1. மகான்கள் தெய்வத்தின் ஸகுண ரூபமாவர். அவர்களின் மூலமாக ஈச்வரன் நம்முடைய ஸாதனை நடப்பதற்கு உதவி புரிகிறார்.
2. ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் அஹம்பாவத்தை நீக்கும் வழிமுறையை நடைமுறைப்படுத்தும்போது ஏதாவது ஒரு முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால் உறுதியுடன் மீண்டும் முயல வேண்டும். தெய்வத்திடம் சரணாகதி செய்து பிரார்த்திக்க வேண்டும். வ்யஷ்டி ஸாதனையின் மதிப்பாய்வை எடுக்கும் ஸாதகரின் உதவியை நாட வேண்டும். ‘என்னுடைய முயற்சி ஏன் வெற்றி அடையவில்லை’ என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
3. ஸனாதன் ஆச்ரமத்திலும் சேவா கேந்திரங்களிலும் ஸாதனை செய்யும் ஸாதகர்கள் உள்ளனர். அவர்களால் அங்கு ஸாத்வீகத்தின் ஆளுமை அதிகமாக உள்ளது. இக்காரணத்தால் அங்கு தெய்வீக சூழல் நிலவுகிறது.
4. சில சமயங்களில் நம்முடைய இச்சையும் பகவானின் இச்சையும் ஒன்றாக உள்ளது, வேறு சில சமயங்களில் நம் இச்சைக்கு மாறாக பகவானின் திட்டம் வேறு மாதிரியாக உள்ளது. அதனால் எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்படைக்க வேண்டும். பிரார்த்தனை செய்யும்போது, ‘எனக்கு இவ்வாறு தோன்றுகிறது, இவ்வாறு நடக்க வேண்டும்’, என்று வேண்டுவதைக் காட்டிலும் ‘பகவானே, உனக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறே நடத்திக் கொடு’, என்ற பிரார்த்தனையை செய்ய வேண்டும். பகவான் உங்களுக்கு எதை அருளுகிறாரோ அதை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
5. ஸாதனை செய்யும் ஒவ்வொரு ஜீவனின் கரத்தையும் பகவான் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், ‘பகவான் நம்மிடம் என்ன கூறுகிறார்’, என்பதை செவிமடுத்துக் கேட்க வேண்டும்.
6. கலியுகத்தில் தனியாக ஸாதனை செய்வது இயலாது. அதனால் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை செய்வதற்கு அனைவருடனும் ஒருங்கிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.
7. எது நடக்கிறதோ அது நல்லதற்காகவே நடக்கிறது. நாம் நம் க்ரியமாண் கர்மாவை (நம் இச்சைப்படி செய்யப்படும் கர்மாவை) நல்லபடியாக செய்ய வேண்டும்.
8. 84 லட்சம் யோனிகளில் சுற்றித் திரிந்து கிடைத்தற்கரிய மனிதப்பிறவி நமக்குக் கிடைத்துள்ளது. அதனால் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுவதே நம் ஒரே இலக்காக இருக்க வேண்டும். இறைவனை அடைவதற்காகவே மனிதப்பிறவி கிடைத்துள்ளது.
9. ஸாதனையின் நிலை பற்றி நாம் எப்பொழுதும் மற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்வமுள்ளவராலேயே ஸாதனையில் முன்னேற முடியும்.
10. ஸாதனையில் முயற்சி செய்வதற்கு ஸத்ஸங்கம் அவசியம்.
11. முடியாது என்பது இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஸாதனையில் நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
12. இன்றைய காலம் முழு மூச்சுடனும் முழு முயற்சியுடனும் ஸாதனை செய்ய வேண்டிய காலம் ஆகும். உறுதியான மனதால்தான் சரியான முடிவை எடுக்க முடியும்.
13. எப்பொழுதும் கற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் இருந்தால் உற்சாகத்துடன் இருக்க முடியும். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இருந்தாலேயே எங்கு சென்றாலும் நம்மால் கற்றுக் கொள்ள இயலும். கற்றுக் கொண்டதை செயல்படுத்தும்போது இறைவன் தானே நமக்கு அடுத்த படிக்கு செல்ல கற்றுத் தருகிறார்.
14. நமக்கு ஆன்மீக நிலையில் இறைவன் நிறைய அள்ளித் தந்து கொண்டிருக்கிறார். இறைவனிடம் எதுவும் கேட்க வேண்டிய தேவை இருப்பதில்லை. (நாம் ஒன்றும் கேட்கவில்லை என்றால் இறைவன் அள்ளி அள்ளி வழங்குவார்), இதுவே இறைவனின் அளப்பரிய அன்பாகும்.
15. மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் ஒளிவு மறைவில்லாமல் கூறும்போது மனம் நிர்மலமாகிறது. மனம் நிர்மலமாகும்போதே ஸாதனையின் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
16. எந்த ஒரு காரியத்தையும் செய்யும்போது ‘இது ஸாதனைக்கு உகந்ததா?’ என்று மனதைக் கேட்க வேண்டும்.
17. எவருக்கு அநுபூதி அவசியமோ அவருக்கே இறைவன் அநுபூதிகளை வழங்குகிறார்.
18. சமூகத்திலுள்ள பெரும்பான்மை மக்கள் அவர்களின் சொந்த இச்சைப்படியே நடக்கின்றனர். அதனால் அவர்கள் துயரத்திற்கு உள்ளாகின்றனர். ஆச்ரமத்திலுள்ள ஸாதகர்கள் இறைவனின் இச்சைப்படி நடக்கின்றனர். அதனால் ஸாதகர்கள் ஆனந்தமாக உள்ளனர்.