தேவி பூஜை செய்வதற்கு முன்னால் தேவி
தத்துவ சம்பந்தமான கோலத்தைப் போட வேண்டும்
முக்கியமாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தேவி பூஜைக்கு முன்னால் மற்றும் நவராத்திரி சமயத்தில் வீட்டு வாயிலிலும் பூஜை அறையிலும் தேவி தத்துவத்தை ஆகர்ஷிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஸாத்வீக கோலங்களைப் போட வேண்டும்.
ஸ்ரீ துர்காதேவி தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் சில கோலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா தேவிகளும் ஆதிசக்தி ஸ்ரீ துர்காதேவியின் பலவித ரூபங்கள், ஆதலால் அந்தந்த தேவியின் உபாஸனை செய்யும்போது ஸ்ரீ துர்காதேவி தத்துவ சம்பந்தமுடைய கோலத்தைப் போடவும். இந்த கோலத்தைப் போடுவதால் சூழல் தேவி தத்துவத்தால் நிறைந்து அதன் மூலம் பலன் கிடைக்கிறது. இந்த கோலத்தை, மஞ்சள், நீலம், ரோஸ் போன்ற ஸாத்வீக நிறங்களால் நிரப்புங்கள்.
சைதன்ய அனுபூதியை வழங்கும் கோலம்
நடுபுள்ளியிலிருந்து எட்டு திசைகளில் 5 புள்ளிகள் வைக்க வேண்டும். புள்ளி ஒன்றிலிருந்து துவங்கி 3, 5, 2, 4 வரை இணைத்து திரும்பவும் ஒன்றில் வந்து முடிக்க வேண்டும்.
பக்தியுணர்வை அதிகரிக்க உதவும் கோலம்
14 புள்ளி; 14 வரிசை
பூஜையறை, மணைகளில் போட உதவும் கோலங்கள்
17 புள்ளி : 3 வரிசை; 19-16 புள்ளிகள்
தேவியின் தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் வடிவமைப்பு
சில வடிவமைப்புகள் தேவி தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிட உதவுகின்றன. அத்தகைய ஒரு வடிவமைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை கோலத்தில், தேவிக்கு முன்பாக செய்யும் அலங்காரத்தில், தோரணத்தில் உபயோகப்படுத்துவதால் தேவி தத்துவத்தின் அதிகபட்ச பலன் கிடைக்கிறது.