பக்தர்களே, உங்களின் ஆன்மீக உணர்வு
விழிப்படையவும் புத்திவாதிகளே, உங்களின் மூலம்
நடந்துள்ள தர்மதுரோக செயல்களால் உண்டான பாவம்
தொலையவும் ஹனுமானின் பராக்கிரமங்களை
நினைவு கூறுங்கள்!
ஹனுமான்
‘எந்த புத்திவாதிக்கு ‘ஹனுமான் என்றால் வெறும் ஒரு குரங்குதானே’, எனத் தோன்றி அவரை அவமதிக்கின்றாரோ அவர் கீழே குறிப்பிட்டுள்ள அனுபூதிகளை சிறிது சிந்தனை செய்து தனக்குத் தானே இக்கேள்வியைக் கேட்க வேண்டும். ஹனுமாரால் செய்து முடிக்கப்பட்ட காரியங்களை பூமியில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் செய்ய முடியுமா? புத்திவாதிகளே, உங்களுக்கு இரு வழிகளே உள்ளன. ஒன்று, நீங்கள் மாருதியைப் போன்று ஏதாவது ஒரு பராக்கிரம செயலை செய்து காண்பியுங்கள் அல்லது மாருதியின் அளவில்லாத பராக்கிரமத்தை ஒப்புக் கொண்டு உங்களின் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்!
1. ஆகாயத்தில் பறத்தல்
பிறந்த உடனேயே உதிக்கும் சூரியனை பழுத்த பழம் என்று நினைத்து அதைத் தாவிப் பிடிக்க ஆகாயத்தில் பறந்தார்.
2. பெண்களைப் பாதுகாத்தல்
2 அ. சுக்ரீவனின் மனைவியான ருமையின் கற்பைக் காப்பாற்றுதல்
ராம-லக்ஷ்மணர்களை சுக்ரீவன் சந்திப்பதற்காக ஹனுமான் பம்பா நதி தீரத்திலிருந்து ருஷ்யமுக பர்வதம் வரை அவர்களைத் தன் தோளில் சுமந்து கொண்டு பர்வதத்தை நோக்கி ஆகாய மார்க்கமாக பறந்தார். அச்சமயம் சுக்ரீவனின் மனைவியான ருமை வாலியின் பிடியில் இருந்தாள். அப்பொழுது அவள் ஹனுமானை மனத்தால் ஸ்மரிக்க ஹனுமான் அங்கு வெளிப்பட்டு வாலியிடமிருந்து அவளின் கற்பைக் காப்பாற்றினார்.
2 ஆ. சீதையைத் தேடி செல்லுதல்
சமுத்திரத்தைத் தாண்டி அவர் இலங்கைக்குள் நுழைந்து சீதா மாதாவைத் தேடிக் கண்டுபிடித்து அச்செய்தியை ஸ்ரீராமனிடம் தெரிவித்தார்.
3. ராம-லக்ஷ்மணர்களை ரக்ஷித்தல்
மற்றும் அவர்களுக்கு பலவிதங்களில் உதவி புரிதல்
அ. இந்த்ரஜித் ராம-லக்ஷ்மணர்கள் மீது நாக-பாசத்தை விடுத்து அவ்விஷத்தால் அவர்களைக் கொல்வதற்கு முயன்றான். உடனே ஹனுமான் விஷ்ணுலோகத்திற்கு சென்று அங்கு கருட பகவானின் உதவியைப் பெற்று ராம-லக்ஷ்மணர்களை நாக-பாசத்திலிருந்து விடுவித்தார்.
ஆ. லக்ஷ்மணன் யுத்தத்தில் பெரும் காயம் அடைந்தபோது மரணவாயிலிலிருந்து அவரைக் காப்பாற்ற, ஹனுமான் வடக்கு நோக்கி பறந்து சென்று அங்கு ஸஞ்ஜீவனி மூலிகை உள்ள துரோணகிரி பர்வதத்தை அலாக்காக தூக்கிக் கொண்டு வந்தார்.
இ. அஹிராவணன் மற்றும் மஹிராவணன் மாயாவி சக்தியால் ராம-லக்ஷ்மணர்களை பாதாளத்திற்கு கொண்டு சென்றபோது, ஹனுமான் பாதாளத்திற்கு சென்று அந்த அசுரர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்து பின்பு ராம-லக்ஷ்மணர்களை சுகரூபமாக பூமிக்குத் திரும்ப அழைத்து வந்தார்.
ஈ. விபீஷணன் எதிரியின் தம்பியாயினும் சரணாகதி செய்த அவனை ஏற்றுக் கொள்வதே நியாயம் என்றும் சீதா மாதா அக்னியைக் காட்டிலும் பவித்ரமானவள் ஆதலால் ‘மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் அரிய நல்யோசனையை ஸ்ரீராமனுக்கு வழங்கினார்.
உ. ஸ்ரீராமனின் ஆணையை ஏற்று ஸ்ரீராம அவதாரம் நிறைவான பின்பு ராமராஜ்யத்தை ஆள்வதற்கு லவ-குசர்களுக்கு ஹனுமான் பக்கபலமாக இருந்தார்.
4. ஹனுமானின் கீழ்ப்படியும் குணம்
அ. மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் தெய்வீக ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் ஆணையை சிரமேற் கொண்டு கொடி ரூபமாக ஹனுமான் பங்கேற்று தர்மத்தை ரக்ஷித்தார்.
ஆ. ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி ஹனுமான், சேவை உணர்வுடன் பீமன், அர்ஜுனன், பலராமர், கருடன் மற்றும் சுதர்சன சக்கரம் ஆகியோரின் கர்வத்தை அடக்கினார்.
5. நலன்-நீலன் ஆகிய வானரங்களுக்கு உதவி புரிதல்
ஸ்ரீராமனின் நாமத்தை கல்லில் பொறித்து ராமசேதுவை அமைப்பதற்கு நலன்-நீலன் ஆகியோருக்கு ஹனுமான் உதவி புரிந்தார்.
6. இலங்கையை தகனம் செய்தல்
வாலில் தீ வைத்த பின்பு அந்த நெருப்பானது அவரை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹனுமானின் லங்கா தகனத்திற்கு உதவி செய்தது.
7. ஹனுமானின் ரூபம்
அ. ஸப்தசிரஞ்ஜீவிகளில் ஒருவராக ஹனுமான் ரக்ஷணம் மற்றும் வழிகாட்டுதல் ஆகிய காரியங்களை செய்து வருகிறார். அத்துடன் எங்கெங்கு ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் கலியுகத்தில் சூட்சுமமாக இருந்து ராமபக்தர்களுக்கு தன் ஆசீர்வாதத்தை அருளி அபயமளிக்கிறார்.
ஆ. ராமரின் மேலுள்ள அளவில்லாத தாஸ்யபக்தியால் தாஸமாருதியாகவும் அபரிமிதமான வீரத்தால் வீரமாருதியாகவும் ஹனுமான் எங்கும் வழிபடப்படுகிறார். அவசியத்திற்கேற்றபடி அந்தந்த ரூபத்தை தரித்துக் கொண்டு ஹனுமான் அக்காரியத்தை முடிக்கிறார்.
இ. ஹனுமானின் சூட்சும ரூபத்தின் உதவி கொண்டு நம் அந்தக்கரணத்தில் உள்ள அஹங்காரம் என்னும் ராவணனின் இலங்கையை தகனம் செய்தால் நம் இதயத்தில் ராமராஜ்யம் ஸ்தாபனம் ஆகும் என்பதை ஸாதனை செய்யும் எந்த ஜீவனும் மறக்கக் கூடாது.’