குங்குமார்ச்சனையின் சில வழக்கங்கள்
வழக்கம் 1 : தேவியின் நாமஜபத்தை செய்து கொண்டே குங்குமத்தை ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்துக் கொண்டு தேவியின் பாதங்களில் துவங்கி தலை வரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு தேவியின் நாமஜபத்தை செய்து கொண்டே குங்குமத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும். ப்ரம்மதத்துவம் (திருமதி பாடீல் மூலமாக, 22.2.2004, இரவு 9.30)
வழக்கம் 2 : சில இடங்களில் தேவிக்கு குங்குமார்ச்சனை செய்யும்போது சரணங்களில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.
சாஸ்திரம் : மூல செயல்படும் சக்தி தத்துவம் சிவப்பு ஒளி மூலம் நிர்மாணமாவதால் சக்தி தத்துவத்தின் சின்னமாக விளங்கும் தேவியின் பூஜை, குங்குமத்தால் செய்யப்படுகிறது. குங்குமத்திலிருந்து வெளிப்படும் சுகந்த அதிர்வலைகளால் ப்ரம்மாண்டத்திலிருந்து சக்தி தத்துவ அதிர்வலைகள் குறைந்த காலத்திற்குள்ளாக ஆகர்ஷிக்கப்படுகின்றன. மூர்த்தியில் ஸகுண தத்துவத்தை விழிப்படையச் செய்யவும் தேவி தத்துவத்தை பிரசன்னமாக்கவும் குங்குமம் உதவுவதால் தேவி பூஜையில் குங்குமம் முதலிடம் வகிக்கிறது. மூல சக்தி தத்துவத்தின் பீஜமான சுகந்தம் குங்குமத்திலிருந்தும் வெளிப்படுவதால் தேவி தத்துவத்தை விழிப்படைய செய்ய குங்குமம் பெரும் பங்கு வகிக்கிறது. – ஒரு வித்வான் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 20.10.2005, இரவு 9.53]
குங்குமார்ச்சனை செய்வதால்
ஏற்படும் சூட்சும பலனை விளக்கும் படம்
குங்குமார்ச்சனை செய்ததால் ஏற்பட்ட அனுபூதி
குங்குமார்ச்சனை செய்யப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டவுடன் பிரார்த்தனையும் நாமஜபமும் மிக நன்றாக நடந்தது; உற்சாகமாக இருந்தது : ‘27.1.2004 அன்று நாங்கள் குங்குமார்ச்சனை செய்வதற்காக கோவிலுக்கு சென்றோம். பூஜைக்கு நாங்கள் அளித்த குங்குமம், இரு மூர்த்திகளின் அர்ச்சனைக்கும் உபயோகிக்கப்பட்டது. பின்பு எங்களின் கோரிக்கை தேவியின் முன் வைக்கப்பட்டு பின்பு அந்த குங்குமம் பிரஸாதமாக எங்களுக்கு வழங்கப்பட்டது. குங்குமத்தை வாங்கிக் கொள்ளும்போது நான் தேவியிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தேன், ‘ஹே ஸாதேரிதேவி, இந்த குங்குமத்தின் மூலம் எங்களுக்கு சக்தி கிடைக்கட்டும், எங்களின் பிரார்த்தனையும் நாமஜபமும் நன்றாக நடக்கட்டும். அன்றிலிருந்து எப்பொழுதெல்லாம் அந்த குங்குமத்தை நான் நெற்றியில் இட்டுக் கொள்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் நாமஜபம் ஆரம்பமாகிறது; அதோடு ஒரு தனி விதமான உற்சாகமும் ஏற்படுகிறது. – திருமதி ரக்ஷந்தா ராஜேஷ் காவ்கர், கோவா.