நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமியின் மகத்துவம்

நவராத்திரி பஞ்சமியில் லலிதாபூஜை செய்தல்

சுகந்தமயமான சக்தி ரூபத்தை லலிதா என்பர். நம் மனங்களை கொள்ளை கொள்ளும் சுகந்தமய சக்தி ஸ்வரூபமே லலிதாவாகும். நவராத்திரி பஞ்சமியின்போது ப்ரம்மாண்டத்திலுள்ள இந்த சுகந்த அதிர்வலைகளின் செயல்பாடுகளால் பூஜை செய்பவரின் மனோமய கோசம் தூய்மையடைகிறது. ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 7.9.2006, மாலை 4.47]

நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை (அஷ்டமி அல்லது நவமி)

விஜயதஸமிக்கு முன்தினம் அதாவது நவமி அன்று ஸரஸ்வதி தேவி, படைத்தலோடு சம்பந்தப்பட்டவள் என்ற கண்ணோட்டத்தோடு பூஜை செய்ய வேண்டும். ஆனால் விஜயதஸமி அன்று ஸரஸ்வதி தத்துவம் அதிக அளவில் செயல்படும் ஸகுண தன்மையாக உருக்கொண்டு பின்பு செயலற்று லயமாகிறது; அதனால் அன்றைய தினம் ஸரஸ்வதி பூஜை முக்கியமாக செய்யப்பட வேண்டும்.

ஸரஸ்வதி தேவியை அஷ்டமியன்று ஆவாஹனம் செய்ய வேண்டும்; ஏனென்றால் அன்றுதான் ஸரஸ்வதி தத்துவம் பீஜ ரூபமாக உருவெடுக்கிறது. நவமியன்றி இது பூமண்டலத்தில் நிலை பெற்று செயல்பட ஆரம்பிக்கிறது. அதனால்தான் அன்று ஸகுண, உற்பத்தி ரூபமான ஸரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். வெளிப்பட்ட தேவியின் இந்த ஸ்வரூபத்தை நோக்கி அன்று பக்தர்கள் ஈர்க்கப்படுகின்றனர். விஜயதஸமி அன்று ஸரஸ்வதி, மறுபடியும் ஸகுண ரூபத்தை தரிக்கிறாள். பின்பு செயல்படாத நிலைக்கு சென்று லயமாகிறாள். அன்றே ஸரஸ்வதி மூர்த்தி விஸர்ஜனம் செய்யப்படுகிறது.

அஷ்டமி முதல் விஜயதஸமி வரை சக்தி ரூபம் படைப்பாற்றலோடும் ஞானத்தோடும் மிளிர்கிறது. ஸ்ரீ ஸரஸ்வதியின் காக்கும் அதிர்வலைகளின் ஸ்பர்சத்தால் உபாஸகரின் ஆத்மசக்தி விழிப்படைந்து மடை திறந்த வெள்ளமென படைப்பாற்றல் பெருகுகிறது. இத்தகைய ஞானப் பெருக்கால் அவருக்கு ஆனந்த அனுபவம் கிட்டுகிறது. ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 7.9.2006, மாலை 4.20 – 6.32]

விஜயதஸமி அன்று தேவி பூஜை

ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை செய்தல் : தஸமி அன்று ஸரஸ்வதி தத்துவத்தின் செயல்படும் தன்மையை பூஜிப்பதால் ஜீவன், வெளிப்பட்ட பக்தியுணர்விலிருந்து வெளிப்படாத பக்தியுணர்வு நிலைக்கு பயணித்து ஸ்திர நிலையை அடைகிறது.

அபராஜிதா தேவியின் பூஜை : எங்கு வன்னி மரத்தின் பூஜை நடக்கிறதோ அங்கு தரையில் அஷ்டதள தாமரையை வரைந்து அங்கு அபராஜிதா தேவியின் மூர்த்தி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

பூமியில் அஷ்டதள கோலத்தை வரைந்து அதன் மீது அபராஜிதா மூர்த்தியை வைப்பது என்பது அபராஜிதா என்ற சக்தி தத்துவம் எட்டு திசைகளை வெற்றி கொள்ளும் திறனுடையது என்பதைக் குறிக்கிறது : அபராஜிதா என்ற துர்கா தேவியின் அழிக்கும் ஸ்வரூபம் ப்ருத்வி தத்துவத்தின் உதவியோடு இந்த பூமண்டலத்தில் தோன்றி மனித குல நலனிற்காக செயல்படுகிறது. எட்டு இதழ் கொண்ட ஸிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்த த்ரிசூலதாரிணி, சிவனுடன் சேர்ந்து கொண்டு, திக்பாலகர்கள் மற்றும் க்ருஹ தேவதைகளின் உதவியோடு அசுர சக்திகளை அழிக்கிறாள்.

எட்டு இதழ் ஆஸனத்தில் வீற்றிருக்கும் இந்த அபராஜிதா என்ற சக்தி தத்துவம் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்க பூமியின் பூகர்ப்பத்திலிருந்து வெளிப்படும் பொழுது அவளை வரவேற்க அஷ்ட தேவதைகளும் அங்கு குழுமுகின்றனர். எட்டு இதழ்களின் நுனிகளும் இந்த அஷ்ட தேவதைகளைக் குறிக்கின்றன. அபராஜிதா தோன்றியவுடன் வெளிப்படும் அழிக்கும் அதிர்வலைகள் அஷ்ட தேவதைகள் மூலமாக எட்டு திசைகளிலும் சிவந்த ஆரஞ்சு வர்ண ஒளி அதிர்வலைகளாக பரவுகின்றன. அதனால் மூலை முடுக்கெல்லாம் சேர்ந்துள்ள ரஜ-தம தன்மையை அழிக்கின்றன. அதன் மூலம் பூமியில் மனிதர்கள் எந்தவித தங்குதடையுமின்றி தங்களின் காரியங்களை மேற்கொள்ள வாயுமண்டலத்தை சுத்தமாக்குகின்றன.

 

வன்னி மர இலைகள் தேஜ தத்துவத்தை உன்னத முறையில் தக்க வைத்துக் கொள்வதால் வன்னி மரத்தினடியில் ஸ்ரீ துர்காதேவியின் அபராஜிதா ரூபத்திற்கு பூஜை செய்தல் : வன்னி மரத்தின் கீழ் ஸ்ரீ துர்காதேவியின் அபராஜிதா ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. வன்னி மர இலைகள், தேஜ தத்துவத்தை உன்னத முறையில் தக்க வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. அபராஜிதாவிலிருந்து நீரூற்று போல் வெளிப்படும் சக்தியை அதிக காலம் தக்க வைத்துக் கொள்ளும் திறன் வன்னி மர இலைகளுக்கு உண்டு. அதனால் வன்னி மர இலைகளை வீட்டில் பாதுகாத்து வைப்பதால் வருடம் முழுவதும் இந்த அதிர்வலைகளின் பயன் கிட்டுகிறது. ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 28.9.2005, மாலை 6.18]

தகவல் : ஸனாதனின் கையேடு ‘தேவி பூஜையின் சாஸ்திரம்’

Leave a Comment