1. இறக்கும் தறுவாயில் நாமஜபம் சொல்வதன் மஹத்துவம்
நாமஜப ஸாதனை செய்யாதவர்கள் பல வருடங்கள் ஒரே யோனியில் மாட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது, தீய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். இதற்கு மாறாக, யாருடைய நாவில் இறைவனின் நாமம் ஜபிக்கப்படுகிறதோ, அவருக்கு நல்ல கதி கிடைக்கிறது. எந்தக் கணத்தில் உயிர் பிரிகிறதோ அப்பொழுது, அவருடலில் உள்ள சூட்சும சக்தி சூட்சும வாயு ரூபமாக மாறி செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த வாயுவின் மூலமாக, மேலே நற்கதி கிடைக்கிறது.
1 அ. நாமஜபம் செய்யாதவர்கள்
அ. நாமஜபம் செய்யாதவர்களுக்கு, உள்சக்தி (நாமஜபத்தினால் உருவாகும் சூட்சும சக்தி) மற்றும் வெளி சக்தி (குரு அல்லது தெய்வங்களின் ஆசீர்வாதம்) ஆகிய இரண்டும் கிடைப்பதில்லை. இதனால், அந்த ஜீவன், பல வருடங்களுக்கு, தன் ஆசை, எதிர்பார்ப்புகளோடு, ஒரே யோனியில் மாட்டிக் கொள்கின்றது.
ஆ. இந்த லிங்கதேஹத்திற்கு, எந்த விதமான பாதுகாப்பு கவசமும் ஏற்படுவதில்லை. இதனால், தீய சக்திகளின் பிடியில் மாட்டிக் கொள்கின்றன, மற்றும் பல வருடங்களுக்கு, அவற்றின் சொற்படியே நடக்க வேண்டி உள்ளது.
இம்மாதிரியான லிங்கதேஹத்திற்கு, மேற்படி கதி கிடைப்பதற்கு ச்ரார்த்த கர்மா மூலமாக வெளிபலம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
1 ஆ. நாமஜபம் செய்பவர்கள்
இறக்கும் தறுவாயில், நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பவர்கள் இறக்கும் நேரத்தில், எந்த ஜீவனின் வாயிலிருந்து, நாமஜபம் எழுகிறதோ, அந்த தேஹத்தில், ஸாத்வீக சக்தியின் ப்ரவாஹம் ஏற்படுகிறது. அதனால், அந்த ஜீவன், ம்ருத்யு லோகத்தில் (ம்ருத்யு லோகம், பூலோகத்திற்கும், புவர் லோகத்திற்கும் இடையில் உள்ளது) மாட்டிக் கொள்ளாமல், அதனுடைய கர்மாவிற்கேற்றபடி, கதியை அடைகிறது. – குருதத்துவம் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 16.3.2005, மதியம் 12.36]
2. இறக்கும் தறுவாயில்
இருப்பவருக்காக செய்யப்படும் காரியங்கள்
உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது, அவரின் கையால் உப்பு தானம் செய்ய வேண்டும் அல்லது உப்பு மற்றும் ரொட்டியைக் கொண்டு த்ருஷ்டி கழிக்க வேண்டும். இதனுடைய காரணம் என்ன?
ப்ராஹ்மண: க்ஷத்ரியோ வைச்ய:
ஸ்திரீணாம் சூத்ரஜனஸ்ய ச ||
ஆதுரஸ்ய யதா ப்ராணான்னயந்தி வஸீதாதலே |
லவணம் து ததா தேயம்
த்வாரஸ்யோத்காடனம் திவ: ||
– கருடபுராணம், பகுதி 3, அத்தியாயம் 19, ஸ்லோகம் 31, 32
அர்த்தம் : மரணப்படுக்கையிலிருப்பவரின் உயிர் போகாமல் ஊசலாடுமானால், அவர் கையால் உப்பு தானம் செய்விக்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், அந்த ஜீவனுக்கு ஸ்வர்க்க லோகத்தின் வாசல் திறக்கப்படுகிறது.
உப்பு தானம் செய்வது ஒருவகை. இன்னொரு வகையில், உப்பு மற்றும் ரொட்டியைக் கொண்டு த்ருஷ்டி கழிப்பது. இந்த இரண்டு முறைகளின் ஆன்மீக சாஸ்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமயம், இறக்கும் நேரத்தில், தீய சக்திகள், லிங்க-தேஹத்தின் (நான்கு அந்தக்கரணங்களாகிய, மனம், ஆழ்மனம், புத்தி, அஹம்) மீது ஆக்கிரமிப்பு செய்வதற்காக தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதால், அந்த ஜீவன் முக்தி பெறாமல் மாட்டிக் கொள்கிறது. இக்காரணத்தால் இறக்கும் தறுவாயிலிருக்கும் நபருக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது. உப்பிலிருந்து வெளிப்படும் ரஜ-தம அதிர்வலைகளைக் கொண்ட சூட்சும வாயு, இந்த தீய சக்திகளை க்ரஹிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த சூட்சும வாயு மிகவும் லேசாக இருப்பதால், தீய சக்திகளை சுற்றியுள்ள வாயு மண்டலத்தையே க்ரஹிக்கும் சக்தி கொண்டது. இதனால், இறக்கும் தறுவாயிலிருப்பவரின் கையால் உப்பு தானம் செய்வது மற்றும் உப்பு-ரொட்டியால் த்ருஷ்டி கழிப்பதினால், லிங்கதேஹம், தீய சக்திகளின் பிடியிலிருந்து சில மணி நேரம் விடுபட்டு, சுலபமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. எந்தக் குடும்பத்தில், அதிருப்தி அடைந்த முன்னோர்களினால், தீவிர கஷ்டங்கள் ஏற்படுகிறதோ, அக்குடும்பத்தில், இத்தகைய கஷ்டங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குடும்பத்தினர், தத்த உபாஸனை செய்து மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட முடியும். அதாவது ஆன்மீக ஸாதனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
உயிர் பிரியாமல் ஊசலாடும்போது, அவர் கையால் உப்பு தானம் யாருக்கு செய்ய வேண்டும் மற்றும் தானத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்? : உப்பை யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். தானம் வாங்குபவர் தியாக மனத்தோடு, ஈச்வரனே இறக்கப் போகிறவருக்கு என் மூலமாக நல்லது செய்கிறார் என்ற உணர்வோடு தானம் பெற வேண்டும். (தானம் வழங்குபவரும் இந்த தானத்தை ஈச்வரனே வழங்குகிறார் என்ற உணர்வுடன் வழங்க வேண்டும்). தானம் வாங்குபவர், ஈச்வரனே வழங்குகிறார் என்ற உணர்வுடன் வாங்க வேண்டும். (இந்த தானத்தின் மூலமாக ஈச்வரன் என் மேல் கருணை மழை பொழிகிறார் என்ற உணர்வு இருக்க வேண்டும்). இதன் மூலம், இருவரிலும் மரியாதை உணர்வு ஏற்படுவதோடு, ஈச்வர சக்தியால் இருவருக்கும் தீய சக்திகளின் பாதிப்பு ஏற்படாமல் உள்ளது. தானகர்மா முடிந்தபின், இந்த தானம், அந்தந்த ஜீவன்களை திருப்தி செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்து, ஓடும் நீரில் உப்பை விஸர்ஜனம் செய்ய வேண்டும். – குருதத்துவம் [ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக, 21.3.2005 இரவு 9.55, 5.3.2006 மாலை 5-18]
3. இறந்தவர் உபயோகித்த
பொருட்களை என்ன செய்ய வேண்டும்?
இறந்தவர் முன்பு உபயோகித்த உடைகள், பொருட்கள் போன்றவற்றை உபயோகிப்பதா அல்லது தானம் செய்வதா என்பது பற்றி தர்ம சாஸ்திரம் எதுவும் கூறவில்லை.
ஆன்மீக சாஸ்திரப்படி தினசரி உபயோகிக்கும் பொருட்களில் சர்வ சாதாரண மனிதனுக்கு பற்றுதல் இருக்கும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் இறந்தவரின் லிங்கதேஹம் அந்த பொருள் மீதுள்ள பற்றால் மாட்டிக் கொண்டு இறந்த பின் அதன் பிரயாணத்தில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இறந்தவரின் குடும்பத்தினர் கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.
அ. இறந்தவர் இறுதியாக உபயோகப்படுத்திய உடை மற்றும் படுக்கையை இறுதி யாத்திரையின் போது எடுத்துச் சென்று சிதையில் வைக்க வேண்டும். மற்ற உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை இறுதி யாத்திரையில் எடுத்துச் செல்வது சாத்தியமன்று. அதனால் பின்பு அவ்வப்பொழுது அக்னியில் இடலாம்.
ஆ. இறந்தவர் உபயோகிக்காத உடைகளை குடும்பத்திலுள்ள மற்றவர் உபயோகிக்கலாம்.
இ. கட்டிலில் ஒருவருக்கு மரணம் சம்பவித்தால் அந்த கட்டிலை பிராம்மணருக்கு தானமாக வழங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அந்த கட்டிலை தானம் செய்ய முடியாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினர் அவர்களின் சக்திக்கேற்ப புது கட்டில் அல்லது அதற்குரிய விலையை பிராம்மணருக்கு தானமளிக்கலாம்.
ஈ. இறந்தவரின் கைக்கடிகாரம், கைபேசி, புத்தங்கள், பேனாக்கள், பைகள் போன்றவற்றின் மீது கோமூத்திரம் அல்லது தீர்த்தம் தெளித்து சுத்திகரிக்க வேண்டும். அவற்றின் மீது யக்ஞவிபூதி அல்லது ஸாத்வீக ஊதுபத்தியின் விபூதியை ஊத வேண்டும். அந்த பொருட்களின் மீது தத்த குருவின் ஸாத்வீக படத்தை ஒட்ட வேண்டும். அந்தப் பொருட்களைச் சுற்றி தத்த குருவின் ஸாத்வீக நாமபடிவங்களை வைக்க வேண்டும். (ஸனாதன் உருவாக்கியுள்ள தத்தாவின் படம் மற்றும் நாமபடிவம் ஸாத்வீகமானவை.) குடும்பத்தினர் இப்பொருட்களை உபயோகிக்க வேண்டி இருந்தால் 6 வாரங்களுக்கு பிறகு தத்த குருவிடம் பிரார்த்தனை செய்து பின்பு உபயோகிக்கலாம்.
உ. மஹான்களின் தேஹம் சைதன்யம் நிறைந்தது. அவர்களின் தேஹ தியாகம் நடந்தவுடன் அவர்கள் முன்பு உபயோகித்த பொருட்களின் சைதன்யம் முழுவதும் கிடைப்பதற்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.