ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 1

அகில மனிதகுலம் ஆபத்துக் காலத்தில்
உயிருடன் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வழிகாட்டும் ஒருவரேயான
பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே!

ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருப்பதற்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1.    ‘கொரோனா’ நுண்கிருமி ஆபத்து என்பது மகாபயங்கர ஆபத்துக் காலத்தின் ஒரு சிறு முன்னோடி!

ஜனவரி 2020 முதல் ‘கொரோனா’ நுண்கிருமி உலகையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கொரோனா ஆபத்தால் பொதுமுடக்கம் அனுசரிக்கப்பட்டதால் பல உத்தியோக அமைப்புகளின் மீது மிகுந்த பரிணாமம் ஏற்பட்டது, அதோடு பொருளாதார தேக்கமும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பெரும் உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு என்ற வாள் எப்போதும் தலை மேல் தொங்குவதால் எங்கும் சுதந்திரமாக சுற்றித் திரிதல், ஆஸ்பத்திரிக்கு சென்று நோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவையும் கடினமாக தோன்றுகின்றன. எங்கும் ஒருவித அழுத்தம் மற்றும் பயம் நிரம்பிய சூழல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 2020 வரை ஏற்பட்டுள்ள இந்த நிலையைப் பார்க்கும்போது வரக்கூடிய மகாபயங்கர ஆபத்துக் காலத்தின் ஒரு முன்னோட்டம் போல் இது விளங்குவதாக தெரிகிறது. .

2.      வரவிருக்கும் மகாபயங்கர ஆபத்துக்
காலத்தின் ஒரு சிறிய ஸ்வரூபம்

மகாயுத்தம், பூகம்பம், வெள்ளம் போன்ற ஸ்வரூபங்களில் மகாபயங்கர ஆபத்துக் காலம் நம்மை நோக்கி நெருங்கி விட்டது. ‘இது நடக்கும்’ என்பது நிச்சயம் என்று பல நாடிகணிப்பு சொல்பவர்கள் மற்றும் தொலைநோக்குடைய சாது-ஸந்த்கள் முன்பே கூறியுள்ளனர். இந்த சங்கடங்கள் ஆரம்பித்து விட்டதை இப்போது நம்மால் உணர முடிகிறது. ‘கொரோனா’ நோய்க்கிருமி ஆபத்து சீனாவால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன் வைத்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சீனாவை எதிர்த்து வழக்குகள் பதிவு செய்துள்ளன. சுருக்கமாக இது மகாயுத்தம் அருகே நெருங்கி விட்டதைக் காண்பிக்கிறது. இந்த பயங்கர ஆபத்துக்காலம் சில நாட்களோ, மாதங்களோ இல்லாமல் வருடம் 2023 வரை, அதாவது இன்றிலிருந்து 3 வருடங்கள் வரை அதாவது பாரதத்தில் ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ (ஆதர்சமான ஈச்வர ராஜ்யம்) ஸ்தாபனம் ஆகும்வரை நீடிக்கும்.

இந்த ஆபத்துக் காலத்தில் மின்சார தடை ஏற்படும். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நின்று விடும். அதனால் அரசு அமைப்புகள் எல்லா இடங்களுக்கும் உதவ செல்ல முடியாது. அரசு செய்யக்கூடிய உதவி காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும். அதனால் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  தட்டுப்பாடு பல மாதங்களுக்கு ஏற்படலாம், அல்லது கிடைத்தாலும் ‘ரேஷன்’ முறையில் கிடைக்கலாம். டாக்டர், வைத்தியர், மருந்துகள், ஆஸ்பத்திரி போன்ற வசதிகள் சுலபமாக கிடைக்காமல் போகலாம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆபத்துக் காலத்தை கடந்து செல்ல அனைவரும் உடல்ரீதியாக, மனோரீதியாக, குடும்பரீதியாக, நிதிரீதியாக, ஆன்மீகரீதியாக தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

3.      உடல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

‘அன்னமே’ உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை அவசியம் ஆகும். ஆபத்துக் காலத்தில் நீங்கள் பசியோடு இல்லாமல் இருக்க முன்பே அன்னதானியங்களை வேண்டிய அளவு வாங்கி சேமித்து வைப்பது அவசியமாகிறது. இன்றைய தலைமுறைக்கு பல்வகை அன்னதானியங்களை சேமிக்கும் முறை மற்றும் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கும் முறை பற்றித் தெரிவதில்லை. இதற்கான சில ஆலோசனைகளை நாங்கள் இந்த கட்டுரைத் தொகுப்பில் தந்துள்ளோம்.

அன்னதானியங்களை எவ்வளவு சேர்த்து வைத்தாலும் சிறிது சிறிதாக தீர்ந்து விடும். இது போன்ற சமயங்களில் அன்னதானிய பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அன்னதானியங்களைப் பயிர் செய்வதும் அவசியமாகிறது. அரிசி, பருப்புகள் போன்ற தானியங்களை பயிரிடுவது எல்லோராலும் முடியாது; ஆனால் கிழங்குகள், குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தியைத் தரும், வருடம் முழுவதும் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோட்டத்தை வீட்டின் சுற்றுப்புறத்தில் அல்லது குடியிருப்புகளின் மாடிகளில் போடலாம்.

இந்த தோட்டங்கள் சம்பந்தமான விவரங்கள் இந்த கட்டுரைத் தொகுப்பில் அளிக்கப்பட்டுள்ளன.

ஆபத்துக் காலத்தில் அன்னதானியங்களை சமைப்பதற்கு எரிவாயு போன்றவை கிடைக்காமல் போனால் விறகடுப்பு, சோலார் குக்கர் போன்றவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆபத்துக் காலத்தில் எப்போதும் போல் எல்லா உணவு வகைகளையும் தயாரிக்க முடியாது. இக்கண்ணோட்டத்தில் எந்தெந்த உணவுப் பொருட்களை சேமித்து வைக்கலாம் மற்றும் தயாரித்து நீண்ட காலம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. குடும்பத்திற்கு தினமும் உபயோகிக்க தேவையான, மற்றும் சமயத்தில் வேண்டியிருக்கும் பொருட்களின் அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாசகர்கள் எல்லா வகைப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்வது சுலபமாக இருக்கும். மனிதன் தண்ணீரில்லாமல் வாழ முடியாது, மின்சாரமில்லாமல் வாழ கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இதற்காக தண்ணீர் வசதிகள், தண்ணீரை சேமிக்கும் சுத்தப்படுத்தும் வழிமுறைகள், மின்சாரமில்லாமல் உபயோகப்படக் கூடிய உபகரணங்கள் ஆகியவை பற்றியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளன.

இக்கட்டுரைத் தொகுப்பில் ஒரு விஷயம் சம்பந்தமான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவரின் அவசியம், அவரிடமுள்ள இடவசதி, நிதிநிலை, அங்குள்ள தட்பவெட்ப நிலை போன்ற பூகோள நிலைகளை கருத்தில் கொண்டு இவற்றை நடைமுறைப்படுத்தலாம். இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமான செயல்பாடுகளை விளக்குவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அவை தெரிவிக்க மட்டுமே பட்டுள்ளன. உதா. ‘ஆபத்துக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கிணறு தோண்டுங்கள்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற விளக்கங்கள் தரப் படவில்லை. இது போன்ற காரியங்களுக்கு வாசகர்கள், அதற்குரிய நிபுணர்களை அண்டவும் அல்லது அதற்குரிய நூல்களைப் படிக்கவும்.

4.      மானசீக நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஆபத்துக்காலத்தில் பலருக்கு மனம் நிலைகொள்ளாமல் தவித்தல், கவலைகள் ஏற்படுதல், அவநம்பிக்கை உருவாதல், பயம் ஏற்படுதல் போன்ற கஷ்டங்கள் ஏற்படலாம். இவை ஏற்படாமல் இருக்கவும் பாதகமான சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ளவும் ‘மனதிற்கு எம்மாதிரியான சுய ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என்பது பற்றிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு படியுங்கள் : அதிகரித்து வரும் கொரோனா நோய்க்கிருமி பரவலால் பயப்படாமல் சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உள்ளத்தை வலுப்படுத்துங்கள்!

5.      ஆன்மீக நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பு ஏற்பட ஒருவர் தன் பலத்தால் எவ்வளவு முயன்றாலும் மகாபயங்கர ஆபத்துக்காலத்தில் பூரண பாதுகாப்பு கிடைக்க இறுதியில் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவர் ஸாதனை செய்து தெய்வத்தின் அருளைப் பெறும்போது அத்தெய்வம் எந்தவிதமான சங்கடத்திலிருந்தும் அவரை பாதுகாக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பைப் படித்த பின்னர் ஆன்மீக ஸாதனை செய்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிய வரும்.

6.      வாசகர்களே, முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பியுங்கள்!

வாசகர்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் கூறியுள்ளபடி இன்றிலிருந்தே செயல்பட ஆரம்பித்தால் வரவிருக்கும் ஆபத்துக்காலத்தை சகித்துக் கொண்டு கடக்க இயலும். வாசகர்கள் இது சம்பந்தமாக மற்ற சமூக உறவுகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இக்கட்டுரைத் தொகுப்பில் மேலும் பல விஷயங்கள் எழுதப்பட்டு வருகின்றன.  வாசகர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே துவங்க இந்த தொடரின் வெளியீட்டை நாங்கள் துவங்கினோம். இது சம்பந்தமாக விரைவில் நூல் தொகுப்புகளும் வெளிவர உள்ளன.

7.      பிரார்த்தனை

‘ஆபத்துக்காலத்தை வெறும் கடப்பதற்கு மட்டுமல்ல, வாழ்வில் ஸாதனை கண்ணோட்டத்தை கொண்டு ஆனந்தமாக இருப்பதற்கும் இக்கட்டுரை தொகுப்பு உதவ வேண்டும்’, என்பதே ஸ்ரீ குரு சரணங்களில் செய்யப்படும் பிரார்த்தனை!

பூஜ்ய ஸந்தீப் ஆளஷி

வரவிருக்கும் ஆபத்துக்காலத்தில் எல்லா மானிடர்களும்
உயிருடன் இருப்பதற்கும் படைப்பின் நலனுக்காகவும்
செயல்பாட்டில் இறங்கும் உலகிலுள்ள ஒரே தீர்க்கதரிசி
பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே!

‘ஹிரண்யாக்ஷன் என்ற பெயருடைய அசுரன் பூமியை சமுத்திரத்திற்குள் ஒளித்து வைத்தபோது பகவான் ஸ்ரீவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியை ரக்ஷித்தார். படைப்பின் சமநிலை எப்பொழுதும் நிலைத்திருக்க பகவான் சிவன் அகண்ட தியான நிலையில் இருக்கிறார். பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே பல தெய்வீக குணங்களை தன்னுள்ளே கொண்டவராக இருப்பதால் அவரையே தெய்வமாக உணரக்கூடிய அனுபூதிகள் பல ஸாதகர்களுக்கு கிடைத்துள்ளன. அதோடு பராத்பர குரு டாக்டர் அவர்களுக்கு தெய்வத்தைப் போலவே அகில மனித குல நலனிலும் ரக்ஷணத்திலும் படைப்புகளின் மீதும் அக்கறை உண்டு.

வரவிருக்கும் ஆபத்துக்காலத்தில் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மகாயுத்தம் போன்ற மனிதர்களால் நிர்மாணமாகும் ஆபத்துகள் ஏற்படக் கூடும். அகில மனித குலத்திற்கும் நல்லமுறையில் இதைத் தாண்டி செல்வதற்குரிய வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் வருடம் 2013 முதல் ‘ஆபத்துக்கால ஸஞ்ஜீவனி’ என்ற நூல் தொகுப்பை ஆரம்பித்தார். இதில் டாக்டர், மருத்துகள் போன்றவை கிடைக்காதபோது தானே தனக்கு நிவாரணம் செய்வதற்குரிய பல்வேறு நிவாரண வழிமுறைகள் அடங்கிய நூல்களும் உள்ளன. இதில் ‘பிராணசக்தி ஓட்ட உபாயம்’ மற்றும் ‘வெற்றுப்பெட்டி நிவாரணம்’ போன்ற சுலபமான ஆனால் அதிக பலனளிக்கக் கூடிய உபாய வழிமுறைகளை பராத்பர குரு டாக்டர் அவர்கள் தானே கண்டுபிடித்துள்ளார். இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் பராத்பர குரு டாக்டர், வருடம் 1980 முதல் அவரின் மும்பை வீட்டில் வசிக்கும் காலகட்டத்தில் ஆயுர்வேதம், அக்யுப்ரெஷர் (அழுத்தமுறை வைத்தியம்), ரேகி போன்றவற்றைப் பற்றிய நூற்றுக்கணக்கான செய்திகளை சேமித்து வைத்திருந்தார். இவை இன்று நூல்களை உருவாக்கும் பணியில் உதவியுள்ளன. இதன் மூலமும் அவரின் தொலைநோக்கு பார்வை நமக்குத் தெரிய வருகிறது.

வரவிருக்கும் ஆபத்துக்காலத்தில் வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகைகள் சுலபமாக கிடைப்பதற்கு உள்நாடு வெளிநாடுகளில் உள்ள மனிதகுலம் அவர்களின் வீட்டின் மாடியில், வெளி முற்றத்தில் மற்றும் வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுலபமாக தோட்டம் அமைப்பதற்கு வேண்டி அத்தகைய மூலிகை செடிகளைப் பற்றி ஸாதகர்களை பயில செய்தார். இவை எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகின்றனவா என்பது பற்றியும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் மூலிகை செடிகளின் தோட்டம் பற்றிய நூலையும் தயார் செய்து வருகிறார்.

ஆபத்துக்காலத்தில் மனிதகுலம் உயிரோடிருக்க வெறும் உபசார வழிகள் பற்றிய தகவல்கள் மட்டுமே போதாது, அன்னதானியங்கள், தண்ணீர், பெட்ரோல், மின்சாரம் போன்ற விஷயங்களும் மனிதகுலத்திற்கு அத்தியாவசியமானவை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆபத்துக்காலத்தை பாதுகாப்புடன் கடக்க எல்லோரிடமும் சரீர அளவில் மட்டுமல்லாமல் மானசீக அளவில், குடும்ப அளவில், நிதி அளவில் மற்றும் ஆன்மீக அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கண்ணோட்டத்தில் ‘ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் மற்றும் சமூக உறவுகளுடன் ஒருங்கிணைந்தும் என்ன செய்ய வேண்டும்’ என்பதைக் கூறும் ஒரே மஹான் பராத்பர குரு டாக்டர் அவர்கள் மட்டுமே. அவர் ‘வரவிருக்கும் ஆபத்துக் காலத்தில் உயிரோடிருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’ என்ற விஷயங்கள் பற்றி தினப்பத்திரிக்கை மற்றும் வலைதளத்தில் தொடர்ந்து பிரசுரித்துள்ளார். அவை நூல் தொகுப்பாகவும் வெளிவர உள்ளன.

ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பு கிடைப்பதற்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு முன்னேற்பாடு செய்தாலும் பூகம்பம், சுனாமி போன்ற மகாபயங்கர ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெற இறுதியில் எல்லாவற்றையும் இறைவனிடமே ஒப்படைக்க வேண்டியுள்ளது. ஒருவர் ஸாதனை செய்து இறைவனின் அருளைப் பெற்றால் அந்த இறைவன் அவரை எந்த சங்கடத்திலிருந்தும் காப்பாற்றுவார். பக்த பிரஹ்லாதன், பாண்டவர்கள் போன்ற அநேக உதாரணங்களின் மூலம் இது நிரூபணமாகி உள்ளது. இதற்காக பராத்பர குரு டாக்டர் அவர்கள் சில வருடங்களாக நூல்கள், பத்திரிக்கைகள், வலைதளங்கள் போன்றவற்றின் மூலமாக அகில மனிதகுலத்திற்கு மிகுந்த ஆதூரத்துடன் ‘இப்பொழுது உயிருடன் இருப்பதற்காக மட்டுமாவது ஸாதனை செய்யுங்கள்’ என கூறி வருகிறார்.

‘தர்மவழி நலிவடைந்து அதர்மத்தின் கை மேலோங்கும்போது பூமியில் சங்கடங்கள் உருவாகின்றன’ என ஹிந்து தர்மசாஸ்திரம் கூறுகிறது. சமூகம் தர்மவழி பின்பற்றி ஸாதகர்களாக மாறும்போது, சமூக, ராஷ்ட்ர வாழ்வில் தர்மமே அடித்தளமாக மாறும்போது பூமியில் சங்கடங்கள் வராது மற்றும் படைப்பின் சமநிலை பாதுகாக்கப்படும். இதற்காக பராத்பர குரு டாக்டர் வெறும் பாரதத்தில் மட்டுமல்ல சம்பூர்ண பூமியில் தர்மத்தை அதிஷ்டானமாகக் கொண்ட ‘ஈச்வர ராஜ்ய’த்தை ஸ்தாபனம் செய்ய ஆன்மீக நிலையில் வழிகாட்டுதல் வழங்குகிறார். அதற்காக ஸந்த், சம்ப்ரதாயங்கள், ஸாதகர்கள், ஹிந்துத்வவாதிகள், தர்மாபிமானிகள் மற்றும் தேசபக்தர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கவும் செய்கிறார்.

கடந்த சில வருடங்களாக பராத்பர குரு டாக்டர் அவர்களின் பிராணசக்தி மிகக் குறைந்த நிலையில், அதாவது உயிருடன் இருப்பதற்கு தேவையான குறைந்தபட்ச அளவில் உள்ளது. அதோடு பல உடல் உபாதைகளும் உள்ளன. அவரே பிரம்மமயமாக இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அவர் ஆனந்தமாக தேஹத்தை தியாகம் செய்யக் கூடும். இருந்தாலும் அகில மனித குலமும் ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் அகில மனித குலமும் ஸாத்வீகமானவர்களாக மாறி எங்கும் ஈச்வர ராஜ்யம் ஸ்தாபனம் ஆக வேண்டும் என்பதற்காகவும் படைப்பின் நலன் கருதி அவர், தன்னுடலில் குறைந்தபட்ச அளவே பிராணசக்தி இருந்தும் தினமும் 15 – 16 மணி நேரம் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டு வருகிறார்.

அப்பேற்பட்ட தர்மஸன்ஸ்தாபகரான, ஜகத்தை உத்தாரணம் செய்பவரான, படைப்பை காப்பவரான, யுகபுருஷரான பரம தயாளு தாயுமானவரான குருதேவரின் சரணங்களில் சிரந்தாழ்த்திய நமஸ்காரங்கள்!’

–        (பூஜ்ய) திரு. ஸந்தீப் ஆளஷி , (11.11.2019)

கோர ஆபத்துக்காலம் சம்பந்தமாக தீர்க்கதரிசிகள், மஹான்கள், ஸப்தரிஷிகள் மற்றும் தெய்வங்கள் கூறியுள்ள கணிப்பு!

2023 வரை அதாவது பாரதத்தில்
‘ஹிந்து ராஷ்ட்ர’ (ஆதர்சமான ஈச்வர ராஜ்யம்)
ஸ்தாபனம் ஆகும்வரை ஆபத்துக்காலம் நீடிக்கும்!

‘இன்று பூகம்பம், வெள்ளம், கொரோனா நோய்க்கிருமி தொற்று போன்றவற்றின் மூலமாக ஆபத்துக்காலம் ஆரம்பித்து விட்டது. வருடம் 2021 முதல் ஆபத்துக்காலத்தின் தீவிரம் மிகவும் அதிகரிக்கும். வருடம் 2023 வரை அதாவது பாரதத்தில் ‘ஹிந்து ராஷ்ட்ர’ (ஆதர்சமான ஈச்வர ராஜ்யம்) ஸ்தாபனம் ஆகும்வரை ஆபத்துக்காலம் நீடிக்கும்! – (பராத்பர குரு) டாக்டர் ஜயந்த் ஆடவலே

1.      ஆபத்துக்காலம் ஓரளவு ஆரம்பமாகி விட்டது
என்பதை வெளிக்காண்பிக்கும் சில இயற்கை
பேரழிவுகள் மற்றும் அகில உலக நிகழ்வுகள்

1அ. சில இயற்கை பேரழிவுகள்

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில உதாரணங்களைப் பார்க்கலாம். வருடம் 2013-ல் கேதார்நாத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 60 கிராமங்கள் அழிந்தன, ஓராயிரம் மக்கள் உயிரிழந்தனர். வருடம் 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருமழையால் 3 லக்ஷ மக்கள் வீடிழந்தனர் மற்றும் 375-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். டிசம்பர் 2018-ல் இந்தோனேஷியாவில் சமுத்திரத்தில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டு சுமார் 300 நபர்கள் உயிரிழந்தனர். கலிபோர்னியாவில் கடந்த சில வருடங்களில் 2 முறை ஏற்பட்ட காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பூமியின் இயற்கை வளங்கள் அழிந்துள்ளன.

1ஆ. மூன்றாவது உலக யுத்தம் ஏற்பட காரணமாக
இருக்கக் கூடிய சில உலக அளவிலான நிகழ்வுகள்

பாகிஸ்தான் தொடர்ந்து பாரதத்தின் எல்லைக்குள் அத்துமீறி நுழைதல் மற்றும் தீவிரவாதிகளின் மூலம் பாரதத்தின் மீது நடத்தும் மறைமுக போர், சீனா அவ்வப்பொழுது பாரதத்தின் மீது நடத்தும் எல்லைப் போர், வடக்கு கொரியாவிடம் உள்ள அணுகுண்டுகளை நஷ்டமாக்குவதில் வடக்கு கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் போராட்டம், சூப்பர் பவர் ஆக வேண்டும் என்ற பேராசையால் நடக்கும் சீன-அமெரிக்க போராட்டம், அமெரிக்கா-ரஷ்யா இடையே திரும்ப ஆரம்பித்துள்ள பனிப்போர், ‘கொரோனா நோய்க்கிருமி ஆபத்து சீனாவினால் உருவாக்கப்பட்டது’ என்று அமெரிக்காவுடன் இணைந்து பல ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மீது தொடுத்துள்ள நஷ்ட ஈடு வழக்குகள் போன்ற நிகழ்வுகளை சிந்தனை செய்தால் பாரதத்தையும் சேர்த்து உலகின் பல நாடுகள் மூன்றாம் உலகப் போரை நோக்கி தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.

2.      ‘மனிதகுலம் எதிர்கொள்ளும்
ஆபத்துக்காலம் எவ்வளவு பயங்கரமாக உள்ளது’,
என்பதை காண்பிக்கும் சில உதாரணங்கள்

2அ. இரண்டாம் உலகப்போர் காலத்தின் நிலை

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனி பிரிட்டனை யுத்தத்திற்கு அழைத்தது. அதனால் பிரிட்டனில் முதல் நான்கு நாட்களுக்குள்ளாகவே 13 லக்ஷம் மக்களை புலம் பெயர செய்ய வேண்டி இருந்தது. யுத்த காலத்தில் இருட்டடிப்பு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இரவு நேரங்களில் வெளியே தெருவில் கனத்த இருள் சூழ்ந்திருந்தது. ஜன்னல் வழியே சிறிது வெளிச்சம் வெளியே தெரிந்தாலும் அதற்கு தண்டனை வழங்கப்பட்டது. இது போன்ற மிகக் கடுமையான மின்சார தடை ஓரிரண்டு நாட்கள் அல்ல, மாதங்களும் அல்ல, 5 வருடங்கள் இருந்தன! இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் இராணுவ பிரச்சாரங்களால் ரஷ்யாவும் பாதிக்கப்பட்டது. அக்காலத்தில் ரஷ்ய மக்கள் இலைகள் மற்றும் மரத்தூள்களை கொண்டு செய்த கேக்கை உண்டு வயிற்றை நிரப்பும் நிலை ஏற்பட்டது.

2ஆ. வருடம் 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு அங்கு
நிலவிய நிலை மற்றும் அதன்மூலம் மக்களிடையே நடந்த சில நிகழ்வுகள்

2 ஆ 1. சமையல் எரிவாயு கிடைக்காததால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்

2 ஆ 1 அ. ‘காஸ் சிலிண்டர்’ கருப்பு சந்தையில் விற்கப்படுதல்

1500 ரூபாய் மதிப்புள்ள ஒரு சமையல் எரிவாயு கருப்பு சந்தையில் 8000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

2 ஆ 1 ஆ. பூகம்பத்தில் இடிந்து விழுந்த வீட்டின் மரத்துண்டுகளை விறகாக பயன்படுத்துதல்

மக்களுக்கு அடுத்த 7 மாதங்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை. அதனால் மக்கள் பூகம்பத்தில் இடிந்து விழுந்த வீடுகளின் மரத்துண்டுகளை அடுப்புக்கு விறகாக பயன்படுத்த ஆரம்பித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு அரசு விறகு கிடைக்க ஏற்பாடு செய்தது, ஆனால் ஒரு கிலோ விறகு இருபது ரூபாய் என விற்கப்பட்டது.

2 ஆ 1 இ. விறகை எரிவாயுவாக உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள்

அ. மர வியாபாரிகள் ஈரமான விறகை விற்றனர். அவை விரைவாக எரியவில்லை, அதனால் அடுப்பை பற்ற வைக்க பெண்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

ஆ. பலரிடம் விறகை வெட்ட கோடாரி இல்லை, கோடாரி வைத்திருந்தவர்கள் பலருக்கு விறகை எவ்வாறு வெட்ட வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் விறகை வெட்ட பிறரை நாட வேண்டி இருந்தது.

இ. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் விறகு அடுப்பில் சமைப்பதை வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. விறகு அடுப்பில் இருந்து வெளிப்படும் புகையால் சுவர்கள் மற்றும் கூரைகள் கருப்பாகிவிடும் என்று வீட்டு உரிமையாளர்கள் கூறுவார்கள்.

2 ஆ 1 ஈ. வாகனங்களின் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக காத்திருந்து கிடைத்த சமையல் எரிவாயுவை வீட்டிற்கு கொண்டுவர கடினமாக இருந்தது

பல வாரங்கள் காத்திருந்த பின், சில சமையல் எரிவாயுக்கள் விநியோகிக்கப்பட்டன; எரிவாயு பற்றாக்குறையால் வாகனங்கள் கிடைக்காததால் வீட்டிற்கு சமையல் எரிவாயுவை எடுத்து வருவது கடினமாகிவிட்டது.

2 ஆ 2. மளிகை சாமான்கள் பற்றாக்குறை

அச்சமையத்தில், மளிகை கடைகளில் பல மளிகை பொருட்கள் கிடைக்கவில்லை. கிடைக்கும் பொருட்களும் வழக்கமான விலையை விட நான்கு மடங்கு அதிகம் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு, வழக்கமாக நூறில் இருந்து நூற்றிஎண்பது வரை விற்றுக்கொண்டிருந்த சமையல் எண்ணெய் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

2 ஆ 3. மருந்துகளின் பற்றாக்குறையால் சிறு நோய்களுக்கெல்லாம் நோயாளிகள் மரணம் அடைந்தனர்

மருத்துவமனைகளில் மருந்துகளின் பற்றாக்குறையால் சில நோயாளிகள் சிறிய நோய்களுக்கெல்லாம் மரணம் அடைந்தனர்.

2 ஆ 4. மின்சார பற்றாக்குறையால் ஏற்பட்ட பிரச்சனைகள்

காத்மாண்டுவில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் அதிகாரபூர்வமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. சில சமயங்களில் மின்சாரம் ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே நீடிக்கும். மின்சாரம் இயக்கப்பட்டதும் மக்கள் தண்ணீர் பம்ப் போடுவது, மின்சார உபகரணங்கள் கொண்டு சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அதிக லோட் உபயோகப்படுத்துவதால் ட்ரான்ஸ்பார்மர்கள் ஃப்யூஸ் ஆகிவிட்டன.   அரசாங்க ஊழியர்களுக்கு இதனை சரி செய்ய 4-5 நாட்கள் தேவைப்பட்டது.

2 ஆ 5. பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால் உண்டாகும் பிரச்சனைகள்

அ. பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால் வாகனங்கள் ஓடவில்லை. இதன் விளைவாக, பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

ஆ. சில சமயங்களில் அரசாங்கம் எரிவாயுவை விநியோகம் செய்தது. ஆனால் அதனை பெற 4-5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. வரிசையில் கடைசியில் நிற்பவரின் முறை வரும் முன் எரிவாயு தீர்ந்துவிடும். எனவே, மக்கள் பல வாரங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது.  அடுத்து எப்பொழுது எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்பது பற்றி அரசாங்கத்திடம் இருந்து எந்த தகவலும் இருக்காது. இதன் விளைவாக, மக்கள் தங்கள் வாகனங்களை வரிசையாக தெருவில் பல நாட்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

இ. வழக்கமாக 100-130 ரூபாய் விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் கருப்பு சந்தையில் 500 ரூபாய்க்கும் மற்றும் 80-100 ரூபாய் விற்ற ஒரு லிட்டர் டீசல்  250-300 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

ஈ. எரிவாயு பற்றாக்குறை சைக்கிள் ஓட்டுநர்களின் எண்ணிகையை அதிகரித்தது. அதனால், மலிவான சைக்கிள்கள் கூட அச்சமயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

2 ஆ 6. மின்சாரம், பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால் இணையதளம் மூடப்பட்டது

பல அலுவலகங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், ஜெனரேடர் கொண்டு மின்சாரம் பராமரிக்கப்பட்டது. எனினும், பூகம்பத்திற்கு பின், மின்சாரத்தோடு பெட்ரோல் டீசல் பற்றாக்குறையும் ஏற்பட்டதால் இந்த ஜெனரேடர்கள் பயனில்லாமல் போயின. அதனால் இணையதளத்தை சார்ந்து இருந்த வேலைகள் நின்று போயின.

2 ஆ 7. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பலர் வேலையை இழந்தனர்

அச்சமயத்தில், 2,000 தொழில்கள் மூடப்பட்டன அதனால் 1 மில்லியன் மக்கள் வேலையை இழந்தனர்.

–        குமாரி சானு தாபா (எஸ் எஸ் ஆர் எஃப் ஸாதகர்), நேபால் (24.4.2016)

மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் எல்லாம் மகா பயங்கர ஆபத்துக் காலத்தின் ஒரு முன்னோட்டம் தான். உண்மையான பயங்கர ஆபத்து காலத்தில் நாம் எதிர்கொள்ள போகும் பிரச்சனைகளின் பரந்த தன்மையை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த பிரச்சனைகளை எல்லாம் திறமையாக சமாளிக்க, நம்முடைய தயார் நிலை விரிவானதாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை!

3. ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க
செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

3 அ. பட்டினியைத் தவிர்க்க இதைச் செய்யுங்கள்

3 அ 1. சமையல் எரிவாயு, அடுப்புக்கு தேவைப்படும் கெரோசின் போன்றவைகளின்
பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்த்து கீழே கூறியுள்ளபடி செயல்படுங்கள்

3 அ 1 அ. வீட்டில் ஒரு விறகு அடுப்பு வைத்துக்கொள்ளவும்

1.      வீட்டில் விறகு அடுப்பு இல்லையென்றால், ஒரு மண், சிமெண்ட் அல்லது இரும்பு அடுப்பு வாங்கி வைக்கவும். சிலர் குறைவான எரிவாயுவை உபயோகிக்கும், குறைவான புகையை வெளியிடும் மற்றும் சுலபமாக இடம் மாற்றக்கூடிய இரும்பு அடுப்பை தயாரிக்கின்றனர். பாரம்பரிய அடுப்புடன் ஒப்பிடும் போது இவையே இத்தகைய அடுப்புகளின் அனுகூலங்கள் ஆகும். ‘தத்தூ சுல்ஹா’ என்று ஒரு தயாரிப்பாளர், போபால், மத்ய பிரதேசத்தில் உள்ளார் (கைப்பேசி : 94250 09113). சமையல் அறையில் இருந்து புகை வெளியேற சிலர் புகைபோக்கி அளிக்கின்றனர். இத்தகைய நவீன அடுப்புகளின் பயன்பாடுகளை நாம் ஆராய்ந்து நம் தேவைக்கு ஏற்ப ஒன்றை வாங்கலாம். (நெருக்கடி சமயத்தில், மூன்று கற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து தற்காலிக அடுப்பை ஏற்பாடு செய்யலாம்.)

2.       ஒரு அடுப்பை எரிய வைக்கும், அதை தினமும் சுத்தம் செய்யும் செயல்முறை போன்றவைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

3.      விறகு, நிலக்கரி, வரட்டி, ‘பயோமாஸ் ப்ரிக்கெட்’ (கரும்பு சக்கை, மரத்தூள், வேர்க்கடலை தோல்கள், சூரியகாந்தி தண்டுகள் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது). பெருநகரங்களில் உள்ள கடைகள்  மற்றும் ஆன்லைனில் ‘பயோமாஸ் ப்ரிக்கெட்’ கிடைக்கின்றது.

4.      அடுப்பில் சமையல் செய்ய கற்றுக் கொள்ளவும். சாதம், பருப்பு,  சப்பாத்தி போன்றவைகளை சமைக்க தெரிந்து கொள்ளவும். அடுப்பில் சமைக்க கற்கும் போது சமையலறை மேடையைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் குறைக்க முயற்சிக்கவும்.

3 அ 1 ஆ. சூரிய சமையல் உபகரணங்கள் வாங்கவும்

1.      சூரிய மின் உற்பத்தி அமைப்பு இல்லாதவர்கள் சோலார் குக்கர் போன்ற உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

சூரிய அடுப்பு

2.      சூரிய மின் உற்பத்தி அமைப்பு வைத்திருப்பவர்கள் இன்டக்ஷன் அடுப்பு மற்றும் அதற்கு பொருத்தமான பாத்திரங்களை வாங்கவும். (மேகமூட்டமான நாட்களில் சூரிய சக்தி கிடைப்பதில் வரம்புகள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.)

3 அ 1 இ. போதுமான ஈரமான குப்பை (காய்கறி துண்டுகள், மீதமுள்ள உணவு, விரைவாக அழுகும் பிற பொருட்கள் போன்றவை) உருவாக்கப்படும் இடத்தில், ஒரு பயோ காஸ் ஆலை வைக்கலாம். சமையல் அறை கழிவோடு சாணி மற்றும் கழிப்பறை கழிவுகளையும் பயோ காஸ் ஆலையில் போடலாம். சில மாநிலங்களில் அரசாங்கமே பயோ காஸ் ஆலையை நிறுவ தேவையான முழு செலவையும் ஏற்கிறது; ஆனால், சில மாநிலங்களில், அரசாங்கம் அதன் பகுதி செலவை ஈடுசெய்யும் மானியத்தை வழங்குகிறது.

பயோ-காஸ் ஆலை

3 அ 1 ஈ. கால்நடைகளை வைத்திருப்பவர்கள் கோபர்-எரிவாயு ஆலையை அமைக்கலாம். அவைகளின் கழிப்பறை கழிவுகளை கோபர் எரிவாயு ஆலைக்குள் விடலாம். அத்தகைய ஆலையை அமைக்கும் ஒரு விவசாயி சில குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் மாநில அரசிடமிருந்து ஆலைக்கு ஒரு பகுதியளவு செலவை ஈடுசெய்யும் மானியத்தைப் பெறலாம்.

கோபர்-எரிவாயு ஆலை

3 அ 2. சமைக்கும் போது மிக்சி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக பாரம்பரியமான உபகரணங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அம்மி-குழவி

அ. மின்சார பிளெண்டரைப் பயன்படுத்தி மோர் சிலுப்புவதற்குப் பதிலாக ஒரு மத்தை  பயன்படுத்துங்கள்.

ஆ. அம்மி மற்றும் உரலை கொண்டு சட்னி மற்றும் வேர்கடலை அல்லது மசாலாக்களை அரையுங்கள்.

உரல்

இ. பாரம்பரிய உபகரணங்களுடன் (அரைப்பதற்கான கை ஆலை, அம்மி  மற்றும்  உரல்) உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாதகமான காலங்களில், அரசாங்கத்தை மட்டுமே 
நம்பியிருக்கும் தவறை செய்யாமல் அனைவரும் வெவ்வேறு
நிலைகளில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் !

பாதகமான நேரங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல் போகலாம்.  இதனால், அரசாங்கம் எல்லா இடங்களுக்கும் எல்லோரிடமும் சென்று உதவி வழங்க முடியாது. அரசாங்கம் அளிக்கும் உதவியும் தடைப்படும். சமையல் எரிவாயு, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஏற்படலாம். விநியோக அமைப்பில் ஊழலுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது. சில உணவுப் பொருட்களை ரேஷனில் வழங்குவது மற்றும் ‘மருந்து விநியோக மையங்களை’ திறத்தல் மூலம் குடிமக்களை ஆறுதல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் அரசாங்க உதவிக்கும் வரம்புகள் உண்டு. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, பாதகமான சூழ்நிலையில் உயிர் பிழைக்க, ஒவ்வொருவரும் உடல் அளவில், மனதளவில் மற்றும் ஆன்மீக அளவில் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

பாதகமான காலங்களில், ‘பாலம் வரும்போது
அதைக் கடப்போம்’ என்ற மனநிலையைத் தவிர்க்கவும்!

பாதகமான நேரங்களைப் பற்றிய தீவிரத்தை உருவாக்க மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும் போது, சிலர், ‘பாதகமான காலங்களில் அனைவருக்கும் என்ன நடக்குமோ அதுவே எங்களுக்கும் நடக்கும். பாதகமான காலங்களில், என்ன நடக்கப் போகிறதோ, அது கட்டாயம் நடந்தே தீரும். அவ்வாறு நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என நினைப்பர்.  இது தொடர்பாக பின்வரும் அணுகுமுறையை கருத்தில் கொள்ள வேண்டும். பாதகமான சூழ்நிலையில் அழிவு கண்டிப்பாக ஏற்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இருப்பர். முதியவர்கள் சார்புடையவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் குழந்தைகள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் குடும்பத்தின் பொறுப்பான நபர்களிடமே உள்ளது. இவர்கள் பாதகமான நேரத்திற்கு தம்மை தயார்படுத்த தவறினால் முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் அவதிப்படுவர். பொறுப்பான நபர்கள் தங்களின் அலட்சியப் போக்கு காரணமாக பாவத்தை சம்பாதிப்பார்கள்.

இக்கட்டுரையின் முழு பதிப்புரிமை (காபிரைட்) ‘ஸனாதன் பாரதீய ஸன்ஸ்க்ருதி ஸன்ஸ்தா’விடம் உள்ளது.

தகவல் : ஸனாதனின் வருங்கால நூல் தொகுப்பு ‘ஆபத்துக் காலத்தில் உயிரோடிருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்’

ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 2

(காபிரைட் : ஸனாதன் பாரதீய ஸன்ஸ்க்ருதி ஸன்ஸ்தா)

 

 

Leave a Comment