கு இருக்கும்போது, அ3 உத்தியின்படி ஒரு சுய ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் : தொலைக்காட்சியில் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட செய்தியைப் பார்த்தேன். அதன்பிறகு, ‘அண்டை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எங்கள் வீடுகளை காலி செய்யச் சொன்னால், நான் வேறு இடத்திற்கு செல்ல முடியுமா?’ என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். இத்தகைய எண்ணத்தால் என் மனம் பயத்தில் நிரம்பியது.
அ. அருகிலுள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த இடத்தை காலி செய்யுமாறு நகராட்சி ஊழியர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
ஆ. இந்த சூழ்நிலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இ. அடிப்படை தேவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.
ஈ. பேரழிவு நிர்வாகத்தின் சில நிபுணர்கள் எங்களுடன் வருகிறார்கள். நான் அவர்களின் உதவியுடன் வெள்ள நீரில் நடந்து கொண்டிருக்கிறேன். வெள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் நான் எச்சரிக்கையுடன் என் வழியைத் தெரிந்து கொண்டு முன்னேறுகிறேன். நான் தொடர்ந்து பிரார்த்தனை மற்றும் நாமஜபம் செய்கிறேன்.
உ. நான் எங்கு சிக்கலை எதிர்கொண்டாலும், உதவியாளர்களின் உதவியுடன், கடவுளின் அருளை நான் அனுபவிக்கிறேன். எனவே என் மனம் ஸ்திரமாக இருப்பதோடு கடவுள் மீது என் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது.
ஊ. கடவுளின் அருளால் நான் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைகிறேன்.
எ. கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நான் என்னுடன் கொண்டு வந்த அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வைக்கிறேன். சுய ஆலோசனைகள் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ஸனாதன் ஸன்ஸ்தாவின் புனித உரை ‘ஆளுமை குறைபாடு நீக்குதல் பற்றிய செயல்முறை (பகுதி 2)’ ஐப் பார்க்கவும்.
பிரஹ்லாதனை போல் இறைவன் மீது
தீவிர பக்தியை வளர்க்க முயற்சி செய்யுங்கள்
கடவுள் மீதான நம்பிக்கை எந்தவொரு பேராபத்தையும் கடந்து செல்ல உதவுகிறது. பக்த பிரஹ்லாதனின் உதாரணம் அனைவரும் அறிந்ததே. பயங்கர பேராபத்துக்களை எதிர்கொள்ள நேர்ந்த போதிலும், கடவுள் மீது பிரஹ்லாதனின் நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் கடவுளை ‘நாராயணா’ என்று அழைத்தான். அவனது அபயக்குரலைக் கேட்ட கடவுள் நரசிம்ம (மனித-சிங்க வடிவம்) வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
கடவுள் மீதான நம்பிக்கை எவ்வளவு ஆழமாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குகிறது. ஆன்மீக பயிற்சி இல்லாமல் இந்த உயர்ந்த ஆன்மீக நிலையை அடைவதற்கு மாற்று வழி இல்லை. கடவுள் மீது இத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் படி தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்வதே. பிரஹ்லாதனை போன்ற நம்பிக்கையை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரும் கடவுளின் அகண்ட கிருபையை அனுபவிக்க முடியும்.
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்