சிவனின் பல பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருதேசாய ஸர்வாய மஹாதேவாய தே நம: ||

அர்த்தம் : ம்ருத்யுவை ஜெயித்த, அதிபயங்கர, நீலகண்டத்தையுடைய, ஸர்வ மங்களங்களை அருளும் அம்ருதமயமான ஸ்வாமியும், பாணாசுரனை அழித்தவனுமான ஹே மஹாதேவா, உனக்கு என் நமஸ்காரங்கள்!

 

1. மூலமும் அர்த்தமும்

அ. ‘சிவா’ என்கின்ற வார்த்தை அதன் மூலமான ‘வஷ்’ என்கின்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ‘வஷ்’ என்றால் ப்ரகாசிப்பது என்று அர்த்தம். ஆதலால், யார் ப்ரகாசத்தோடு இருக்கிறாரோ அவரே ‘சிவா’ என்பதாகிறது. சிவன், தானே ஸ்வயம்புவாக இருந்து கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் விளங்குகிறார். தான் ஸ்வப்ரகாசமாய் இருப்பதோடல்லாமல், இந்த ப்ரபஞ்சத்தையும் ப்ரகாசிக்கச் செய்கிறார்.

ஆ. சிவன் என்றால் மங்களமயமான, கல்யாணஸ்வரூபமான தத்துவம் ஆகும்.

 

2. சிவனின் இன்னும் சில பெயர்கள்

அ. சங்கர்

‘ஷம் கரோதி இதி சங்கர:”ஷம்’ என்றால் மங்களம் (அ) க்ஷேமம், ‘கரோதி’ என்றால் கொடுப்பது என்று அர்த்தம். இதிலிருந்து, சங்கர் என்றால் அபார நன்மைகளை கொடுக்கக் கூடிய தயாநிதி என்று பொருளாகிறது.

ஆ. மஹாங்காலேஷ்வர்

இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் உருவாக்கியவன் அவன் (க்ஷேத்ரபால்தேவ்). அவனே கால்புருஷ். முக்காலத்தையும் தன்னுள் அடக்கியவன். அதனால், அவனை மஹாங்காலேஷ்வர் என்று கூறுவது பொருத்தமாகிறது.

இ. மஹாதேவ்

இந்த ப்ரபஞ்சம் உருவாவதற்கும், அதில் காரண காரியங்கள் நடைபெறுவதற்கும் மூன்று முக்கிய தத்துவங்கள் அடித்தளமாக அமைகின்றன. அவை பரிபூரண தூய்மை, பரிபூரண ஞானம் மற்றும் பரிபூரண ஆன்மீக பயிற்சி. எந்த மூர்த்தி இந்த மூன்று தத்துவங்களையும், தன்னுள் கொண்டிருக்கிறதோ, அந்த மூர்த்தியை, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாக, மஹாதேவனாக கொள்கிறோம்.

ஈ. பாலசந்திரன்

யார் தன் நெற்றியில் (பால்) இளம் பிறைச் சந்திரனை சூடியிருக்கின்றாரோ அவரை பாலசந்திரன் என்று கூறுகிறோம். சிவனுடைய பிள்ளையான, கணபதிக்கும் ‘பாலசந்திரன்’ என்கிற பெயர் உண்டு.

உ. கற்பூரகௌர்

சிவனுடைய மேனி கற்பூரத்தை போன்ற ஸுத்த ஸ்படிக நிறமாகும். அதனால், கற்பூரகௌர் என்ற பெயர் ஏற்பட்டது.

கற்பூர கௌரம் கருணா வதாரம்
ஸன்ஸார ஸாரம் புஜகேந்திர ஹாரம் |
ஸதாவஸந்தம் ஹ்ருதயார விந்தே
பவம் பவானிஸஹிதம் நமாமி ||

அர்த்தம் : கற்பூரத்தை ஒத்த சுத்த ஸ்படிக நிறமுடையவனே! என் வாழ்க்கையின் சாரமாக விளங்குபவனே! நாகங்களை மாலையாக அணிந்தவனே! என் இதய தாமரையில் சதாசர்வ காலமும் வீற்றிருப்பவனே! பவானி தேவியுடன் கூடிய உனக்கு என் நமஸ்காரங்கள்!

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘சிவன்’

Leave a Comment