பூஜ்ய (திருமதி) காந்திமதி
சந்தானம் அவர்களின் சிறு அறிமுகம்
பூஜ்ய (திருமதி) காந்திமதி சந்தானம் அவர்கள் ‘நாமஸங்கீர்த்தன சூடாமணி’, ‘பாகவதரத்ன’ போன்ற பல பட்டங்களுக்கு உரியவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன், 81 வயதிலும் சிறு குழந்தையின் உற்சாகத்தைக் கொண்ட பூஜ்ய (திருமதி) சந்தானம் அவர்களை எல்லோரும் அன்புடன் ‘மாமி’ என அழைக்கின்றனர். பூஜ்ய (திருமதி) காந்திமதி மாமி அவர்களுக்கு அவரின் தந்தையார் சிறு வயதிலேயே பஜன் பாட கற்றுக் கொடுத்தார். பூஜ்ய மாமி 2 வயது குழந்தையாக இருக்கும்போது அவரின் தந்தை திரு ராமஸ்வாமி ஐயர் அவரை கோவிலுக்குக் கூட்டி செல்வார். அங்கு கோவில் சுவரில் எழுதி வைத்துள்ள பாடல்களைப் பாடம் பண்ண சொல்லுவார்; முடிந்தால் பாட சொல்லுவார். அந்த சிறு வயதிலிருந்தே பூஜ்ய மாமி, அவரின் தந்தை பஜனைப் பாடல்களைப் பாடும்போது அவருக்கு அருகிலேயே இருந்து கொண்டு அனைத்தையும் கற்றார். மாமி பஜனைப் பாடல்களைப் பாடும்போது தன்னையே மறந்து விடுகிறார். 1961-ம் வருடம் அவருக்கும் சென்னையிலுள்ள திரு சந்தானம் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. பின்பு 1975-ல் அவர்கள் புது வீடு வாங்கி குடிபுகுந்தனர். அன்றிலிருந்து பூஜ்ய மாமி 44 வருடங்களாக தினமும் பஜனை வகுப்பு நடத்தி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கானோர் அவரின் வழிகாட்டுதல் மூலமாக பஜனைகளைப் பாட கற்றுக் கொண்டுள்ளனர்.
அவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவருக்கும் பஜனை மற்றும் கர்நாடக ஸங்கீதம் பாடுவதில் விருப்பம் உண்டு. இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். பெரிய மகள் சேலத்திலும் சிறிய மகள் சென்னையிலும் உள்ளனர். கடந்த இரு வருடங்களாக பூஜ்ய மாமியின் கணவர் திரு சந்தானம் அவர்கள் உடல் செயலிழந்து படுக்கையில் உள்ளார். வயதானதாலும் உடல் நலம் குன்றியதாலும் பூஜ்ய மாமியால் அதிகம் நடக்க முடியவில்லை. இருந்தாலும் ஆனந்தமாக பஜனை பாட வெளியே செல்கிறார்.
சென்னை – பலர் தெய்வங்களின் பஜனைப் பாடல்களைப் பாடுகின்றனர்; மற்றவருக்கும் கற்றுத் தருகின்றனர்; அவற்றுள் சிலரே பகவானிடம் பக்தி கொள்வதற்காக பாடுகின்றனர். அவர்களுள் ஓரிருவரே அனன்ய பக்தி செய்து மோக்ஷத்தை அடைகின்றனர். இது போன்று பஜனை மற்றும் நாமஸங்கீர்த்தனத்தின் மூலமாக மகானின் நிலையை எட்டியுள்ள உன்னத பெண்மணியின் தரிசனம், ஸனாதனின் பூஜ்ய (திருமதி) உமா ரவிசந்திரன் அவரின் ஸங்கீத ஸாதனையின் குருவான சென்னையிலுள்ள திருமதி காந்திமதி ஸந்தானம் ரூபத்தில் எங்களுக்கு கிடைத்தது. 25 ஆகஸ்ட் அன்று பூஜ்ய (திருமதி) ரவிசந்திரன் வீட்டில் ஸனாதனின் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களுக்கும் திருமதி காந்திமதி அவர்களுக்கும் இடையே ஆத்மார்த்தமான உரையாடல் நடந்தது. இந்த ஸம்பாஷணை நடக்கும்போதே ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்கள், திருமதி காந்திமதி அவர்கள் (வயது 81) மகான் நிலையை அடைந்துள்ளார் என்ற நற்செய்தியை அறிவித்தார்.
ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவருக்கு மாலை அணிவித்து தேங்காய், பரிசு கொடுத்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியின்போது அங்கு பூஜ்ய காந்திமதி மாமியின் மகள் திருமதி ரமா மற்றும் ஸனாதனின் ஸாதகர்கள் இருந்தனர்.
மகான் நிலையை அடைந்ததைக் காட்டிலும் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் தரிசனத்தை அதிக மகத்துவம் வாய்ந்ததாகக் கருதும் பூஜ்ய (திருமதி) காந்திமதி மாமி!
அந்த சுபவேளையில் பூஜ்ய (திருமதி) காந்திமதி மாமி, தான் மகான் நிலையை அடைந்ததற்குரிய எல்லா பெருமையையும் தன் உபாசனை தெய்வமான திரு முருகனின் திருவடிகளிலும் தன் கணவர் திரு ஸந்தானம் அவர்களின் பாதங்களிலும் சமர்ப்பித்தார். அப்பொழுது அவர் கூறினார், ‘நான் மகான் நிலையை அடைந்துள்ளேன் என்பதைக் காட்டிலும் இப்பிறப்பில் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் தரிசனம் கிடைத்தது’ என்பது அதிக மகத்துவம் வாய்ந்தது. இன்று எனக்கு ஸத்குருவின் தரிசனம் கிடைத்ததால் என் வாழ்வின் அனைத்து துக்கங்களும் தூர விலகி விட்டன. இதைக் காட்டிலும் எனக்கு வேறு என்ன வேண்டும்?’ என்றுரைத்தார்.
‘நாமஸங்கீர்த்தனம்’ என்றால் என்ன?
‘நாமஸங்கீர்த்தனம்’ என்றால் சிறு சிறு பஜனை வரிகளின் மூலமாக தெய்வத்தை ஸ்துதி செய்து பக்தி செய்வது ஆகும். ‘நாமஸங்கீர்த்தனம்’ என்பது தென்பாரதத்தின் பக்திமார்க்கத்திலுள்ள சில மகான்கள் சமூகத்தை இறைவனிடம் கொண்டு செல்ல வகுத்துத் தந்த சுலப வழியாகும்! உண்மையில் தமிழ்நாட்டில் நாமஸங்கீர்த்தனம் என்ற வழிமுறை மகாராஷ்ட்ராவின் விட்டல் அபங்குகளின் மூலம் ஆரம்பமாயிற்று எனலாம். இன்று தமிழ்நாட்டின் பல மகான்கள், பஜனை மண்டலிகள், கதாகாலக்ஷேபம் செய்பவர்கள் விட்டல், முருகன், கிருஷ்ணன், ராதா-கிருஷ்ணன், துர்காதேவி ஆகியோர் மீது சிறு சிறு நாமாவளிகளை இயற்றி அவற்றை ராக-தாளத்துடன் பாடுகின்றனர். இது போன்று பஜனைகளைப் பாடும்போது சில சமயங்களில் கைகளில் சிப்ளாக்கட்டை அல்லது கோலாட்ட குச்சிகளை வைத்துக் கொண்டு அழகாக பாவபூர்ணமாக நடனமும் ஆடுகின்றனர்.
பூஜ்ய காந்திமதி மாமியின் சில குண விசேஷங்கள்
அ. பல சமயங்களில் வயதானதால் பூஜ்ய (திருமதி) காந்திமதி மாமிக்கு உடல் நலம் குன்றி விடுகிறது. இருந்தாலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் பஜனைகளைப் பாட கிளம்பி விடுகிறார். அவர் பஜனைகளைப் பாடும்போது ‘முருகனே என்னைப் பாட வைப்பவன்’ என்ற உணர்வுடன் பாடுகிறார்.
ஆ. பூஜ்ய மாமி மற்ற இடங்களில் பாட செல்லும்போது அங்குள்ள கோவில் நிர்வாகிகளிடமிருந்து அவர் பணத்தையோ அங்கீகாரத்தையோ மரியாதையையோ எதிர்பார்ப்பதில்லை. அவர் கூறுகிறார், ‘நான் என் முருகனுக்காக அங்கு பாடப் போகிறேன்’. இருந்தாலும் கூட பஜனை பாட வருபவர்களுக்காக, தாள வாத்தியம் ஹார்மோனியம் வாசிப்பவர்களுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
இ. பூஜ்ய மாமிக்கு இன்றுவரை அவரின் உபாசனை தெய்வத்தின் தரிசனமோ அல்லது ஸ்வப்ன திருஷ்டாந்தமோ கிடைத்ததில்லை; இருந்தாலும் முருகன் அவருடன் பேசுகிறான் என்ற அனுபூதியை அனுபவிக்கிறார். இந்த அநுபூதி எப்பொழுதும் அவருக்கு கிடைக்கிறது. அதாவது சுருக்கமாக பூஜ்ய மாமி பகவானுடன் அகண்டமாக தொடர்பில் இருக்கிறார்.
4. பூஜ்ய காந்திமதி மாமியின் சிந்தனை செல்வம்
அ. ‘பாரதீய சாஸ்த்ரீய ஸங்கீதம் பக்தியை ஆதாரமாகக் கொண்டதால் நிரந்தரமானது, மாறாக மேற்கத்திய ஸங்கீதம் பணத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பதால் அது நிரந்தரமானது இல்லை. பாரதீய சாஸ்த்ரீய ஸங்கீதத்தால் ஆனந்த அநுபூதி கிடைக்கிறது.
ஆ. இதுவரை என் வாழ்வில் பல கஷ்டங்கள், சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடைய இஷ்ட தெய்வமான முருகனின் பேரருளால் மட்டுமே இதுவரை ரக்ஷணம் கிடைத்துள்ளது. இனிமேல் வரக்கூடிய கஷ்டங்களிலிருந்தும் அவனே ரக்ஷிக்கப் போகிறான்.’ – பூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம்
5. பல்வேறு ஸங்கீத சபாக்கள் மற்றும்
காஞ்சி காமகோடி மடம் இதுவரை பூஜ்ய (திருமதி)
காந்திமதி அவர்களுக்கு தந்துள்ள கௌரவ விருதுகள்!
பூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம் அவர்கள் இதுவரை ‘பாகவத சிரோன்மணி’, ‘பாகவத சூடாமணி’, ‘நாமாவளி ரத்ன’, ‘திருப்புகழ் செம்மணி’, ‘பாகவதரத்ன’, ‘ஸங்கீர்த்தன சூடாமணி’ போன்ற விருதுகள் பல வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.