ஆகாயத்திலிருந்து விழும் நீரின் மணித்துளிகள்
அமிழ்ந்து திளைக்கும் படைப்பின் கண்மணிகள்
நைந்த மனதை நெகிழ்விக்கும் நீர்த்துளியின் ஓசை
நில அன்னை இசைப்பாளே மழையின் இன்னிசை
மழையால் பூமியில் விழும் எண்ணிலா நீர்த்துளிகள்
ஆனந்தத்தை அளிக்கும் ஒரு மழைத்துளி
குமாரி பிரியங்கா லோட்லிகர்
இறைவன் படைத்துள்ள படைப்புகளில் காலங்களின் மகத்துவம் அசாதாரணமானது. காலங்களிலும் மழைக்காலம் இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இன்பத்தை அளிக்க வல்லது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு விஷயம் முதல் மழை! அம்மழை பெய்வதால் ஏற்படும் ஆனந்தமும் உற்சாகமும் வேறானது; ஆனால் ஏன் இது போன்று வேறு விதமான ஆனந்தம் மழையால் ஏற்படுகிறது என்று எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? இது சம்பந்தமான சில ஆன்மீக விஷயங்கள் கீழ்வருமாறு.
1. நிலம், நீர் மற்றும் காற்று ஆகிய
தத்துவங்கள் இணைவதால் மழை பெய்யும்பொழுது
அதன் நீர்த் துளிகளைப் பார்த்தவுடன் ஆனந்தம் உண்டாகிறது
மழையின் துளி பூமியில் விழுகிறது, அச்சமயத்தில் நில தத்துவம் நீர் தத்துவத்துடன் இணைகிறது. அதே துளி பூமியில் பட்டபின் மேலே திவலையாக தெறிக்கும்போது மேலெழும் செயல்பாட்டால் காற்று தத்துவம் செயல்படுகிறது. அதனால் நிலம், நீர் மற்றும் காற்று ஆகிய மூன்று தத்துவங்களும் செயல்படுவதால் இக்காட்சியைக் காணும்போது மனம் துள்ளுகிறது.
2. தேங்கி நிற்கும் நீரைக் காட்டிலும் வழிந்தோடும்
நீரைக் காணும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுதல்
மழைநீர் மழைத்துளிகளாக ஆகாயத்திலிருந்து பூமியில் விழுகிறது; அச்சமயம் அது ஒரே இடத்தில் தேங்கி நின்றால் நமக்கு அத்தகைய ஆனந்தம் கிடைப்பதில்லை. ஆனால் அதே நீர் வழிந்தோடினால் அதிக ஆனந்தம் ஏற்படுகிறது. வழிந்தோடும் நீரின் பிரவாஹம் நமக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் செயல்பாட்டில் இருக்க கற்றுத் தருகிறது. படைப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆனந்தத்தைத் தரும் இயற்கை அன்னையவள் பிரத்யக்ஷமாக தன் காரியங்களின் மூலம் கருணையுடன் கற்றுத் தருகிறாள்.
– குமாரி பிரியங்கா லோட்லிகர், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம் (14.7.2016)