தத்தாவின் செயல்களும், தன்மைகளும்

அ. தத்தா, மக்கள் நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆஸ்ரமப்படி வாழ்கிறார்களா என்று உறுதிப்படுத்துகின்றார்.

ஆ. மிகச் சிறந்த குருதத்துவத்தின் முன்னுதாரணம் மற்றும் யோக ஆசிரியர்

(சாண்டில்யோபநிஷத்) தத்தாவின் மிகப் பிரபலமான சிஷ்யர்கள் – ஸஹஸ்ரார்ஜுன், பரசுராமர், அலர்க, பிரஹலாதன் மற்றும் யது ஆவர்.

இ. தந்திர சாஸ்திரத்தில் வல்லுனர்- (த்ரிபுரஸுந்தரி ரகசியம்).

ஈ. பரிபூரண அவதாரமான கிருஷ்ணனைப் போல் நடந்து கொள்வதால், மத கோட்பாடுகளுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டவர் (மார்க்கண்டேய புராணம்).

உ. தன் எண்ணப்படி வாழ்பவர். மேலும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வருபவர்.

ஊ. வைராக்கியத்தை அளிக்கக்கூடியவர்கள் சிவன் மற்றும் தத்தா (மற்ற தெய்வங்கள் இதைத் தவிர மற்ற எல்லாம் கொடுப்பவை).

எ. அவதூதர்

ஏ. ஒற்றுமையின் அடையாளம்

சைவம் மற்றும் வைஷ்ணவம் – இவர்கள் இருவருக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பதால், இவ்விரு சம்ப்ரதாயங்களும், தத்தாவிடம் நெருக்கத்தை உணர்கின்றனர்.

ஐ. இவர் தன் பக்தர்களை, மூதாதையர்களின் ஆத்மாவினால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபடச் செய்கிறார்.

ஒ. தீய சக்திகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பவர்.

 

எப்பொழுதும் ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பவர்

1. இருப்பது : மேருமலை.

2. குளிப்பது : வாரணாசி (கங்கா தீரம்).

3. ஆசமனம் : குருக்ஷேத்திரம்.

4. சந்தனம் பூசுவது : ப்ரயாக் (மற்றொரு கருத்து – பண்டரிபுரம்).

5. காலை சந்தியாவந்தனம் : கேதார்

6. விபூதி தரிப்பது : கேதார்

7. தியானம் : கந்தர்வ பத்தன் (மற்றொரு கருத்து -யோக பயிற்சி : கிர்நார், சௌராஷ்ட்ரா, குஜராத்).

8. மத்யான பிக்ஷை : கோலாப்பூர்.

9. மதிய உணவு : பாஞ்சலேஷ்வர் (பீட் மாவட்டம், கோதாவரி நதி தீரம்).

10. தாம்பூலம் : இராக்ஷாபுவனம் (பீட் மாவட்டம், மராத்வாடா).

11. ஓய்வெடுப்பது : ரைவத்பர்வதம், பகல் நேரம் : காவேரிபாண்

12. சாயங்கால சந்தியாவந்தனம் : மேற்குக் கடற்கரையோரம்

13. புராணங்களின் ஸ்ரவணம் : நரநாராயணாஸ்ரமம் (மற்றொரு கருத்து -ப்ரவசன்: நைமிசாரண்யம்-பீஹார்).

14. நித்திரை கொள்வது : மாஹுர்காட். (மற்றொரு கருத்து – ஸஹ்யா பர்வத், நாந்தேட் ஜில்லா)

மேலே குறிப்பிட்டவற்றுள், இரண்டு, எட்டு மற்றும் பதினாலாவது இடங்கள் அதிக புகழ் பெற்றவை ஆகும்.

 

பரிவாரங்களின் உள்ளார்ந்த தத்துவம்

அ. பசு : பூமி மற்றும் காமதேனு

ஆ. நான்கு நாய்கள் : நான்கு வேதங்கள்

இ. அத்திமரம் : தத்த பூஜைக்குரிய ரூபம்; ஏனென்றால் தத்த தத்துவம் அதிகம் கொண்டது.

 

மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவம் ஆகும். இந்த தத்துவம் யுகம் யுகமாக நிர்குண ரூபத்தில் உள்ளது. தெய்வ தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியம் ஏற்படுகிறதோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. மனிதர்களும் காலத்திற்கேற்றபடி தெய்வங்களின் பல ரூபங்களை பூஜிக்கின்றனர்.

கி.பி. 1000 ஆண்டின் போது தத்தாவின் உருவம், மூன்று முகம் உடையதாக மாறியது. இதற்கு முன்பு ஒரு முகமாக இருந்தது.

 

தத்த வழிபாடு

அ. மிகவும் சரியான முறையில் நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆச்ரமங்களுக்கு ஏற்ப நடப்பது.

ஆ. யோக பாதை மற்றும் சக்திபாத் தீக்ஷா (சக்தி பரிமாற்றத்தின் மூலம் தீக்ஷை அளித்தல்)

இ. ஸம்பிரதாயத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

ஈ. எல்லா சடங்குகளையும் மேற்கொள்வது மற்றும் உடலை வருத்தும் செயல்களையும் பின்பற்றுவது.

உ. கடுமையான மடி, ஆசாரம் பின்பற்றப்படுகிறது.

ஊ. முன்பு, ஒரு முக விக்ரஹம்தான் வணங்கப்பட்டது. இப்பொழுது, மும்முக விக்ரஹம் பரவலாக உள்ளது. விக்ரஹத்திற்கு பதிலாக அத்தி மரமும், மரத்தால் ஆன பாதுகையும் வழிபடப் படுகின்றன.

எ. தத்த பக்தர்கள் குரு சரித்திரத்தைப் படிப்பது, பக்தியோடு கேட்பது.

ஏ. ஸத்ய தத்த பூஜை (ஸத்ய நாராயண பூஜையைப் போன்றே கொண்டாடப்படுகின்றது.)

 

தத்த பூஜைக்கு முன்னால்
தத்த தத்துவம் சம்பந்தமான கோலத்தை வரையவும்

முக்கியமாக வியாழக்கிழமை, தத்த ஜயந்தி அன்று வீடு அல்லது கோவிலில் தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் ஸாத்வீக கோலத்தை வரையவும். இந்த கோலத்தை வரைவதன் மூலம் அங்குள்ள சுற்றுப்புற சூழல் தத்த தத்துவத்தால் நிரம்பி பக்தர்களுக்கு நன்மை அளிக்கிறது. தத்த தத்துவத்தை ஆகர்ஷித்து வெளியிடும் சில கோலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கோலங்களில் மஞ்சள், நீலம், ரோஸ் போன்ற ஸாத்வீக நிறங்களை நிரப்பலாம்.

சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த மற்றும் அதன் சக்தி சேர்ந்தே உள்ளன. இந்த ஆன்மீக தத்துவப்படி கோலங்களின் ரூபம் மற்றும் நிறத்தை சிறிது மாற்றினாலும் அதன் அதிர்வலைகள் (சக்தி, ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி) எவ்வாறு மாறுகிறது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11 புள்ளி 11 வரிசை

 

ஸம்ப்ரதாய ஸாதனைக்குரிய மந்திரம்

‘குருதேவ தத்த’ : தத்தா, குரு ரூபமானதால் குரு வடிவத்திலேயே வணங்கப்பட வேண்டியவர். பூஜை, ஆரத்தி, பஜன் போன்ற உபாஸனை வழிகளின் மூலம் தெய்வ தத்துவங்களின் பயன் கிடைக்கிறது. ஆனால் இந்த உபாஸனை முறைகளில் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் இதன் பலன்களும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டுள்ளன. தெய்வ தத்துவத்தின் லாபம் தொடர்ந்து கிடைக்க தெய்வ உபாஸனையும் தொடர்ந்து நடைபெற வேண்டும். இது போன்ற தொடர்ந்து நடைபெறும் ஒரே உபாஸனை வழி, நாமஜபமே. தத்தாவிற்கு அநேக நாமங்கள் உள்ளன. ‘குருதேவ தத்த’ என்ற நாமஜபம் விசேஷ இடத்தை வகிக்கிறது. தத்த உபாஸனை செய்பவர்கள் தொடர்ந்து குருதேவ தத்த நாமஜபத்தை செய்ய வேண்டும். தெய்வங்களின் நாமஜபத்தின் மூலம் தெய்வங்களின் தத்துவம் அதிகபட்சம் க்ரஹிக்கப்பட நாமஜபத்தின் உச்சாரணம் ஆன்மீக சாஸ்திரப்படி சரியானதாக இருக்க வேண்டும்.

தத்தாவே பரமகுருவாக அமைந்துள்ளதால், தத்த சம்ப்ரதாயத்தில் வேறு மனித குரு-சிஷ்ய பரம்பரை இல்லை.

 

மூதாதையரின் ஆன்மாவினால்
உண்டாகும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள்

தற்காலத்தில் ஆன்மீகப் பயிற்சியும், ச்ரார்த்தமும் முன்னைப் போன்று செய்யப்படுவதில்லை. எனவே, மறைந்த முன்னோர்களின் சூட்சும உடல், சந்ததியினருக்கு ஆன்மீக கஷ்டங்களைக் கொடுக்கின்றது. மஹான்கள் மட்டுமே, இத்தொல்லைகளின் மூல காரணத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தகையவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறாதவர்கள், தங்களின் கஷ்டங்களுக்கு அநேகமாக, சாந்தியடையாத மூதாதையர்களின் ஆன்மாக்கள்தான் காரணம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். விவாகம் தடைபடுவது, கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை, குழந்தையின்மை, கருச்சிதைவு, ஊனமுற்ற குழந்தை பிறத்தல், பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது அல்லது குழந்தைப் பருவத்தில் மரணம் ஆகியவை சில உதாரணங்கள்.

1. கஷ்டங்கள் வராமல் பார்த்துக் கொள்ளவும், அல்லது கஷ்டங்கள் குறைவாக இருந்தாலோ, குறைந்தது 1-2 மணி நேரம் ‘குருதேவ தத்த’ என்று ஜபிக்க வேண்டும். மற்ற நேரங்களில் தங்களின் குலதெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்து, ஆன்மீக முன்னேற்றம் அடைந்து, விதியின் வலிமையைக் குறைக்கலாம்.

2. மிதமான கஷ்டங்களுக்கு 2-4 மணி நேரம் தத்த நாமஜபம் செய்ய வேண்டும். குறைந்தப்பட்சம், ஒரு வருடத்திற்கு, வியாழக்கிழமை தோறும், தத்தா கோவிலை ஏழு முறை வலம் வந்து ஒன்று அல்லது இரண்டு முறையாவது ஓரிடத்தில் அமர்ந்து மாலை கொண்டு ஜபிக்க வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து மூன்று மாலை ஜபிக்க வேண்டும்.

3. கஷ்டங்கள் தீவிரமாக உள்ள போது, 4-6 மணி நேரம் தத்த நாமஜபம் செய்ய வேண்டும். நாராயணபலி, நாகபலி, திரிபிண்டி ச்ரார்த்தம், காலஸர்ப்ப சாந்தி ஆகியவற்றை ஜோதிர்லிங்கத்தின் முன்பாக செய்ய வேண்டும். இவற்றோடு கூட தத்த க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு, ஆன்மீக பயிற்சி மேற்கொள்ள வேண்டும், அல்லது மஹான்களுக்கு சேவை செய்து, அவர்களின் ஆசியைப் பெற வேண்டும்.

4. பித்ரு பக்ஷத்தில் தத்த நாமஜபம் செய்வதால் பித்ருக்களுக்கு விரைவில் கதி கிடைக்கிறது. அதனால் தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் (72 மாலைகள்) தத்த நாமஜபம் செய்ய வேண்டும்.

 

தத்த ஜயந்தி

தத்தாவின் பக்தர்கள், தத்த ஜயந்தியை, மார்கழி மாதம் பௌர்ணமியன்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இக்கொண்டாட்டத்திற்கு, ஏழு நாட்கள் முன்பிலிருந்து குரு சரித்ர பாராயணம் செய்வது வழக்கம். இதை குரு சரித்ர ஸப்தாகம் என்று கூறுகிறார்கள். இச்சமயத்தில், பூஜை, பஜனை செய்வது, மற்றும் விசேஷ கீர்த்தனைகளைப் பாடுவது ஆகிய வழக்கங்கள் உள்ளன. மஹாராஷ்ட்ராவில், ஔதும்பர் மற்றும் நரஸோபாச்சிவாடி என்ற இடங்களிலும், கர்நாடகாவில் காண்காப்பூர் என்ற இடத்திலும், தத்த ஜயந்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

தத்த காயத்ரி

தத்தாத்ரேயாய வித்மஹே அவதூதாய தீமஹி, தன்னோ தத்த ப்ரசோதயாத்.

அர்த்தம் : தத்தாத்ரேயரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவதூதரை தியானம் செய்கிறோம். அவர் எங்களுக்கு நல்லாசி வழங்கட்டும்.

இந்த மந்திரத்தின் சந்தம் காயத்ரி; ரிஷி சபர் மற்றும் தெய்வம் தத்தாத்ரேயர் ஆகும்.

 

காலத்திற்கேற்ற அவசியமான உபாசனை

ஆன்மீக முன்னேற்றத்திற்கு, சுயமாக உபாசனை செய்து தர்மவழி நடப்பதே வ்யஷ்டி ஸாதனையாகும். சமூகத்தின் ஸாத்வீகத் தன்மை அதிகரிப்பதற்காக சமூகத்தினரை ஸாதனை செய்ய உற்சாகப்படுத்தி தர்மவழி நடக்கச் செய்வதே ஸமஷ்டி ஸாதனையாகும். தத்த குரு உபாஸனையில் பூரணத்துவமடைய தத்த பக்தர்கள் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஆகிய இரண்டு நிலைகளிலும் ஸாதனை செய்வது அவசியமாகும்.

தத்த உபாஸனையின் பலவித செயல்களைச் செய்வதன் சரியான வழிமுறை மற்றும் அதன் சாஸ்திரம் ஆகியவற்றைப் பற்றிய தர்மபோதனையை சமூகத்தினருக்கு அவரவர் சக்திப்படி வழங்க வேண்டும். இதுவே தத்த பக்தர்களுக்கேற்ற காலத்தின்படி அவசியமான, உன்னதமான ஸமஷ்டி ஸாதனையாகும்.

 

தத்தாவிடம் செய்யப்படும்
சில பிரார்த்தனைகளின் உதாரணங்கள்

1. ஹே தத்தாத்ரேயா, எப்படி 24 குணகுருக்களை கொண்டிருந்தாயோ அப்படியே எல்லோரிடமுமுள்ள நல்ல குணங்களை க்ரஹிக்கும் சக்தி எனக்கு ஏற்படட்டும். இதுவே உன் சரணங்களில் செய்யப்படும் பிரார்த்தனை.

2. ஹே தத்தாத்ரேயா, புவர்லோகத்தில் மாட்டிக் கொண்டுள்ள, அதிருப்தி அடைந்த என் மூதாதையருக்கு மேலே செல்லக் கூடிய கதியை அருள்வாயாக.

3. ஹே தத்தாரேயா, அதிருப்தி அடைந்த மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்று. உன்னுடைய பாதுகாப்பு கவசம் என்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். இதுவே உன் சரணங்களில் நான் செய்யும் பிரார்த்தனை.

(தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘தத்த’)

Leave a Comment