தற்போது கொரோனா தொற்று இந்தியா உட்பட பெரும்பான்மையான நாடுகளில் பரவி உள்ளது. இது பொது வாழ்வை பாதித்ததோடு சராசரி மனிதர்களிடம ஒரு பயங்கலந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சிறிய காரணங்களால் மனம் கலங்குவது, கவலைப்படுவது, பயத்தால் பதட்டத்திற்குள்ளாவது போன்ற ஆளுமை குறைபாடுகள் வெளிப்படலாம். இந்த சந்தர்ப்பங்களில் பொருத்தமான சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதால் அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற உதவி கிடைக்கிறது. இது தொடர்பாக, மனசக்தியை மேம்படுத்துவதற்கும் நிலையானதாக மாற்றுவதற்கும் எடுக்க வேண்டிய சுய ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மனதில் தோன்றும் பல்வேறு தவறான எண்ணங்கள் குறைவதற்கு கொடுக்க வேண்டிய சுய ஆலோசனைகள்
1 அ. தவறான எண்ணம் : இன்றைய எதிர்மறை சூழ்நிலையைப் பார்த்து மனம் பதட்டமடைந்து துக்கத்தை அனுபவித்தல் (சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல்)
1 அ 1. சுய ஆலோசனை : எப்பொழுது கொரோனாவால் ஏற்பட்டுள்ள இன்றைய எதிர்மறை சூழ்நிலையைப் பார்த்து மனம் துக்கப்படுகிறதோ, அப்பொழுது ‘இவை எல்லாம் இறைவனின் இச்சைப்படி நடக்கிறபடியால் வரவிருக்கும் ஆபத்துக்காலத்தை எதிர்கொள்ள எல்லோர் மனங்களையும் இறைவன் தயார்ப்படுத்துகிறான்’ என்பதை உணர்ந்து ‘இறைவன் இதிலிருந்து எனக்கு என்ன கற்றுத் தருகிறான்?’ என்பதை நான் சிந்திப்பேன்.
1 ஆ. தவறான எண்ணம் : ‘ஆபத்துக்கால நிலையில் ஸாதனை செய்வதற்கான முயற்சி கடினமாக உள்ளது’ என தோன்றுவது
1 ஆ 1. சுய ஆலோசனை : எப்பொழுது ‘ஆபத்துக்கால நிலையில் ஸாதனை செய்வதற்கான முயற்சி கடினமாக உள்ளது’ என்று எனக்குத் தோன்றுகிறதோ அப்பொழுது ‘இன்றைய சூழ்நிலையிலும் மனதளவில் ஸாதனையின் எல்லா முயற்சிகளையும் (ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவத்தைக் களைதல், ஆன்மீக உணர்வு விழிப்படைவதற்கான முயற்சி போன்றவை) என்னால் சுலபமாக செய்ய முடியும்’ என்பதை உணர்ந்து, ஸாதகமான காலத்தைக் காட்டிலும் பாதகமான காலத்தில் நேரத்தின் மகத்துவம் பலமடங்கு அதிகமாகிறது மற்றும் செய்யும் முயற்சிகளின் பலனும் பலமடங்கு கிடைக்கிறது என்பதை உணர்ந்து நான் நேர்மறை உணர்வுடன் முயற்சி செய்வேன்.
1 இ. தவறான எண்ணம் : ‘ஆயுளில் எவ்வளவு மகத்துவபூர்வமான தினத்தை நான் வீட்டில் இருந்து கொண்டு வீணடிக்கிறேன்’ என்ற எண்ணம் எழுதல்
1 இ 1. சுய ஆலோசனை : எப்பொழுது என் மனதில் ‘ஆயுளில் எவ்வளவு மகத்துவபூர்வமான தினத்தை நான் வீட்டில் இருந்து கொண்டு வீணடிக்கிறேன்’ என்ற எண்ணம் எழுகிறதோ, அப்பொழுது ‘இன்றைய கொரோனா தொற்றால் ‘குடிமக்கள் வீட்டில் இருத்தல் நலம்’ என்ற அரசின் ஆணையை கீழ்ப்படிவதே என் ஸாதனை’ என்பதை உணர்ந்து ‘நான் வீட்டில் உட்கார்ந்தபடியே வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை செய்வதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?’ என்பதை பொறுப்புள்ள ஸாதகரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வேன்.
1 ஈ. தவறான எண்ணம் : ‘வீட்டில் உட்கார்வது எனக்கு மிகவும் வெறுப்பாக உள்ளது’ என்ற எண்ணம் எழுதல்
1 ஈ 1. சுய ஆலோசனை : எப்பொழுது என் மனதில் ‘வீட்டில் உட்கார்வது எனக்கு மிகவும் வெறுப்பாக உள்ளது’ என்ற எண்ணம் தோன்றுகிறதோ அப்பொழுது ‘வீட்டு காரியங்களை சேவையாக செய்யும்போது என் ஸாதனை நடைபெறும், அத்துடன் நான் வீட்டில் உட்கார்ந்தவாறே வ்யஷ்டி ஸாதனை (ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவத்தைக் களைதல், ஆன்மீக உணர்வு விழிப்படைவதற்கான முயற்சி மற்றும் ஆன்மீக உபாயம் போன்றவை) மற்றும் முடிந்தால் ஸமஷ்டி சேவை செய்வதை ஸ்ரீகுரு என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்’ என்பதை உணர்ந்து நான் அதற்காக முயற்சி செய்வேன்.
1 உ. தவறான எண்ணம் : ‘நான் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவேனோ’ என்ற பயம் ஏற்படுதல்
1 உ 1. சுய ஆலோசனை : எப்பொழுது என் மனதில் ‘நான் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவேன்’ என்ற எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது ‘ஒவ்வொருவரின் இறப்பு நேரமும் இறைவனால் நிச்சயிக்கப்பட்டுள்ளது; அதனால் கொரோனா மூலமாக அல்ல, மனிதர்களுக்கு எந்த ஒரு காரணத்தினாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இறப்பு ஏற்படலாம்’ என்பதை நான் உணர்ந்து மனிதப் பிறவியை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதற்கு ஸாதனையில் ஈடுபடுவேன்.
1 ஊ. தவறான எண்ணம் : ‘இது போன்ற கடின சூழ்நிலையை கடந்து செல்வதற்குரிய மனோபலம் என்னிடம் இல்லை’ எனத் தோன்றி மன அழுத்தம் ஏற்படுதல்
1 ஊ 1. சுய ஆலோசனை : எப்பொழுது ‘இது போன்ற கடின சூழ்நிலையை கடந்து செல்வதற்குரிய மனோபலம் என்னிடம் இல்லை’ என்று எனக்குத் தோன்றுகிறதோ அப்பொழுது ‘கருணை நிரம்பிய பகவான் நல்ல மற்றும் தீய ஆகிய இரு சூழ்நிலைகளிலும் என்னுடனேயே உள்ளார்; பாதகமான சூழ்நிலையில் நான் என்ன செய்வது அவசியம்?’ என்பதை எனக்கு உணர்த்தி அவனே என் மனோபலத்தை அதிகரிக்கப் போகிறார்’ என்பதை உணர்ந்து நான் பகவானிடம் திடமான நம்பிக்கை வைப்பேன்.
1 எ. தவறான எண்ணம் : ‘நான் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்படுவேன்’ என்ற எண்ணத்தால் பயம் ஏற்படுகிறது
1 எ 1. சுய ஆலோசனை : கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுவிடுவேனோ என்று நான் பயப்படும்போதெல்லாம், ‘தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்பதை எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டு, நாள் முழுவதும் பெரும்பாலான நேரங்களில் நாமஜபம் செய்வதோடு ஸத்யத்தின் சங்கத்தில் இருப்பேன்.
1 ஏ . தவறான எண்ணம் : மருந்து எடுத்துக்கொண்டும் என் மகளுக்கு குளிர்/காய்ச்சல் குணமாகவில்லை என்று கவலைப்படுதல்
1 ஏ 1. சுய ஆலோசனை : என் மகளுக்கு குளிர்/காய்ச்சல் பல நாட்கள் இருக்கும் சமயத்தில், குளிர்/காய்ச்சல் ஒவ்வொரு முறையும் கொரோனா நோய்க்கிருமியால்தான் ஏற்படும் என்பது அவசியமில்லை என்பதை உணர்ந்து, இறைவன் மீது நம்பிக்கை வைத்து, மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி மருந்துகளை அவளுக்கு கொடுப்பதோடு அவளின் நிலையை பற்றி அவர்களுக்கு தவறாமல் தெரிவிப்பேன்.
1 ஐ. தவறான எண்ணம் : கொரோனா நோய்க்கிருமி தொற்றால் என் குடும்பத்தினர் என்னைப் பார்க்க பயணிக்க முடியாது என்று கவலைப்படுதல்
1 ஐ 1. சுய ஆலோசனை : ‘என் குடும்பத்தினர் என்னைப் பார்க்க பயணிக்க முடியாது’ என்று நான் கவலைப்படும்போது, இன்றைய நிலையில் அனைவரின் பாதுகாப்பிற்காக பயணிக்காமல் இருப்பதே நல்லது என்பதை நான் உணர்வேன். ‘இது ஒரு தாற்காலிக நிலை’ என்பதை உணர்ந்து நானும் எனது குடும்பத்தினரும் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வேன்.
1 ஒ. தவறான எண்ணம் : தற்போது பொதுமுடக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் (பால், மளிகைப்பொருட்கள், மருந்துகள் முதலியன) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; அதனால், ‘இவை நமக்கு கிடைக்குமா?’ என்று கவலைப்படுதல்
1 ஒ 1. சுய ஆலோசனை : ‘அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக என்னால் அவற்றைப் பெற முடியுமா,’ என நான் கவலைப்படும்போது, அனைத்து குடிமக்களுக்கும் வீட்டிலேயே அனைத்து பொருட்களையும் விநியோகிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பதை நான் உணர்வேன். அதனால் கவலையை ஒழித்து நாமஜபம் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்துவேன்.
2. சுய ஆலோசனைகள் எடுக்கும் முறை
மேலே உள்ள பொருத்தமற்ற எண்ணங்கள், பதட்டம் அல்லது கவலை ஏதேனும் இருந்தால், அதனுடன் தொடர்புடைய சுய ஆலோசனையை 15 நாட்களுக்கு அல்லது உங்கள் எண்ணங்கள் குறையும் வரை எடுத்துக் கொள்ளுங்கள். சுய ஆலோசனை கொடுக்கும் இந்த அமர்வுகள் ஒரு நாளைக்கு 5 முறை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அமர்வின் போதும் ஒரு சுய ஆலோசனையை 5 முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. மனதை ஒருமுகப்படுத்தி சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் குறுகிய காலத்திற்குள் தவறான எண்ணங்கள் குறைந்து வருவதை அனுபவியுங்கள் !
மனதை ஒருமுகப்படுத்தி சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளும்போது அவை ஆழ்மன எண்ணப்பதிவுகளாகி, மனதின் பதட்டங்களும் கவலைகளும் குறுகிய காலத்திற்குள் குறைவதை பலர் அனுபவித்துள்ளனர். எனவே, சுய ஆலோசனைகளை ஒருமுகத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள். பயனற்ற எண்ணங்கள் காரணமாக சுய ஆலோசனைகள் அமர்வை ஒருமுகத்துடன் எடுக்க முடியாவிட்டால், அவற்றை முணுமுணுக்கலாம் அல்லது காகிதத்தில் எழுதி படிக்கலாம். இது தானாகவே எண்ணங்கள் மீதான கவனத்தை குறைப்பதோடு சுய ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கவும் உதவுகிறது. சுய ஆலோசனைகளை சத்தமாக சொல்லும்போது மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் உள்ளதா என்பதில் கவனம் செலுத்தவும்.
மேலே குறிப்பிட்டுள்ளதைத் தவிர வேறு ஏதேனும் எண்ணங்களால் மன அழுத்தம், பதட்டம், மனக்கவலை போன்றவை ஏற்பட்டால், அவற்றுக்கும் நீங்கள் சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளலாம்.
(மனசிக்கல்களை அகற்ற, சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வது ஆளுமைக் குறைபாடுகளை அகற்றுவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஆளுமை குறைபாடுகளை அகற்றுவதற்கான முழு செயல்முறை பற்றிய விரிவான தகவல்கள், ‘ஆளுமை குறைபாடுகளை மற்றும் அகங்காரத்தைக் களைதல் [பகுதி 7]’ என்ற ஸனாதனின் புனித நூல் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன)
‘தற்போதைய கஷ்ட காலத்தில் கடவுள் நம்மைப் பாதுகாக்கப் போகிறார்!’ என்ற முழு நம்பிக்கையுடன் ஆன்மீக பயிற்சியை அதிகரிக்கவும்.
– (ஸத்குரு) திருமதி. பிந்தா ஸிங்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (27.3.2020)
4. ஆபத்துக்கால சூழ்நிலையில் கவலை, மன அழுத்தம் போன்றவற்றால் மனம் பதட்டமடைந்தால் கீழே கூறப்பட்டுள்ள சுய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும்!
4 அ. சுய ஆலோசனைகளை வழங்க மனதுக்கு
நினைவுபடுத்துவதற்கு கொடுக்க வேண்டிய சுய ஆலோசனை
எப்பொழுது இன்றைய சூழ்நிலையைப் பார்த்து என் மனம் பதட்டமடைகிறதோ, கவலைப்படுகிறதோ அப்பொழுது ‘நான் இது சம்பந்தமாக சரியான சுய ஆலோசனையைக் கொடுக்கும்போது என் எண்ணங்களை வெற்றி கொள்ள முடியும்’ என்பதை உணர்ந்து நான் நம்பிக்கையுடன் என் மனதிற்கு அதற்கேற்ற சுய ஆலோசனையை வழங்குவேன்.
4 ஆ. மனதின் உற்சாகம் மற்றும் நேர்மறைத் தன்மை
அதிகரிப்பதற்கு இந்த சுய ஆலோசனையை வழங்கவும்!
‘பராத்பர குருதேவர் சில வருடங்கள் முன்பே வரவிருக்கும் ஆபத்துக்காலத்தைப் பற்றி தெரிவித்தார் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான உபாயங்களையும் தந்தார். இது போன்ற தீர்க்கதரிசியான, அனைத்தும் அறிந்தவரான அத்தகைய குருதேவரின் வழிகாட்டுதல் எனக்குக் கிடைத்துள்ளதால் நான் மிகுந்த பாக்கியசாலி ஆகிறேன். குரு எதிர்பார்க்கும்படியான அத்தகைய ஸாதனை செய்வதற்கு நான் ஆழ்ந்த ஆர்வத்துடன் முயற்சிப்பேன்.’
இந்த சுய ஆலோசனையைத் தருவதன் மூலம் குருதேவரிடம் நன்றி உணர்வு மிகுவதால் ஸாதனைக்கான முயற்சி அதிக உற்சாகத்துடன் நடக்கிறது.
மனம் பதட்ட நிலையில் இருக்கும்போது எந்த முயற்சியையும் செய்வது இயலாது. அதனால் மேற்கூறப்பட்ட இரு சுய ஆலோசனைகளையும் ஒவ்வொரு முறையும் 5 தடவைகள் தர வேண்டியது அவசியமாகிறது.
4 இ. பகவானிடம் ச்ரத்தை அதிகரிப்பதற்கு கீழே
குறிப்பிட்டுள்ள சுய ஆலோசனைகளை வழங்கவும்!
பகவானிடம் ச்ரத்தை இருந்தால் எந்த கஷ்ட நிலையிலிருந்தும் மீண்டு வருவதற்கான பலம் கிடைக்கிறது. ச்ரத்தை அதிகரிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்ட, ஆழ்மனதில் பதியக்கூடிய சுய ஆலோசனைகளை தினமும் 3 வேளை படிக்கவும். எல்லா சுய ஆலோசனைகளும் ஆழ்மனதில் பதியும் என்பதால் நாள் முழுவதும் 3 வேளை (ஒவ்வொரு வேளையும் கீழே கொடுக்கப்பட்ட சுய ஆலோசனைகளில் இரண்டை) படிக்கலாம்.
4 இ 1. ஆபத்துக்காலத்தை தாண்டி செல்வதற்கு ஒரே உபாயம் என்னவென்றால் ‘பகவானிடமுள்ள ச்ரத்தை’! ச்ரத்தையால் பகவானின் வலுவான பாதுகாப்பு கவசம் நம்மை சுற்றி ஏற்படுகிறது.
4 இ 2. ‘தெய்வம் எது செய்தாலும் அது நம் நன்மைக்கே’ என்ற பகவானின் வசனத்தில் எனக்கு பூரண ச்ரத்தை உள்ளது.
4 இ 3. குருவானவர் ஒரு முறை சிஷ்யனை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டால் பிறகு எந்தப் பிறவியிலும் அவனை வித்தியாசப்படுத்த மாட்டார். குருவிடம் இத்தகைய மகத்துவம் இருப்பதால் எனக்கு பராத்பர குருதேவரின் வழிகாட்டுதலின்படி ஸாதனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நான் எக்கவலையும் இன்றி ஸாதனை செய்ய வேண்டும்.
4 ஈ 4. நான் ஸாதனை செய்வதால் இன்றுவரை ஸ்ரீ குருவானவர் என்னை மற்றும் என் குடும்பத்தினரை சங்கடங்களிலிருந்து சுகரூபமாக விடுவிப்பதை நான் அனுபவித்து வருகிறேன்.
4 ஈ 5. ஸனாதனின் எல்லா ஸாதக்ர்களும் ஸ்ரீ குருவின் குடையின் கீழ் ஸாதனை செய்து வருகின்றனர். இதுவே பிரம்மாண்டத்தின் மிகவும் பாதுகாப்பான இடம். ஒவ்வொருவரை சுற்றியும் குருதேவரின் அருளால்/சைதன்யத்தால் பாதுகாப்பு கவசம் உள்ளது. அதனால் அதி சூட்சும நோய்க்கிருமிகளும் ஸாதகர்களை நெருங்க முடிவதில்லை.
4 ஈ 6. பக்த பிரஹ்லாதனைப் போன்ற திட ச்ரத்தை என் மனதிலும் உண்டானால் வெளி சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் என் ஆழ்மனதில் எந்த பரிணாமும் ஏற்படாது. என் மனம் ஆனந்தமாக, ஸ்திரமாக மற்றும் பகவானுடன் தொடர்பில் உள்ளதாக இருக்கும்.
– ஸத்குரு (திருமதி.) பிந்தா ஸிங்க்பால்