நம் வாழ்வு முறையும் 3 சூட்சுமமான அடிப்படை கூறுகளும்

நம்முடைய ஸத்வ, ரஜ, தம குணத்தை வைத்து நம் வாழ்க்கை முறை நிர்ணயிக்கப்படுகிறது. நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதை பொருத்து நம் வாழ்க்கை முறை ஏற்பட்டு, அதன் அடிப்படையில் நம்மிடையே உள்ள சூட்சும கூறுகள் அதிகரிக்கும்.

 

மூன்று சூட்சுமமான அடிப்படை
உறுப்புகளும் நம் வாழ்க்கை முறையும்

உணவு

ஸத்வ – அரிசி, கோதுமை, வெள்ளரி, பால், தயிர், வெண்ணெய், பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள்.

ரஜ – அதிக உப்பு, கசப்பு, துவர்ப்பு, காரமான உணவு வகைகள், வெங்காயம், பூண்டு.

தம – சமைக்காத உணவுகள், செறிமானத்திற்கு கஷ்டமான உணவுகள், அசைவ உணவுகள், மது பானங்கள்.

நிறங்கள்

ஸத்வ – வெள்ளை, மஞ்சள், நீலம்.

ரஜ – சிவப்பு, பச்சை, ஊதாநிறம்.

தம – கருப்பு அல்லது கருப்பு அதிகம் கலந்த நிறம்.

இசை

ஸத்வ – ஞானிகள் எழுதிய பாட்டுகள்.

ரஜ – நாட்டுபுற பாடல்கள், குத்துப் பாடல்கள், சினிமா பாடல்கள்.

தம – வன்முறையையும், போதையையும் தூண்டத்தக்க இசை.

உடை

ஸத்வ – பருத்தி, பட்டு, போன்ற இயற்கையான நூலிழைகள் .

ரஜ – மிருகங்களின் தோல்.

தம – மனிதனால் உருவாக்கப்பட்ட நைலான், கிழிந்த உடைகள்.

படம்

ஸத்வ – சமுதாயத்தை ஸாத்வீக நிலைக்கு உயர்த்தும், வழி நடத்தும் படங்கள்.

ரஜ – அதிரடிபடங்கள், உணர்ச்சியைத் தூண்டும் படங்கள்.

தம – ஆபாச மற்றும் பேய் படங்கள்.

புத்தகம்

ஸத்வ – ஆன்மீக ஞானத்தை தரும், வழிகாட்டுதல் வழங்கும் புத்தகங்கள்.

ரஜ – நம் உணர்வுகளையும் பற்றையும் அதிகப்படுத்தும் புத்தகங்கள்

தம – ஆன்மீகத்தை அவமதிக்கும் புத்தகங்கள், சமுதாயத்தை சீர்குலைக்கும் புத்தகங்கள்.

நம்முடைய சகவாசம்

ஸத்வ – 6 அடிப்படை தத்துவங்களின்படி ஆன்மீகத்தை கடைப்பிடித்து இறைவனை உணர்வதற்காக ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகர்கள்.

ரஜ – சமூக நிகழ்ச்சிகளில், உலகியல் விஷயங்கள், வியாபாரம் ஆகியவற்றின் மூலமாக ஏற்படும் சகவாசம்.

தம – தீய சகவாசம்

திருமணம்

ஸத்வ – ஆன்மீக முன்னேற்றமே அத்தம்பதியின் முக்கிய லட்சியம், அதனுடன் எதிர்பார்ப்பற்ற ஆன்மீக அன்பு நிறைந்திருக்கும்.

ரஜ – எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு, சொத்து சேர்ப்பதே முக்கியக் குறிக்கோள் .

தம – சண்டை சச்சரவு நிறைந்தது.

நம்மிடையே எந்த சூட்சுமமான கூறுகள் பெரும்பாலும் இருக்கிறதோ அதற்கேற்றாற் போல நாம் ஸத்வ, ரஜ, தம அதிர்வலைகளை வெளிப்படுத்துவோம். நம்மிடையே ஸத்வ குணம் மேலோங்கி இருந்தால் நம் தனித்தன்மை மேம்பட்டு இருக்கும், தொடர் வெற்றி கிடைக்கும், பணித்துறையிலும் வாழ்விலும் மனநிறைவு ஏற்படும்.

ஆன்மீக பயிற்சியினால் நம்முடைய ஸத்வ கூறுகளை அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும் ரஜ தம தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நம்முடைய நல்ல சகவாசத்திற்கு ஏற்றவாறு நாம் செய்யும் ஆன்மீக பயிற்சிக்கு உதவி கிடைக்கும். ஆனால் தமோ குணம் அதிகரித்தால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தீய சக்தியானது மக்களை தீய காரியங்களில் ஈடுபட வைக்கும்; மேலும் தர்மத்தை குலைக்கும்.

 

Leave a Comment