பூஜ்ய (டாக்டர்) முகுல் காட்கில்
இன்று கொரோனா விஷ அணுவின் அபாயம் உலகெங்கும் பரவியுள்ளது.
‘கௌசிகபத்ததி’ எனும் நூலில்…
‘அதிவ்ருஷ்டி: அனாவ்ருஷ்டி: சலபா மூஷகா: சுக: |
ஸ்வசக்ரம் பரசக்ரம் ஸ ஸப்தைதா ஈதய: ஸ்ம்ருதா: ||’
( பொருள் : தர்ம வழி நடக்காததால் பெரு மழை, வறட்சி, வெட்டுக்கிளி, எலித் தொல்லை, கிளிகளால் உபத்திரவம், உட்பூசல், எதிரிகளின் தாக்குதல் போன்ற சங்கடங்கள் வரக் கூடும்.)
இன்று கொரோனா விஷ அணு அபாயம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில் நம் தேசத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த சங்கடம் சம்பந்தமாக வைத்திய சிகிச்சைகளுடன் கூட ஆன்மீக பலத்தையும் அதிகரிக்க என்ன நாமஜபம் செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் நான் தெய்வத்திடம் கேட்டேன், ‘கொரோனா விஷ அணுவின் பாதிப்பு நம் மீது ஏற்படாமல் இருக்கவும் அப்படி ஏற்பட்டால் அதை அழிப்பதற்கும் எந்த தெய்வத்தின் தத்துவம் நமக்கு அவசியம்? அச்சமயம் என் மனதில் பதில் தோன்றியது, ‘தேவி, தத்த மற்றும் சிவன் ஆகியோரின் தத்துவங்கள் அவசியம்’. கொரோனா விஷ அணுவை எதிர்த்து நமக்குள் எதிர்ப்பது சக்தி அதிகரித்திட வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சையுடன் கூட ஆன்மீக பலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தெய்வம் உள்ளிருந்து அருளிச் செய்த இந்த மூன்று தெய்வ தத்துவங்களின் பிரமாணப்படி கீழே குறிப்பிட்டுள்ள நாமஜபம் உருவாயிற்று – ‘ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஸ்ரீ துர்கா தேவ்யை நம: – ஓம் நம: சிவாய |’ இந்த நாமஜபத்தை சுலபமாக நினைவில் இருத்த இவ்வாறு வரிசைப்படுத்தி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம் – ‘ஸ்ரீ துர்கா தேவ்யை நம:’ 3 முறை, ‘ஸ்ரீ குருதேவ தத்த’ 1 முறை, ‘ஸ்ரீ துர்கா தேவ்யை நம:’ 3 முறை மற்றும் ‘ஓம் நம: சிவாய’ 1 முறை.
‘இந்த நாமஜபத்தின் பரிணாமம் வயிற்றுள் ஏற்படுகிறது’ என்பதை உணர முடிகிறது. இந்த நாமஜபத்தை 108 முறை (1 மாலை) செய்வதற்கு 40 நிமிடங்கள் எடுக்கின்றன. ‘கொரோனா விஷ அணுவின் பாதிப்பு உலகெங்கும் உள்ள வரை எதிர்ப்பு உபாயமாக வைத்திய சிகிச்சையுடன் கூட ஆன்மீக பலமும் அதிகரிக்க இந்த நாமஜபத்தை தினமும் அரை மணி (1 மாலை) செய்யுங்கள். சிலரிடம் கொரோனா விஷ அணு பாதிப்பின் சில லட்சணங்கள் தென்பட்டால் ஆன்மீக பலத்தை மேலும் அதிக அளவு அதிகரிக்க வேண்டும்; அதற்காக இந்த நாமஜபத்தை தினமும் 3 மணி நேரம் (6 மாலைகள்) செய்ய வேண்டும்’ என்று தெய்வம் உள்ளிருந்து அருளியது.’
– (பூஜ்ய) டாக்டர் முகுல் காட்கில், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா. (20.3.2020)
(இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆடியோவை ஆன்லைன் மூலம் கேட்க முடியும். ஆடியோவை பதிவிறக்கம் செய்யும் வசதி தற்போது தரப்படவில்லை என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.)
Namaskaram 🙏🙏🙏 Thank you!!
நன்றி, தகவல்களை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்!