தத்துவ ஞான கண்ணோட்டத்தில்
இருந்து கொண்டு கடினமான சம்பவங்களை எதிர்கொள்ள
கற்றுத் தரும் ‘ஆ2’ சுய ஆலோசனை வழிமுறை!
இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். இதற்கு முன்பு சுய ஆலோசனை ‘ஆ1’ வழிமுறையைப் பார்த்தோம். இன்று ‘ஆ2’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி தெரிந்து கொள்வோம். (கட்டுரை எண். 7)
‘ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடினமான சம்பவங்கள் நிகழ்கின்றன. இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் சமயத்தில் உதவி கிடைக்கவில்லை என்றால் மனம் பலவீனப்பட்டு போகிறது. அதிக துன்பம் அளிக்கும் தீராத பெரும் நோய், விபத்து, இறப்பு, இயற்கை பேரழிவுகள் போன்ற மிகக் கடினமான நிகழ்வுகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நம் கட்டுப்பாட்டை மீறி நடப்பவை ஆகும். இது போன்ற நிகழ்வுகளை தத்துவ ஞான கண்ணோட்டத்துடன் பார்க்கப் பழகிக் கொள்வதே இதற்கான தீர்வு ஆகும். அதற்காக ‘ஆ2’ சுய ஆலோசனை வழிமுறைப்படி சுய ஆலோசனை வழங்கிக் கொள்வது அவசியம் ஆகிறது.
இந்த வழிமுறைப்படி வடிவமைக்கப்பட்ட சில சுய ஆலோசனை உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெரும் நோய் ஏற்படுதல்
சம்பவம் : எனக்கு பெரும் நோய் ஏற்பட்டதால் சகித்துக் கொள்ள இயலாத வேதனை உண்டாகிறது.
சுய ஆலோசனை : ‘எப்பொழுது எனக்கு பெரும் நோயால் சகித்துக் கொள்ள இயலாத வேதனை ஏற்படுகிறதோ, அப்பொழுது ‘இறைவன் இந்த நோயின் மூலமாக என் பிராரப்த கர்மாவை கழித்து விடுகிறான்’ என்பதை உணர்ந்து ‘இந்த பிராரப்த கர்மாவை சகித்துக் கொள்ளும் சக்தியைத் தா’ என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.’
2. உறவினர் பெரும் நோயால் இறக்கும் தறுவாயில் இருத்தல்
சம்பவம் : ….. அவர்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டதால் அவர் இறக்கும் தறுவாயில் உள்ளார்.
சுய ஆலோசனை :
‘எப்பொழுது …… அவருக்கு பெரும் நோய் ஏற்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரிய வருகிறதோ அப்பொழுது ‘எல்லாம் பிராரப்த கர்மாவின்படி, இறைவனின் சித்தப்படி நடக்கின்றன’, என்பதை உணர்ந்து அவருடைய வேதனை சகித்துக் கொள்ளும்படியாக மாற அவ்வப்பொழுது அவருக்கு நாமஜபம் செய்ய நினைவுறுத்துவேன் மற்றும் அவருக்காக நானும் நாமஜபம் செய்வேன்.’
3. நெருங்கியவரின் மரணம்
சம்பவம் : குடும்பத்திலுள்ள ஒருவர் திடீரென்று இறந்து போனது தெரிந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை நிறுத்த முடியவில்லை.
சுய ஆலோசனை : ‘எப்பொழுது … அவர்கள் இறந்து விட்டார் என்பது எனக்கு தெரிய வருகிறதோ அப்பொழுது ‘பிறந்துள்ள ஒவ்வொருவரும் இறக்க வேண்டியதுதான்; ஈச்வரன் ஒருவனே ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே இருப்பவன்’, என்பதை உணர்ந்து கொள்வேன். அதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி இறந்தவரின் மேற்கொண்ட பயணம் நலமாக நடக்க அவருக்காக தத்த நாமஜபம் செய்வேன் மற்றும் ஸ்திரமாக இருக்க பிரார்த்தனை செய்வேன்.’
இந்த சம்பவத்தில் ‘….. அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்காக நான் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை செய்வேன்’, என்றும் சுய ஆலோசனை வழங்கிக் கொள்ளலாம்.
இறந்தவரின் ஆன்மீக நிலை 60%-க்கு மேற்பட்டு இருந்தால் ‘…. அவர் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டதால் அவருக்கு இறந்த பின் நல்ல கதி கிடைக்கப் போகிறது’, என்பதை கவனத்தில் கொண்டு நான் துக்கப்படுவதற்கு பதிலாக கவலையற்று இருப்பேன்’, என்ற கண்ணோட்டத்தை வழங்கிக் கொள்ளலாம்.
இறக்கும் தறுவாயில் இருப்பவரைப் பற்றியோ அல்லது இறந்தவரைப் பற்றியோ நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த நபரின் ஜீவன் அக்குடும்ப சூழலிலேயே மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது. அதனால் குடும்பத்தினர் இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்படாமல் இறப்பை நோக்கி சாக்ஷி உணர்வுடன் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் கடினமான சூழ்நிலையிலும் அவர்களின் ஸாதனை நடைபெறும்.
– ஸத்குரு (திருமதி) பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (2.1.2018)