பல்வேறு கடினமான சூழ்நிலைகளை
வெற்றிகரமாக எதிர்கொள்ள குறிப்பிட்ட நிகழ்வை
ஒத்திகை பார்க்க உதவும் ‘அ3’ சுய ஆலோசனை வழிமுறை!
இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். இதற்கு முன்பு சுய ஆலோசனை ‘அ2’ வழிமுறையைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இன்று ‘அ3’ சுய ஆலோசனை வழிமுறையைப் பார்க்கலாம். (கட்டுரை எண். 5)
‘தினசரி வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது சிலரின் மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது. கூட்டத்திற்கு நடுவே தனியே செல்ல பயப்படுதல், நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்ட தன்னம்பிக்கை இல்லாதிருத்தல் போன்ற நிகழ்வுகள் வாழ்வில் திரும்பத் திரும்ப ஏற்படலாம்.
பெரும்பான்மையான ஸாதகர்களுக்கு பயம், மனம் விட்டு பேசாதிருத்தல் போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருத்தல், ஒரு கூட்டம் அல்லது சபையில் விஷயத்தை எடுத்துக் கூறுதல், ஸாதகர்களுக்கு ஸத்சங்கம் எடுத்தல் போன்ற சேவைகளை செய்வதற்கு அவர்கள் பயப்படலாம். பொறுப்புள்ள ஸாதகரிடம் தான் செய்த தவறை ஒப்புக் கொள்வதில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் ‘அ3’ சுய ஆலோசனை வழிமுறைப்படி சுய ஆலோசனை வழங்கலாம். அதன் மூலம் பயம் மற்றும் மன அழுத்தம் சிறிது சிறிதாக குறைகிறது.
1. ஆளுமையில் இது போன்ற குறைகள் முழுவதும்
இல்லாதிருக்க இந்த சுய ஆலோசனை வழிமுறையைக் கையாளவும்!
சிக்கனம் இல்லாதிருத்தல், முன் வராதிருத்தல், கடுமையான சுபாவம், பின்வாங்குதல், தன்னம்பிக்கை இல்லாதிருத்தல், தாழ்வு மனப்பான்மை போன்றவை. இதற்கான சுய ஆலோசனையை நிகழ்காலத்தில் தர வேண்டும். இந்த சுய ஆலோசனை வழிமுறைப்படி வடிவமைக்கப்படும் சுய ஆலோசனை 8 முதல் 10 வாக்கியங்கள் இருப்பதால் இதை ஒருமுறை கூறலாம். (மற்ற சுய ஆலோசனை வழிமுறைப்படி வடிவமைக்கப்படும் சுய ஆலோசனை 3 முதல் 4 வாக்கியங்களில் இருப்பதால் ஒரு பயிற்சி சமயத்திற்கு 5 முறை என்ற விகிதத்தில் கூற வேண்டும்.)
2. சுய ஆலோசனையின் உதாரணங்கள்
உதாரணம் 1
சம்பவம் : அதிதிக்கு ‘தன்னால் பிரசார சேவையின்போது நடந்த தவறை மகானிடம் சொல்ல வேண்டாம்’, என்று தோன்றுகிறது. தவறை சொல்லும்போது அவளுக்கு அழுகை வருகிறது.
சுய ஆலோசனை
அ. ‘மகானிடம் தவறை சொல்வதற்கு முன்னால் நான் சிந்தனை செய்கிறேன்.
ஆ. ‘மகானிடம் தவறைக் கூறுவதால் மனம் லேசாகிறது’, என்ற நேர்மறையான எண்ணத்தை மனதில் இருத்தி தவறை சொல்வதற்காக அவரை தொலைபேசி மூலம் அழைக்கிறேன்.
இ. ‘இந்த தவறு நிகழும்போது என் மனதில் என்ன தவறான சிந்தனை எழுந்தது?’ என்பதை நான் மகானிடம் உள்ளது உள்ளபடி கூறுகிறேன். கவலையற்று சஹஜமாக என்னால் தவறைக் கூற முடிகிறது. உணர்வுபூர்வமாக இருப்பதை என்னால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிகிறது.
ஈ. மகான் கூறிய கண்ணோட்டத்தைக் கேட்ட பிறகு, ‘நான் இந்தத் தவறிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’ என்பது எனக்குப் புரிகிறது.
உ. மகானின் சரணங்களில் ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்து நான் தொலைபேசி உரையாடலை முடிக்கிறேன்.
ஊ. ‘மகானிடம் என் தவறைக் கூறும்போது எனக்கு அழுகை வரும், பேசும்போது இடையே தடைபடும், தவறை தெளிவாகக் கூறுவதில் தடங்கல் ஏற்படும்’, என்று எனக்குத் தோன்றியது; ஆனால் அது போன்று எதுவும் நடவாததால் ஆனந்தம் ஏற்பட்டது.’
உதாரணம் 2
சம்பவம் : தர்மாபிமானிகளின் கூட்டத்தில் ராஷ்ட்ரம் மற்றும் தர்மம் மீது நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றி எடுத்துக் கூறும்படி முருகனிடம் பொறுப்புள்ள ஸாதகர் கூறினார்; ஆனால் ‘என்னால் எல்லோர் முன்னிலையிலும் பேச இயலாது’, என்ற சிந்தனையால் முருகனுக்கு பயம் ஏற்பட்டது.
சுய ஆலோசனை
அ. ‘பொறுப்புள்ள ஸாதகரின் மூலமாக இறைவனே கூட்டத்தில் விஷயத்தை எடுத்துக் கூறும் சேவையை எனக்குத் தந்துள்ளார். என்னுடைய மனம், அமைதியாக, ஆனந்தமாக, லேசாக உள்ளது.
ஆ. நான் ஸாதகர்களிடமிருந்து எவ்வாறு விஷயத்தை வழங்க வேண்டும் என்ற வழிமுறையைத் தெரிந்து கொள்கிறேன்.
இ. கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு அதைப் பயில்கிறேன்.
ஈ. பயின்ற குறிப்புகளை உரத்த குரலில் மற்றவருக்குப் புரியும்படி கூறி ஒத்திகை பார்க்கிறேன்.
உ. கூட்டத்திற்கு முன்பு மீண்டும் ஒரு முறை குறிப்புகளைப் படிக்கிறேன். எல்லா குறிப்புகளையும் வரிசைக்கிரமத்தோடு நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது.
ஊ. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் தெய்வத்திடம் சரணாகதி உணர்வுடன் ஆழ்ந்து பிரார்த்தனை செய்கிறேன்.
எ. கூட்டம் ஆரம்பித்தவுடன் நான் எல்லா குறிப்புகளையும் அமைதியாக வரிசைப்படி தக்க உதாரணங்களுடன் வழங்குகிறேன்.
ஏ. முக்கிய குறிப்புகளை வழங்கும்போது கம்பீரத்துடனும் மற்ற குறிப்புகளை வழங்கும்போது சஹஜ உணர்வுடனும் வழங்குகிறேன்.
ஐ. ‘நான் எல்லோரையும் தன்னம்பிக்கையுடன் பார்க்க முடியாது, அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்க முடியாது, பேசும்போது எனக்கு பயம் ஏற்படும், இடையே நான் விஷயத்தை மறந்து போவேன்’, என்று எனக்குத் தோன்றியது; ஆனால் மேற்கூறிய எதுவுமே நடக்காமல் என்னால் தன்னம்பிக்கையுடன் விஷயங்களை வழங்க முடிகிறது; பார்வையாளரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் எனக்கு ஆனந்தம் ஏற்படுகிறது.’
ஸாதகர்கள் இது போன்ற சுய ஆலோசனையை வடிவமைத்து சுய ஆலோசனை செயல்முறை வேளையிலும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பும் வழங்க வேண்டும். கடினமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள இது போன்ற சுய ஆலோசனையையும், பயத்தின் மூல காரணமாக விளங்கும் ஆளுமை குறையைப் போக்க ‘அ1’ சுய ஆலோசனை வழிமுறைப்படி சுய ஆலோசனையையும் வழங்கினால் அந்த ஆளுமை குறை அடியோடு அழியும்.
– (ஸத்குரு) திருமதி. பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (23.12.2017)