பிண்டதானம் செய்யும் கர்மம் நதிக்கரையிலோ
அல்லது படித்துறையிலோ ஏன் செய்யப்படுகிறது?
இறந்தவுடன் ஸ்தூல தேஹம் தியாகம் செய்யப்படுவதால் லிங்கதேஹத்தை சுற்றி உள்ள கோசங்களில் பூமி தத்துவத்தின் அளவு குறைந்து நீர் தத்துவத்தின் அளவு அதிகரிக்கிறது. லிங்கதேஹத்தை சுற்றியுள்ள கோசத்தில் சூட்சும ஈரத்தன்மை மிக அதிக அளவு உள்ளது. பிண்ட தான கர்மம் லிங்கதேஹத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் லிங்கதேஹம் பூமிக்கு வருவது சுலபமாக அமைய வேண்டும். அதற்காக பெரும்பாலும் இந்த விதிகள் நதிக்கரையில் செய்யப்படுகின்றன. நதிக்கரையிலுள்ள சூழ்நிலை நீர்த்தத்துவ அணுக்களால் நிறைந்திருப்பதால் அங்கு ஈரப்பசை அதிகமுள்ளது. இது போன்ற சூழ்நிலை மற்ற சூழ்நிலைகளைக் காட்டிலும் லிங்கதேஹத்திற்கு பரிச்சயமானதாக உள்ளது. இது போன்ற ஈரத் தன்மை கொண்ட சூழ்நிலையிடம், லிங்கதேஹம் சுலபமாக ஆகர்ஷிக்கப்படுகிறது; அதனால் பிண்ட தானம் போன்ற விதிகள் பெரும்பாலும் நதிக்கரைகளில் செய்யப்படுகின்றன.
பிண்ட தான கர்மம் நதிக்கரையிலுள்ள
சிவன் கோவில் அல்லது தாழ்ந்த நிலையிலுள்ள
தேவதைகளின் கோவில்களில் ஏன் செய்யப்படுகிறது?
சாதாரணமாக நதிக்கரையிலுள்ள கோவில்களில் பிண்ட தான கர்மம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த கர்மம் சிவன் கோவில்களில் அல்லது தாழ்நிலை தேவதைகளின் கோவில்களில் செய்யப்படுகின்றன; இதன் காரணம் இந்த தெய்வங்கள் அந்த இடத்திலுள்ள தீய சக்திகளை கட்டுக்குள் வைத்திருப்பதால் பிண்ட தானத்தில் செய்யப்படும் ஆவாஹனப்படி பூமி சூழ்நிலைக்கு வரும் லிங்கதேஹத்தின் பயணத்தில் தடங்கல்கள் ஏற்படுவதில்லை. இல்லையென்றால் பிண்ட தானம் செய்யும்போது தீய சக்திகள் அங்கு வரும் லிங்கதேஹத்தின் மீது தாக்குதல் நடத்தி அதனை கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதற்காக பிண்ட தானத்தின் முன்பு அந்தந்த கோவில்களிலுள்ள தெய்வங்களின் சம்மதத்தைப் பெற்று பிரார்த்தனை செய்து பிறகு இந்த கர்மம் செய்யப்படுகிறது.
10-ம் நாள் பிண்டத்தை காகம் உண்ண வேண்டும்
என்பது ஏன் மஹத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறது?
காக கதி என்பது பிண்ட தானத்தில் செய்யப்படும் ஆவாஹனப்படி பூமிக்கு வரும் லிங்கதேஹத்தின் கதிக்கு சமானமாக உள்ளது. அதேபோல் காகத்தின் நிறமும் ரஜ-தம தன்மையைக் குறிப்பதால் பிண்டதானம் என்ற ரஜ-தம நிறைந்த விதிக்கு சமானமாக உள்ளது. காகத்தை சுற்றியுள்ள சூட்சும கோசமும் லிங்கதேஹத்தை சுற்றியுள்ள கோசத்தைப் போல நீர் தத்துவ அணுக்களால் நிறைந்திருப்பதால் லிங்கதேஹத்திற்கு காகத்தின் தேஹத்திற்குள் ப்ரவேசிப்பது சுலபமாகிறது. ஆசைகளால் அலைக்கழிக்கப்படும் லிங்கதேஹங்கள் பூலோகம், ம்ருத்யு லோகம் (பூலோகத்திற்கும் புவர் லோகத்திற்கும் நடுவே உள்ள லோகம்), புவர்லோகம் மற்றும் ஸ்வர்க்க லோகத்தில் மாட்டிக் கொள்கின்றன. இது போன்ற லிங்கதேஹங்கள் பூமிக்கு வந்தவுடன் காகத்தின் உடலில் நுழைந்து பிண்ட அன்னத்தை உண்கின்றன. மத்தியில் உள்ள பிண்டம் முக்கிய லிங்கதேஹத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை காகம் உண்பது மிகவும் மஹத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு பிண்டத்திலுள்ள அன்னத்தை, காகம் உண்பதன் மூலம் ஸ்தூல நிலையிலும் அன்னத்தின் மூலம் வெளிப்படும் சூட்சும வாயுவை க்ரஹிப்பதன் மூலம் சூட்சும நிலையிலும், லிங்கதேஹம் திருப்தி அடைகின்றன. அத்துடன் பூமியை விட்டு மேலே பிரயாணப்படுவதற்கு இந்த அன்னத்தின் மூலம் ஸ்தூல மற்றும் சூட்சும நிலைகளில், லிங்கதேஹத்திற்கு சக்தி கிடைக்கிறது. ஸ்தூல சக்தி, லிங்கதேஹத்தை சுற்றியுள்ள ஆசைகள் அடங்கிய கோசத்திற்கு சக்தி அளிக்கிறது, சூட்சும வாயு ரூபமான சக்தி, லிங்கதேஹம் மேலே பிரயாணப்-படுவதற்கான உள்பலத்தை அளிக்கிறது.
– குரு தத்துவம் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 5.3.2005, பிற்பகல் 12.41]
இறப்பிற்கு பின் 10-வது, 12-வது மற்றும் 13-வது
நாட்களில் செய்யப்படும் கர்மாக்களின் முக்கியத்துவம்
இறப்பிற்கு பின் 10-வது, 12-வது மற்றும் 13-வது ஆகிய மூன்று நாட்கள், லிங்கதேஹத்தின் பிரயாணத்தில் மூன்று நிலைகளைக் குறிக்கிறது; அதனால் இம்மூன்று நாட்களுமே முக்கியமானவை ஆகும். 10-வது நாள் செய்யப்படும் விதியால் லிங்கதேஹம், குடும்பத்தினருடன் உள்ள சூட்சும சக்தியிலிருந்து (தீர்க்கப்படாத கணக்கு) விடுபடுகிறது. இந்த விதி மூலம் லிங்கதேஹத்திலுள்ள ஸ்தூல தேஹத்துடன் சம்பந்தப்பட்ட சூட்சும வாயு அழிக்கப்படுகிறது. 12-வது நாள் செய்யப்படும் விதி மூலம் லிங்கதேஹத்திற்கு, ம்ருத்யு லோகத்தை தாண்டி, பூமியின் சூழ்நிலைக்கு அப்பால் செல்லும் சக்தி கிடைக்கிறது. 13-வது நாள் செய்யப்படும் சாந்தி விதி சக்தியின் மூலம் கிடைக்கும் பலத்தில் லிங்கதேஹம் பூரணமாக அதனுடைய கர்மவினைக்கேற்ப பூமிக்கு அப்பால் செல்வது சுலபமாகிறது. – குருதத்துவம் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 16.3.2005, பிற்பகல் 12.36]
13-ம் நாள் அனைவரையும் கூப்பிட்டு
ஏன் இனிப்புடன் உணவு பரிமாறப்படுகிறது?
13-ம் நாள் செய்யப்படும் விதி மூலமாக லிங்கதேஹத்திற்கு பூமியின் சூழலை கடந்து செல்லும் கதி கிடைக்கிறது. லிங்கதேஹத்திற்கு கதி கிடைப்பது என்பது உலக உறவுகள் அனைத்தும் அற்றுப் போய் இறைவனுடன் உறவு ஆரம்பிப்பதைக் குறிக்கிறது. நேரிடையாக ஸ்தூல தேஹத்துடன் இருக்கும் பற்று அற்றுப் போய் ஈச்வரனிடம் பற்று ஏற்படும் இந்த ஆனந்த நிகழ்வை வரவேற்கும் சின்னமாக அன்று அனைவரையும் அழைத்து இனிப்புடன் உணவு பரிமாறப்படுகிறது. – குரு தத்துவம் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 5.3.2005, பிற்பகல் 2.05]