பராத்பர குரு டாக்டர் ஆடவலே
ஸாதகர்களுக்கு அவ்வப்பொழுது ஸாதனை
சம்பந்தமாக வழங்கியுள்ள அரிய வழிகாட்டுதல்!
ஆன்மீக உணர்வின் மகத்துவம் ‘ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்’, அதாவது ‘ஒன்று சாத்தியப்பட்டால் அனைத்தும் சாத்தியமாகும்’. இந்த யுக்தியைப் போன்று ஆன்மீக உணர்வு நிலையை அடைய முடிந்தால் எல்லாவற்றையும் அடைய முடியும். ‘எங்கு ஆன்மீக உணர்வு உள்ளதோ அங்கு பகவான் உள்ளான்!’ – பராத்பர குரு டாக்டர் ஆடவலே |
1. தீவிர ஆன்மீக கஷ்டம் உடைய ஒரு ஸாதகர்
கேட்ட கேள்விகள் மற்றும் பராத்பர குரு
டாக்டர் ஆடவலே அதற்கு அளித்த பதில்கள்
1 அ. ஸாதனை செய்யும்போது பலனை எதிர்பார்க்காதே!
ஒரு ஸாதகர் : நான் நாமஜப உபாயத்தை செய்கிறேன்; ஆனால் தீய சக்திகளே வெற்றி பெறுகின்றன.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : எப்பொழுது நீங்கள் தீய சக்திகளின் கஷ்டத்திலிருந்து விடுபட முடியவில்லையோ அப்பொழுது ‘நம்முடைய ஸாதனை எவ்வளவு மற்றும் தீய சக்திகள் எந்த நிலை பாதாளத்தை சேர்ந்தது?’ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஸாதனை செய்வது மட்டுமே நம் கடமை. பலனை எதிர்பார்க்கக் கூடாது.
1 ஆ. தீவிர கஷ்டம் உள்ள ஸாதகர் தன்னுடைய
ஸாதனை மேம்படுவதற்கு முன்னுரிமை தர வேண்டும்!
ஒரு ஸாதகர் : பிரார்த்தனை செய்யும்போது நான் ‘எல்லோரின் ரக்ஷணமும் ஏற்படட்டும்’, என்று செய்தால் என் மீது தீய சக்திகளின் தாக்குதல் நடக்குமா?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : ஸமஷ்டியைக் காட்டிலும் சுய ஸாதனை பற்றி சிந்திப்பது நல்லது. கடன்பட்ட நபர் இன்னொருவருக்கு பணம் தந்து உதவ முடியாது. அதேபோல் தீவிர ஆன்மீக கஷ்டம் உள்ள ஸாதகர் தங்களின் சுய ஸாதனையை அதிகப்படுத்த அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
1 இ. கால மகத்துவத்தின்படி தீய சக்திகள் தோல்வி அடைவது நிச்சயம்!
ஒரு ஸாதகர் : ஆன்மீக கஷ்டங்களுடன் கூட எனது மானசீக கஷ்டங்களும் அதிகரித்துள்ளன.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : இன்று ஏழாவது பாதாளத்திலுள்ள தீய சக்திகள் தோல்வியடைய ஆரம்பித்துள்ளன. அதனால் அவற்றின் சத்தம் அதிகரித்துள்ளது. கால மகத்துவத்தின்படியே எல்லாம் நடக்கும். பொறுமையாக இருந்து பாருங்கள்! இரவு முழுவதும் ‘சூரியன் எப்பொழுது உதிக்கும்?’ என்று காத்திருப்பதால் என்ன பயன்? சூரியன் உதிக்கத்தான் போகிறான்.
1 ஈ. தீவிர கஷ்டங்கள் உடைய ஸாதகர்கள் அதிகபட்ச
அளவு நாமஜப உபாயம் செய்ய வேண்டியது மிக அவசியம்!
ஒரு ஸாதகர் : நான் எவ்வளவு நேரம் ஆன்மீக உபாயம் செய்ய வேண்டும்?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : யாருக்கு கஷ்டங்களின் தீவிரம் அதிகமாக உள்ளதோ அவர்கள் முழு நேரம் உபாயம் செய்ய வேண்டும். உபாயத்தை தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் 1 -2 மணி நேரத்திற்கு பிறகு சிறிது சேவை, மீண்டும் உபாயம், இவ்வாறு செய்ய வேண்டும்.
1 உ. ஸாதனையில் எப்பொழுதும்
நிகழ்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டும்!
ஒரு ஸாதகர் : நான் இவ்வாறு கேள்விப்பட்டுள்ளேன், 52 வருட ஸாதனைக்கு பிறகே மோக்ஷகுரு நம்மை சந்திப்பார். ‘என்னுடைய பிறவி வீணாகிப் போய்விடுமே’ என்ற பயம் ஏற்படுகிறது.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : ஸாதனையில் எப்பொழுதும் நிகழ்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நினைக்கக் கூடாது. கஷ்டம் அதிகரித்தால் என்ன உபாயம் செய்ய வேண்டும் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு செய்ய வேண்டும்.
2. ஒரு பெண் ஸாதகர் கேட்ட கேள்வி மற்றும்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அதற்குத் தந்த பதில்
2 அ. ஸாதனை அதிகரிக்கும்போது மனதில்
எண்ணங்களற்ற நிலை தானே ஏற்படும்!
ஒரு பெண் ஸாதகர் : ஒரு மகான் என்னிடம் ‘எண்ணங்களற்ற நிலையில் இரு’ எனக் கூறினார். அப்படி என்றால் என்ன?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : ‘எண்ணங்களற்ற நிலையில் இருப்பது என்பது இறுதி லட்சியம். 70, 80 மற்றும் 90 சதவிகித ஆன்மீக நிலைகளில் ‘ஸகுணத்திற்கும் நிர்குணத்திற்கும் பேதமில்லை’ என்ற நிலை ஏற்படுகிறது. அதனால் இப்பொழுது இந்நிலை பற்றி கவலைப்பட வேண்டாம். ஸாதனையை அதிகரிக்க அதிகரிக்க மேற்கொண்டு அடுத்தடுத்த நிலைகள் சாத்தியமாகும். அதற்காக தனியான முயற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை.
2 ஆ. ஸாதனையை அதிகரிக்கும்போது எதிர்பார்ப்பு குறைகிறது!
ஒரு ஸாதகர் : தெய்வம் எவ்வளவு வாரி வழங்கினாலும் எனக்குள் எதிர்பார்ப்புகள் அப்படியே உள்ளன.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : அப்படி என்றால் நாம் ஸாதனை செய்வதில் சிறிது பின்தங்கி உள்ளோம் என அர்த்தம். ஸாதனையை அதிகரிக்கும்போது எதிர்பார்ப்புகள் தானாகவே குறையும்.
2 இ. சுய இச்சை வேண்டாம், பரேச்சா
மற்றும் ஈச்வர இச்சை மகத்துவம் வாய்ந்தது!
ஒரு பெண் ஸாதகர் : என்னுடைய ஆன்மீக நிலை என்று உயரும்?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : பலனில் பற்று வைக்காதே. நம் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆன்மீக நிலை மீது பற்று வைத்தல் சுய இச்சை ஆகும். அதைக் காட்டிலும் பரேச்சா (மற்றவரின் இச்சை) மற்றும் ஈச்வர இச்சை அதிக மகத்துவம் வாய்ந்தது ஆகும்! ‘எதிர்பார்ப்பில்லாமல் ஸாதனை செய்வது மகத்துவம் நிறைந்தது ஆகும்!’ என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும். புத்தி மூலமாக சிந்தனை செய்வது வேண்டாம். என்ன வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை உடனே செயல்படுத்த வேண்டும். மனதில் ஏற்படும் சிந்தனைகளும் கேள்விகளும் கூட சுய இச்சை ஆகும். கேள்வி வேண்டாம். வெறும் ஸாதனையை தொடர்ந்து செய்து வர வேண்டும். நாமஜபம் மற்றும் சுய ஆலோசனை வழிமுறைகளை செய்து வர வேண்டும். இன்று புத்திபூர்வமாக புரிந்து கொண்டதை மனதில் பதிய வைக்க முயல வேண்டும்.
2 ஈ. மனதின் நிலை பற்றி
ஒரு பெண் ஸாதகர் : ‘நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்’ என்பது தெரிந்தாலும் நான் எண்ணங்களில் மூழ்கி இருக்கிறேன்.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : ஸாதனை மூலமாக மனோலயம் ஏற்பட்ட பிறகு இவ்வாறு நடக்காது.
ஒரு பெண் ஸாதகர் : ஆனால் என் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : அதற்கு ‘அ 2’ முறைப்படி சுய ஆலோசனை வழங்க வேண்டும்.
2 உ. ஸாதனையின் பகுதியாக மற்றவரின்
தவறுகளை எவ்வாறு சுட்டிக் காட்ட வேண்டும்?
ஒரு பெண் ஸாதகர் : சாக்ஷி உணர்வுடன் பார்க்க வேண்டும் என்றால் மற்றவர் தவறுகள் செய்யும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : மற்றவர்களின் தவறுகளால் நம் மனதில் எதிர்எண்ணம் மற்றும் கோவம் ஏற்பட்டால் (அதாவது நம்முள் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டால்) அப்பொழுது சாக்ஷி உணர்வுடன் பார்க்க வேண்டும்; மாறாக நம்முள் நேர்மறை உணர்வு ஏற்பட்டால் அப்பொழுது சாக்ஷி உணர்வுடன் பார்ப்பது தேவையில்லை.
2 ஊ. உடலை உகுத்த பின்னர் மகான்கள்
மேல் உலகங்களுக்கு செல்கின்றனர் மற்றும்
அவர்களின் ஆத்மா தெய்வத்துடன் ஒன்றிணைகிறது
ஒரு பெண் ஸாதகர் : ஒரு மகான் உடலை உகுத்த பின்னர் அவர் சம்பந்தமான சூட்சும பரிசோதனையில் இவ்வாறு கூறப்பட்டது, மகான் யமராஜனை பார்த்துக் கூறுகிறார், ‘ நீ உன் காரியத்தை பார்த்துக் கொள். என் ஆத்மா அழிவில்லாதது’. யமராஜன் எதற்கு வருகிறார்?
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : மகான்களின் உயிர் மீது யமராஜனுக்கு அதிகாரம் இல்லை. மகான்கள் மேல் உலகங்களுக்கு தாங்களே செல்கின்றனர். மகான்களின் ஆத்மா தெய்வத்துடன் ஒன்றிணைகிறது. சாதாரண மனிதர்களுக்கு லிங்கதேஹம் (சூட்சும உடல்) உண்டு. யமராஜன் அதைக் கொண்டு போவதற்கே வருவார்.
2 எ. புத்தியால் சிந்திக்காதே; ‘ஸாதனை நடக்கிறதா
இல்லையா?’ என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்!
ஒரு பெண் ஸாதகர் : நீங்கள் இனி நிர்குண நிலையில் இருக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றி மிகவும் கவலையாக உள்ளது.
பராத்பர குரு டாக்டர் ஆடவலே : இறைவன் எங்கும் நிறைந்துள்ளான். அவர் இல்லாத இடம் ஏது, அவர் இல்லை என்ற கணம்தான் உண்டோ? புத்தியால் சிந்தனை செய்வதால் பயனில்லை. ‘ஸாதனை நடக்கிறதா இல்லையா?’ என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். மனதில் எழும் பல கேள்விகள் ஸாதனைக்கு உபயோகமானது அல்ல. அதனால் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக கேள்வி கேட்கக் கூடாது.
– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே
தீய சக்திகள் : சுற்றுப்புற சூழலில் நல்ல மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் உள்ளன. நல்ல சக்திகள் நல்ல காரியங்கள் நடப்பதற்கு மனிதர்களுக்கு உதவுகின்றன; தீய சக்திகள் அவற்றில் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன. முற்காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் யாகங்களை செய்யும்போது ராக்ஷசர்கள் பல இன்னல்களை ஏற்படுத்தினார்கள் என்பது பற்றி பல கதைகள் வேத-புராணங்களில் உள்ளன. ‘அதர்வண வேதத்தில் பல இடங்களில் தீய சக்திகளின், உதாரணத்திற்கு அசுரர்கள், ராக்ஷசர்கள், பிசாசுகள் போன்றவற்றின் பிரதிபிம்பங்களை செய்வதற்குரிய மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற வேத நூல்களில் பல்வேறு ஆன்மீக உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. |